ஒளிரும் இந்தியா

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பின்படி சமூக, பொருளாதார மற்றும் சாதிய அடிப்படையிலான சில உண்மைகள் நம் கவனத்திற்கு:
இந்தியாவில் உள்ள மொத்த தலித் குடும்பங் களின் எண்ணிக்கை 4,42,26,917.இதில் 74 சதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கிராமப்புற இந்தியாவில் தான் வசிக்கின்றன.. மீதமுள்ள 26 சதத்திற்கும் குறைவான குடும்பங்கள் தான் நகர்ப்புற இந்தியாவில் வசிக்கின்றன.எண்ணிக்கையில் சொல்வதானால், 3,29,19,665 தலித் குடும்பங்கள் கிராமப்புறத்திலும், 1,13,07,252 தலித் குடும்பங்கள் நகர்ப்புறத்திலும் வசிக்கின்றன. அதே போல இன்னொரு கவனிக்க வேண்டியஅம்சம் என்னவென்றால், மொத்தமுள்ள தலித் மக்களில் 60 சதமானம் பேர் இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் மட்டும் வசிக்கின்றனர். 
உத்தரப்பிரதேசத்தில் 76.49 லட்சம் குடும்பங்களும், மேற்கு வங்கத்தில் 51.40 குடும்பங்களும், தமிழ் நாட்டில் 37.59 லட்சம் குடும்பங்களும், ஒன்றுபட்ட ஆந்திராவில் 36.71 குடும்பங்களும், மகாராஷ்டிராவில் 33.11 லட்சம் குடும்பங்களும், பீகாரில் 32.30 லட்சம் குடும்பங்களும் வசிக்கின்றன.
இன்றைக்கும் தண்ணீருக்கு அடிபம்பினை நம்பி வாழும் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 1,75,35,781. வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய்யை நம்பி வாழும் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 1,74,64,007. இதில் 1,61,36,903 குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றன. 
இதிலிருந்தே இன்னும் மின்சாரம் என்பது பல இலட்சம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிராமப்புறங்களில் சென்று சேரவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. 
சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா ஒளிர்வதாகச் சொன்னவர்கள் ஆட்சியில் இருந்த போதும் - இருக்கின்ற போதும் - ஒளிரும் இந்தியாவின் இருண்ட பக்கத்தின் அத்தாட்சிகளாய் இன்னும் சில உண்மைகள் இதோ:கழிப்பறை வசதிகளை எடுத்துக் கொண்டால் வாழும் இடத்திலேயே கழிப்பறை உள்ளதலித் குடும்பங்களின் எண்ணிக்கை 1,49,75,126. அதாவது வெறும் 34 சதவீத தலித் குடும்பங்களுக்கு வாழுமிடத்திலேயே கழிப்பறை வசதி உள்ளது.
2,92,51,791 தலித் குடும்பங்களுக்கு வாழுமிடத்தில் கழிப்பறை வசதி கிடையாது. இதில் 1,82,616 தலித் குடும்பங்கள் திறந்த வெளியை உபயோகப்படுத்துபவர்களாக உள்ளனர். அ
தே போல் உலர் கழிப்பறைகளை பயன்படுத்தும் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 64,111.
 பன்றி போன்ற விலங்குகளின் மூலம் கழிப்பறைகளை சுத்தப்படுத்திக் கொள்ளும் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 78,362. பொதுக் கழிப்பிடங்களை நம்பி வாழும் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 17,99,243. 
 தூய்மை இந்தியா பற்றி பேசும் பிரதமரே இவர்களுக்கெல்லாம் என்ன சொல்லப் போகிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்?ச
மைப்பதற்கு விறகை மட்டுமே முக்கியமாக நம்பி வாழும் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 12,42,76,493. அதே போல நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் மத்திய அரசாங்கம் தற்போது அழுத்தம் திருத்தமாய்க் கூறி வரும் வங்கிச் சேவை குறித்தது. 2,25,29,047 தலித் குடும்பங்களுக்கு மட்டுமே வங்கிச் சேவை கிடைக்கின் றது. 
அதாவது மொத்தமுள்ள தலித் குடும்பங்களில் பாதிப் பேருக்கு வங்கிச் சேவை கிடைக்கவில்லை. தனியறை எதுவும் இன்றி வாழும் தலித் குடும்பங்கள் 29,98,143. வாழவே முடியாத இடிந்து போன வீடுகளில், கிராமப்புறங்களில் 29,59,270 தலித் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 6,05,022 குடும்பங்களும் வசிக்கின்றன. 
சொத்து என்று பார்க்கும்போது 99,95,804 தலித் குடும்பங்களுக்கு ரேடியோ, டிவி, தொலைபேசி, கம்ப்யூட்டர், இரு சக்கர வாகனம் என்று எதுவுமே இல்லை. -


\\
அப்துல் கலாம்


ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம்‘ எனப்படும் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான இராமேஸ்வரம் நகரில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜெயினுலாபுதீன், தாயார் ஆஷியம்மா.இராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளியில், தனது பள்ளிக் கல்வியை முடித்த அப்துல்கலாம், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954-ஆம் ஆண்டு இயற்பியலில் பட்டம் பெற்றார். 1955-ஆம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
அங்கு படித்தபோது விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கலாம், அதற்கான தேர்வில் அவர் 9-வது இடம்பெற்றார். 

எனினும் விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சென்னை எம்.ஐ.டி.யில் உயர் கல்வியை முடித்த அவர், 1958-ஆம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். 
அப்போது அவருக்கு கிடைத்த மாதச்சம்பளம் ரூ. 250.முதலில் இந்திய ராணுவத்துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்த அப்துல் கலாம், பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். 
அங்கு 1980-ஆம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகிணி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற்றினார். போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல், இதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை கூட கலாமின் கண்டுபிடிப்புகள்தான். 
இந்திய பாதுகாப்புத் துறையில் நடத்தப்படும் சோதனைகளுக்கு வெளிநாட்டுக் கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், முற்றிலும் உள்நாட்டுக் கருவிகள் மூலமே சோதனைகள் நடத்தியவர் அப்துல் கலாம்.அவரது சேவையைப் பாராட்டி 1981-ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. 1963 முதல் 1983 வரை 20 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றிய கலாம், அக்னி, பிருத்வி, ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கிய பணியாற்றினார். இதனால் அவரைக் பெருமைப்படுத்தும் விதமாக 1997-ல் அப்துல் கலாமிற்கு, நாட்டின் உயரிய விருதான “பாரத் ரத்னா” வழங்கப்பட்டது.
1999-ஆம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையிலும் கலாமிற்கு முக்கியப் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், 2002-ஆம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2007 ஜூலை 25-ம் தேதி வரை அப்பதவியில் இருந்த அவர், 2020ல் இந்தியாவை வல்லரசாக்கும் வகையில்,
இளைஞர்களும் மாணவர்களும் பாடுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். பதவிக்காலம் முடிந்த பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட லட்சியப் பிடிப்பு மிக்க மாணவர்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஷில்லாங்கில் கலாமின் இறுதிமூச்சு அடங்கிய நிமிடம் வரை அவர் மாணவர்களுடனேயே தன் வாழ்க்கையை அவர் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
கலாம் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளும் கலாமிற்கு விருதுகளை வழங்கி கௌரவித்து உள்ளன.‘அக்னிச் சிறகுகள்’ கலாமின் வாழ்க்கை வரலாற்று நூலாகும். ‘எழுச்சித் தீபங்கள்’, ‘அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். 
‘எனது பயணம்‘ என்ற கலாமின் கவிதை நூல், ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இசைஞானமும் கொண்ட அப்துல்கலாம், வீணை நன்றாக வாசிப்பார். 
அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரம் என்ற சந்நியாசியிடம்தான் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியமே, கலாமிற்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் ஆவார்.இ
றுதி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாத அப்துல்கலாம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களையும், மாணவ- மாணவியரையுமே தனது குழந்தைகளாக வரித்துக் கொண்டார்.
எவ்வளவோ நல்லமனது கொண்டவராக இருந்தாலும் அரசியல் ,மற்றும் அணு ஆயுதங்கள்  கலாம் பிற்போக்குவாதியாகவே பாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் குரலாகவே இருந்தார்.அதானால்தான் பாஜக அவரை குடியரசுத் தலைவராக்கியது.தன்னை சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் இல்லை என்று முகமூடி அணிந்து கொண்டது.
இந்த வழியில் கலாம் அவர்களின் எண்ணங்கள் நம்மக்கு ஒத்து வராததாக இருந்தாலும்.தமிழர்,சாமானிய குடுமபத்தில் இருந்து நாட்டின் தலைமகனாய் உயர்ந்தவர் என்பதில் அவர் நம் மதிப்பில் உயர்ந்துதான் நிற்கிறார்.
====================================================
இன்று ,
ஜூலை-29.
  • சர்வதேச புலிகள் தினம்
  • தாய்லாந்து, தாய்மொழி தினம்
  • ருமேனியா தேசிய கீத தினம்
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)
  • பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1957)
====================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?