செயற்கை அரிசி வந்துட்டு!

சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு 
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே 
என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.  

இந்தியாவில் உள்ள  அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிளாஸ்டிக் அரிசி பாதிப்பை ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நியூஸ் சேனல் வெளியிட்டுள்ளது. 
பிளாஸ்டிக் அரிசி கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறிப்பாக வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவின் ஷாங்க்ஷி பகுதியில் இருந்துதான் இந்த பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல்கள் பரவின. 
இந்த இடம் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் செயற்கை பிசின் அதிகமாக புழங்கும் இடம். அந்த பிசினைக் கொண்டு சீனர்களின் கலப்பட மூளையில் உதித்ததுதான் செயற்கை அரிசி.
சீனிக் கிழங்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப்படுகிறது இந்த பிளாஸ்டிக் அரிசி.
சீனாவில் உள்ள உணவு விடுதிகள் சங்கம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் பிளாஸ்டிக் அரிசியை மூன்று கப் அளவில் உட்கொண்டால், அது ஒரு முழு பிளாஸ்டிக் பையை சாப்பிட்டதற்கு ஒப்பானது என்று கூறியுள்ளது.

இங்கு பிளாஸ்டிக் பைகளை சாப்பிட்ட மாடுகளின் மரணத்தை பார்த்து வருகிறோம் அல்லவா?

பிளாஸ்டிக் அரிசியைச் சாபீட்டால் உயிரையே பறிக்கக் கூடிய இரைப்பை பிரச்னைகள் வரும் என்று சொல்கிறார்கள்.


சாதாரண அர்சிசியுடன் கலந்து விட்ட பிளாஸ்டிக் அரிசியை நம்மால் வித்தியாசம் காண முடியாது.
சமைத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!

சாதாரண அரிசி கையில் ஒட்டிக்கொள்வதுபோல பிளாஸ்டிக் அரிசி கையில் ஒட்டாது.

சமைத்தபின், சாதாரண அரிசியைவிட அதிக நேரம் கெடாமல் இருக்கும்.

சமைத்தபின் குளிரூட்டினால், பார்ப்பதற்கு Styrofoam போல் இருக்கும்

நெருப்பில் காட்டினால், சீனிக் கிழங்கு வாசனை வரும்.

பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தி சூப் செய்தால், அதன்மேலே மெல்லிய பிளாஸ்டிக் படலம் படரும். இந்த படலத்தை எடுத்து வெயிலில் காயவைத்தால், பிளாஸ்டிக் கிடைக்கும்.

இதில் எளிதாக தீ பற்றிக்கொள்ளும். 

  சாதாரண அரிசியுடன் பிளாஸ்டிக் அரிசியைக் கலந்தபின் மேலே சொன்னபடி கண்டிபிடிக்க முடியாது என்பதுதான் நம் முன் இருக்கும் பயம்.ஆபத்து.

பில்ப்பைன்ஸ் நாட்டுக்கு இப்போதுதானே வந்துள்ளது .அதற்குள் நமக்கு எச்சரிக்கை வந்து விட்டதே என்று நாம் கொஞ்சம் படபடப்பை குறைக்க முடியாது.

இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடு நடப்புரம் அரிசி சந்தையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனர்கள தான் நம் உயிருடன் விளையாடி கலப்படம் செய்கிறார்கள் என்று இருந்து விட முடியாது.நம்மவூர் வியாபாரிகள் அதற்கு துணை போவது அதிரடியாக இருக்கும்.உடலுக்கு கேடு என்று தெரிந்தும் கார்பைட் வைத்து இன்னமும் மாம்பழங்களை பழுக்கவைப்பவர்கள் அவர்கள் தானே.

அரசு ? சீனாவில் ஏன் செய்கிறீர்கள்?மேக் இன் இந்தியா என்றும்,மூன்று வயது சிறுவன்,எட்டாம் வகுப்பு மாணவி குடித்து விட்டு அலம்பல் செய்வதையும் ரசித்து டாஸ்மாக் வளர்க்கும் அரசுகள்தானே இவை.!
இன்று,
ஜூலை -10.

  • பஹாமாஸ் விடுதலை தினம்(1973)
  • டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)
  • வேலூர் சிப்பாய் கழகம் ஏற்பட்டது(1806)
  • உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)
  • இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபாவின் பக்தர்களின் அமைதி தினம்(1925)
========================================================================

 ஒமேகா 3!


பொதுவான பலவீனம் முதல் மூளையை சுறுசுறுப்பாக்குவது வரை ‘ஒமேகா 3’ என்கிற கொழுப்பு அமிலம் உதவுவதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதென்ன ஒமேகா 3? அதை எப்படிப் பெறுவது? விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா சுவர்ணகுமாரி.

ஒமேகா 3 (N3 fatty acid எனவும் அழைக்கப்படுகிறது) என்னும் கொழுப்பு அமிலம் நம் உடலில் உற்பத்தியாகாது. இதனை (Essential fatty acid) என்கிறோம். உணவின் மூலம் கிடைக்கும் இந்த கொழுப்பு அமிலம் உடல்நலத்துக்கு இன்றியமையாதது. இது நமக்கு அளிக்கும் ஆரோக்கிய பலன்கள் அதிகம். அன்றாட உணவில் சேர்க்க வேண்டியதும் அவசியம். ஒமேகா 3ன் முக்கிய பலன்களில் ஒன்று இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு. இதயத்துக்கு ஒமேகா 3 மிகவும் அவசியம் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் தெரிவித்துள்ளது.

இதய நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைப்பதில் ஒமேகா 3 முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது குறைகிறது. அதனால், இதய நோயாளிகள் தேவையான அளவு ஒமேகா 3 கொழுப்பை உட்கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. ஒமேகா 3, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஒமேகா 3 நல்ல பலன்  அளிக்கிறது.  

புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. ADHD (Attention Deficit Hyperactivity Disorder) பாதிப்புள்ள குழந்தைகளின் கவனச்சிதறலை குறைத்து, அவர்களை ஒருமுகப்படுத்துகிறது. அவர்களின் உள் வாங்கும்  திறனை அதிகரிக்கிறது. ஒமேகா 3 பார்வைக்கும் நல்லது. மூளையின் ஆரோக்கியத்துக்கும் இது அவசியம் என இப்போது வலியுறுத்தப்படுகிறது. நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்கவும் இது உதவுகிறது.

தேவையான அளவு ஒமேகா 3 எடுத்துக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட புத்திக்கூர்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் ஒமேகா 3 கொழுப்பு கொடுத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அதில் அவர்களின் கற்றல் திறன், அறிவுத்திறன் நல்ல முறையில் அதிகரித்திருப்பதோடு, அவர்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். 

கர்ப்பிணிகள் தேவையான அளவு ஒமேகா 3  எடுத்துக்கொள்ளாத பட்சத்தில்  பிறக்கும் குழந்தைகள் கவனக்குறைபாட்டுப் பிரச்னைக்கு ஆளாகலாம். ஒமேகா 3ல் ALA (A Linolenic Acid), EPA (Eicosa Pentaenoic Acid), DHA (Aocosa Hexaenoic Acid) என்ற 3 வகைகள் உள்ளன. கடல் உணவுகளில் EPA, DHA வகைகள் இருக்கின்றன. சைவத்தில் ALA மட்டும் இருக்கிறது.  மீன்களில் கெளுத்தி, கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி, சால்மன் போன்றவற்றில் ஒமேகா 3 இருக்கிறது. வாரம் 3 முதல் 4 முறை 75 கிராம் அளவுக்கு மீன் சாப்பிடும் போது தேவையான அளவு ஒமேகா 3 கிடைக்கும். 

சைவத்தில் சோயா பீன் ஆயில், கேனோலா  ஆயில், வால்நட், ஃபிளாக்ஸ் விதைகள் போன்றவற்றில் அதிகம் இருக்கிறது. சோயாபீன்ஸ், ராஜ்மா, சோயா டோஃபு போன்றவற்றிலும் ஓரளவு உண்டு. தினமும் 4 முதல் 5 டீஸ்பூன் அளவு சோயா பீன் ஆயில் அல்லது கேனோலா ஆயில் பயன்படுத்துவது,  5 அல்லது 6 வால்நட் அல்லது 2 டீஸ்பூன் ஃபிளாக்ஸ் விதைகள் சாப்பிடுவது நல்லது. எண்ணெயை சூடு செய்வதால் ALA அழிவதில்லை. உடலினுள் ALAவின் ஒரு பகுதி EPA, DHA ஆக மாற்றம் பெறுகிறது. 

மருந்து மாத்திரைகள் மூலமாகவும் ஒமேகா 3 பெற முடியும். மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 இருக்கிறது. இதை தேவைப்பட்டவர்கள் உட்கொள்ளலாம். இருந்தாலும் உணவின் மூலம் பெறும் போது அதனுடன் சேர்த்து அந்த உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளும் நமக்குக் கிடைக்கும்...’’ 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?