வியாழன், 2 ஜூலை, 2015

முதலில்100 தொடர்ந்தால் 300.
மோட்டார் வாகன சட்டம், 129ன் படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். 
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு என, பிரத்யேகமாக எந்தவொரு விதியும் வகுக்கப்படவில்லை. 

மாறாக, இதர குற்றங்கள் உட்பட, தவறு இழைப்பவர்களுக்கு என, மோட்டார் வாகன சட்டம் - 177ல் விதிமுறைகள் உள்ளன. 

இதன்படி, ஹெல்மெட் இன்றி, இரு சக்கர வாகன ஓட்டுபவருக்கு முதலில், 100 ரூபாய்; 
தொடர்ந்து விதியை மீறினால், 300 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
மத்திய மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி, தமிழக மோட்டார் வாகன விதிகள் கொண்டு வரப்பட்டு, அரசு இதழில் வெளியிடப்பட்டன. 
இதில் மொத்தம், 431 விதிகள் உள்ளன. 
இதில், 417(ஏ) விதிப்படி, 
1புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தலைப்பாகை அணிந்திருக்கும், மெய்வழிச்சாலை உறுப்பிகள் ஹெல்மெட் அணிய தேவையில்லை.
2வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும், அனைத்து வயது பெண்கள் மற்றும், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஹெல்மெட் அணிய தேவையில்லை.

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டம், அதையொட்டி, தமிழக அரசு உருவாக்கி உள்ள மோட்டார் வாகன விதியில், இரு சக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் முன்னே ஓட்டுபவரை விட பின்னாள் இருப்பவருக்குத்தான் ஏதாவது விபத்து என்றால் மட்டும் அல்ல வேகமாக சென்று திடீரென வண்டியை நிறுத்தினால் கூட கீழே விழுந்து தலையில் அடிபடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதானல் பின்னே இருப்பவர்கள் ஹெல்மெட் அணிவது நல்லதுதான்.
பெண்கள் தங்கள் அழகுக் கூந்தல் ஹெல்மெட் அணிவதால் கொட்டி விடும் என்ற பயத்தில்தான் ஹெல்மெட் அணிய தயங்குகிறார்கள்.அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பது நல்லது.
========================================================================

உற்சாகம் வரும் உலர் திராட்சை.

திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. 
அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து  எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். 
உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ்,  பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில்  உள்ளது. 

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும்  உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. 
குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு  காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். 
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடும் முதியோர்களுக்கு சிறந்தது. உல் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள  சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும். 
மஞ்சள் காமாலை  நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உல் திராட்சையை போட்டு பருகலாம். நாவறட்சிக்கு சிறந்தது உலர் திராட்சை.  உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். 
உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு,  பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும். 

பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து. கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.  இந்தப்பழத்தை பாலில் போட்டும் வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால் இதய துடிப்பு சீராக செயல்படும். 
தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை  தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.
========================================================================
இன்று,
ஜூலை-02.
  • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
  • முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)
  • பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)

அலைபேசிகளில் குறுஞ்செய்தி அனுப்பும் எஸ்.எம்.எஸ் வசதியை கண்டுபிடித்த மாட் மெக்கோனன் காலமானார்.


எஸ்.எம்.எஸின் பிதாமகன் என்று அழைக்கப்படும் மெக்கோனன் (62) பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 1994-ம் ஆண்டு அலைபேசி வாயிலாக எஸ்.எம்.எஸ்ஸை நெய்ல் பாப்வொர்த் என் பவருக்கு முதன்முதலாக அனுப்பினார்.
==============================================
நேருவை முஸ்லீமாக்குவதில் என்ன லாபம்?
விக்கிபீடியா இணைய தளத்தில், எந்த தகவல் குறித்தும் விளக்கமான தகவல்களை பெற முடியும். 
அதுபோல, அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை, யார் வேண்டுமானாலும் மாற்றியமைக்க முடியும். விக்கிபீடியா இணைய தளத்தில், பண்டித ஜவகர்லால் நேரு பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. 
அதில், நேரு பற்றிய சில தகவல்கள், கடந்த மாதம், 26ல், மத்திய அரசின் கம்ப்யூட்டர் முகவரி ஒன்றிலிருந்து மாற்றப்பட்டுள்ளன. 
அதை அறிந்த, விக்கிபீடியா இணையதள ஆசிரியர்கள், மாற்றியமைக்கப்பட்ட தகவல்களை நீக்கி, நேரு குறித்து இதற்கு முன் என்ன தகவல் இருந்ததோ, அதையே மீண்டும் பராமரித்துள்ளனர்.
மாற்றப்பட்டது என்ன?


நேருவின் தந்தை பெயர், மோதிலால் நேரு. அவரின் தந்தை பெயர், கங்காதர் என, விக்கிபீடியாவில் இருந்தது. 
அதை, கங்காதரின் உண்மையான பெயர், கைசுதீன் காசி; அவர் ஒரு முஸ்லிம். பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களின் கெடுபிடிகளுக்கு பயந்து, தன் பெயரை அவர், கங்காதர் என மாற்றிக் கொண்டார் என, திருத்தப்பட்டது.
 இதன் மூலம், நேரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் இல்லை; முஸ்லிம் என, மாற்ற முயற்சி மேற்கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

நேருவையும், அவரின் தந்தையையும், முஸ்லிமாக காட்ட முயற்சி நடந்துள்ளது. 
நேரு முஸ்லிமா, இந்துவா என்பது பிரச்னையில்லை. அவர் இந்தியன் என்பது மட்டும் உறுதி. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவல் தொகுப்பக ஊழியர்கள் தான், இந்த முறைகேட்டை செய்துள்ளனர். 
வரலாற்றையே திரித்து எழுதியுள்ள இச்சம்பவம் திட்டமிட்டு வேண்டுமென்றே நடந்துள்ளது.
இதுகுறித்து அரசு நியாயமான விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற பொய்த்தகவலை மத்திய அரசு வெளியிட்ட காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும் .காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகளைக் கொள்ள வேண்டும்.பாஜக ,ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் இப்போது இன்சிய வரலாற்றை திட்டமிட்டு மாற்றிக்கொண்டிருக்கிறது.அதற்காக பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

=======================================================================