ஏமாற்றங்கள்
அ.தி.மு.க ஆட்சியின்போது பல்வேறு துறையில் நடந்துள்ள முறைகேடுகள் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
குட்கா பான்பராக் போன்ற புகையிலை தொடர்பான போதை வஸ்துக்களால் இளைஞர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாக்குவதை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கினை தொடர்ந்தார்.உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் வாதத்தினை ஏற்றுச் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடையை விதித்து உத்தரவு வழங்கி இருக்கிறது.
இந்த உத்தரவின் மூலம் குட்கா பன்பராக் போன்ற மேல்லும் புகையிலை பொருட்களின் மீதான தடை நீடிக்கிறது. இதையும் மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் எப்படி எல்லாம் தலைவிரித்தாடியிருக்கிறது என்பதை சிஏஜி அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் வைத்துள்ள துறைகளில் நடைபெற்ற முறைகேடுகளை இவ்வறிக்கை தெளிவாக விளக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஊழல் எவ்வாறு எல்லாம் ஊக்கப்பட்டுள்ளது என்பதை இவ்வறிக்கை தெளிவாக விளக்கி உள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் 907 ஒப்பந்தங்களில் 490 ஒப்பந்தங்கள் ஒரே ஐ.பி முகவரியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடியின் உறவினர்களுக்கு ஒரே ஐ.பி முகவரியில் டெண்டர்கள் வழங்கப்பட்டு அதில் முறையீடுகள் நடைபெற்று உள்ளது.
கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்ற கொள்கையை மட்டுமே பின்பற்றி அ.தி.மு.க ஆட்சி செயல்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் தகுதியான பயணிகளுக்கு வீடு வழங்காமல் தகுதியற்ற பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாகத் திறமையற்ற செயல் மற்றும் தலைவிரித்தாடிய ஊழல் ஆகியவற்றால் லட்சக்கணக்கான ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவு பெறாமல் போய்விட்டது என்பது சிஏஜி அறிக்கையின் மூலம் தெரியவரும் உண்மை.
சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பதில் அ.தி.மு.க அரசு எந்த அளவில் அலட்சியமாக இருந்துள்ளது என்பதை இவ்வறிக்கை தோல் உரித்துக் காட்டுகிறது.
காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க அலட்சியம் காட்டியதால் 14 கோடி 37 லட்சம் செலவு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் உரிய முறையில் மின்சார வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்ததாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது.
மேலும் 2018 இருந்து வசூலிக்கப்பட்ட 70% மின் கட்டண தொகையை அரசு கணக்கில் செலுத்தப்படாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலவச மடிக்கணினி மற்றும் இலவச காலனி வழங்கும் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது
. இலவச பள்ளி பணிகள் வழங்கும் அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் 11.84 % அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையின் விகிதம் குறைந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையை மிக அலட்சியமாக கையாண்டதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்தொடர்ந்தார்
------------------------
ஏமாறவே பிறந்தோமா?
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சரவணன் (32) ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ஷாப்பிங்கில் அடிக்கடி பொருட்கள் வாங்கும் வழக்கம் உள்ளவர்.
இந்த சூழலில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசுகையில் தாங்கள் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான MEESHO-வில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர்.
தொடர்ந்து குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் ஒரு பிரம்மாண்ட பரிசான மகேந்திரா XUV 700 கார் விழுந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு முன்னர் சிறிது பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். காருக்கு ஆசைபட்ட சரவணனும், சரி என்று கூற Google Pay மூலம் தவணை முறையில் தினேஷ், பூஜா ராணி, ரஞ்சினி தேவி என்பவர்களுக்கு பணத்தை அனுப்பியுள்ளார்.
இவ்வாறு சரவணன் சுமார் இதுவரை 4,50,000 ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து பணத்தை அனுப்பி வந்த சரவணனை பத்து நாட்களில் கார் வந்துவிடும் என கூறியுள்ளனர்.
ஒரு வாரம் கழித்து இது தொடர்பாக சரவணன், தன்னை தொடர்பு கொண்ட அனைத்து மொபைல் எண்ணுக்கு அழைத்தார்.
ஆனால் அந்த செல்போன் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த சரவணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
அதோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.
பலரிடம் கார் ஆசையில் கைமாற்று,கடன் என வாங்கி அனுப்பியதால் தீராத மன உளைச்சலில் இருந்த சரவணன், தான் குடிக்கும் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் ஏமாற்று வேலையில் மக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் பலமுறை எச்சரித்தும், விழிப்புணர்வு செய்தும் மக்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் பேராசை பட்டு பணத்தை இழக்கின்றனர்.
மக்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது போன்ற கார்,வீடு கோடிகளில் பணம் பரிசு என வரும் அலைபேசி அழைப்புகளை நம்பி,அதை பற்றி தீர விசாரிக்காமல் ஏமாறுபவர்கள் எவ்வளவு எச்சரிக்கை செய்தாலும்,இது போன்ற ஏமாற்றுக்கதைகளை ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும் தொடர்கதையாகத்தான் உள்ளார்கள்.
ரமேஷ் கார் முதல் ஆருத்ரா கோல்டு வரை ஏமாறத்தயார் என ஏமாறிக்கொண்டே இருக்றார்கள்.
லட்சக்கணக்கில் ,சில கோடிகளில் ஏமாந்தவர்கள் தற்போது2600 கோடிகள் வரை ஏமாறுபவர்களாக உயர்ந்துள்ளார்கள்.
,பாமர்ர்களும்,படித்தவர்களும் மட்டுமின்றி அதிகாரிகளும் ,பணக்கார்ர்களும் ஏமாறும் வரிசையில் நிற்பதுதான் சோகம்.
-------------------------------------------------------------------