கணினி பராமரிப்பு
கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும்.
தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக்கூடாது என்பதுதான்.
இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா!
உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே.
இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும். கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம்.
இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன்இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது.
இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்வது நல்லது. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன.
இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.
இன்னொரு வழியும் உள்ளது.
Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start >Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள்.
ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்படமுடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வ ளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.
விண்டோஸ் தரும் ஆட்/ ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை.
எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். http://www.revouninstaller.com/revo_ uninstaller_free_download.html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.
நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்களை நீக்கக்கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.
கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினைப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும்.
எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக்அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக்அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது.
இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.
ரிஜிஸ்ட்ரியை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர்களுக்குப் புதியவரா நீங்கள்?
அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம்.
========================================================================
இன்று,
ஜூலை-11.
வியாபம்.

- சர்வதேச மக்கள்தொகை தினம்
- மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்(1576)
- நியூயார்க் நகரில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)
- மங்கோலியா, சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)
வியாபம்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்துவரும் ‘வியாபம்‘ ஊழல் அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அதனால் ஆதாயம் அடைந்தவர்களும் தொடர்ந்து மரணம்அடைந்து வருவதன் காரணமாக அதிர்ச்சியளிக்கக்கூடிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது.
வியாவசிக் பரிக்சா மண்டல் (வியாபம்)என்பது தொழிற்கல்வி தேர்வு வாரியமாகும்.
இது உயர்கல்வி மற்றும் அரசுப் பணிகளுக்கான சேர்க்கைக்கு தேர்வுகள் நடத்தி ஆட்களைத் தேர்ந்தெடுத்துவருகிறது.
2013 ஜூலையில் வெளிச்சத்திற்கு வந்தவியாபம் ஊழல் தற்போது இதில் சம்பந்தப்பட்டோரைக் கொன்று குவித்துவரும் ஊழலாகப் பரிணமித்திருக்கிறது.
இந்த ஊழலைவிசாரித்துவரும் சிறப்பு அதிரடிப்படையினரின் கூற்றுப்படி, இதுவரை இதில் குற்றஞ்சாட்டப்பட்ட 24 பேர் “இயற்கைக்கு மாறாக அகால மரணம்’’ அடைந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த ஊழலுடன் ஏதாவது ஒருவிதத்தில் சம்பந்தப்பட்ட மேலும் 22 பேர் மிகவும்விசித்திரமான முறையில் இறந்திருக்கிறார்கள்.

இதன்மூலம் இவ்வூழலுடன் சம்பந்தப்பட்ட இறந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. நடைமுறையில் ஒவ்வொரு நாளும் புதிய மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மொத்தத்தில் இந்த ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்களில் 146க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
தேர்வு எழுதும் மாணவர்களைக் `காப்பி’ அடிக்க அனுமதித்தல், தேறாதவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்களுக்குப் பதிலாக புத்திசாலியானவர்களைத் தேர்வு எழுத வைத்தல், வெற்று விடைத்தாள்களில் அதிக மதிப்பெண்களை நிரப்பிக் கொள்ளுதல் என்கிறவகையில் ஊழல் நடந்து வந்திருக்கிறது. 'இந்த ஊழலில் பலநூறு கோடி ரூபாய்கள் சம்பந்தப் பட்டிருக்கிறது. இவ்வூழலில்சம்பந்தப்பட்ட நபர்களின் பட்டியல் ஆளுநர்மாளிகையிலிருந்து, கீழ்மட்ட அரசு ஊழியர்கள்வரை நீள்கிறது. 'இதுபோன்றதொரு ஊழல் இதற்குமுன்னெப்போதும் நடந்ததில்லை.
இவ்வூழலை விசாரித்து வரும் சிறப்பு அதிரடிப் படை,ஆளுநர் ராம் நரேஷ் யாதவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்தது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின்படி,வழக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட நபர்களின்கீழ் ஆளுநரும் வருவதால், உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ரத்துசெய்து விட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆளுநரின் மகன்களில் ஒருவர்,லக்னோவில் அவரது இல்லத்தில் விசித்திரமான சூழ்நிலையில் இறந்துகிடந்தார்.பாஜக முன்னாள் கல்வி அமைச்சர் குற்றம்சாட்டப்பட்ட நபராக சிறையில் இருக்கிறார். முதலமைச்சர் சிவராஜ் சௌகானும் இந்தஊழலில் உடந்தை என்று குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இரு உயர்மட்ட ஆர்எஸ்எஸ்பேர்வழிகளும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதுவரைக்கும் 1800 பேர் இந்தஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆயினும், மாநிலத்தில் நிலவும்கருத்தோட்டத்தின்படி, இதுவரை வெளிவந்திருப்பது கடலில் மூழ்கியிருக்கும் பனிமலையின் முனை அளவு மட்டும்தான்.

பாஜக மாநில அரசு இவ்வழக்கை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கு (சிபிஐ-க்கு)ப் பரிந்துரைக்க இதுவரை மறுத்துவந்தது.
தற்சமயம், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு குறித்துப் புலனாய்வு மேற்கொண்ட - தில்லியைத் தளமாகக் கொண்ட செய்தியாளர் ஒருவரும்,தன் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜபல்பூர்மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும்மரணம் அடைந்ததற்குப் பின்னர், நாடுதழுவிய அளவில் எழுந்துள்ள கண்டனக்குரல், முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானை, வழக்கை மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்திற்கு அனுப்பிட உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வதாகக் கூறக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. (தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது).
ஆனால் இது போதுமானதல்ல. மத்தியக்குற்றப் புலனாய்வுக் கழகத்தின் கீழான விசாரணை உச்சநீதிமன்றத்தால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். இல்லையேல், மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் சிபிஐ விசாரணையில் தலையிடக் கூடும்.
மேலும், சிவ்ராஜ் சௌகானும் முதல்வர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம். ஏனெனில், அப்போதுதான், பாரபட்சமற்ற முறையிலும் நேர்மையாகவும் புலன் விசாரணையை நடத்திட முடியும். முதல்வர் பதவியில் இருக்கும் அவரது தற்போதைய நடத்தைஅவர்மீது நம்பிக்கையை ஏற்படுத்திடவில்லை.
எனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 16 அன்று மத்தியப் பிரதேசத்தில் மாநிலம் தழுவிய அளவில் கடையடைப்பு நடத்திட இடதுசாரிக் கட்சிகளும் இதர எதிர்க் கட்சிகளும் அறைகூவல் விடுத்திருக்கின்றன

.வியாபம் ஊழல், மத்தியப்பிரதேசத்தில் பாஜக அரசாங்கத்தின் அரவணைப்புடன்தான் தழைத் தோங்கி வளர்ந்திருக்கிறது.
தினந்தோறும் எவரையாவது கொன்றுகுவித்துவரும் இந்த ஊழலால் பாஜக மற்றும் அதன் மாநில அரசாங்கம் கறைபடிந்ததாக மாறிவிட்டது.
மத்தியில் மோடி தலைமையிலான ஆளும்கட்சியும் அதன் அமைச்சர்களும் மற்றும்மாநிலங்களில் உள்ள அதன் முதலமைச்சர்களும் ஊழல் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை போன்றவற்றால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்போது, மோடி அரசாங்கம் இவையெல்லாம் வழக்கமாக நடைபெறுபவைதான் என்று வெறுமனே பாவனை செய்து கொண்டிருக்கமுடியாது.