உலக அளவில் பா. ஜ.க, தானோ?
மல்யுத்த வீரர்களின் விண்ணப்பம் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யாததற்காக ஏழு பேர் கொண்ட மல்யுத்த வீரர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கை பட்டியலிட்ட நீதிமன்றம், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நிர்ணயித்தது.
அவர்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அனைத்து 7 பெண் மனுதாரர்களின் பெயர்களையும் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாதபடி நீதித்துறை பதிவேட்டில் இருந்து நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எங்களுடன் அரசியல் நடக்கிறது என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறினார். தர்ணா நடக்கும் இடத்திற்கு தண்ணீர் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை அல்லது ஆதரவாளர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அனைத்து அரசியல் கட்சிகளும் மேடைக்கு வரவேற்கிறேன் என்றார்.
அவர் மேடையில் இருந்து அரசியல் செய்ய மாட்டார். நாங்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.
கடந்த ஜனவரி மாதம் எந்தக் கட்சித் தலைவர்களையும் மேடைக்கு வர மல்யுத்த வீரர்கள் அனுமதிக்கவில்லை.
நாட்டின் அனைத்து வீரர்களிடமும் ஆதரவு கோருஉள்ளது.
குறித்து பூனியா ட்வீட் செய்துள்ளார்,
" இன்று மல்யுத்த வீரர்களுடன் நிற்க வேண்டிய அவசியம் உள்ளது"
-என்று.
-----------------+--------------------------------------
பாலியல் ஜல்சா கட்சி தானோ?
பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்களின் தலைவராக இருந்தவர் பலேஷ் தன்கர்.
43 வயதாகும் இவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இவர் மீது ஏராளமான பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுடன்தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து தனது செல்போனில் வைத்திருந்தாராம். அதை போலீஸார் கைப்பற்றினர்.
அந்த வீடியோக்களில் பலேஷ் தன்னை நம்பி வரும் பெண்களுக்கு போதை மருந்தை கொடுக்கிறார். அதில் மயங்கும் பெண்களை பலாத்காரம் செய்கிறார்.
பின்னர் அலாரம் கடிகாரம் மற்றும் செல்போன் ஆகியவற்றின் பின்புறம் மறைத்து வைத்திருந்த தனது கேமராவில் வீடியோவும் எடுத்துக் கொள்கிறார். அவ்வாறு போலீஸார் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.
அந்த வீடியோக்களில் ஒரு வீடியோவானது 95 நிமிடங்களுக்கு ஓடக் கூடியது.
அதில் மயங்கி கிடந்த பல பெண்களுடன் பலேஷ் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 39 வழக்குகள் அவர் மீது தனித்தனியே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கண்கலங்கினார்.
மேலும் பல்வேறு பொய்களை கூறி 5 கொரிய பெண்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உறுதியாகியுள்ளது என தீர்ப்பளித்தனர். இவர் மே மாதம் மீது ஆஜர்படுத்தப்படுவார்.
இதன் பிறகு இந்த ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து பலேஷிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தியதில் அவர் அழுதபடியே நான் பெண்களிடம் நிறைய பொய்களை கூறியுள்ளேன்.
எனது திருமண வாழ்க்கை கசப்பாக இருந்ததால் நான் வேறு ஒருபெண்ணுடன் தொடர்பில் இருந்தேன்.
ஆனால் அந்த பெண்ணும் என்னை ஒரு சிறிய பிரச்சினைக்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் நான் தனிமையில் வாடியதால் பெண்களிடம் நான் பொய் கூறியதாக கண்ணீர் மல்க கூறினார்.
சில நேரங்களில் மயக்கமடையும் பெண்களை பலாத்காரம் செய்யும் பலேஷ் பல சமயங்களில் போதை மருந்து கொடுத்து மயங்காத பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.