உணவு முழுக்க விசம் !

ரசாயன மய  விளை நிலங்கள்,?

மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் விளைநிலங்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன?தமிழக அரசு நடத்தியிருக்கும் மண்வள ஆய்வு ஒன்றில், நச்சுத்தன்மை கொண்டதாக விளைநிலங்கள் மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உணவுப் பொருள் உற்பத்திக்கே தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

ஏற்கெனவே, வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நம்முடைய உணவுப் பொருட்கள் தரமற்றவை என்ற சர்ச்சையில் இருக்கிறது. சமீபத்தில், ‘தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகம்’ என்று தமிழக விளைபொருட்களை வாங்க மறுத்ததுடன், தமிழக அரசுக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறது கேரள அரசு. ரசாயன உணவுகளாலேயே பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் ஆளாகி வரும் நிலையில், விளைநிலமே நஞ்சாகி இருப்பது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என இதய சிகிச்சை மருத்துவரான முகுந்தனிடம் கேட்டோம். 

‘‘காய்கறிகளில் கலக்கிற பூச்சிக் கொல்லிகளும், ரசாயனங்களும் Micronutrients என்கிற நுண்சத்துகளை முழுமையாக அழித்துவிட்டன. குறிப்பாக மாலிப்டினம் (Molybdenum), செலினியம் போன்ற தாதுக்களே கிடைப்பதில்லை. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நீரிழிவு, ஆயுட்காலம் குறைவு, புற்றுநோய், இதயநோய் என்று பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இப்போது நிலமே நஞ்சாகிவிட்டதால் அந்தப் பாதிப்பு இன்னும் அதிகம் ஆகலாம். 
காய்கறிகளைத் தண்ணீரில் கழுவுவதன் மூலம் அதிலிருக்கும் நச்சுத்தன்மையை கொஞ்சம் குறைக்க முடியும். ஆனால், மண்ணிலேயே நஞ்சு கலந்திருந்தால் அது தாவரத்தின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஊடுருவும். அதன் பிறகு, அந்த விளைபொருளைக் கழுவினாலும் பயன் இல்லை. வேக வைத்தாலும் பயன் இல்லை.  அதிலும் பூமிக்கடியில் விளையும் காய்கறிகள் இன்னும் நச்சுத்தன்மை மிக்கவையாகவே இருக்கும். 

மேகி பிரச்னையில் நாம் கவனிக்காத இன்னொரு கோணம் இருக்கிறது. மேகியுடன் கொடுக்கப்பட்ட மசாலாவை வெங்காயத்திலிருந்துதான் நெஸ்லே நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேகியில் காரீயம் அதிகமாக இருந்ததற்கு வெங்காயமும் முக்கிய காரணம் என்று இப்போது கூறியிருக்கிறார்கள். வெங்காயம் மட்டுமல்ல... பூமிக்கு அடியில் விளையும் பல காய்கறிகளிலும் காரீயம், ஆர்சனிக், ஸிங்க் எனப்படுகிற துத்தநாகம் போன்ற நச்சுகள் ஏற்கெனவே அதிகமாக இருக்கின்றன. இந்த நச்சு களின் அளவு இன்னும் அதிகமாகலாம்.

மண்ணிலிருக்கும் விஷத்தன்மை விளைபொருட்களோடு மட்டும் போய்விடாது. நாம் பயன்படுத்துகிற தண்ணீரையும் பாதிக்கும். பெங்களூரு விமான நிலையம் அருகில் புதிதாக குடியிருப்புப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இங்கு தண்ணீருக்காக போர் போடும்போது 500 அடி ஆழம் வரைகூட ஆர்சனிக், காரீயம் போன்ற நச்சுகள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த தண்ணீரை சுத்திகரிக்கவும் முடியவில்லை. இதுபோல சீர்கெட்ட பூமியில் மேயும் கால்நடைகளின் பால், இறைச்சியின் வழியாகவும் நமக்குப் பிரச்னைகள் வரலாம்’’ என்று எச்சரிக்கிறார் முகுந்தன். 

இயற்கை வேளாண் விவசாயியான சச்சிதானந்தம் உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என  விளக்குகிறார். ‘‘இன்று 4 வயது குழந்தைகூட கண்ணாடி அணிந்திருக்கிறது, மலட்டுத்தன்மை கொண்ட விதைகளையும் பழங்களையும் சாப்பிட்டு பலரும் மலட்டுத்தன்மை கொண்டவர்களாகி விட்டார்கள். ரசாயன உரங்களால் இப்போது உச்சகட்ட அபாயத்தில் இருக்கிறோம். இந்த நேரத்திலாவது நாம் விழித்துக்கொண்டு இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். இயற்கை விவசாயம் என்பது புதிய விஷயம் இல்லை. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நாம் செய்து வந்த முறைதான் இயற்கை விவசாயம். இடையில் வந்த ரசாயன உரங்களை விட்டுவிட்டு பாரம்பரிய விவசாய முறைக்கே சென்றால்தான் மக்களையும் மண்ணையும் காப்பாற்ற முடியும். 
இந்த நேரத்தில் நாம் இன்னொரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வெளிநாட்டு நிறுவனங்களாலேயே தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இயற்கை விவசாயத்துக்கு எல்லோரும் மாறினால் இந்தியாவினால் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும் என்பதால், மக்களைக் குழப்பும் வேலையை வெளிநாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. 

‘இயற்கை விவசாயத்தில் விளைச்சல் இருக்காது... லாபம் பெற 3 ஆண்டுகளாவது ஆகும்’ என்பவை எல்லாமே பொய் பிரசாரங்கள்தான். ரசாயன உரங்களுக்கு 100 ரூபாய் செலவு செய்து 150 ரூபாய் சம்பாதிப்பதைவிட, இயற்கையான தொழில்நுட்பங்களின் மூலம் 30 ரூபாய் கூட செலவில்லாமல் நியாயமான லாபத்தைப் பெற முடியும்’’ என்கிறார் சச்சிதானந்தம். 
இயற்கை வேளாண் விவசாயத்துக்காக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? தமிழக வேளாண் இயக்குநர் முனைவர் மு.ராஜேந்திரனிடம் கேட்டோம்... 

‘‘1960களில் ஏற்பட்ட உணவுப்பொருள் பற்றாக்குறையை சமாளிக்கவே ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. பற்றாக்குறை நீங்கிய பிறகு நாம் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்க வேண்டும். ஆனால், மாறாமல் விட்டுவிட்டோம். இத்தனை ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வந்த ரசாயனங்களின் பாதிப்பு மண்ணில் இருக்கலாம் என்ற சந்தேகத்தால்தான் மண்வளப் பரிசோதனையை தமிழக அரசு மேற்கொண்டது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு, தமிழகத்தில்தான் 80 லட்சம் விவசாய நிலங்களின் மண் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட விவசாயி களுக்கு விளைநிலத்தில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி கூறியிருக்கிறோம். தேவைப்படுகிற ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருகிறோம். 

இயற்கை விவசாயம் நல்லது என்பதற்காக  உடனடியாக  நம்மால் மாறிவிட முடியாது படிப் படியாகத்தான் மாற் றங்களை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் மீண்டும் நாம் உணவுப்பொருள் பற்றாக் குறையை சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நாங்கள் செயற்கை உரங்களை ஊக்குவிப்பது இல்லை. இயற்கை விவசாயத்துக்கு உதவி செய்யும் மண்புழு, தேனீ, வண்ணத்துப்பூச்சி, ஆந்தை, பாம்பு போன்ற உயிரினங்களை தோட்டங்களில் மீண்டும் உருவாக்குவதற்காக சில திட்டங்களை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம். 

விவசாய நிலத்தை ஒட்டி பூந்தோட்டம் அமைக்கவும் உதவி கள் செய்து வருகிறோம். ஒரு வயலில் நன்மை செய்யும் உயிரினம் ஒன்று இருந்தாலே தீமை செய்யும் இரண்டு பூச்சியை அழித்துவிடும். ஆனால், அறியாமையினால் பூச்சியைப் பார்த்தாலே மருந்து அடிக்கக் கூடாது என்பதையும், முதல் 40 நாட்களுக்கு பயிர்களுக்கு எந்த மருந்தையும் அடிக்க வேண்டாம் என்றும் சொல்லி வருகிறோம். 2 ஆயிரத்து 500 சோலார் வாட்டர் அமைப்புகளையும், 77 ஆயிரம் பண்ணைக் குட்டைகளையும் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். மண்புழு உரத்துக்கான விவசாயக் கடனும் அரசு கொடுத்து வருகிறது. 

முன்னோடி விவசாயிகளின் ஆலோசனைகளின்படி  மாற்றங்களுக்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கேரள அரசு குற்றம் சாட்டியிருக்கிற அளவு தமிழக விளை பொருட்களில் நச்சுத்தன்மை இல்லை என்பதுதான் உண்மை!’’ 

அரசு செய்ய வேண்டியது என்ன?



நோய்களிலிருந்து மீளவும், எதிர்காலத் தலைமுறையையாவது ஆரோக்கியமானதாக உருவாக்கவும் சில கடமைகளை நாம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உரங்கள் தயாரிப்புக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மானியமாக இந்திய அரசு வழங்கி வருகிறது. அதில் சிறு பகுதியையாவது இயற்கை உரங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக  செலவிட வேண்டும். இயற்கை இடுபொருட்களை ஏற்கெனவே தயாரித்து வரும் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். 

இயற்கை விவசாயம் நடப்பதற்கு பசுக்கள் அவசியம் தேவை. நம்முடைய காய்கறிகளைப் புறக்கணிக்கும் கேரளாவுக்கு லாரி லாரியாக பசுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். பால் வற்றிப்போன மாட்டைக் கொன்றுவிட வேண்டும் என்ற தவறான மனநிலையிலேயே மக்களும் இருக்கிறார்கள். இந்த மாடுகளைப் பாதுகாத்தால் இயற்கை விவசாயத்துக்குப் பெரும் உதவி செய்யும். 

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி கள் உண்டாக்கும் அபாயங்கள் பற்றியும் இயற்கை வேளாண் விவசாயத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிசா, சிக்கிம்  போன்ற பல மாநிலங்கள் இயற்கை வேளாண் கொள்கையை செயல்படுத்தி வருகின்றன. தமிழகமும் இதேபோல முழுமையான இயற்கை வேளாண் மாநிலமாக மாற வேண்டும்!
நன்றி:தினகரன்.
========================================================================இன்று ,
ஜுலை-31.

  • ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)
  • உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
  • சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)

========================================================================
1910 -ம் ஆண்டு ஒரு ஓவியரின் கற்பனையில் 2000 ம் ஆண்டு இருக்கும் வளர்ச்சி பற்றி ஒரு ஓவியம்.
========================================================================
அரிதான பொருள் நீர்.
உலகின் நீரில் 97 சதவீதம் கடலில் உள்ள உப்பு நீர் தான் உள்ளது. 
மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே குடிக்க மக்கள் பயன் படுத்த முடிந்த நன்னீர். 

அந்த நல்ல நீரில் 68.7 சதவீதம் பனிமலைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் உள்ளன. 
30.1 சதவீதம் நிலத்தடி நீர். 
மீதமுள்ள 1.2 சதவீதம் மட்டுமே ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகளில் உள்ளன. 
வெப்பமயமாதல், காடுகளை அழித்தல் போன்ற இயற்கைக்கு எதிரான செயலால், நீர் ஆதாரம் மிகவும் கெட்டு விட்டது. உலகில் உள்ள பல பெரிய ஆறுகள் தற்போது அழியும் நிலைக்கு 
தள்ளப்பட்டுள்ளன.

நிலத்தடி நீரையும் அளவுக்கு மேல் உறிஞ்சி வருகிறோம். 
இது மிகவும் ஆபத்தானது. 
வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றுக்கு இதுவும் ஒரு காரணம். 
நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கே பாதிப்பு ஏற்படுகிறது.

நீரின் தேவை:விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாக தொழிற்சாலை, வீடு போன்றவற்றில் அன்றாட தேவைக்காக நீர் பயன்படுத்தப்படுகிறது. 1
970ம் ஆண்டில் உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். 
இது 1980ல் 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. 
தற்போது உலக மக்களின் நீர்த்தேவை மொத்தத்தில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. 
இதே நிலை தொடர்ந்தால் நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. 
நீர் இல்லாவிடில் உலகம் அழிந்து விடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
மாசுபடுத்தும் காரணிகள்:மனித செயல்பாடுகளே நீர் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம். 
காற்று மாசுபட்டால் நீரும் கண்டிப்பாக மாசுபடும். 
தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள் மற்றும் ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. 
இந்த வேதிப்பொருட்கள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் கெடுக்கிறது. 
நிலத்தின் இயற்கை தன்மையையே மாற்றுகிறது. 
வீட்டு கழிவறை மற்றும் சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபாடு அடைகிறது.

உலகம் முழுவதும் 25---40 சதவீதம் வரை நிலத்தடி நீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. 
60 சதவீத நிலத்தடி நீர் விவசாயத்துக்கு உபயோகப்படுகிறது.
மணல் கொள்ளையரால் மழை நீர் நிலத்தடி நீராக சேமிக்கப்படுவதில் லை.இதை கட்டுபடுத்திட  மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பில் உள்ள அரசு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அது மட்டுமல்ல.மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக அரசு நடந்து கொள்வதுதான் வேதனையை தருகிறது.

========================================================================
தூக்கின் பாதை.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. 
இந்நிலையில் இவ்வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:1993 மார்ச் 12 : மும்பையில் 13 இடங்களில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பில் 257 பேர்கொல்லப்பட்டனர்.
மேலும் 713 பேர் காயமடைந்தனர்.1993 ஏப்ரல் 19 : மும்பை குண்டுவெடிப்புவழக்கில் நடிகர் சஞ்சய் தத் கைதுசெய்யப்பட்டார்.1993 நவம்பர் 4 : சஞ்சய் தத் உட்பட 189 பேருக்கு எதிராக 10 ஆயிரம் பக்க முதல்நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
1993 நவம்பர் 19 : இந்த வழக்கு சிபிஐ வசம்ஒப்படைக்கப்பட்டது.2003 செப்டம்பர் : விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.2006 ஆகஸ்ட் 10 : செப்டம்பர் 12-ல் தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி பி.டி.கோடேஅறிவித்தார்.
2006 செப்டம்பர் 12 : தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டனர். யாகூப்உட்பட 12 பேருக்கு மரண தண்டனையும் 20பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.2011 நவம்பர் 1 : தண்டிக்கப்பட்டோர் தரப்பிலும், அரசு சார்பிலும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.
2012 ஆகஸ்ட் 29 : விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.2013 மார்ச் 21 : யாகூப் மேமனின் மரண தண்டனை மட்டும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 
10 பேரின் மரண தண்டனை ஆயுளாகக்குறைக்கப்பட்டது.2013 ஜூலை 30 : யாகூப் மேமனின் முதல் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.2014 ஏப்ரல் 11 : யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிநிராகரித்தார்.2014 ஜூன் 2 : மேமனின் 2-வது சீராய்வு மனுவைவிசாரித்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனையைநிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.
2015 ஏப்ரல் 9 : 2-வது சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2015 ஜூலை 21 : மறு சீராய்வு மனுவை (கடைசிவாய்ப்பு) உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.2015 ஜூலை 22 : மகாராஷ்ட்டிர மாநிலஆளுநருக்கு கருணை மனு அனுப்பப்படுகிறது.
2015 ஜூலை 23 : சட்ட நடைமுறைகள் முறையாகபின்பற்றப்படாததால், ஜூலை 30-ல் மரணதண்டனையை நிறைவேற்றத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேமன் மீண்டும் மனுத் தாக்கல்.
2015 ஜூலை 28 : நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
2015 ஜூலை 29 : குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பப்பட்டது.2015 ஜூலை 29 : சட்ட நடைமுறைகள் சரியாகபின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி யாகூப்மேமன்மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
2015 ஜூலை 29 : ஆளுநரும், குடியரசுத்தலைவரும் கருணை மனுவைநிராகரித்தனர்.2015 ஜூலை 30 : அதிகாலை 2 மணிக்கு மீண்டும்உச்சநீதிமன்றத்தில் மேமன் சார்பில் முறையீடு செய்யப்பட்டு 5 மணிக்கு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
2015 ஜூலை 30 : அதிகாலை 6.35 மணிக்குயாகூப் மேமன் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?