அதிகார அரிச்சுவடி.
செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளார்.செந்தில் பாலாஜி நீக்கத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி விக்கப்பட்டுள்ளது என முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அளித்துள்ளார். மணிப்பூரில் கடந்த 16 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது கங்போக்பி மாவட்டத்தில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். தலைநகர் இம்பாலில் பாஜக அலுவலகம் முன் கூடிய 100க்கும் மேற்பட்டோர் மீது கண்ணீர் புகை வீசப்பட்டது. இதுவரை 133 பேர் பலியாகி உள்ளனர். நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் வரும் ஜூலை 13ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் வரும் ஜூலை 13ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ்...