லேப்டாப் உபயோகிப்பதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா?
இன்றைய தேதியில், மாணவர்கள் எல்லாவற்றையும் லேப்டாப்பிலேயே செய்து முடித்துவிடுகிறார்கள். ‘எலெக்ட்ரானிக்ஸ் புக்ஸ்’ என்கிற ட்ரெண்ட் இன்னும் விரிவாகப் போகிறது என்று நிச்சயமாக நினைக்கிறேன்’ என்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணர் ஸ்டீவன் பிங்கர்.
ப தமிழக அரசு வரிந்து கட்டிக் கொண்டு, மாணவர்களுக்கு லேப்டாப்புகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் அவசியமோ, இல்லையோ அதை வைத்திருப்பதே ஃபேஷனாகி வருகிறது.
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் கொறிக்கிற இடைவேளையில் கூட மடியில் வைத்து லேப்டாப் உபயோகிக்கிற ஆசாமிகளைப் பார்க்கலாம்.
அது விந்தணுக்களை பாதித்து, குழந்தை பாக்கியத்தையே தடுத்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை... பாவம்!
‘லேப்டாப்போடு ஒரே ஒரு மணி நேரம் செலவழிக்கும் போது அதில் உற்பத்தியாகும் வெப்பம் இடுப்பை தாக்கி, விரைகளின் வெப்பநிலையை அதிகபட்சமாக3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக்கிவிடும். அது மிக மோசமாக விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்’ என்கிறது ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் அறிக்கை ஒன்று.
‘இது சாத்தியம்தானா?’
‘‘பொதுவா, விந்தணு உற்பத்தி என்பது சாதாரண டெம்பரேச்சர்லதான் நடக்கும்.
நம்ம விரைகள் உடம்புக்கு வெளியே இருக்கு.
உடம்பு டெம்பரேச்சரை விட, விரைகளின் டெம்பரேச்சர் 3லிருந்து 4 டிகிரி செல்சியஸ் கம்மியாத்தான் இருக்கும்.
அப்படி இருக்கறப்போ, விரைகளின் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாச்சுன்னா விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.
செயல்பாடும் ஆக்டிவா இருக்காது.
அதன் வால் போன்ற அமைப்புல பிரச்னை ஏற்படும்.
விந்தணு எண்ணிக்கையில குறைபாடுகள் வரலாம்.
லேப்டாப் வெப்பத்தை உற்பத்தி செய்யுது.
மடியில வச்சு அதைப் பயன்படுத்தும் போது 10லிருந்து 15 நிமிடங்கள்லயே விரைகளின் வெப்பம் அதிகமாகிடுது.
என்னதான் ‘கூலிங் பேட்’ வச்சு லேப்டாப்பை யூஸ் பண்ணினாலும் விரைகளின் டெம்பரேச்சர் ஜாஸ்தியாகத்தான் செய்யும்.
அதனால இந்தப்பிரச்னைகள் உருவாகலாம்.
ஐ.டி. ஃபீல்டுல இருக்கறவங்கள்ல அதிகமான பேருக்கு இது மாதிரி பாதிப்பு ஏற்படலாம்.
முக்கியமா அவங்க வேலை பார்க்கற இடத்துல இருக்கும் ‘Wifi’லேருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் நேரடியா அவங்களை பாதிக்குது. இதனாலயும் டி.என்.ஏ. பாதிக்கப்படறதும் விந்தணுக் குறைபாடுகளும் ஏற்படலாம்’’.
நரம்புகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். அதற்குத் தேவையான ஹார்மோன்ஸ் சாதாரணமா உற்பத்தியாகும். ஆனா, லேப்டாப்பிலிருந்து உற்பத்தியாகும் வெப்பம், விரையை பாதிச்சு, அதன் காரணமாக விந்தணுக்களில் குறைபாடு உண்டாகி குழந்தைப்பேறு இல்லாமல் போகலாம்...’’
‘‘ரொம்ப நேரம் சமையலறையில், சூட்டில் வேலை பார்க்கிறவர்களுக்கு வரும் ‘Varicocele’ங்கிற பிரச்னை வரலாம். அதாவது, விரை நரம்புல வீக்கம் ஏற்படுவது.
இதனாலயும் விந்தணு எண்ணிக்கை குறையும். இந்தப் பிரச்னையை மைக்ரோ சர்ஜரி பண்ணி சரி செய்ய முடியும்’’.
ஆண் மலட்டுத்தன்மை பிரச்னைக்கு அதிக நேரம் உடலை வெப்பம் தாக்கும் வகையில் உட்கார்ந்திருப்பதும் ஒரு காரணம் என்கிறது மருத்துவம்
… நீண்ட தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் இதற்கு ஓர் உதாரணம்.
அதனால், ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் மடியில் வைத்து லேப்டாப்பை உபயோகிப்பதைத் தவிர்க்கவும். மேஜை, ஸ்டூல் போன்றவற்றில் வைத்துப் பயன்படுத்துவதே நல்லது.
========================================================================
காய்ச்சல் ?
உடல் தட்பவெப்பநிலையின் சமநிலை குலைந்து வெப்பம் அதிகரிப்பதை காய்ச்சல் என்கிறோம். காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை கிருமிகள் மூலம் பரவக்கூடியவை. நாம் சுவாசிக்கிற காற்றில் எண்ணற்ற கிருமிகள் பரவிக்கிடக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத சூழலில் அக்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகி விடுகிறோம். இப்படி பரவக்கூடிய காய்ச்சல்களில் உயிருக்கு உலை வைக்கும் அபாயகரமான காய்ச்சல்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மூளைக்காய்ச்சல். உடனடி சிகிச்சை மேற்கொள்ளாத நிலையில் உயிரையே பறித்து விடும் மூளைக்காய்ச்சல் பற்றி விளக்குகிறார் நரம்பியல் நிபுணர் எஸ்.பாலசுப்ரமணியம்.
‘‘மூளைக்காய்ச்சல் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் காசநோய் கிருமித் தாக்குதலால் ஏற்படுகிறது. மிகவும் அரிதாக புற்றுநோய் பாதிப்பு கூட மூளைக்காய்ச்சலுக்கு காரணமாக அமையும். மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காற்றின் மூலமும் கொசுவின் மூலமும் பரவக்கூடியவை. மூளைக்காய்ச்சல் உள்ளவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படும் கிருமி அருகில் இருப்பவரிடம் பரவி விடுகிறது.
மூளைக்காய்ச்சலில் ஒரு வகையான Japanese encephalitis வைரஸ், பன்றியில் உற்பத்தி யாகி, பன்றியைக் கடிக்கும் கொசு நம்மையும் கடிக்கும்போது நமக்கும் பரவி விடுகிறது. அப்படி பரவும் கிருமிகள் தொண்டையில் தங்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அக்கிருமிகள், மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள ட்யூரா மேட்டர், அரக்னாய்ட் மேட்டர், பயா மேட்டர் ஆகிய சவ்வுகளை தாக்குகின்றன. இதனால் கழுத்தைத் திருப்பும்போது அதிகமான வலி ஏற்படும். இதற்கு Meningitis என்று பெயர். மூளைச் சவ்வில்லாமல் நேரடியாக மூளையைத் தாக்கினால் அதற்கு Encephalitis என்று பெயர். மூளைச்சவ்வு மற்றும் மூளை ஆகிய இரண்டையும் தாக்கும் நிலையில் அது Meningoencephalitis என்று சொல்லப்படுகிறது.
உடலில் புகும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும் உறுப்பைப் பொறுத்து நோய்கள் வேறுபடுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் பெரும்பாலும் குழந்தைகளும், வயதானவர்களுமே மூளைக்காய்ச்சலுக்கு ஆளாகிறார்கள். கழுத்து வலி, காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கம் ஆகியவை மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் தெரிந்தவுடனே மருத்துவ பரிசோதனையை நாடுவது நல்லது. மூளைக்காய்ச்சல் உயிரைப் பறிக்கக்கூடிய அளவு அபாயகரமானது என்பதால் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்துதான்.
ரத்தம் மற்றும் தண்டுவடத்தில் உள்ள நீர் ஆகியவற்றைப் பரிசோதிப்பதன் மூலமும், மூளைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதன் மூலமும் மூளைக்காய்ச்சலை உறுதி செய்யலாம். தண்டு வட நீரில் கிருமித் தொற்று இருப்பதை உடனே கண்டறிந்து விட்டாலும் என்ன கிருமி என்பதை கண்டறிய 3 நாட்கள் வரை ஆகும். ஆகவே அதுவரை காத்துக் கொண்டிருக்காமல் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டாலே, மூளைக்காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அக்கிருமிகள் வேகமாக மூளை முழுவதும் பரவிவிடும்.
மூளைக்காய்ச்சல் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில் ஆன்டிபயாடிக், ஆன்டி வைரல் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலம் குணப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முற்றிவிட்ட நிலையில் காப்பாற்றுவது கடினமாகி விடும். கிருமித் தாக்குதலின் காரணமாக மூளைக்குள் நீர் கோர்த்திருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும். மூளை என்பது நரம்பு மண்டலத்தின் தலைமையகமாகச் செயல்படுகிறது. ஆகவே மூளைக்காய்ச்சலுக்கு ஆளாகி குணமடைந்தாலும் அதன் பக்க விளைவாக நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். வலிப்பு நோய் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம், ஞாபக மறதி மற்றும் காது கேளாமை ஏற்படலாம்.
மூளைக்காய்ச்சலிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. Arthropod Borne என்று சொல்லக்கூடிய கொசு மற்றும் ஒட்டுண்ணிகளின் காரணமாகவே இந்நோய் அதிகளவில் பரவுகிறது. கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள க்யாசனூர் வனப்பகுதியில் பரவிய மூளைக்காய்ச்சலுக்கு kyasanur forest disease என்று பெயர். இப்படி வாழிடங்களுக்கு ஏற்றாற்போல நோயின் வகையும் தன்மையும் மாறுபடும். எல்லாக் கிருமிகளும் எல்லா வயதினரையும் தாக்காது. வயதுக்கு ஏற்றபடி பாதிப்புகள் இருக்கும். உதாரணத்துக்கு Pneumococcal Meningitis காய்ச்சலில்தான் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைப் பருவத்தினர் முதல் வாலிபப் பருவத்தில் உள்ளவர்களைத்தான் இந்த பாக்டீரியா தாக்குகிறது. Japanese encephalitis என்கிற மூளைக்காய்ச்சலும் இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் 18 ஆயிரத்து 170 பேர் இக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டதில் 3 ஆயிரத்து 71 பேர் உயிரிழந்துள்ளனர் (அஸாம் 1,780/9,063, பீகார் 997/3574, மேற்குவங்காளம் 836/6,855). தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாக 2 ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டு, 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் 2/1,008, ஆந்திரா 20/673, கேரளா 30/239, மஹாராஷ்டிரா 46/115. இப்படியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிற நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்துக்கு நாம் ஆளாகியுள்ளோம். முடிந்தவரை எல்லாவற்றிலும் பாதுகாப்பாக இருந்து கொள்கிற முனைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் மூளைக்காய்ச்சல் போன்ற கிருமித் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க இயலும். பொதுவாக காய்ச்சல் இருப்பவர்களிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். முகத்துக்கு நேராக பேசுகையில் அவர்களிடம் உள்ள கிருமிகள் நேரடியாக நம்மைத் தாக்கும்.
பொது இடங்களில் எவரேனும் இருமினாலும், தும்மினாலும் அந்த இடத்தை விட்டு சற்றுத் தள்ளி நகர்ந்து சென்றுவிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே இது தாக்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசிகள் குழந்தைகளுக்குப் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் மூலம் வட மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மூளைக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’’
நன்றி;தினகரன்.
============================================================================================
இன்று,
ஜூலை-30.
வெறும் அம்மாவோட நிறுத்தாமல் பெருசா படத்தையும் போட்டிருந்தால் இன்னமும் அம்மா புகழ் பரவியிருக்குமே?
இதுதான் உண்மையான அஞ்சலி.
========================================================================
கலாமிற்கு பெருமை சேர்க்கும்
2002 - 2007 வரை, தமிழகத்தை சேர்ந்த, அப்துல் கலாம், குடியரசுத் தலைவராக இருந்தார்.
அவர் எப்படி எளிமையானவர் என்று மக்களுக்கு புரிய வைக்கிறார்.
அவருக்குப் பின், 2007 - 2012 வரை, அந்தப் பதவிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, பிரதிபா பாட்டீல் .
பதவியில் இருக்கும் போதும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய பிரதிபா, பதவியிலிருந்துஓய்வு பெற்றுச் செல்லும் போது, ஐந்தாண்டு காலத்தில் அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட அனைத்து பொருட்களையும், தன் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம், புனேவுக்கு எடுத்துச் சென்று விட்டார்.
அதன்பின், பல போராட்டங்களுக்குப் பின், அந்தப் பொருட்களில் சில, மத்திய அரசு வசம் வந்து சேர்ந்துள்ளன.
பிரதிபா பதவியில் இருக்கையில் மாளிகைக்கு வாங்கப்பட்ட போர்த்களையும் தான் வந்து வாங்கியவை என்று சொந்த வீட்டுக்கு எடுத்து செல்ல முயன்றவரை அவை அனைத்தும் அரசு மக்கள் பணத்தில் வாங்கியவை பிரதிபா சொந்த பணத்தில் வாங்கப்பட்டது அல்ல என்று சொல்லி பறி முதல் செய்து குடியரசுத்தளிவர் மாளிகையில் இருந்து விரட்டப்பட்டவர்.
இந்நிலையில், பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும், அரசு சார்பில், அவருக்கு, 'அம்பாசிடர்' கார் வழங்கப்பட்டது.
அதற்கான பெட்ரோலை, மத்திய அரசே வழங்கி வருகிறது. அந்த கார், சின்ன காராக இருக்கிறது என தெரிவித்து, பெரிய கார் ஒன்றை தருமாறு கேட்டார்; அதற்கு மத்திய அரசு, இசையவில்லை. அதன்பின், புனே செல்லும் போது பயன்படுத்த, புதிய கார் ஒன்றை வழங்குமாறு, மத்திய அரசை நச்சரித்தார்; அதுவும் செல்லுபடியாகவில்லை.
'புதிய கார் தான் தரவில்லை; நான் புனே செல்லும் போது, பயன்படுத்திக் கொள்ளும் சொந்த காருக்கு, பெட்ரோலை தர வேண்டும்' என, மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார்.
அரசு விதிகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, ஏதாவது ஒரு காருக்கு தான் பெட்ரோல் வழங்க முடியும்.
ஆனால், குடியரசுத்தலைவர் பதவிக்குப்பின் பல கோடிகளுக்கு அதிபதியான பிரதிபா, சொந்த பணத்தில் காரை இயக்காமல், அரசு மக்கள் வரிப்பணத்தை பணத்தை எதிர்பார்த்து வருகிறார்.
இவரின் செயல்பாடுகள் குடியரசுத்தலைவர் பதவிக்கே அசிங்கத்தை எற்படுத்தி வருகிறது.இவர் தனது பதவுஇ காலத்தில் ஜெயலலிதாவுக்கு தனது கட்சியான காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி பல உதவிகளை செய்துள்ளார்.காரணம் ?இவற்றின் எதிர்பார்ப்புகளை ஜே நிறைவேற்றியதுதான்.அரசு மட்டுமல்ல மக்களிடமும் பிரதிபா பாட்டில் செயல்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல் கலாம் மேன்மையை மக்கள் புரிய வைக்க ஒரு பிரதிபா பாட்டில் தேவையா/

- பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
- முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)
- பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
- ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)