ஜீன்ஸ்:சில எச்சரிக்கைகள்.

பிடித்த[மான] ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு உணர்விழந்த சம்பவத்தை அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கிறார்.
அதனால் அவரது கால்களின் கீழ்ப்பகுதியில் உணர்விழந்துபோன நிலையில் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துவிட ஆபத்து அதிகமானது. அவரது கால்களின் கீழ்ப்பகுதி பெருமளவு வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் கழற்ற முடியாமல் அதை அவசர அவசரமாக வெட்டி எடுக்க வேணிய அளவுக்கு நிலைமை விபரீதமானது.
அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸை வெட்டி எடுத்துவிட்டு அவருக்கு நான்கு நாட்களுக்கு மருத்துவமனையில் வைத்து நரம்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது.
இரத்த ஓட்டத்தை தடுத்து நரம்புகளை பாதிக்கக்கூடும்
அவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணிநேரம் அமர்ந்திருந்ததால் அவரது கால்களுக்கான இரத்த ஓட்டம் தடைபட்டு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அத்துடன் அவரது கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.‘ஜர்னல் ஆப் நியூராலஜி, நியூரோசர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இது குறித்த மருத்துவர்களின் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடலுக்கு நல்லதல்ல என்கிற எச்சரிக்கை விடப்படுவது இது முதல் முறையல்ல. இளம்தலைமுறையினர் மத்தியில் தங்களின் உடல் வனப்பை வெளிப்படுத்தும் நாகரிக உடையாக இறுக்கமான ஜீன்ஸ் பார்க்கப்பட்டாலும், பெரிதும் விரும்பப்பட்டாலும், அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கிற எச்சரிக்கைகள் தொடர்ந்தும் மருத்துவர்களால் விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
ஏற்கனவே பல ஆய்வாளர்கள் இறுக்கமான, லொ கட் ஜீன்ஸ்களை அணிபவர்களுக்கு தொடைகளில் வலியும், எரிச்சலும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
விதைப்பைகள் பாதிக்கப்பட்டு விந்தணு உற்பத்தி குறையும்
அதிலும் ஆண்கள் இப்படியான இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிந்தால் அவர்களின் விதைப்பைகளின் அமைப்பே மாறி, திருகப்பட்ட தோற்றத்தை பெறும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் ஆண்களின் விந்தணு உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
அதனால் தான் குழந்தை பெற விரும்பும் ஆண்கள் இறுக்கமில்லாத உள்ளாடைகள் மற்றும் கால் சராய்களை அணியும்படி தாங்கள் பரிந்துரைப்பதாக தெரிவிக்கிறார் மருத்துவர் சாரா ஜார்விஸ்.
காரணம் இறுக்கமான உடைகள் அணியும்போது ஆணின் விதைப்பைகள் தொடர்ந்து உடலோடு அழுத்தி இறுக்கிவைக்கப்படுகின்றன. அது விதைப்பைகளின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என்கிறார் சாரா. எனவே குழந்தை பெற விரும்பும் ஆண்கள் ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு உதவும் வகையில் இறுக்கமான ஜீன்ஸ் அணியாமல், காற்றோட்டமான ஆடைகளை அணியவேண்டும் என்கிறார் அவர்.
சிறுநீர்ப்பாதைத் தொற்று மற்றும் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்
சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பவர்களும் கூட இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். காரணம் இறுக்கமான உடைகள் அவர்களின் சிறுநீர்ப்பாதை தொற்றை அதிகரிக்கச் செய்யும் என்றும் மோசமடையச் செய்யும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
அதேபோல, நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்களும் இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் இறுக்கமான ஜீன்ஸ்கள், அடிவயிற்றில் கூடுதலான அழுத்தத்தை செலுத்துவதால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மேல்நோக்கி உந்தப்பட்டு ஏற்கனவே இருக்கும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதேசமயம், இத்தகைய ஆபத்துக்களின் சதவீதத்தை அளவுக்கு அதிகமாக நினைத்து கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் ஜார்விஸ்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் உடல் வனப்பை காட்ட நாகரிக உடையாக இறுக்கமான ஜீன்ஸ் அணிய விரும்பும்போது அதில் இருக்கும் ஆபத்தையும் உணர்ந்திருப்பது அவசியம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
இறுக்கமான‬ ‪ஜீன்ஸ்‬ அணிவது கால்களின் இரத்த ஓட்டத்தைத் தடுத்து பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று ‪மருத்துவர்கள்‬ எச்சரித்துள்ளனர்.‪ 
கால்‬ ‪தசைகள்‬ மற்றும் ‪நரம்புகளுக்கும்‬ ‪சேதம்‬ ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 ‪ஆண்களின் விந்துணுக்களின் எண்ணிக்கை‬ ‪குறைதல்‬, ‪சிறுநீர்ப்பாதைத் ‪தொற்று‬ போன்ற பாதிப்புகளையும் இது அதிகப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.
========================================================
வீட்டிலேயே செய்யக்கூடிய 

மருத்துவக்குறிப்புகள்  உங்களுக்காக:-

========================================
1. நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.
நெல்லி வற்றல்
2. வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.
3. மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.
4. நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
5. தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம்.
பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.
6. வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
7. மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
8. பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
9. திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.
10. குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.
==================================================
இன்று,
ஜூலை-05.

  • அல்ஜீரியா விடுதலை தினம்(1962)
  • ஆர்மீனியா அரசியலமைப்பு தினம்(1995)
  • சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)
  • சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)
  • பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)


==================================================
ராமன் எத்தனை ராமனடி ?
இராமன் சீதை இருவரும் ஒருதாய் பிள்ளை. அதாவது அண்ணன் தங்கை என்று பவுத்த இராமாயணத்திலும், பம்ப இராமாயணத்திலும், ஜைன இராமாயணத்திலும் எழுதப்பட்டுள்ளது!
இன்னுமொரு இராமாயணத்தில் சீதை இராவணனின் மகள் என்று சொல்லப்பட்டுள்ளது.
இராமன் பல பெண்டிரைத் திருமணம் செய்தான் என்று ஜைன இராமாயணம் சொல்கிறது. 1.சீதை, 2.பிரபாவதி, 3.ரதினிபா, 4.ஸ்ரீதாமா என்ற நால்வரும் இராமனின் மனைவியர் என்கிறது இந்த இராமாயணம்.
இலட்சுமணனுக்கு எட்டு மனைவி
இலட்சுமணனுக்கு எட்டு மனைவிகள் 250 பிள்ளைகள் என்கிறது ஜைன இராமாயணம். விசல்யா, ரூபவதி, வனமாலா, கல்யாண மாலிகா, ரத்தினமாலிகா, ஜீதபத்மா, பாக்கியவதி, மனோரமா என்ற எட்டு மனைவிகள் என்று விவரிக்கிறது.
ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸ அய்யங்கார்
இவர் 1.ஜைன இராமாயணம், 2.பௌத்த இராமாயணம், 3.யவன இராமாயணம், 4.கிறிஸ்துவ இராமாயணம் என்ற நான்கு இராமாயணங்களை ஆய்வு செய்து 1928இல் இதர இராமாயணங்கள் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.
இருபத்து நான்கு இராமாயணம்
நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் இறுதியில் 24 இராமாயணங்கள் நிலைக்கின்றன.
பவுத்தர்கள் பிராகிருத மொழியிலும், இந்துக்கள் வடமொழியிலும், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளிலும் இராமாயணம் எழுதியுள்ளனர்.
கி.பி.முதல் நூற்றாண்டில் விமலசூரி என்பவர் இராமாயணத்தை பவுமசகியம் என்ற பெயரில் எழுதினார்.
அதன்பிறகு சவுமியன், சுயம்புவன், குணபக்த ராச்சாரியன், ரவிசேனன், தேவச்சந்திரன், பிரவரசேனன் என்ற சமணர்கள் இராமாயணத்தை எழுதியுள்ளனர்.
பவுத்தர்கள் தசரத ஜாதகம், சாம ஜாதகக் கதை, செச்ந்திர ஜாதகம், சம்புல ஜாதகம், இலங்காவதார சூத்திரம் என்ற இராமாயண கதைகளை எழுதியுள்ளனர்.
7ஆம் நூற்றாண்டில் ரவிசேனன் மகாராமாயணம் எழுதினார். கி.பி.12ஆம் நூற்றாண்டில் திரிசஷ்டிகாலக்கா என்ற பெயரில் இராம கதையை எழுதினார்.
கி.பி.16ஆம் நூற்றாண்டில் தேவ விஜயர் இராம சரிதம் எழுதினார்.
இராமாயணம் என்பது கற்பனைக் கதை. உண்மை நடப்பாயிருந்தால் ஒரே மாதிரி இருக்கும். கற்பனை என்பதால் கண்டபடியிருக்கிறது! பலவிதமாக இருப்பதே பொய் என்பதற்கான ஆதாரம்.
கம்பர் தனது கற்பனைத்திறனால் ராமனை கடவுளாகவே ஆரம்பம் முதல்  காண்பித்து ராமாயாணத்தை எழுதியுள்ளார்.வால்மீகி ராமாயணத்தை விட கம்ப ராமாயணத்தில் பக்தி ரசம் அதிகம்.ராமனுக்கு கடவுள் பட்டம் அதிகம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?