வேலைநேர அதிகரிப்பு

  சட்டத்தை ஏற்க முடியாது!

தமிழ்நாடு சட்டமன்றம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பை பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

இந்த மசோதாவை எவ்வகையிலும் ஏற்க முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்று அதை இல்லாமல் செய்வது  தவறான நடவடிக்கை.

மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும். பாஜக ஏற்கனவே கொண்டு வந்துள்ளதை அனைவரும் எதிர்த்துள்ளோம். 

இந்தியாவிலேயே  இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசுதான்2019ம் ஆண்டு தேசிய புள்ளியியல் துறை இந்தியாவில் நேரப்பயன்பாடு குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. 

அதில் இந்திய நகர்ப்புற உழைப்பாளர்கள்  வாரத்திற்கு 60 மணி நேரம், 47 நிமிடங்களும் நேரடியாக வேலை மற்றும் வேலைத்தொடர்பான காரணங்களுக்கான செலவிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறது.

எட்டுமணிநேர வேலை சட்டப்படியாக இருக்கும்பொழுதே இந்த நிலைமை என்றால் அரசு சொல்கிற நெகிழ்வுத்தன்மை வந்துவிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பது விளங்கும்.

அதிக நேரம் தொழிலாளர்கள் வேலைவாங்கப்படும் நாடுகளில் காம்பியா, மங்கோலியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மட்டும்தான் இந்தியாவிற்கு பின்னே இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

2020ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை  திமுக கடுமையாக எதிர்த்தது. 

ஒன்றிய அரசும், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 8 மணி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதற்கு திமுக கண்டனம் தெரிவித்தது.

இப்போது, வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச்சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். டாக்டர் கலைஞர் கூட இந்த கருத்தை கடந்த காலத்தில் முன்வைத்திருக்கிறார்.

தொழிலாளர் நலனுக்கும், நியாயங்களுக்கும் புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது.

தேவைப்படும் காலங்களில் தொழிற்சாலை ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நெகிழ்ச்சியான வேலைநேரத்தை பெறுவதற்கு ஏற்கனவே வாய்ப்பிருந்தும், புதிய சட்டத்திருத்தம்‌ எதற்கு?.

வேலைநேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்றுதானே ஆகும்?. இது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிட  வேண்டுமென @tncpim  மாநில செயற்குழு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறது.

150 ஆண்டுகாலம் போராடி, பலர் உயிர்துறந்து, பலர் வேலை இழந்து, குடும்பத்தை இழந்து சிறைக்குச்சென்று பெற்ற உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் இழக்க முடியாது, இழக்கக்கூடாது.

எனவே,  இந்த மசோதா சட்டமாகாமல் கைவிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு மார்க்சிஸ்ட்  கட்சி உறுதியாக தொடர்ச்சியாக போராடும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இயன்ற அனைத்து வகைகளிலும் போராடுவதோடு ஒன்றுபட்டு வெற்றிபெறும் வரை போராட முன்வர வேண்டுமென  கேட்டுக்கொள்கிறோம்.

திமுக அரசு நிறைவேற்றுகிற எல்லா சட்ட வரைவுகளையும்  கட்டி ஒட்டடை படியவைக்கும் R.N.ரவி இந்த வேலை நேர அதிகரிப்பு வரைவை உடனே கையொப்பமிடுவார் என்றே தெரிகிறது.எனவே இதை அவருக்கு அனுப்பாமல்  பின்வாங்கிவிடுவதே திமுக அரசுக்கு நல்லது.

8மணி நேர வேலை உரிமையை மனு கொடுத்து பெறவில்லை.பல உயிர்களை கொடுத்து,ரத்தம் சிந்தி சிகாகோவில் பல நாட்கள்  போராடி பெற்றது.

இதை மேதின பூங்காவில் செஞ்சட்டை அணிந்து மரியாதை செலுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் நினைவில் கொள்ளவேண்டும்.

ஸ்டாலின் என்பதே பொதுவுடமைப்போராளியின் பெயர் ,தொழிலாளிகளின் தலைவர் பெயர் வெறும் (நாட்டை)ஆண்டவர் பெயர் மட்டுமல்ல.

--------------------------------------------------------------

வருமானவரி விசாரணை தேவை.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில்  G square' நிறுவனத்தின் வருவாய் ரூ.33,000 கோடியாக உயர்ந்தது எப்படி என்று அண்ணாமலை  ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் .

அந்த ரூ.33,000 கோடியில், ரூ.1237 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பெல்லாரியில் இருப்பதாக அவர் வெளியிட்ட DMK Files தெரிவிக்கிறது.

அந்த சொத்து கர்நாடகா பிஜேபி அரசின் போக்குவரத்துத்துறைஅமைச்சர்ஸ்ரீராமுலுக்கு சொந்தமானது. அவர் தான்GSquareHousing நிறுவனத்திற்கு 07-02-23 ம் தேதி, ரூ.24 கோடியே 98 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். 

ஆனால்,அதன் மதிப்பை தான்  ரூ.1237 கோடி என அண்ணாமலை கூறுகிறாதானே.

அப்போ,மீதமுள்ள ரூ.1212 கோடி ருபாய் பணத்தை நிறுவனத்திடம் இருந்து கருப்புப்பணமாக கர்நாடக அரசின் பிஜேபி அமைச்சர் ஸ்ரீராமுலு பெற்றுள்ளாரா ? 



உண்மையில் இந்த விவகாரம் குறித்து கண்டிப்பாக வருமானவரித்துறை விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம் தானே.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?