சூரிய ஒளியிலும் ,,,,.சுருட்டுகிறார்கள்!



கடந்த 4.7.2015 அன்று அதானி குழு மத்துடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதன் படி அதானி குழுமம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் 648 மெகா வாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்கும் என்றும் இதற்கு 4536 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 1 யூனிட் டிற்கு ரூ. 7.01 காசு கொடுத்து தமிழக அர சாங்கம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாங்கிக் கொள்ளும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 இந்த ஒப்பந்தம் தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தின் ஒரு பகுதியை அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுக்கும் முயற்சி என்று விபரம் அறிந்தவர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ் வொரு வகை மின்உற்பத்திக்கும் எவ்வளவு பணம் முதலீடு தேவைப்படும்;
அதனடிப்படையில் மின் கட்டணம் எவ்வ ளவு நிர்ணயிப்பது என்று முடிவு செய்கிறது. இது உச்சபட்ச மதிப்பீடு. 
அதேசமயத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு மாநில அரசும் முதலீட்டை யும் அதனடிப்படையில் மின் கட்டணத் தையும் தீர்மானிக்கின்றன. 
இதேபோன்று ஒரு பகுதியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு, பராமரிப்பு, கடத்தும் திறன், முதலீட்டில் தொழில் முனைவோரின் பங்கு, கடன் ஆகியவற்றையும் மத்தியஆணையம் தீர்மானித்து அதனடிப்படை யில் கடனுக்கு வட்டியும், முதலீட்டாளர் முதலீடு செய்யும் தொகைக்கு திரும்பக்கிடைக்கும் வருமானமும் கணக்கிடப்பட்டு மின் கட்டணம் நிர்ணயிக்கப்படு
கிற
முதலீடு
சூரிய ஒளி
 யிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவது ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 
இதனால் இதற்கான உபகரணங்களின் தொகைகள் ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது. 
2014ம் ஆண்டில் இந்த முதலீட்டுச் செலவு ரூ.7 கோடி யாக இருந்தது. மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் 2015-16 ஆம் ஆண்டுக்கு 1 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்ய ரூ.6.06 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி 648 மெகாவாட் உற்பத்தி செய்ய முதலீடு ரூ.3927 கோடியாக இருக்க வேண்டும். மாறாக, ரூ.4536 கோடி என்று தீர் மானிக்கப்பட்டிருக்கிறது. 
கூடுதலாக 609 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக சொல் லப்பட்டிருக்கிறது. முதலீட்டுத் தொகைஅதிகமாக நிர்ணயிக்கப்பட் டிருப்பதன் மூலம், கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது.
 உண்மையில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற் பத்தி செய்வதற்கான முதலீட்டுத் தொகை குறைந்திருப்பதன் மூலம்ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 6க்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண் டும்.
 மாறாக, இப்போது ரூ.7.01 என்றுநிர்ணயித்திருப்பதன் மூலம் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் அதானி குழுமத்திற்கு கொள்ளை லாபமாக போய்ச் சேரவிருக்கிறது. இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். 
சூரியஒளியிலிருந்து தயாரிக்கும் மின்சாரத்தை பொறுத்தமட்டில் மூலப்பொருட்களுக்கான செலவு என்று எதுவும் இருக்கப் போவ தில்லை. எனவே அதானிகுழுமத்துடன் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்றும் ஏற்பாடு என் பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. 
தமிழ்நாட்டில் அதானிகுழுமத்தின் நிறுவு திறன் 648 மெகாவாட் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
 இதன் பொருள் 648000 யூனிட்டுகள் (ஒரு மணி நேரத்திற்கு) என்று அர்த்தம். 6.48 லட்சம் யூனிட்டுகள் ஒரு மணிக்கு உற்பத்தியாகும். 
சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது 24 மணி நேரமும் நடைபெறாது. ஆண்டுக்கு சராசரியாக 1600 மணி நேரங்கள் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவைப் பொறுத்தமட்டில் சுமார் 2000 மணி நேரங்களும் சூரிய ஒளி மூலம் ஓராண்டில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
 சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு 1800 மணி நேரம் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக எடுத்துக் கொண்டால் அடுத்த 25 ஆண்டுகளில் அதானி குழுமம் பெறும் தொகை, 1800 ஓ 25 ஓ 6.48 லட்சம் யூனிட் ஓ ரூ. 7.01=20,441.16 கோடி.
 உண்மையில் தற்போதுள்ள விலையின் அடிப்படையில் ரூ. 5.87 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்படி 25 ஆண்டுகளில் அதானி குழுமம் பெற்று இருக்க வேண்டிய தொகை 17,116.92 கோடி. 
அதாவது இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழக அரசாங்கத்திற்கு அடுத்த 25 ஆண்டுகளில் 3,324.24 கோடி இழப்பு ஏற்படும்.
ஒப்பந்தம்.
போட்டவர்களுக்கு லாபம்; 
மக்களுக்கு நஷ்டம்
அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 37 லட்சம் ரூபாய் தமிழக மக்களின் வரிப்பணம் அதானிக்கு திருப்பி விடப்படுகிறது.
 எவ்வித ஆதாயமும் நோக்கமும் இல்லாமல் இப்படி திருப்பிவிடப்படுவது நடைபெறாது என்று சிறு குழந்தைக்கு கூட தெரியும். 
எனவே இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு தரப்பும் பயனடையப்போகிறார்கள்.
 அதற்கு பணம் கொடுக்கிற தமிழக மக்கள் அனைவரும் நஷ்டமடைய போகிறார்கள். 
மின்கட்டணத்தை உயர்த்துவதை நியாயப்படுத்தும் தமிழக அரசு அதானிக்கு கொடுப்பதை பற்றி அதாவது மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலையும் மீறி இவ்வளவு ரூபாய் கொட்டிக் கொடுப்பதை மகிழ்ந்து செய்திருக்கிறார்கள். 
ஒழுங்குமுறை ஆணையம் அதானி உள்ளிட்டு எந்தவொரு முதலீட்டாளரும் 70 சதவிகிதம் கடன் வாங்குவார், (அது வும் மக்கள் பணம் தான்) .
அதற்கு 12.7 சதவிகிதம் வட்டி வரும் என்பதை கணக் கிட்டு முதலீட்டாளர் 30 சதவிகிதம் பணம் போடுவார் என்பதை வைத்துக் கொண்டு அதற்கு ஆண்டுக்கு 20 சதவிகிதம் லாபம் கிடைக்க வேண்டும் என்று 
வைத்துக் கொண்டு இன்சூரன்சுக்கு 0.35 சதவிகிதம் பணம் ஒதுக்கி நடைமுறை மூலதனம் ஒட்டுமொத்த முதலீட்டில் 1.4 சத விகிதம் என கணக்கீட்டு அந்தத் தொகை ஆண்டுக்கு 5.72 சதவிகிதம் உயரும் என்றுகணக்கீட்டு நடைமுறை மூலதனத்திற்கு கடன் வாங்கினால் அதற்கு 13.2 சதவிகிதம்ஒதுக்கி வைத்துவிட்டு ஆண்டுக்கு 3.6 சதவிகிதம் தேய்மானம் இருக்கும் என்று கணக்கீட்டு அதன் பிறகும் நிர்ணயித்துள்ள தொகையையும் தாண்டி ஒரு யூனிட்டிற்கு ரூ. 1.14 அதாவது 20 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயித்திருப்பதன் நோக்கத்தை யாரும் புரிந்துகொள்ள முடியும். 
நீதிபதி குமாரசாமியின் கணித சூத்திரத்திற்குள் கூட இது அடங்காமல் இருக்கிறது.

நன்றி:தீக்கதிர்.

========================================================================
இன்று,
ஜூலை-21.
  • பெல்ஜியம் தேசிய தினம்
  • ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)
  • லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)
கிமு 356 : ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்க ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்து அழிக்கப்பட்டது.

365 : மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் காரணமாக எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரம் அழிந்தது. கிறீஸ், சைப்பிரஸ், சிசிலி, ஆகியவற்றின் கரையோரங்களிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.  45,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 

1545 :  ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதல் தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.

1718 : ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.

1774 : ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.

1831 : பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் ஐ முடி சூடிய நாள்.

1907 : அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கரையோரத்தில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் 88 பேர் உயிரிழந்தனர்.

1944 : இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஓகஸ்ட் 10 இல் இது நிறைவடைந்தது).

1954 : ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1961 : நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.

1964 : சிங்கப்பூரில் மலே இனத்த வர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.

1969 : அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங்,   சந்திரனில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார். அவ்விண்கலத்தில் பயணித் எட்வின் அல்ட்ரினும் சந்திரனில் நடந்தார்.

1972 : வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

1977 : நான்கு நாட்கள் நீடித்த லிபிய - எகிப்தியப் போர் ஆரம்பமானது.

2007 : ஹரி பொட்டர் தொடர் நாவலின் 7 ஆவதும் இறுதியுமான பாகமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹல்லோவ்ஸ் வெளிவந்து 24 மணித்தியாலங்களில்  1.5 கோடி பிரதிகள் விற்பனையாகின. உலகில் மிக வேகமாக விற்பனையான நாவல் இது. 

2008 : நேபாளத்தின் முதல் ஜனாதிபதியாக ராம் பரன் யாதவ் தெரிவானார்.

2012 : துருக்கியைச் சேர்ந்த ஏர்டன் இயூரிக் என்பவர் தோணி, படகு, சைக்கிள் போன்ற மனித சக்தியினால் இயங்கும் போக்குவரத்துச் சாதனங்களை மாத்திரம் பயன்படுத்தி உலகை சுற்றிவந்த முதல் மனிதரானார்.
  • இனி சிம் தேவை இல்லை?

செல்போன்களில் நெட்வொர்க் சேவைகளை பெற இனி சிம் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள், சாம்ஸங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘விர்ச்சுவல் சிம்’-களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றன. 
இந்த வகை ‘e-SIM’-களின் மூலம் எளிதாக வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிக் கொள்ளலாம். 
ஸ்மார்ட்போன்களின் இண்டர்பேஸ் ஸ்கிரீன் வழியாகவே சிம்மை ஆக்டிவேட் செய்துவிடலாம்.
இதுபோன்ற முயற்சியில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் களமிறங்கிய ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த நெட்வொர்க் சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தி இருந்தது. 
இந்நிலையில், அதே சேவையை போல வி்ர்ச்சுவல் சிம்களை அனைத்து கருவிகளிலும் கொண்டு வர மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுசம்பந்தமாக ஏடி அண்ட் டி, டி-மொபைல், வோடபோன், ஆரஞ்ச், எடிசாலட், ஹட்சிசன் வாம்போவா, டெலிபோனிகா ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. 
2016-ம் ஆண்டில் இந்த விர்ச்சுவல் சிம்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?