ஐன்ஸ்டீனை வஞ்சியவர்.

 ஐன்ஸ்டீனை விட அதிக IQ

பள்ளி படிப்பு முடிக்கும் முன்னே

கல்லூரி டிகிரி.

வலை வீசும் ஐடி நிறுவனங்கள் அதுவும் சம்பளம் 153 கோடியில்.

இந்த பெருமைக்கு உடையவர் தான் திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி என்ற இளம் மாமேதை.

தாய் ராகமாலிகாவுக்கு குறை பிரசவம் அதுவும் ஏழாவது மாதத்திலே இன்னும் 30  நாட்கள் தான் உயிரோடு இருப்பாள் என அவள் இறப்பிற்கு தேதி குறித்தனர் டாக்டர்கள்.

ஆனால் அந்த தாய் நம்பிக்கை இழக்கவில்லை, இருக்கிற மருத்துவமனைக்கெல்லாம் படி ஏறி இறங்கினாள்,

அசையா நாக்குடன் இருக்கும் குழந்தையினை காப்பாற்ற.

பேசும் சக்தி இருக்காது, மூலையில் பாதிப்பு வரும், மனம் நலம் குன்றித்தான் இந்த குழந்தை இருக்கும் இனி உயிரோடு இருந்தாலும் என்றனர்.

தாய் முயற்சியை விடவில்லை

குழந்தையோடு ஒவ்வோரு நொடியும் செலவிட்டாள்,அப்போதுதான் அற்புதம் நிகழ்ந்தது.

இப்போ அந்த குழந்தை தான் உலகிலே அதிக கற்றல் நுன்னறிவு திறன் (IQ) அதுவும் 15 வயதினிலே இந்தியாவிலே அதிக IQ அதுவும் 225 என்ற அளவில், போதிய அளவு அறிவு இருக்கும் மனிதனோ 85 to 115  IQ அளவில் தான்.

ஒன்பதாவது பள்ளி படிப்பு முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் B Teh.

Computer science and Engineering.

அதுவும் 18 வயதில் படித்து இளம் வயதிலே பட்டதாரி என் பெருமை பெற்றார்.

இவரை அறிந்து கல்லூரியில் சேரும் குறைந்த பட்ச வயது வரம்பினை குறைத்து அதற்கு பிரத்யேகமான அனுமதி பெற்ற திருவில்லிபுத்தூர்,

கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

இவர் படிக்கும் போது இவரின் அறிவினை உலகிற்கு அறியும் விதமாக ராக்கெட் நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டை பெற்று தந்தது இவர் படித்த கல்லூரி

அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

மனநிலை, உடல் நிலை பாதிக்கபட்ட குழந்தை என மருத்துவர்களின் கூற்றினை பொய்யாக்க போராட விலாசினி ஐந்து வயதிலே தன் வானோலி அறிவிப்பாளர் என்ற மத்திய அரசு வேலையை விட்ட இவரின் தாய் ராகமாலிகா.

குழந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணமானவர், குழந்தையிடம் எப்போதும் நம்பிக்கையூட்டும்  வார்த்தைகளையே இரவும் பகலிலும் செலவிட்டவர் இவர்.

ஆம் அசையாத நாக்கோடு பிறந்த குழந்தையை சர்வதேச அரங்கில் அறிவியல் அறிஞர்கள் மத்தியில் நுன்னறிவாக பேச காரனமான இவரின் தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்து இவரின் தந்தை குமாரசாமி, ஒரு எலக்ட்ரிசியன் பெரியதாக வருமானம் இல்லாத போதும் விசாலினி எழுதும் ஒவ்வொரு சர்வதேச நுன்னறிவு தேர்வில்

நகைகளை அடகு வைத்து செலவு செய்தார்.

இதுவரை 13 சர்வதேச நுன்னறிவு தேர்வு சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.

ஒரு இந்திய பெண்ணின் அறிவு நுட்பத்தை உலக அளவுக்கு கூட்டிச் சென்ற இந்த தந்தையை பாராட்ட வேண்டும்.

விசாலினி பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நடத்தும் MCP தேர்வில் 87 சதவீதம் மார்க் பெற்றவர்.

கடினமான சின்கோ சர்டிஃபைட் நெட் ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90 சதவீதம் மார்க்.

CCNA மற்றொரு செக்யூரிட்டி தேர்வில் 98சதவீதம் மார்க்.

இஸ்ரோ தலைவர் மயில்சாமி அவர்கள் விசாலினியை அறிந்து இஸ்ரோ மாளிகையில் தங்க வைத்து இவரின் நுன்னறிவு திறமையால் 700 விஞ்ஞானிகள் இருந்த கருத்துக்கு அரங்கில் இந்த பெண் படிக்கும் போதே பல மணி நேரம் பேசி அனைத்து அறிஞர்களும் எழுந்து நின்று கை தட்டி மரியாதையினை பெற்றவள் இவர்.

இப்போ இவருக்கு வயது 22.

இவருக்கு சம்பளமாக 150 கோடிக்கும் மேலாக கொடுக்க கம்யூட்டர் சாஃப்ட்ñவேர் நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.

இவரின் இலட்சியமோ மூன்று தான்.

1). இந்தியாவிற்கு நோபல் பரிசு வாங்கி தரனும்,  இந்த கம்யூட்டரில் துறைய நுன்அறிவு  மூலம் இன்னும் பல புதிய கண்டுபிடிப்பால்.

2) தானே ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் அமைத்து அதற்கு CEO வாக இருந்து இன்னும் எத்தனையோ நுன்நுட்ப அறிஞர்களை உலகுக்கு தர வேண்டும்.

அவரின் மூன்றாவது இலட்சியம் தான்

மிகப் பெரியது அவரின் மனிதாபிமான தன்மை யினை காட்டுவது,அவரைப் போன்று பிறக்கும் போது ஏதோ சில குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக தனியாக  காப்பகங்கள் அமைத்து அவர்களுக்கு எல்லா உதவிகளையும் இலவசமாக வழங்கி இன்னும் எத்தனையோ விசாலினைகளை உருவாக்குவது என்பது.

இதுவெல்லாம் விரைவில் நிறைவேற வாழ்த்துவோம், 

                                    -தென்குமரி தென்றல்.

---------------------------------------------------------------

கோடிகளில் ஒருவன்.

தமிழ்நாடு பா.ஜ.கட்சித் தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு தி.மு.க மூத்த தலைவர்களின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டார். 

இந்த ஆவணங்கள் போலியானது என்றும் குற்றம்சாட்டிய தி.மு.க தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பிவருகின்றனர்.

இந்தநிலையில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அந்த நோட்டீஸில், ‘தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்மற்றும்.

அந்த அவதூறு காணொலியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டு ‘அபிடவிட் படியான சொத்து மதிப்பு 30.33 கோடி ரூபாய்  மற்றும் கலைஞர் டிவியின் மதிப்பு 800 கோடி ரூபாய். மொத்த மதிப்பு 830.33 கோடி என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது. 

கனிமொழியை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல. அடிப்படை ஆதாரமற்றது. கற்பனையானது மற்றும் ஆவணங்களில் பதிவுகளில் இருப்பவற்றிற்கு முரண்பாடானது.

10--2-2023 முதல் என் கட்சிக்காரர் கலைஞர் டிவியில் எந்த பங்கும் பெற்றிருக்காத நிலையில் எவ்வித அடிப்படைத் தகவல்களையும் சரிபார்க்காமல் என் கட்சிக்காரரின் நற்பெயரைக் குலைப்பதை உள் நோக்கமாக கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுதும்  எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பிவிடும் வகையிலும் திமுகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அவதூறு வீடியோவுக்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. இந்த அவதூறு வீடியோவை பார்த்து என் கட்சிக்காரரின் நண்பர்கள், நலம் விரும்பிகள் அவரைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்திருக்கிறார்கள். 

மேலும் என் கட்சிக்காரரின் தொகுதியிலிருந்து மக்களும், கட்சியினரும் இதுதொடர்பாக விசாரித்திருக்கிறார்கள். இதன் மூலம் என் கட்சிக்காரர் மீது தனிப்பட்ட முறையிலும், பொதுவாழ்விலும் வைத்திருந்த மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கண்ட அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின் படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவர் ஆகிறீர்கள். 

உங்களது அவதூறு பிரச்சாரத்தின் மூலம் எனது கட்சிக்காரர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை என் கட்சிக்காரருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேற்கண்ட அவதூறு வீடியோவை இந்த நோட்டீஸ் கண்ட 48 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டு அனைத்து சமூக தளங்களிலும் அதை அகற்றி, எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். 

தவறும் பட்சத்தில் உங்கள் மீது எனது கட்சிக்காரர் சார்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான எல்லா விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு ஆர்.எஸ்.பாரதி 500 கோடிகள் இழப்பீடு  கேட்டும்,அமைச்சர் உதயநிதிஸ்டாலின் 50 கோடிகளும் ,மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு 100 கோடிகளும் இழப்பீடாக்க் கேட்டும் அறிவிப்பு அனுப்பியுள்ளார்கள்.

-------------------------------------------------------


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?