இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐன்ஸ்டீனை வஞ்சியவர்.

படம்
  ஐன்ஸ்டீனை விட அதிக IQ பள்ளி படிப்பு முடிக்கும் முன்னே கல்லூரி டிகிரி. வலை வீசும் ஐடி நிறுவனங்கள் அதுவும் சம்பளம் 153 கோடியில். இந்த பெருமைக்கு உடையவர் தான் திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி என்ற இளம் மாமேதை. தாய் ராகமாலிகாவுக்கு குறை பிரசவம் அதுவும் ஏழாவது மாதத்திலே இன்னும் 30  நாட்கள் தான் உயிரோடு இருப்பாள் என அவள் இறப்பிற்கு தேதி குறித்தனர் டாக்டர்கள். ஆனால் அந்த தாய் நம்பிக்கை இழக்கவில்லை, இருக்கிற மருத்துவமனைக்கெல்லாம் படி ஏறி இறங்கினாள், அசையா நாக்குடன் இருக்கும் குழந்தையினை காப்பாற்ற. பேசும் சக்தி இருக்காது, மூலையில் பாதிப்பு வரும், மனம் நலம் குன்றித்தான் இந்த குழந்தை இருக்கும் இனி உயிரோடு இருந்தாலும் என்றனர். தாய் முயற்சியை விடவில்லை குழந்தையோடு ஒவ்வோரு நொடியும் செலவிட்டாள்,அப்போதுதான் அற்புதம் நிகழ்ந்தது. இப்போ அந்த குழந்தை தான் உலகிலே அதிக கற்றல் நுன்னறிவு திறன் (IQ) அதுவும் 15 வயதினிலே இந்தியாவிலே அதிக IQ அதுவும் 225 என்ற அளவில், போதிய அளவு அறிவு இருக்கும் மனிதனோ 85 to 115  IQ அளவில் தான். ஒன்பதாவது பள்ளி படிப்பு முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் B Teh. Computer science and E

பொய்யிலே பிறந்து...

படம்
  விஞ்ஞானிகள் மருத்துவர்கள் அடங்கிய அவையில் : “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை.  அன்றே மரபணு அறிவியல் இருந்ததே காரணம். விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் : "ராகுல் காந்தியை செல்வச் செழிப்பில் பிறந்தவர். நான் இரயில் நிலைய மேடைகளில் டீ விற்று வளர்ந்தவன். அவர் பகட்டான ஆடைகளை உடுத்தி வளர்ந்தவர். ஆனால் நான் அப்படி இல்லை”  பிரதமரானதும் ரூ.10 இலட்சம் செலவில் கோட் போட்டுக் கொண்டு ஊர் சுற்றினார். மோடி தேநீர் விற்றதாகக் கூறிய ரெயில் நிலையம் அப்போது கட்டப்படவே இல்லை.பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே கட்டப்பட்டது. இராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வரப் பட்டது.  எதிர்ப்பு வலுத்த நிலையில் ஒரே ஓய்வூதியம் கொண்டு வருவதாக மோடி அரசு சொல்லியது.  "இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. நடைமுறையில் இருக்கிறது"  என அறிவித்தார். கருப்பு பணம் மீட்பு "பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட 1.25 இலட்சம் கோடி பணம் பறிமுதல் செய்யப்

ஏமாற்றங்கள்

படம்
  அ.தி.மு.க ஆட்சியின்போது பல்வேறு துறையில் நடந்துள்ள முறைகேடுகள் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.  குட்கா பான்பராக் போன்ற புகையிலை தொடர்பான போதை வஸ்துக்களால் இளைஞர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாக்குவதை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கினை தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் வாதத்தினை ஏற்றுச் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடையை விதித்து உத்தரவு வழங்கி இருக்கிறது.  இந்த உத்தரவின் மூலம் குட்கா பன்பராக் போன்ற மேல்லும் புகையிலை பொருட்களின் மீதான தடை நீடிக்கிறது. இதையும் மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் எப்படி எல்லாம் தலைவிரித்தாடியிருக்கிறது என்பதை சிஏஜி அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாக்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் வைத்துள்ள துறைகளில் நடைபெற்ற முறைகேடுகளை இவ்வறிக்கை தெளிவாக விளக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஊழல் எவ்வாறு எல்லாம் ஊக்கப்பட்டுள்ளது என்பதை இவ்வறிக்கை தெளிவாக விளக்கி உள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் 2019 ஆம் ஆண்டு

உலக அளவில் பா. ஜ.க, தானோ?

படம்
 மல்யுத்த வீரர்களின் விண்ணப்பம் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யாததற்காக ஏழு பேர் கொண்ட மல்யுத்த வீரர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  வழக்கை பட்டியலிட்ட நீதிமன்றம், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நிர்ணயித்தது. அவர்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அனைத்து 7 பெண் மனுதாரர்களின் பெயர்களையும் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாதபடி நீதித்துறை பதிவேட்டில் இருந்து நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்களுடன் அரசியல் நடக்கிறது என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறினார். தர்ணா நடக்கும் இடத்திற்கு தண்ணீர் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை அல்லது ஆதரவாளர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.  அனைத்து அரசியல் கட்சிகளும் மேடைக்கு வரவேற்கிறேன் என்றார்.  அவர் மேடையில் இருந்து அரசியல் செய்ய மாட்டார். நாங்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. கடந்த ஜனவரி மாதம் எந்தக் கட்சித் தலைவர்

மர்மங்கள் விலகும்.

படம்
  கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள், பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஆகிய மூன்றும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தவை. இதில் முறையான நடவடிக்கை எடுத்ததாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். இது அவரது நாணயமற்ற தன்மையையே காட்டுகிறது. ஜெயலலிதா ஊட்டி சென்றால் தங்கும் வீடுதான் கொடநாடு பங்களா. அதுவே அவரது முகாம் அலுவலகமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அந்த பங்களாவை ஒரு கும்பல் குறி வைத்தது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் 2017 ஏப்ரல் 24ஆம் நாள் நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியை கட்டிவைத்து விட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இறுதியில் அவர் கொலை செய்யப்படுகிறார். பங்களாவில் இருந்த பொருள்கள் அனைத்தும் திருடப்படுகிறது. சயான் என்ற கேரளாவைச் சேர்ந்தவர் தான் இதனைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் அதாவது ஏப்ரல் 28 ஆம் நாள், இதில் சம்பந்தப்பட்டதாகச

கைதான சத்யபால் மாலிக்

படம்
 இன்று சத்யபால், நாளை நாம். இதுதான் மோடி ஜனநாயகம்.  மக்கள் புரட்சியை நோக்கி நாடு செல்லும் நிலை.வேறு வழி இல்லை் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், சோம் விஹாரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டு, ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். காரணம் புல்வாமா தாக்குதல் பின்னணியை கரன்தபார் பேட்டியில் சொன்னதற்காக. அன்றைய காஷ்மீர் ஆறுநர் அவர்தான். மனதில் உண்மையை வைத்துக் கொண்டு தாளமுடியாமல் கூறிவிட்டார். அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு அதிகார அழுத்தம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சர்வதிகார ஆட்சி தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டார், அவரை சந்திக்க வந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது காவல் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் காத்திருக்கிறார். --------------------------------------------------

வேலைநேர அதிகரிப்பு

படம்
  சட்டத்தை ஏற்க முடியாது! தமிழ்நாடு சட்டமன்றம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்ப்பை பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. இந்த மசோதாவை எவ்வகையிலும் ஏற்க முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்று அதை இல்லாமல் செய்வது  தவறான நடவடிக்கை. மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும். பாஜக ஏற்கனவே கொண்டு வந்துள்ளதை அனைவரும் எதிர்த்துள்ளோம்.  இந்தியாவிலேயே  இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசுதான்2019ம் ஆண்டு தேசிய புள்ளியியல் துறை இந்தியாவில் நேரப்பயன்பாடு குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.  அதில் இந்திய நகர்ப்புற உழைப்பாளர்கள்  வாரத்திற்கு 60 மணி நேரம், 47 நிமிடங்களும் நேரடியாக வேலை மற்றும் வேலைத்தொடர்பான காரணங்களுக்கான செலவிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறது. எட்டுமணிநே

முழுமையாக மூடு

படம்
  ''குஜராத், கோவா, மகாராஷ்டிரா முதலான மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு தொழிற்சாலைக்கு தமிழ்நாட்டில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பதும் பிரச்சனைக்குரிய விவகாரமாகவே உள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விவகாரங்களை தாறுமாறாக மாற்றி, உண்மைகளை மறைத்து, தமிழ்நாடு அரசின் ஒப்புதலை பெற்றதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) கூறியுள்ளது. இந்நிறுவனம், தவறான சுற்றுச்சூழல் விளைவு அளவீடுகள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்து சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை அமைய உள்ள இடத்தைச் சுற்றி குறைந்தது 25 கிலோ மீட்டர் தூர அளவிற்கு, சூழலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடிய இடங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்னும் விதியை மீறும் வகையில் தவறான விவரங்களை கூறி சுற்றுச் சூழல் ஒப்புதலை பெற்றுள்ளது. ஏனெனில் இத்தொழிற்சாலை அமைந்த இடம் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவிற்கு வெகு அருகாமையில் உள்ளது என்றும், மேலும் இந்த நிறுவனம், சமர்ப்பித்துள்ள சுற்றுச் சூழல் சான்றிதழ், பொதுமக்களின் பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்டது அல்ல என்றும் கண்டுபிடிக்கப்பட்டு

கை கட்டி சேவகம்.

படம்
கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.  பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்துகொடுத்திருந்தார். ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன.  கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவராக இருந்த ஜெகதீஸ் ஷெட்டர் சமீபத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். மேலும் பாஜகவில் இருந்தும் ராஜினாமா செய்து இருந்தார்.  ஆறு முறை எம்.எல்.ஏவாக இருந