செந்தமிழ் சீமான்கள் பார்வைக்கு

தமிழை பள்ளிகள்,கல்லூரிகளில் இருந்து ஜெயலலிதா எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவரின் சிலை வைக்கும் முயற்சிக்கு வாழ்த்து  தெரிவித்து விட்டு ,பள்ளிகளில் தமிழை ஒழிக்கும் முயற்சிக்கு வாயை திறக்காமல் இருக்கும் செந்தமிழ் சீமான்கள் பார்வைக்கு மொழியை வளர்க்கும் விதம் பற்றிஒரு செய்தி :-


"பிரான்ஸ் நாட்டின் பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதிக்க, அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரெஞ்ச் மொழி 1635ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மொழியிலிருந்து தான், ஆங்கிலத்தில் பல மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஆங்கிலம் அளவுக்கு, பிரெஞ்ச் மொழி சர்வதேச அளவில் வளரவில்லை. கடந்த மார்ச் மாதம், பிரான்ஸ் உயர்கல்வி அமைச்சர், ஜெனிவிவி பியாரசோ கூறியதாவது: நம்நாட்டில், 3,000 இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். லண்டனை ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. எனவே, நம்முடைய பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதித்தால், வெளிநாட்டு மாணவர்களை அதிகம் கவர முடியும். எனவே பல்கலைகளில் ஆங்கிலத்தில் கல்வி போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.
 அமைச்சரின் இந்த கருத்துக்கு, அந்நாட்டு பார்லியில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அரசின் இந்த அறிவிப்பு, பிரான்ஸ் மொழி அழிவதற்கு வழி வகுக்கும். அதுமட்டுமல்லாது, ஆங்கிலம் வளருவதற்கு தான் இந்த நடவடிக்கை உதவும்' என்றனர.



suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?