மனித மூளை
மனிதர்களுடைய நரம்பியல் அமைப்பின் மையமே மூளைதான். தகவல்களைச் சேகரிக்க, சேர்த்த தகவல்களின் அடிப்படையில் செயல்பட, செயல்பாட்டின் முடிவுகளை எதிர்காலப் பயன்பாட்டிற்கு சேமித்து வைக்க என.. சுருக்கமாகச் சொன்னால் மனிதர்கள் வாழ்வதை அர்த்தமுள்ளதாக ஆக்க உதவுவது மூளையே.
பேரண்டத் திலேயே மிகச் சிக்கலான உயிருள்ள அமைப்புஎதுவெனப் பார்த்தால் அது மனித மூளையாகத் தான் இருக்க முடியும். சராசரியாக சிறிய காலிஃளவர் பூவின் அளவுள்ள இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள அதன் எடை சுமார் 1.5 கிலோகிராம்.
மனித உடல் அளவுள்ள ஒரு பாலூட்டியின் மூளை எடையைவிட மனித மூளை மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.
மூளையின் உள்ளே 80 சதம் தண்ணீர்தான்.
இது திசுக்களின் உள்ளே உள்ள சைட்டோபிளாசம் என்றழைக்கப்படும் கரைசல் வடிவத்தில் இருக்கும்.
மீதி 12 சதம் கொழுப்பு, 8 சதம் புரோட்டீன்.. இவ்வளவு தான்.
ஆனால் இந்த `தம்மாத்தூண்டு’ மனிதமூளைதான் வரலாற்றில் எவ்வளவு அதிசயங் களைச் சாதித்திருக்கிறது..
இன்னமும் சாதிக்க இருக்கிறது!
உடலின் எடையில் மூளை 2 சதவீதமே இருந்தாலும் ரத்த ஓட்டத்தின் வழியாக எடுத்துச் செல்லப் படும் ஆக்சிஜன், ஊட்டச்சத்து, குளூகோஸ் ஆகிய வற்றில் 20 முதல் 25 சதவீதம் வரை அது தன் பராமரிப்புக்கு எடுத்துக் கொள்கிறது. மண்டையோட் டின் கடினமான எலும்புகளால் அது பாதுகாக்கப்படுகிறது.
மூளைக்குள் 10000 கோடி நியூரான்கள்(நியூரான் என்பது நரம்பு உயிரணு) தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
அவைஉணர்வு சம்பந்தமான தகவல்களை இடைவிடா மல் பெற்று அவற்றை பகுத்தாய்வு செய்கின்றன.
சிந்தனை, கற்றல், நினைவாற்றல், திட்டமிடுதல், பேச்சு, கற்பனைத் திறன், கனவு காணுதல், பகுத்தாய்தல், உணர்ச்சிகளைக் கையாளுதல் ஆகியஅனைத்தின் மையமாக இருப்பது மூளைதான்.
உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துவது மூளையே .இத்தகைய அதிசய உறுப்பின் திறன் நாம் பராமரிப்பதைப் பொறுத்தே அமைகிறது.
நினைவாற்றல் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் கூட, நாம் சில முயற்சிகளை எடுத்தால் நமது நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
தன்னை சூழ்நிலைக்குத் தகுந்தபடி மாற்றிக் கொள்ளும் அசாத்தியத் திறன் படைத்தது மூளை.
ஒருவிளையாட்டு வீரர் போதுமான அளவு உறக்கத் தையும் சத்தான உணவையும் சார்ந்திருப்பது போல, உணவும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் மூளையின் திறனை மேம்படுத்தக் கூடியவை. உடற்பயிற்சி மூளைக்குக் கிடைக்கும் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது.
ஒரு நாளைக்குத் தேவையான உறக்கத்தை உடலுக்குத் தரவில்லையெனில், மூளை அதன் முழுத்திறனுடன் செயல்பட
முடியாது. நண்பர்களுடன், குழந்தைகளுடன், உறவினர்களுடன் மனம்விட்டு உரையாடுவதும் விளையாடுவதும் கூட அறிவுத் திறனை மேம்படுத்தும். மூளையின் செயல்பாட்டிற்கு மிகப் பெரிய எதிரி மனஅழுத்தம். தொடர்ச்சியான மனஅழுத்தம் மூளையின் திசுக்களை அழித்து படிப்படியாக நினைவாற்றலையே அழித்துவிடும்.
வழக்கமாகச் செய்யும் வேலைகளிலிருந்து விடுபட்டு சவாலான பணிகளை ஏற்பதும் இதுவரை பழக்கப்படாத முற்றிலும் புதிய திட்டங்களில் இறங்குவதும் கூட மூளையின் திறனை அதிகரிக்கக் கூடியவையே. வானவில்லின் நிறங்களை நினைவில் வைத்திருக்க பள்ளியில் ஒற்றை வார்த்தையை மாண வர்களுக்குச் சொல்லித் தருவார்கள்.
இதேபோல பல வார்த்தைகளை தேவைக்குத் தகுந்தபடி நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஒரு பெயரை நினைவில் வைக்க அதனுடன் தொடர்புடைய ஒரு பிம்பத்தை மனத்திரையில் கொணரலாம்.
உதாரணமாக, வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு பொருளை வாங்கிவரவேண்டும் எனில், அப்பொருள் கிடைக்கும் கடையின் பிம்பத்தை மனதில் பதியவைத்துக் கொள்ளலாம். ஒரு கைபேசி எண்ணை நினைவில் வைக்க அதை உடைத்து மூன்று பகுதிகளாக நினைவில் வைக்கலாம். உதாரணமாக, 9445880081 என்ற எண்ணை நினைவில் வைக்க 9445 - 88 - 0081 என்று பிரித்து நினைவில் வைக்கலாம். புதிய நண்பர் ஒருவரது பெயரை நினைவில் வைக்க ஏதாவது ஒரு விதத்தில் அவரது பெயரை அடிக்கடி பயன்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
நாம் மனதளவில் எடுக்கும் உறுதியான முடிவைப் பொறுத்தே நமது நினைவாற்றலும் உடல்நலனும் வாழ்வியல் முறையும் அமையும்.
-பேராசிரியர் ராஜு.
========================================================================
ஊழல் அர்த்தம் தெரியாத பாஜக.
நரேந்திர மோடியும், பாஜகவும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐமுகூ அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற பிரம்மாண்டமான ஊழல்களை முன்னிறுத்தின.
நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியின்கீழ் நடைபெற்ற ஊழல் மற்றும் சூறையாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று உறுதி அளித்திருந்தார். பாஜக அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவடைந்ததற்குப்பின்னர் மதுரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், நாட்டைக் கொள்ளையடித்தவர் களுக்கு நல்ல காலம் கிடையாது, அவர்களுக் குக் கெட்ட காலம்தான் என்றார்.
மேலும் அவர், “எங்கள்ஆட்சியில் கடந்த ஓராண்டு காலத்தில் ஊழல்கள் அல்லது உறவினர்களுக்குச் சலுகை என்று ஏதேனும் சொல்ல முடியுமா?’’ என்றும் பீற்றிக் கொண்டார்.
இவ்வாறு தற்பெருமை அடித்துக்கொண்ட பின், ஒருசில நாட்களிலேயே, இவர்கள் சவடால் அடித்த நேர்மை மற்றும் சுத்தமான அரசாங்கம் என்கிற பலூனில் ஓட்டை விழுந்துவிட்டது.
மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மிகவும் அருவருப்பான செயல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இவ்வாறு அமைச்சரின் தரும சிந்தைக்கு ஆளாகிஆதரவினைப் பெற்ற நபர் வேறு யாருமல்ல, ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் `புகழ்’ லலித் மோடி என்பவர்தான். அமைச்சர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு லலித் மோடி வழக்கு குறித்துபரிந்துரைத்திடுவதற்காக, முறையாகப் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறை களையும் புறந்தள்ளியது மட்டுமல்ல, அவரது கணவரும் மகளும் லலித் மோடியின் சார்பில் வாதிடும் வழக்குரைஞர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தன் அமைச்சரவை சகாவிற்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க பிரதமர் பிடிவாதமாக மறுத்து வருவதுடன், மோடியும் பாஜக தலைமையும் அவரது தவறான செயல்களை நியாயப்படுத்தி அவரைப் பாதுகாத்து வருகிறார்கள்.
லலித் மோடி விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, அந்த நபரைப் பாதுகாத்திட எப்படியெல்லாம் செயல்பட்டிருக் கிறார் என்ற விவரங்கள் வெளியாகி நிலைமைகளை மேலும் கறையாக்கியுள்ளன. வசுந்தரா ராஜே, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, லலித் மோடி இங்கிலாந்தில் தங்கி இருப்பதற்காக அளித்துள்ள விண்ணப்பத்தில், அப்பேர்வழிக்கு நற்சான்று வழங்கி சாட்சிக் கையொப்பம் இட்டிருக்கிறார். இதில் மிகவும் மோசமான சங்கதி என்னவெனில், அவ்வாறு தான் கையொப்பமிட்டிருப்பதைக் கமுக்கமாக வைத்துக் கொள்ளுமாறும், இந்திய அதிகாரிகளுக்கு இத்தகவலை தெரிவிக்காமல் மறைத்துவிடுமாறும் அவர் அதில் கேட்டுக் கொண்டிருப் பதாகும்.
வசுந்தரா ராஜேயும் அவரது மகன் துஷ்யந்த்சிங்கும் (இவர் மக்களவை உறுப்பினர்) லலித்மோடியுடன் கொண்டுள்ள தொடர்பு என்பதுசலுகை சார் முதலாளித்துவப் பிணைப்புக்குரிய அனைத்து குணாதிசயங்களையும் கொண்டதாகும்.
துஷ்யந்த் நிறுவனத்தின் பங்குகளை அதன் பெயரளவேயான விலைமதிப்பைவிட பத்தாயிரம் மடங்குகள் விலை கொடுத்து லலித் மோடி வாங்கியிருக்கிறார் என்ற சங்கதி இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. '
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒரு நபர், தான் அளித்த நற்சான்றிதழ் குறித்து இந்திய அரசின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டாம் என்றும் அதனை ரகசியமாகவைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருப்பதானது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். இதுபோன்ற சமாச்சாரங்களை பாஜக பரிவாரங்கள் வழக்கமாகத் தேசவிரோத நடவடிக்கைகள் என்று அழைத்திடும்.
ஆனால் ராஜே தவறேதும் செய்யவில்லை என்றுபாஜக தலைமையும், பிரதமர் மோடியும் நாணமற்ற முறையில் அதனைத் துடைத்தெறியத் தீர்மானித்திருக்கிறார்கள்.
இவர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் “உறவினர் களுக்கான சலுகை” மற்றும் ஊழல் குறித்து பாஜக தலைவர்கள் இவையெல்லாம் “குடும்ப உறவுகள்” என்றும் “தனிப்பட்ட முறையிலான கடன் பரிவர்த்தனைகள்” என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
மத்தியில் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஓராண்டில் ஊழலற்ற ஆட்சியை அளித்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் பாஜகவின் மூத்த தலைவர்கள் (ஒருவர் மத்திய அமைச்சர், மற்றொருவர் முதலமைச்சர்) சம்பந்தப்பட்டுள்ள இவ்விரு ஊழல் நிகழ்வு களும் வெளிவந்திருக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சௌகான் தலைமையிலான பாஜக அரசாங்கமும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் வியாபம் ஊழல் அவக்கேட்டை மூடி மறைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வித் தேர்வு வாரியம் நடத்திடும் தேர்வுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சம்பந்தப்பட்டதே இந்த வியாபம் ஊழலாகும்.
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று இது தொடர்பாகப் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நிலுவையில் இருக்கும் காலத்தில் இந்த ஊழலுடன் சம்பந்தப்பட்ட (குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள்) 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது நம்பமுடியாத வகையில் நடந்துள்ளது.
ஆயினும் இந்த விவகாரத்தைக் குழிதோண்டிப் புதைத்திட பாஜக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
நீண்டகாலமாக ஆட்சியிலிருக்கும் மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கம் இவ்வாறு வியாபம் விவகாரத்தில் அவக்கேட்டைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறதென்றால், ஓராண்டேயான மகாராஷ்டிரா பாஜக அரசாங்கமும் பாஜக அமைச்சர்கள் பங்கஜா முண்டே மற்றும் வினோத் தாவ்டே சம்பந்தப்பட்டுள்ள இரு ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விரு அமைச்சர்களும் முறையே எவ்விதமான டெண்டரும் கோராது,நடைமுறை விதிகளை முறையாகப் பின்பற்றாது, 206 கோடி ரூபாய் மற்றும் 191 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கி இருக்கிறார்கள்.
மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் மிகவும் விரைவான முறையில் இவ்வாறு ஊழல் சகதியில் புரண்டு கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
பெரு முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தினரின் பிணைப்புடன் நடைபெற்றுவரும் நவீன தாராளமய ஆட்சிமுறையில் ஊழல் பின்னிப்பிணைந்த ஒன்று. இத்தகைய அமைப்பில் சலுகை சார் முதலாளித்துவம் இயல்பாய் அமைந்திருக்கும்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கு கவுதம் அதானிக்கு வழங்கியுள்ள சலுகைகள் இதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும். உண்மையில், முந்தைய ஆட்சியாளர் களைவிட இவர்கள் மேலும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் அவற்றின் மூலம் பல மடங்குஊழல் செய்யவும், பொதுச் சொத்துக் களைச் சூறையாடவும் துடித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
நரேந்திர மோடி வேண்டுமென்றே இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க மறுத்துக் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு அவர் வரவிருக்கும் காலங்களில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
தமிழில்: ச.வீரமணி
ஊழலுக்கு கோப்பை பரிசு உண்டா? |
============================================================================================================
இன்று,ஜூலை-06.
மலாவி விடுதலை தினம்(1964)- தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)
- டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)
- தாதாபாய் நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)
==============================================
ஆபத்துதான்.
கொட்டாவி விடும் போது, தன்னியல்பாக வாயை பெரிதாக திறந்து, மூச்சுக்காற்றை வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே நேரத்தில் செவிப்பறை விரிவடைந்து, நுரையீரலில் இருந்து, பெருமூச்சாக, காற்றை வாய்வழியாக வெளி
விடுவதுமான செயலை குறிக்கிறது.
விடுவதுமான செயலை குறிக்கிறது.
இப்படி கொட்டாவி விடுவதால், காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால், நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன. நுரையீரல் நுண்ணறையில் உள்ள வளிக்கலங்கள் விரிவடைவதால், பரப்பியங்கி நீர்மம் வெளிப்படுகிறது.
புத்துணர்ச்சியான காற்று உள்ளிழுக்கப்படுவதால், மூளை குளிர்வடைகிறது. கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையில் இருந்து, இயல்பு நிலைக்கு திரும்புவதை தன்னையறியாமல் வெளிகாட்டுவதாலே, கொட்டாவி வருவதாக கூறப்படுகிறது.
இப்படி கொட்டாவி வருவது கூட, தொற்று காரணியாகும்.
ஏனெனில் அருகில் இருப்போர் கொட்டாவி விடும் போது, நமக்கும் கொட்டாவி வருவதால், தொற்று வினையாகும்.
ஏனெனில் அருகில் இருப்போர் கொட்டாவி விடும் போது, நமக்கும் கொட்டாவி வருவதால், தொற்று வினையாகும்.
இதையே தான், கிராமப்புறங்களில் குமரி தனியாக போனாலும், கொட்டாவி தனியாக போகாது என்பர். இப்படி கொட்டாவிக்கே தனியாக ஒரு வரலாறு இருக்கிறது.
இருந்தாலும், நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது தான் கொட்டாவி வருகிறது என்றே பலரும் கூறுகிறார்கள்.
இருந்தாலும், நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது தான் கொட்டாவி வருகிறது என்றே பலரும் கூறுகிறார்கள்.
இந்த ஆய்வு, முழுமை பெறாததால், அறிவியல் பூர்வமான தகவல் சேகரிப்பு இன்னும் முழுமை பெறவில்லை.
இப்படி கொட்டாவி விடுவது, இயல்பு நிலையில் இருக்கும் போது எவ்வித பாதிப்புகளும் இல்லை.
இதே, வாயை பெரிதாக பிளந்து, சத்தத்துடனும் கூடிய கொட்டாவி அடிக்கடி வந்தால், நுரையீரல் பிரச்னையாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
========================================================================