வெள்ளி, 31 மே, 2013

சம்பா அரிசி மகத்துவம்.
--
சம்பா அரிசி மகத்துவம்.
 சம்பா அரிசி அதிலும் கைக்குத் தல் அரிசி .வயிறை மட்டும் நிரப்பாது.உங்கள் உடல் நலனையும் பாதுகாக்கும் .

அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். 

இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். 

ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. 

மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளன. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா! பெருங்குடல் புற்றுநோய்--கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். 

 கைக்குத்தல் அரிசியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது. வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone என்ற ஒரு வகை சுரப்பு நீர் அளவுகளை, அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது.

கொழுப்பை குறைக்கிறது -- கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.
இதய நோய் -- நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இரத்தக் ககுழாயில் பிளேக் என்கிற காரை உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை பராமரிக்க -- கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது.
ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கலை தடுக்க -- இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவு செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களைப் பெறலாம்.
நீரிழிவை கட்டுப்படுத்த -- கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும்.
எலும்புகள் வலுவடைய -- கைக்குத்தல் அரிசியில் எலும்புகளைப் பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக் கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21விழுக்காடு இருக்கிறது. மேலும், மெக்னீசியத்ன் மூலம்தான், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற தேவையான ஊட்டச்சத்தினை உறிஞ்சிக் கொள்கிறது.
மூச்சு இரைப்பு நோய் -- மெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, மூச்சு இரைப்பு நோயைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள மூச்சு இரைப்பு நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும்.
பித்தக்கற்கள் -- கைக்குத்தல் அரிசி போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாவது குறைகிறது என்று இரப்பை குடலியலுக்கான அமெரிக்க இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.
வலுவான நரம்பு மண்டலம்--கைக்குத்தல் அரிசி, வலுவான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, நரம்புகளை உரம் பெறச் செய்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
தண்ணீரில் விழுந்த செல் பேசியை  சரி செய்ய ?
------------------------------------------------------------------------
இன்றைய மிகத் தேவையான பொருட்களில் செல்லிடப் பேசி முதலிடம் வகிக்கின்றது. இதைப் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த செல்லிடப் பேசியை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக இரண்டு உதறு உதறி விட்டு உடனே மீண்டும் இயங்கச் செய்து விடுவார்கள். இப்படி செய்யவே கூடாது.
செல்லிடப் பேசியில் இருந்து சிம்கார்ட், மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது கைத் துடைக்கும் தாள் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.
suran
வீட்டைத் தூய்மைப்படுத்தும் மின் கருவியான Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode எனப்படும் உறுஞ்சும் நிலையில் வைத்து, செல்லிடப் பேசியை அதன் முன் காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.
Vaccum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம்.
 உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் செல்லிடப்பேசியை வைத்து செல்லிடப் பேசி தெரியாதபடி முழுவதுமாக மூடிவிடவும். இதனால் தண்ணீர் முழுமையாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும்.
ஆனால், இதற்கு பொறுமை மிக அவசியம்.
குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம்.
அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம்.
தலை முடியைக் காய வைக்கும் Hairdryer  முயற்சி செய்யலாம்.
செல்லிடப்பேசி நன்றாகக் காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்தி கொண்ட பின் அதை இயங்க செய்ய முயற்சிக்கவும்.
பெரும்பாலும் இயங்கத் தொடங்கிவிடும்.
இல்லை என்றால் செல்லிடப்பேசி சரியாகிவிட்டது. பேட்டரி பிரச்சினையாக இருக்கும். வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும்.
ஆனால் அப்போதும் இயங்கவில்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போகவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 
2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
" பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இது"வென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது.

ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது.

"கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சிக்கும் காரணம்" என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புள்ளிவிபரத்துறை அமைச்சின் தகவல்களின்படி, இந்திய தயாரிப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.6 ஐ தாண்டவில்லை. அத்தோடு விவசாய- பண்ணை உற்பத்திகள் 1.4 வீதத்தாலேயே வளர்ந்துள்ளன.
எனினும் இந்த குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த ஆண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 5 வீதமாக குறைத்துக் கொண்டுள்ளதாக கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தது.
இந்திய பொருளாதாரத்தின் இந்த இறங்குமுகம் 'தற்காலிகமானது தான், விரைவில் 8 வீதமாக உயரும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.
ஆனால், பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலை .கவலை தான்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------

புகையிலை எதிர்ப்பு .....!புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
 பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
 இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

 மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது.

 புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. 
இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. 
இவற்றில் 43 புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை.
அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுகின்றனர்.
உலகளவில் 6 விநாடிக்கு ஒருவரும், ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர்.

2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
இதில் 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால், அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதிகம்புகை பழக்கத்துக்கு அடிமையாகி, உயிரை விடுவதை விட, புகையிலை பழக்கத்தை விடுவதே சிறந்தது. 
படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. 
இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. 
புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும்.
 புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். 
சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு, சுவாசிப்பது எளிதாகிறது. 
2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 
3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது.
 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.

புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். 
எனினும், இதனால் கிடைக்கும் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
"உடலுக்கு அபாயமான புகையிலை பழக்கத்‌தை கைவிட ஆயிரம் காரணங்கள் உள்ளன.
அதனால் கிடைக்கும் பலன் ஒன்றேனும் உண்டா?
இனியும் அப்பழக்கத்‌தை தொடர ஒரு உருப்படியான காரணம் சொல்ல முடியுமா?"


------------------------------------------------------------------------------------------------------------------------------------
"புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றே இதனைக் கண்டுபிடித்திருக்கிறது.
600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு மேலதிகமாக இதய நோய் வருவதாகவும், அதில் ஒருவருக்கு அது மிகவும் கடுமையானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், சிறிய அளவில் இந்த மாத்திரைகளை எடுப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரம்
 ----------------------------------------------------------------------------------------------------
பொது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்க, முதல் முறையாக வரும் 4ம் தேதி விலைவாசியுடன் இணைந்த ரூ.1,000 கோடி மதிப்பீட்டிலான பங்குகளை மத்திய அரசு வெளியிடுகிறது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், ஆண்டுக்கு ஆண்டு வெளிநாட் டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான அளவு அந்நியச் செலாவணி செலவாகிறது.

இதை தடுத்து நிறு த்த மாற்று திட்டங்களை அமல்படுத்தி பொது மக்களை கவர வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.
 இதன்படி, பணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரத்தை (ஐஐபி) வெளியிட மத்திய அரசு தீர்மானித்தது. ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி மதிப்பீட்டிலான ஐஐபி வெளியிடப்படும் என்று இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த பங்கு பத்திரங்களின் முதிர்வு காலம் 10 ஆண்டுகளாகும். இது விலைவாசி புள்ளியுடன் இணைந்தது என்பதால், விலைவாசி அதிகரித்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

இதனால் முதலீடு செய்தவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். அதாவது, தங்கத்தில் முதலீடு செய்தால் அதன் விலையேற்றத்துக்கு ஏற்ப லாபம் கிடைப்பது போல், இந்த பங்கு பத்திரத்தின் முதிர்வு தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக ரூ.1,000 கோடிக்கு ஐஐபியை வரும் 4ம் தேதி வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘விலைவாசி புள்ளியுடன் இணைந்த மத்திய அரசின் பங்குகள்,2023’ வரும் 4ம் தேதி வெளியிடப்படும். இதில் 20 சதவீதம் வரை சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முடிவு செய்யப்பட்ட ஏலத்தொகையின் அடிப்படையில் இந்த பங்குகள் ஏலம் விடப்படும். 10 ஆண்டு முதிர்வு காலத்தை இப்பத்திரங்கள் கொண்டிருக்கும். மத்திய அரசின் கடன்வாங்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பங்கு பத்திர வெளியீடு அமையும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக, மத்திய அரசின் கடன் தொகை பங்கு வெளியீடுகளில் சில்லரை முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், தற்போது ஐஐபியில் 20 சதவீதம் வரை ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு மாத இறுதி செவ்வாய்க்கிழமைகளில், அடுத்தடுத்து ஐஐபிகள் வெளியிடப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக அக்டோபரில் ஐஐபி வெளியிடப்படும். அது முற்றிலுமாக சில்லரை முதலீட்டாளர்களுக்காக வெளியிடப்பட உள்ளது.

suran

 

வியாழன், 30 மே, 2013

கசக்கும் உண்மைகள்?


0"தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும். "

• காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் -  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

• வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

• நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..

• வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..

• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இவர் "சொல்வதெல்லாம் கூட உண்மை"யாய் இருக்குதுள்ள?-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 இப்போதைய உலகில் தமிழன்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
 

புதன், 29 மே, 2013

Web Development மொழிகளை இலவசமாக கற்க ..........Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? 
 Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .

Web Development Language என்ன ? 
suran
இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.

1. W3Schools - http://www.w3schools.com/
மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும்.


2. Hscripts - http://www.hscripts.com/tutorials/index.php
இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமையாக சொல்லி தருகிறது. Flash, JSP, UNIX commands, Perl போன்றவற்றையும் படிக்கும் வசதி உள்ளது.

3. HTML.net - http://www.html.net/
HTML, CSS, PHP, Java Script போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.

4. jQuery - http://jquery.com/
Query ஆனது ஒரு தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் Java Script இன் Library ஆகும். இதை jquery தளத்திலேயே கற்கலாம்.
இதை வீடியோ Tutorials ஆக முப்பது நாளில் படிக்க 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்.

5. HTML Code Tutorial - http://www.htmlcodetutorial.com/
மிக அடிப்படையான மொழியான HTML -ஐ அடிப்படையில் இருந்து கற்க இது உதவுகிறது. அத்தோடு CSS ம் இங்கு படிக்க முடியும். 


6. HTML 5
இணையத்தின் எதிர்கால மொழி என்று சொல்லப்படும் HTML 5 பற்றி படிப்பது ஒவ்வொரு Web Developer-க்கும் பயனுள்ளது. அவற்றை W3Schools இலவசமாக கற்று தருகிறது, மற்ற சில தளங்கள்

HTML5 Doctor -
http://html5doctor.com/article-archive/

HTML5 Tutorial -
http://www.html-5-tutorial.com/

slides.html5rocks -
http://slides.html5rocks.com/#landing-slide

HTML 5 Rocks -
http://www.html5rocks.com/en/

இவை தவிர்த்து அனைத்து Web Development படிக்க மற்ற சில தளங்கள்:

Quackit -
http://www.quackit.com/

Web Design Library -
http://www.webdevelopersnotes.com/

Web Developers Notes -
http://learn.appendto.com/

appendto - jQuery & Java Script -
http://www.webdesign.org/
நன்றி;"வியப்பு "
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வெப் மெயிலை பயன்படுத்துவது?
இணைய தளம் மூலமாகவே பல நிறுவனத் தளங்கள், வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல் வசதியைத் தந்து வருகின்றன. முதலில் ஹாட் மெயில் இதனைத் தொடங்கி வைத்தது. பின்னர் யாஹூ, ஜிமெயில் என இது தொடர்ந்தது. தற்போது இந்த வகையில் ஜிமெயில் மிக அதிகமான வாடிக்கையாளர்களுடன் முன்னணியில் இயங்கி வருகிறது. மின் அஞ்சல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளையும் தந்து வருகிறது.
வெப் மெயில் எனப்படும் இணைய தளத்திலேயே நம் அஞ்சல் பயன்பாட்டினைக் கொள்வது நமக்குப் பல வழிகளில் பயனைத் தருகிறது. இவற்றை எந்த இடத்திலும், எந்த கம்ப்யூட்டர் மூலமாகவும் அணுகலாம்.
தற்போது கம்ப்யூட்டர் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு இதற்குக் கட்டாயமாக வேண்டும். ஆனால், இது மட்டுமின்றி, இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த வெப் மெயில் தளங்கள் கொண்டுள்ளன. இவை குறித்து இங்குகாணலாம். நீங்கள் எந்த வெப் மெயில் பயன்படுத்துபவராக இருந்தாலும் இந்த வசதிகள் தரப்படுகின்றன. இவற்றை நீங்கள் உங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம்.
1. வெப் மெயிலை இணைய இணைப்பின்றி பயன்படுத்துக: வெப் மெயிலை நாம் பெற, அது தரும் தளத்தினை இணையம் மூலமாகவே தான் அணுக முடியும். ஆனால், இப்போது, சில மாற்றங்கள் செய்து, இணைய இணைப்பு இல்லாத போதும் அணுகலாம். அது எப்படி சாத்தியமாகிறது என்பதனைக் காணலாம். ஜிமெயில் பயனாளர்கள், இதுவரை கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தாதவராக இருந்தால், இந்த வசதியினைப் பெற குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும். இதுவும் இலவசமே. பின், இந்த பிரவுசர் மூலம், குரோம் வெப் ஸ்டோரை அணுக வேண்டும். இங்கு ஆப்லைன் கூகுள் மெயில் அப்ளிகேஷன் (Offline Google Mail app) என்னும் புரோகிராமினைப் பெற வேண்டும். இதற்கு இந்த ஸ்டோர் தளத்தில் Add to Chrome என்னும் பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். தொடர்ந்து, நீல நிறத்தில் Offline Google Mail என்னும் பட்டன் Chrome’s Apps என்பதன் கீழ் அமைக்கப்படும். (பிரவுசரில் புதிய டேப் ஒன்றினைத் திறந்து, கீழாக உள்ள Apps லிங்க்கில் கிளிக் செய்திடவும்.)
இந்த ஐகானில் கிளிக் செய்து ‘Allow offline mail’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Continue என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் ஆன்லைன் ஜிமெயில் இன்பாக்ஸின் ஒரு காப்பி உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தப்படும். நீங்கள் மின் அஞ்சல் செய்தி ஒன்று அனுப்ப வேண்டும் எனில், இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதும் "அனுப்பலாம்'. நீங்கள் "அனுப்பிய' செய்திகள், இன்டர்நெட் இணைப்பு பெற்றவுடன் அனுப்பப்படும். இந்த Offline Google Mail ஏற்பாட்டினை உங்கள் சொந்த பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமே ஏற்படுத்தவும். வேறு கம்ப்யூட்டர் எனில் மற்றவர்கள் உங்கள் செய்திகளைக் காண நேரிடும்.
விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் மற்றும் யாஹூ மெயில் ஆகியவற்றிற்கும் இதே போன்று இமெயில் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திடலாம்.
2. புதிய சோதனை முயற்சிகள்: ஜிமெயில் செயல்பாட்டின் வெற்றிக்கு மூல காரணமாக இருப்பது அதன் Labs என்னும் அம்சமாகும். இது ஒரு தனித்தளமாகும். இங்கு புதிய வசதிகள் அனைத்தும் சோதித்துப் பார்க்க நமக்குக் கிடைக்கும். தன் மற்ற பிரிவிற்கான சோதனைச்சாலைப் பிரிவுகளை, கூகுள் மூடிவிட்டது. ஆனால், கூகுள் மெயிலுக்கு மட்டும் இந்த Labs வசதி தொடர்ந்து கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்த, வழக்கம் போல ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். பின்னர், வலது மேல் மூலையில் உள்ள சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்த பக்கத்தில் கிடைக்கும் Labs லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் ‘Some crazy experimental stuff’ என்ற பக்கம் கிடைக்கும். இங்கு மின் அஞ்சலுக்குள்ளாகவே, கூகுள் மேப் பயன்படுத்திப் பார்க்கும் சோதனை முன் தோற்றம் பெறலாம். நமக்குத் தேவையான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இன்பாக்ஸ்களை உருவாக்கி சோதனை செய்து பார்க்கலாம். டெம்ப்ளேட் ஏற்படுத்தி, அவற்றிலிருந்து மின் அஞ்சல்களை அமைத்துப் பார்க்கலாம். இந்த சோதனை சாலையில் என்ன முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த ஆப்ஷன் முன் உள்ள Enable என்பதனைக் கிளிக் செய்து, இந்த சோதனை முயற்சிகளை மேற்கொள்ளவும்.
3. மெயில் வடிகட்டி ஏற்படுத்த: ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹு மெயில் பயனாளர்கள், தங்களுக்கு வரும் அஞ்சல் செய்திகளை, வடிகட்டிப் பிரித்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நம் இன்பாக்ஸ், பேஸ்புக் அறிவிப்பு, நியூஸ் லெட்டர் மற்றும் இது போன்ற தேவையற்ற மெயில்களால், மிகப் பெரிதாகக் காட்சி அளிக்காது. இவற்றை எல்லாம், அதன் பொருள் அடிப்படையில், இன்பாக்ஸ்களை அமைத்துப் பிரித்து அமைக்கலாம்.
மெயில்களை வடிகட்ட, பலவகை அடிப்படைகளை அமைக்கலாம். மெயில்களை அனுப்புபவர்களின் பெயர்கள், சப்ஜெக்ட் பீல்டில் உள்ள சொற்கள், செய்தியில் உள்ள சில சொற்கள், செய்திகளுடன் இணைப்பு உள்ளவை மற்றும் இல்லாதவை எனப் பலவகைகளில் மெயில்களை வடி கட்டிப் போல்டர்களாகப் பிரிக்கலாம்.
ஜிமெயிலில் வடி கட்டி அமைக்க, வலது மேல் மூலையில் உள்ள சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து click Filters மற்றும் Create New Filter ஆகியவற்றில் கிளிக் செய்திடவும்.
ஹாட்மெயில் தளத்தில், Options கிளிக் செய்து More Options என்பதனைத் தேர்ந்தெடுத்து, Rules for sorting new messages’ என்பதில் கிளிக் செய்திடவும். இவற்றின் மூலம் மெயில்களைப் பிரித்திடலாம். பின்னர் New என்பதில் கிளிக் செய்து பிரிவுகளை அமைக்கவும். யாஹூ மெயில் தளத்தில், Options கிளிக் செய்து, Mail Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இடது பக்கம் உள்ள மெனுவில் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் Add என்பதனைக் கிளிக் செய்து பில்டர்களை அமைக்கவும்.
4. தானாக இன்பாக்ஸ் சுத்தம் செய்திட: ஹாட் மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம், வடி கட்டிகளுக்கு மேலாகச் செயல்படும் வகையில், Sweep என்னும் டூலைத் தருகின்றன. இந்த டூல், இன்பாக்ஸை, சுத்தமாகவும், ஓர் ஒழுங்கு முறையோடும் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து வந்த ஒரு மெயிலைத் தேர்ந்தெடுத்து, இந்த டூல் மூலம், அவர் அனுப்பியுள்ள அனைத்து மெயில்களையும் அழிக்கலாம். இந்த டூலைப் பயன்படுத்தும் வழிகளை நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். ஸ்வீப் டூலைப் பயன்படுத்த, ஏதேனும் ஒரு இமெயிலை அடுத்துள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர், மேலாக உள்ள டூல் பாரில் கிடைக்கும் ஸ்வீப் பட்டன் அருகே உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், உங்களுக்குத் தேவையான செயல்பாட்டினைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளலாம்.
5. புதிய இமெயில் அக்கவுண்ட்கள் உருவாக்கவும்: நாம் அன்றாடம் செல்லும் பல இடங்களில், நம்மைப் பற்றிய தகவல்களைக் கேட்டு வாங்குகின்றனர். இந்த தகவல்களில், மின் அஞ்சல் முகவரியும் ஒன்றாக உள்ளது. இங்கெல்லாம், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மின் அஞ்சல் முகவரியினைத் தருவதைத் தவிர்க்கலாம். இதற்கு பெரும்பாலான இமெயில் சர்வர்கள், மாற்று (alias) இமெயில் முகவரிகளை அமைத்துக் கொள்ள வசதி தருகின்றன. இந்த மாற்று இமெயில் முகவரிகளை, இது போன்ற வர்த்தக மையங்களில் பயன்படுத்தலாம். பின்னர், இது போன்ற அஞ்சல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட போல்டருக்கு, வடி கட்டிகள் மூலம் திருப்பி விடலாம்.
எடுத்துக்காட்டாக, ஹாட் மெயில் தளத்தில், மவுஸ் பாய்ண்ட்டரை, இடது பக்கம் உள்ள இன்பாக்ஸ் தலைப்பின் வலது பக்கம் கொண்டு சென்று, சிறிய சக்கர ஐகான் மீது கிளிக் செய்திடவும். இங்கு Create a Hotmail alias என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தரப்பட்டுள்ள பாக்ஸில், புதிய மின் அஞ்சல் முகவரியினை டைப் செய்திடவும். செய்த பின்னர், ‘Create a Hotmail alias’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
யாஹூ மெயிலில், மேலாக இடது புறம் உள்ள உங்கள் யூசர் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Account Info என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், Manage Your Aliases என்பதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர், Add an Alias என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஜிமெயில் தளத்தில், மாற்று யூசர் பெயரை, உடனடியாக, எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். நம் இமெயில் முகவரியில் ஒரு (‘+’) அடையாளத்தை இணைத்து, அதனைத் தொடர்ந்து இன்னொரு சொல்லை இணைத்து, புதிய மாற்று இமெயில் முகவரியை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் ஜிமெயில் முகவரி martin@gmail.com என இருந்தால், அதனை martin+john@gmail.com என அமைக்கலாம்.
6. பாதுகாப்பாக அக்கவுண்ட் செயல்பாடு: மற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் மைய கம்ப்யூட்டர் என எதன் மூலமாவது, இணைய இணைப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர்டுக்குப் பதிலாக, குறியீடுகளைப் பயன்படுத்தலாம். இதற்கு, நீங்கள் உங்கள் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஹாட் மெயில் அல்லது அவுட்லுக் டாட் காம் தளங்களில், வழக்கம் போல, உங்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திடவும். வலது மேல் மூலையில் உள்ள, உங்கள் யூசர் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு Accountஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ‘Edit security info’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் படிவத்தில், உங்கள் மொபைல் போன் எண் உட்பட, அனைத்து தகவல்களையும் பதிந்திடவும். இந்த பாதுகாப்பு நிலையை, அடுத்து வரும் நிகழ்வுகளிலும் பயன்படுத்த, ஹாட் மெயில் லாக் இன் திரையில், ‘Get a single use code to sign in with’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து உங்கள் மொபைல் போனுக்கு லாக் இன் குறியீடு ஒன்று தரப்படும். இது ஒரு டெக்ஸ்ட் மெசேஜாக மொபைல் போனுக்கு வரும். இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
ஜிமெயில் இதே போன்ற ஒரு சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில், ஜிமெயில் (http://mail.google.com) தளத்திற்குச் செல்லவும். பின் வழக்கம் போல உங்கள் அக்கவுண்ட் லாக் இன் செய்திடவும். உங்கள் இமெயில் முகவரியில் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் Account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் காணப்படும் Security என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ‘2step verification’ என்ற தலைப்பில் கிடைக்கும் Edit என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து, நீல நிறத்தில் உள்ள Start Setup என்ற பட்டனில் கிளிக் செய்து, அடுத்தடுத்து கேட்பவற்றைத் தரவும். அடுத்து நீங்கள் வேறு ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில் ஜிமெயில் தளத்தை அணுகுகையில், கூகுள் மெயில் தளம், உங்கள் மொபைல் போனுக்கு குறியீடு ஒன்றை அனுப்பும். இதனை உங்கள் பாஸ்வேர்டுடன் இணைத்துத் தர வேண்டும்.
நன்றி:தினமலர் .
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------செவ்வாய், 28 மே, 2013

"அய்யா தெரியாதையா"

"கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது "
--என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.

இந்த விவாதத்தின் போது,  ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.

எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.

எனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 
ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் இருக்கிறார்
அவருக்கு தன் துறை சார்ந்த அனைத்து நடப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது புதிய திட்டங்களை அறிவிக்கும் கடமை உண்டு.
ஆனால் என்ன நடக்கிறது?
அந்தந்த துறை அமைச்சருக்கே தெரியுமோ தெரியாதோ பல புதிய அறிவிப்புகளை முதல்வரே சட்டசபை விதி 110ன் கீழ் அனைத்து துறையின் சார்பாக படிக்கிறார்.
அதுவும் "என் தலைமையின் கீழுள்ள"
"என் அரசு" என்று வரிக்கு வரி சொல்கிறார்
அப்படியிருக்க தனக்கு தெரியாமலே உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு வந்தது என சொல்வதுபொருத்தமாக தெரிகிறதா?

இந்த அம்மையாருக்கு தெரியாமலேயே யாரோ ஒருத்தர் , தேர்தல் சமயத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள். இதே அம்மையாருக்கு தெரியாமல் யாரோ ஒருத்தர், சென்னை - அண்ணா நகர் - நினைவு வளைவை உடைக்க பார்த்தார்கள். இப்போ கூட ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஆங்கிலத்தை புகுத்தப்பார்த்தார்கள். எல்லா சமயங்களிலும் அம்மையார் திடீர் திடீரென்று விழித்துக்கொள்வதால் ... நல்ல வேளை... தமிழகம் தப்பித்துக்கொள்கிறது.

ஆனால் இப்படி அடிக்கடி நடக்கிறதே.
 அந்த யாரோ ஒருவர் யார். ?
  இவர் டான்சியில் தான் போட்ட கையெழுத்தை தனது இல்லை என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

பேஸ்புக் தள பயன்பாடு இலவசம்

நோக்கியா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, பேஸ்புக் தளப் பயன்பாட்டினை இலவசமாக வழங்குகின்றன. நோக்கியாவின் ஷா 501 மொபைல் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.
பேஸ்புக் தளம் பயன்படுத்துவதற்கான, அப்ளிகஷன் புரோகிராமினை இலவசமாக நோக்கியா 501 மொபைல் போனில் நோக்கியா தருகிறது.
 Foursquare, LinkedIn, Nimbuzz, Twitter ஆகியவற்றுக்கும் அப்ளிகேஷன்கள் இந்த போனில் தரப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில், ஏர்டெல் நிறுவனம், தங்களின் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் தளத்தை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதி கொடுத்தது. ரிலையன்ஸ் மாதம் ரூ. 16 பெற்றுக் கொண்டு, பேஸ்புக் தளத் தொடர்பினை வழங்கியது. முதல் முறையாக, நோக்கியா போன்ற மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகையினைத் தருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இங்கு, வரும் ஜூன் மாதம் வர்த்தக ரீதியாக வெளியாக இருக்கும், நோக்கியா ஆ
ஷா 501 போனுடன் இந்த சலுகைக் கட்டாயமாகக் கிடைக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
மூளையில் இரத்தக் கசிவு
-------------------------------------------------------
ஏற்படுவதால் வரும் வாத நோய் வந்து நடமாட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுக்கு குருத்து உயிரணுக்களைக் கொடுத்து ஸ்கொட்லாந்தில் செய்யப்பட்ட பரிசோதனை முறை சிகிச்சையில் அவர்கள் குணமடைவதற்கான சிறு அறிகுறிகள் தென்படுகின்றன.
மனிதக் கருவிலிருந்து எடுக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை இந்த நோயாளிகளின் மூளையில் செலுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களது உடல் அசைவுகளிலும், விழாமல் நிற்பதிலும், சுற்றியிருப்பதை உணர்ந்துகொள்வதிலும் முன்னேற்றங்கள் தென்படுவதாகவும், இந்த சிகிச்சையால் பாதகமான மாற்றம் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை என்றும் ஆய்வு காட்டுகிறது.
இந்த முன்னேற்றங்களைக் கண்டு தாம் வியந்துபோயுள்ளதாக பரிசோதனை மேற்கொண்ட எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த சிகிச்சை முறையின் தீர்க்கமான முடிவாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்று இவர்கள் கூறுகின்றனர்.
நோயாளிகளுக்கு குருத்து அணுக்களைக் கொண்டு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலகில் நடந்துவரும் முதல் சில ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
குடிப்பழக்கத்திற்கு 
அடிமையானவர்களை மீட்க புதிய மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "மருந்தை உட்கொள்வதின் மூலம் 61 சதவீதம் வரை மது அருந்தும் பழக்கம் கட்டுப்படுத்தப்படும் " என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மது அருந்துபவர்களின் உடல் நிலை மோசமடைவது மட்டுமின்றி, ஏராளமான விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நிகழ்கின்றன.

குடிகளால் ஏற்படும் விபரீதங்களை தடுப்பது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின், இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு, தன் ஆராய்ச்சியின் பயனாய், புதிய மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


இது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இந்த மருந்து, இங்கிலாந்து அரசின் ஒப்புதலுடன், விற்பனைக்கு வந்துள்ளது. மாத்திரை வடிவில் வெளியிடப்பட்டுள்ள இதற்கு, "செலின்க்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், ஒரு நாளைக்கு, ஒரு மாத்திரை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை மது அருந்துவதற்கான பழக்கத்தில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது" என்று கூறப்பட்டுள்ளது.

suran

திங்கள், 27 மே, 2013

செந்தமிழ் சீமான்கள் பார்வைக்கு

தமிழை பள்ளிகள்,கல்லூரிகளில் இருந்து ஜெயலலிதா எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவரின் சிலை வைக்கும் முயற்சிக்கு வாழ்த்து  தெரிவித்து விட்டு ,பள்ளிகளில் தமிழை ஒழிக்கும் முயற்சிக்கு வாயை திறக்காமல் இருக்கும் செந்தமிழ் சீமான்கள் பார்வைக்கு மொழியை வளர்க்கும் விதம் பற்றிஒரு செய்தி :-


"பிரான்ஸ் நாட்டின் பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதிக்க, அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரெஞ்ச் மொழி 1635ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மொழியிலிருந்து தான், ஆங்கிலத்தில் பல மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஆங்கிலம் அளவுக்கு, பிரெஞ்ச் மொழி சர்வதேச அளவில் வளரவில்லை. கடந்த மார்ச் மாதம், பிரான்ஸ் உயர்கல்வி அமைச்சர், ஜெனிவிவி பியாரசோ கூறியதாவது: நம்நாட்டில், 3,000 இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். லண்டனை ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. எனவே, நம்முடைய பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதித்தால், வெளிநாட்டு மாணவர்களை அதிகம் கவர முடியும். எனவே பல்கலைகளில் ஆங்கிலத்தில் கல்வி போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.
 அமைச்சரின் இந்த கருத்துக்கு, அந்நாட்டு பார்லியில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அரசின் இந்த அறிவிப்பு, பிரான்ஸ் மொழி அழிவதற்கு வழி வகுக்கும். அதுமட்டுமல்லாது, ஆங்கிலம் வளருவதற்கு தான் இந்த நடவடிக்கை உதவும்' என்றனர.suran

ஞாயிறு, 26 மே, 2013

செம்மொழியான[ மலையாளம்] மொழியாம் . வழக்கு நிலுவையில் இருந்த போதும், சாகித்ய அகடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்தை, மத்திய அரசு தந்துள்ளது. இதன்மூல செம்மொழி வரிசையில், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளோடு, தற்போதுமலையாளமும் சேர்ந்துள்ளது.
"ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனில், குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் உள்ளடக்கிய தாக, அந்த மொழி இருக்கவேண்டும்' என, "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி" ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனில், அந்த மொழியானது, குறைந்தது, 2,000ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்.
 அதே கால அளவுக்கு, பேச்சுவழக்கிலும், அந்த மொழி இருந்திருக்கவேண்டும். 
வேற்று மொழி சொற்கள் கலந்திருக்காமல், தனக்கே உரிய இலக்கண தொன்மையுடன், அந்த மொழி உயரிய பழம்பெருமை வாய்ந்ததாக இருக்க வேண்டும"

இந்த நிபந்தனைகளை எல்லாம், பூர்த்தி செய்த மொழிகள் என்பதால், சமஸ்கிருதம், ரோமன், கிரேக்கம், சைனீஷ் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன. 
இந்த மொழிகள் அனைத்திற்கும், எந்த வகையிலும், குறைச்சல் இல்லாத பழமையும், பெருமையும் வாய்ந்த மொழி தமிழ் என்பதால்,அதையும் செம்மொழியாகஅறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கடந்த, 2004ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதல் ஆட்சிக் காலத்தில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., செல்வாக்குடன் திகழ்ந்த அந்த ஆட்சியில், தமிழை செம்மொழியாக்கும் நடவடிக்கைகள் துவங்கப் பெற்று, அமைச்சரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, மத்திய கலாசார துறை அமைச்சராக இருந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி, தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  ஒரு தந்திரம் செய்தார். 
 "செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு, 2,000 ஆண்டுகள் பழமையாக இருக்க வேண்டும் என்ற விதியை, 1,500 ஆண்டுகள், பழமையானதாக இருந்தால் போதும்' என மாற்றினார்.

இந்த திருத்தம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வந்த போத யாரும் எதிர்க்கவில்லை. இதன்காரணமாக, தமிழுக்கு நிகரான அந்தஸ்தை பிற மொழிகள் பெற வழி ஏற்பட்டது. தொன்மை குறித்த நிபந்தனை, 2,000 ஆண்டுகளாகவே இருந்திருக்க வேண்டும் என தமிழறிஞர்கள் குறைபட்டனர்.அதனால், செம்மொழிஅந்தஸ்தை, தமிழின் பெருமைக்கும், தொன்மைக்கும் சற்றும் நெருக்கத்தில் வர முடியாத, பிற மொழிகளும் பெற நேர்ந்தது.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்காக, பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. ஆனால், செம்மொழியான
தமிழ்மொழி, பத்தோடு பதினொன்றாக ஆன கதை, பெரிதாக பேசப்படவில்லை.தமிழுக்கு பிறகு, ஜெய்பால் ரெட்டி நினைத்தபடியே, தெலுங்கும் செம்மொழி ஆக்கப்பட்டது. பின், கன்னடமும் செம்மொழியானது. தென் மாநில மொழிகளில், மலையாளம் மட்டுமே பாக்கி இருந்தது. இது கேரள மக்களுக்கு, பெரும், "ஈகோ'பிரச்னையாக உருவெடுக்கவே, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை,மளமளவென துவக்கினர்.
மத்திய அரசிடம், இந்த கோரிக்கை தீவிரமாக வைக்கப்பட்டது. அப்போது, நாட்டின் மிகப்பெரிய அமைப்பான, சாகித்ய அகடமியின் மொழிகள் பிரிவு பரிசீலனைக்கு, இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டது. "மலையாளத்திற்கு, செம்மொழி அந்தஸ்து பெற தகுதி இல்லை' என்ற, கடுமையான எதிர்ப்பை, சாகித்ய அகடமி பதிவு செய்தது.

ஆனாலும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் தலைமையில், இதற்கென குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசில் உள்ள மலையாள செல்வாக்கை, பயன்படுத்தும் பணிகள் ஆரம்பமாகின.
இதற்கிடையில், "மலையாள மொழியை செம்மொழி ஆக்கக் கூடாது. அதற்கான தகுதி அந்த மொழிக்கு இல்லை' என்று வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆனால் மலையாள அதிகாரிகள் -அரசியல்வாதிகள் ஆதிக்கம் மத்தியில் அதிகம் இருப்பதால்
 பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. 
செம்மொழிக்கு மலையாளம் வந்தது பற்றி பலர் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.கருணாநிதிதான் காரணம் என்று கூட குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.

தமிழ் செ ம்மொழியானதால் இதுவரை என்ன நன்மை?ஆரம்ப பள்ளிகளில் கூட ஆங்கிலம் தமிழை விரட்டுகிறது.கல்லூரிகளிலும் தமிழின் இடம் பறி போகிறது.செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாட்டு மட்டுமே மீதம் .
தமிழக அரசே தமிழை துரத்தியடிக்கும் போது அதற்குரிய முக்கியத்துவத்தை அழித்துக் கொண்டிருக்கையில் செம்மொழி தகுதியினால் தமிழுக்கு என்ன பயன்.
தமிழ்த் தாய்க்கு 100 கோடியில் சிலையை வைத்து பார்த்து ரசித்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான் .செம்மொழியாக  மலையாள மொழியானால் என்ன? சிங்கள மொழியானால் என்ன?
தமிழ் நாட்டில் தமிழுக்கே மரியாதை இல்லையே?பள்ளி,கல்லூரிகளில் மற்றும் வேலைக்கான போட்டித் தேர்வுகளில்  இருந்து  தமிழ்
விலக்கப் பட்டு  வருகிறதே.அதையும் தமிழக அரசே முன்னின்று செய்கிறதே .அதை தடுக்க வழியின்றி கருணாநிதியையும் ,கேரள லாபியையும் குறை சொல்லி என்ன பயன்?செம்மொழி தகுதியினால்தான் என்ன பயன்?
பள்ளிகளில் இருந்து தமிழை எடுத்து விட்டு 100 கோடிகளில் சிலை செய்யும் அரசைத்தான் குறை சொல்ல வேண்டும்.!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கரும் விதவைகள்'

ரஷ்யாவின் தெற்கு குடியரசான டஜெஸ்தானில் ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தலைநகர் மக்கச்கலாவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சந்தேகத்துக்குரிய தற்கொலைக் குண்டுதாரி ஒருவர்
 தற்கொலைக் குண்டுதாரி
பல மதங்களும் வாழுகின்ற மலைப்பாங்கான இந்தப் பிராந்தியம் நீண்டகாலமாக இஸ்லாமிய கிளர்ச்சியின் மையமாகத் திகழுகின்றது.
அண்மைய வருடங்களில் பெரும்பாலும் ''கரும் விதவைகள்'' என்று அழைக்கப்படுகின்ற பெண் தற்கொலைதாரிகளின் தாக்குதல்களை ரஷ்யா எதிர்கொண்டு வருகின்றது.
பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் மனைவிகளாக அல்லது உறவினர்களாக இந்த தற்கொலைதாரிகளில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------


டி.எம்.செளந்தரராஜன்,டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார்.
சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார்.
சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர்,  19-ஆம் தேதி வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது.
 22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார்.
சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
தனது வெண்கலக் குரலால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை கட்டிப் போட்ட டி.எம்.செளந்தரராஜன் 1922-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.
 
1946-ஆம் ஆண்டில் "கிருஷ்ணவிஜயம்' என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து தனது முதல் பாடலைப் பாடினார் .
. அதன் பிறகு சில பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ்., 1954-ல் "தூக்கு தூக்கி' படத்தில் சிவாஜி கணேசனுக்காக பாடினார். சிவாஜி கணேசனே சொந்தமாக பாடியதைப் போன்ற பிரமிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது டி.எம்.எஸ்-ன் குரல்.
 மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற எம்.ஜி.ஆர்.கமல்ஹாசன், சிவாஜி, ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், நாகேஸ்வரராவ், ரவிசந்திரன், நாகேஷ், ரஞ்சன், ரஜினிகாந்த்,  உள்பட பல முன்னணி கதாநாயகர்களின் உதட்டசைவுக்கு உயிர் கொடுத்தவர் டி.எம்.செüந்தரராஜன்.
52 இசையமைப்பாளர்களின் இசையில் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
 அருணகிரிநாதர், பட்டினத்தார் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து நடிப்புத் துறையில் பிரவேசித்தார்.
ஆண்டுகள் பல கடந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களைப் பாடிய பெருமையைப் பெற்றவர் டி.எம்.எஸ்.
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்...', "அச்சம் என்பது மடமையடா', போன்ற காலத்தால் அழியாப் பாடல்களை பாடியுள்ளார்.

suran
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', "அழகென்ற சொல்லுக்கு முருகா...', போன்ற பாடல்கள்.
வயோதிகம் காரணமாக நீண்ட நாள்கள் பாடாமல் இருந்த டி.எம்.எஸ். 2010-ஆம் ஆண்டு செம்மொழிப் பாடலான, செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலில் முதல் இரு வரிகளைப் பாடினார்.
 5 மொழிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக திரை இசைப் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்-க்கு 2003-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தது.
இதை தவிர கலைமாமணி விருது, மாநில அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுகள், திரைத்துறை விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.
அவருக்கு மனைவி சுமித்ரா, மகன்கள் பால்ராஜ், செல்வகுமார், மகள் மல்லிகா ஆகியோர் உள்ளனர்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 25 மே, 2013

நான்காண்டுகள் நிறைவு சிறப்பு முறைகேடு ! ......!

ஐக்கிய முற்போக்குக்கூட்டணி -2 அரசின் நான்காண்டுகள் நிறை வடைந்துள்ளதையொட்டி அரசின் சாதனைப் பட்டியலை பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வெளியிட் டுள்ளனர்.
இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைகள் தவிர கூட்டணி அரசில் அமைச்சர் பதவியை பெற்றுள்ள சரத் பவார், அஜித் சிங், பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கூட்ட ணியை வெளியிலிருந்து ஆதரிப்ப தாக கூறிக்கொள்ளும் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகி யோரும் கலந்துகொண்டுள்ளனர்.
 கூட்டணி ஆட்சி பதவியேற்றபொழுது அதில் இடம் பெற்றிருந்த திமுக, திரி ணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இல்லை. அரசுக்கு ஆபத்து வரும்போதெல் லாம் மத்திய புலனாய்வுத்துறை விரட்ட, வேறு வழியில்லாமல் உறுதி யான ஆதரவு அளித்துவரும் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்றவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. நியாயமாக இந்த விழாவில் மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குநரும் பங்கேற்றிருக்கவேண்டும். ஏனென் றால், மத்திய புலனாய்வுத்துறையின்புண் ணியத்தில்தான் இந்த அரசின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் சொல்லப்போனால், நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக் குக்கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும், பெரும்பான்மை இருப்பதுபோன்ற தோற்றத்தை மத்திய புலனாய்வுத்துறை உதவி யுடன்தான் காங்கிரஸ் கட்சி ஏற் படுத்தி வருகிறது. சில்லரை வர்த்தகத் தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்றவை மட்டுமன்றி கூட் டணியில் இடம் பெற்றிருந்த திமுக, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சி களும் கூறிவந்தன.
ஆனால், வாக் கெடுப்பின்போது திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் போன்றவை ஆதரித்ததற்கு மத்திய புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகளே கார ணம் என்பதை நாடறியும்.
 பிரதமருக்கும், காங்கிரஸ் தலை வர் சோனியா காந்திக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமன்றி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் சத்தியம் செய்திருக்கிறார்.
அவர்கள் கூறுவது உண்மைதான். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முத லீட்டை அனுமதிப்பது உட்பட நாட்டை நாசமாக்கும் முடிவுகளை இவர்கள் அனைவரும் இணைந்து தான் எடுக்கிறார்கள். அமெரிக்கா வுக்கு காவடி தூக்குவதிலும், கூட்ட மாக அரோகரா போடுவதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு துவங்கி, மானியத்தில் மண் அள்ளிப் போடுவது வரை எல்லா முடிவுகளும் கூட்டாகத்தான் எடுக்கப்படுகின்றன. பொதுவாக மன்மோகன் சிங் அதிகம் பேசுவதில்லை என்று ஒரு கருத்து உண்டு. அதிலும் அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி குறைவு என்ற குறையும் உண்டு.
இந்தக் குறையை விழாவில் நிவர்த்தி செய் திருக்கிறார் அவர்.
 "ஸ்பெக்ட்ரம், நிலக் கரி ஊழல் குற்றவாளிகள் தண்டிக் கப்படுவார்கள் "என்று அவர் கூறிய போது, கூட்டத்திலிருந்தவர்கள் மட்டுமன்றி- மன்மோகன் சிங்கே மன துக்குள் அடக்கமுடியாமல் சிரித்திருப்பார்.
 ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்ற வாளிகளைத் தண்டிக்க பிரதமர் மன் மோகன் சிங் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொடர்ந்து எடுத் துரைத்து வருகிறார். அனைத்து முடிவு களையும் பிரதமரைக் கேட்டுத்தான் எடுத்தேன் என்று அவர் கூறியுள்ளதி லிருந்தே குற்றவாளிகள் யார் என்பது பிரதமருக்கு நன்றாகத் தெரிந்திருக் கும். அப்படியென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எளிது தானே.
நிலக்கரி சுரங்க ஊழல் நடைபெற்ற பொழுது அந்த அமைச்சகம் பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருந்தது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே மத்திய புலனாய்வுத்துறையின் அறிக் கையை வாங்கி திருத்திக்கொடுத்த தில் பிரதமர் அலுவலத்திற்கும் பங்கு உண்டு என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது.அநேகமாக குற்றவாளிகளின் பெயர்களை சேர்ப்பதற்காகத்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கையை திருத்திக்கொடுத்தது என்று நம்பலாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த வுடன் எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டு ஊழலும் வெளிவந்தது.
அந்த துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதுதான்.
ஆனால், பின்னர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்ட தாகக் கூறி ஒரே அமுக்காக அந்த விவகாரம் அமுக்கப்பட்டுவிட்டது. அந்த ஊழலிலும் குற்றவாளிகளைத் தண்டிக்க மன்மோகன் சிங் நட வடிக்கை எடுப்பாரேயானால் நாட்டு மக்கள் அவரை பாராட்டுவார்கள்.
தகவலறியும் உரிமைச்சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவை யெல்லாம் இடதுசாரிகளின் ஆதர வுடன் செயல்பட்ட முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டவை.
\மன் மோகன் சிங் வார்த்தையில் கூறுவ தானால் அவர் இடதுசாரிகளின் கொத்தடிமையாக இருந்தபோது கொண்டுவரப்பட்டவை. இந்த ஆட் சியில் அவர் சுதந்திரமாக , அதாவது அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆட்சியின் சாதனை உலக மகா ஊழல், பன் னாட்டு நிறுவனங்களுக்கு அனைத் துத் துறைகளிலும் நடைபாவாடை விரிப்பது ஏழைகளின் உணவைப் பறித்து பணக்காரர்களுக்கு பந்தி வைப்பது போன்றவைதான்.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 

சாதகமாக 

"மெகா ஊழல்?'

===========================
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிக லாபமடைய வசதியாக, ஆந்திரபிரதேசத்தில் உள்ள கே.ஜி-டி6 இயற்கை எரிவாயு வயலில் உற்பத்தியாகும் எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதையடுத்து "இந்த விவகாரத்தில் உண்மையை விளக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
வீரப்ப மொய்லி
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய குருதாஸ்தாஸ் குப்தா:
 "இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை தயாரித்த குறிப்புகள் மற்றும் மத்திய திட்டக் குழு, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்  தலைவர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வீரப்ப மொய்லி செயல்படுகிறார்; இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணகான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.

"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் குழு, ஒரு எம்எம்பிடியு (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்பது பத்து லட்சம் கன அடி எரிவாயு யூனிட்டுக்கு சமம்) இயற்கை எரிவாயு விலையை 4.2 அமெரிக்க டாலர்களாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.  ஆனால், அதை முதலாவது ஆண்டில் 8 அமெரிக்க டாலர்கள், இரண்டாவது ஆண்டில் 10 டாலர்கள், மூன்றாவது ஆண்டில் 12 அமெரிக்க டாலர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு எம்எம்பிடியு இயற்கை எரிவாயு விலையை 14 டாலர்கள் என்ற ரீதியில் உயர்த்தலாம் என்று வீரப்ப மொய்லி பரிந்துரை செய்துள்ளார்.
குருதாஸ்தாஸ் குப்தா

மொய்லியின் யோசனைக்கு பெட்ரோலியத் துறைச் செயலர், மத்திய மின் துறை, உரத் துறை அமைச்சக உயரதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றை எல்லாம் பொருள்படுத்தாமல் அதிகாரிகள் எழுதிய குறிப்புகளை மூன்று முறை மொய்லி நிராகரித்துள்ளார். மேலும், தனது யோசனையைப் பரிந்துரைக்கும் கோப்பில் கையெழுத்திடும்படி அவர் அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்.
ஏற்கெனவே, இயற்கை எரிவாயு விலையேற்ற விவகாரத்தில் ஒரு எம்எம்பிடியு எரிவாயுக்கு ரூ. 13.8 அமெரிக்க டாலரை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ரிலையன்ஸ்  நிறுவனம் பேரம் பேசி வருகிறது.
இந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்.
 ஆனால், அந்த முடிவால்  
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.
இந்த விலை உயர்வை ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் அரசுக்கு ரூ. 1,80,000 கோடி மானியச் சுமையும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,62,000 கோடி லாபமும் கிடைக்கும்.
இந்த அளவுக்கு ஒரு தனியார் நிறுவனம் ஆதாயம் பெற வழிவகைகளை உருவாக்கிக் கொடுக்கும் வீரப்ப மொய்லியின் செயலை "மெகா ஊழல்' எனக் கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?'' - என்று கூறினார்.
மொய்லிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அலுவல் குறிப்புகள், பெட்ரோலியத் துறை கொள்கை நிர்ணயக் குறிப்புகள் அடங்கியதாகக் கூறப்படும் சில ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகக் குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------