பொடுகு போக......



200 மி.லி. தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். 
அதில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து அணைத்து மூடி வைக்கவும். 
ஆறியதும் அந்தத் தண்ணீரில் பயத்த மாவைக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பொடுகு போகும். 
ஒற்றைச் செம்பருத்திப் பூ 10 எடுத்து கைகளால் கசக்கினால் சாறு வரும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கசக்கி, வடிகட்டவும். 
அதில் 2 டீஸ்பூன் வெந்தயத் தூள், 2 டீஸ்பூன் பயத்த மாவு கலந்து தலைக்கு பேக் மாதிரி தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். 
இது பொடுகையும், அதனால் வரும் அரிப்பையும் நீக்கும்.

வெந்தயம், நெல்லிமுள்ளி, வால்மிளகு, பிஞ்சு கடுக்காய் நான்கையும் தலா 25 கிராம் எடுத்து 100 கிராம் பயறு மற்றும் 100 கிராம் பூலாங்கிழங்கு சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும்.
 இந்தப் பொடியை தலை குளிக்க உபயோகித்து வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயம், நெல்லிமுள்ளி, வால்மிளகு மற்றும் பிஞ்சுக் கடுக்காயை தலா 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 

கால் லிட்டர் நல்லெண்ணெயில் பொடித்ததைப் போட்டு தைலம் பதம் வரும் வரைக் காய்ச்சவும். வாரம் 2 முறை இந்தத் தைலத்தைத் தலைக்குத் தடவி, இதற்கு முந்தைய குறிப்பில் சொன்ன கலவையால் தலையை அலசினால் பொடுகு மறையும். கூந்தல் பளபளப்புடன் கருமையாக வளரும். 
வெந்தயமும் நெல்லிமுள்ளியும் ஸ்ட்ரெஸை நீக்கும்.
 
மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை மூன்றையும் தலா 1 கைப்பிடி எடுத்துப் பொடியாக நறுக்கவும்.
 4 நெல்லிக்காயை விதை நீக்கி சீவிக் கொள்ளவும். கால் லிட்டர் நல்லெண்ணெயை சூடாக்கி, இவற்றைச் சேர்த்து பசுமை மாறும் முன்பே அணைக்கவும். 
இந்த எண்ணெயை வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். தினசரி உபயோகிக்க நினைக்கிறவர்கள் நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெயில் இதைத் தயாரித்து உபயோகிக்கலாம்.

========================================================================

மரபணு பற்றி.....

நம் உடலில் இருக்கும், ஒவ்வொரு திசுக்களையும் சீராக ஒருங்கிணைத்து, இயக்குவது திசுக்களின் செல். 
ெல்லுக்குள் இருப்பது கரு; கருவுக்குள் இருப்பது மரபணுச்சரங்கள். அவற்றில் இருப்பதுதான் மரபணு. 
மூளையின் கட்டளைப்படி செயல்படும், நம் உடம்பின் இயக்கம் போன்று, கருவுக்குள் இருக்கும் மரபணுச்சரங்களும் செயல்படுகின்றன. இந்த மரபணுச்சரங்களில் கிட்டத்தட்ட, 20 ஆயிரம் முதல் 25 
ஆயிரம் மரபணுக்கள் இருக்கும். 
இந்த மரபணுக்களை மூளைத்திசுவின் 
செல் எனக் கூறலாம்.

மரபணுச்சரங்களிலுள்ள மரபணுக்கள், சீராக இயங்கும்போது உடலும் சீராக இயங்குகிறது. 
மரபணுக்களில் பிழைகள் நிகழும்போது, அம்மரபணு செயல்பாட்டினை இழக்கிறது. செயலிழந்த மரபணு, எந்த திசுக்களின் செயல்பாட்டினை இயக்கியதோ, அத்திசுவின் செயல்பாடு குறைந்து நோய் ஏற்படுகிறது. உதாரணமாக புற்றுநோய், வலிப்பு, தசை மற்றும் நரம்பு நோய்களை குறிப்பிடலாம்.

 சிலருக்கு கோதுமை சேர்த்த உணவு வகைகளை உட்கொள்ளும்போது, தோலில் அரிப்பு, தோல் அரிப்புடன் கூடிய வீக்கம், மூச்சடைப்பு மற்றும் கல்லீரல் குறைபாடு ஆகியவை ஏற்படும். 
இது ஆங்கிலத்தில், 'குளூடென் அலர்ஜி' என கூறப்படுகிறது. இதே போன்று சில மருந்து வகைகளும் ஒவ்வாமை நோயை ஏற்படுத்தவல்லது. இது போன்ற ஒவ்வாமை நோய் மரபணுக்களிலுள்ள சில மாற்றங்களால் நிகழ்கின்றன.
4எந்த மாதிரியான மருந்துகள் ஒவ்வாமை நோயை ஏற்படுத்துகின்றன?
வலிப்பு, நீரிழிவு, இதய நோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகள், சில வகை வலி நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் கட்டுப்படுத்தும் மருந்துகளும் ஒவ்வாமை நோயை ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.
நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்தின் அளவும், உண்ட மருந்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதிலும், செயல்பட்ட மருந்தை உடம்பிலிருந்து அகற்றுவதிலும் மரபணுக்களின் பங்கு இன்றியமையாதது. உதாரணமாக, மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு, மருந்தை எந்த அளவு எத்தனை முறை கொடுப்பது என்பது, மரபணுக்களின் சரவரிசைகொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. 

பசியின் அளவுகோலை நிர்ணயிப்பதும் மரபணுக்களே. 
அதேபோன்று, பருமனை குறைக்க எவ்வளவு உடற்பயிற்சி தேவை, உடற்பயிற்சியால் பருமன் குறையுமா என்பதையும் மரபணுக்களே முடிவு செய்கின்றன.

சிறுநீரக கோளாறுகள், நீரிழிவு, ரத்த அழுத்தம், பக்கவாதம், வலிப்பு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் மார்பக புற்று, வாய்ப்புற்று மேலும் சில வகை புற்றுநோய்கள் போன்றவை, மரபணு வழியாக கடத்தப்படும் என்று அறியலாம்.

1 மி.லி., உமிழ்நீர் கொடுத்தால் போதுமானது.
 உமிழ்நீர் செல்களின் மரபணுக்களை பரிசோதித்து உணவு, மருந்து அளவு மற்றும் ஒவ்வாமைகளை அறிந்து கொள்ள முடியும்.

பரிசோதனைகளைப் பொறுத்து, 1,500 முதல் 5,000 ரூபாய் வரை ஆகலாம். இவ்வகை மரபணு சார்ந்த மருத்துவம், 'தனிமனித மருத்துவம்' என அழைக்கப்படுகிறது.

மேலைநாடுகளில் மரபணு பரிசோதனைகள் செய்யாமல், மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. தற்போது இம்மருத்துவ முறை, இந்தியாவில் வளர்ந்து வருகிறது. புதுடில்லி, மும்பை மற்றும் சென்னையில் இவ்வகை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

- அரவிந்த் ராமநாதன், 
மரபியல் ஆராய்ச்சி நிபுணர்.
============================================================================================================
========================================================================
இன்று,
ஜூலை-24.

  • இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)
  • பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
  • சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
  • பெருவில் தொலைந்த நகரமாக கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)
========================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?