ராணுவ நிதி
• இரண்டு மாதங்களாக கலவரம் ஓயாத மணப்பூருக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார் ராகுல் காந்தி. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.
• கனிமவளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க குவாரிகளில் பறக்கும் கேமராக்கள் பொருத்தப்படும். கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
• பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வெளிச்சந்தையில் கிலோ 100 ரூபாயை தாண்டியதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
• எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு இடத்துக்கு 7 மாணவர்கள் போட்டியிடும் நிலை உள்ளது.
• தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து கேட்டுப்பெறவேண்டும் என்று திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
• திருநெல்வேவி கிறிஸ்தவ மதபோதகரை தாக்கிய வழக்கில் திமுக எம்பி ஞான திரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
• புதிய ராணுவ நிதியாக அமெரிக்கா, கிவ்க்கு 500 மில்லியின் டாலரை கொடுக்கும் என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் போருக்காக இந்த நிதி அளிக்கப்படுகிறது. இதில் போர் வாகனங்கள், மற்ற வாகனங்கள், ராணுவ தாக்கும் வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.போர் நிற்கக்கூடாது என முனைப்பு.?
---------------------------------------
சான்டோ எம்.ஏ.சின்னப்பா
28 ஜூன், 1915 ல் பிறந்த சின்னப்பா தேவருக்கு பூர்வீகம் இராமநாதபுரம் என்றாலும் வளர்த்தெடுத்தது கோவைதான்.
அடிப்படையிலேயே கட்டுமஸ்தான உடல்வாக்குக்கொண்ட தேவருக்கு சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
படத்தயாரிப்பில் ஈடுபட ஆசைப்பட்ட சின்னப்பா தேவருக்கு நண்பர்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தைக்கொடுத்து உதவ அவர் தேவர் ஃபிலிம்ஸை உருவாக்கினார்.
தாய்க்குப் பின் தாரம்’ படத்தை தயாரிக்க அதில் எம்.ஜி. ஆரே கதாநாயகனாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதனிடையே எம்.ஜி.ஆருக்கு சின்னாப்ப தேவருக்குமிடையேயான நட்பில் பிணக்கு ஏற்பட, பின்னர் இருவரும் அதனை தட்டிவிட்டு இணைந்து பணியாற்றத்தொடங்கினர். இவர்கள் இணைந்த படங்கள் ஹிட்டடித்தன.
தன் படங்களுக்கென தனி கதை இலாகாவை உருவாக்கி வைத்திருந்தார் சின்னாப்பா தேவர். குழுவை அழைத்து கதையை உருவாக்கச் சொல்வார். கதை ரெடியானதும் தேவர் கேட்பார்.
அவருக்கு கதைப்பிடித்திருந்தால் அது அடுத்தக்கட்டத்திற்குச் செல்லும். கதை பிடிக்க வில்லை என்றால் மீண்டும் கதையை உருவாக்கும் பணி தொடரும்.
அது ஜனரஞ்சகமான கதையாக இருக்கும்; ஆக்சன் காட்சிகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆருக்கு தேவையான விஷயங்கள் சொல்லாமலேயே அதில் இடம்பெற்றிருக்கும்.
பூஜை தேதியோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும். அதே போல கமிட் செய்யும் நடிகர்களுக்கு ஒரே பேமண்டாக சம்பளம் கொடுப்பது சின்னப்பா தேவரின் ஸ்டைல்.
எம்.ஜி.ரை வைத்து 26 படங்கள் தயாரித்த இவர் சிவாஜியை வைத்து ஒரு படத்தை கூட தயாரிக்கவில்லை.
உடம்பு முழுக்க சந்தனம்.. நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டிருக்கும் தேவர் முருகரின் பரம பக்தர். குறிப்பாக மருதமலை முருகன் மீது அப்படியொரு அன்பு.
அந்தக்கோயிலுக்கு ஏகப்பட்ட திருப்பணிகள் செய்திருக்கிறார்.
எம்.ஜி,ஆரை தேவர் ஆண்டவர் என்றுதான் கூப்பிடுவார். பதிலுக்கு எம்.ஜி.ஆர்.. முதலாளி என்று அழைப்பார்.
இவர்கள் கூட்டணியில் உருவாகி படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘தேர்த்திருவிழா’ தேவர் படங்களில் இடம் பெறும் விலங்குகள் அவரின் தனி அடையாளமாக அமைந்தது கவனிக்கத்தக்கது.
இறுதி வரை நன்றி மறக்காத தேவர் ஒவ்வொரு படத்தில் கிடைக்கும் இலாபத்தில் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் நண்பர்களுக்கு ஒரு குறிப்பிடட்ட தொகையையும், கோயிலுக்கு ஒரு தொகையை கொடுத்து விடுவாராம். தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்த தேவர் 1978 ம் ஆண்டு இயற்கையானார்
----------------------------------------------
வாக்னர் கூலிப் படை்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவின் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.
எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான இந்த கிளர்ச்சி படை.
கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவியதுடன், சில இடங்களில் ரஷிய கொடியை நாட்டவும் செய்தது.
இந்த வாக்னர் என்ற பெயரிலான அமைப்பு, ரஷியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தி ஒரு கூலிப்படையாக இயங்கி வருகிறது.
அந்த அமைப்பு தொடக்கத்தில் ரஷிய ஆதரவு படையாக செயல்பட்டு, உக்ரைனில் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில், வாக்னர் அமைப்பினர் திடீரென ரஷியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை திரும்பியது ரஷியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
கிளர்ச்சியாளர்கள் மாஸ்கோ நகருக்குள் புகுந்து தாக்குவார்கள் என கூறப்பட்டது. உள்நாட்டு கலகம் ஏற்படும் சூழல் காணப்பட்டது.
எனினும், அந்த அமைப்பினரை கடுமையாக எச்சரிக்கும் வகையில், ரஷிய அதிபர் புதின் பேசினார்.
அதன்பின் சமரசம் ஏற்பட்டு உள்ளது.
1990-ம் ஆண்டில் இருந்து புதின் மற்றும் பிரிகோஜின் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்தவர்களாக இருந்தனர்.
அதன்பின், ரஷிய அரசிடம் இருந்து ஓட்டலுக்கான ஒப்பந்தங்களை பெரிய அளவில் பெற்று பிரிகோஜின் பெரிய செல்வந்தரானார்.
கிழக்கு உக்ரைனில் தொன்பாஸ் நகரில் 2014-ம் ஆண்டில் ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாத இயக்க செயல்பாட்டுக்கு பின்னர், பிரிகோஜின் கூலிப்படை தலைவராக மாறினார்.
உண்மையில் முறைகேடான அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான் பிரிகோஜின் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படை செயல்படும் நாடுகளில் இருந்து வைரம், தங்கம், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை கொள்ளையடிப்பதே இவர்களின் இன்னொரு தொழில் என்றும் கூறப்படுகிறது.
பிரிகோஜினின் தனிப்பட்ட சொத்து மட்டும் 2 பில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு மட்டும் ரஷிய அரசாங்கத்திடம் இருந்து சுமார் 1.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒப்பந்தங்களை வாக்னர் கூலிப்படை பெற்றுள்ளதாக விளாடிமிர் புதினே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தற்போது புதினுக்கு பயந்து நாள் ஒன்றிற்கு 50 பவுண்டுகள் கட்டணத்தில் 3 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜன்னல்கள் இல்லாத அறையில் பிரிகோஜின் தங்கியிருக்கிறார்.
மேலும் அவர் மீது தேசத்திற்கு துரோகம் விளைவித்ததாக கூறி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வாக்னர் கூலிப்படைக்கு தொடர்புடைய அல்லது நிதியுதவி அளித்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-------------------------------6