மதபோதகர் மீது தாக்குதல்
மதபோதகர் மீது தாக்குதல்!
தி.மு.க. எம்.பி. மீது வழக்குப் பதிவு !!
C.S.I.ல்என்ன நடந்தது?
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயரைத் தேர்வுசெய்வதற்கான பெயர் பட்டியல் தேர்வு 2021 செப்டம்பரில் நடைபெற்றது.
இதில் ARGST பர்னபாஸ், A. பீட்டர் தேவதாஸ், TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ARGST பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதே 2021ல் திருநெல்வேலி பெருமண்டல உறுப்பினராக தேர்வானார் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம். இதற்குப் பிறகு திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் கல்வி நிலவரக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கடுத்த ஆறு மாதம் வரை பர்னபாஸ், ஞானதிரவியம் ஆகியோர் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர்.
இதற்குப் பிறகு ரெவரண்ட்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு வைக்கப்பட்டது. இதில் சிலரைத் தேர்வு செய்யும்படி ஞானதிரவியம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடிவுகள் வெளியானபோது ஞானதிரவியம் சொன்ன ஆட்களில் சிலர் தேர்வாகவில்லை.
தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே ரெவரண்ட்கள் தேர்வானதாக பர்னபாஸ் தரப்பு கூறியது. இதற்குப் பிறகு ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன.
இதற்குப் பிறகு நடந்த கமிட்டி கூட்டங்களில் எல்லாம் இரு தரப்புக்கும் இடையில் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இந்தத் திருமண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும்போதும் இடமாற்றல்கள் செய்யும்போதும் ஞானதிரவியத்தின் பரிந்துரைப்படி நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், சொத்து அலுவலரை மாற்றும்படி கூறினார் ஞானதிரவியம். இதனையடுத்தே சொத்து அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார் ஞானதிரவியம். புதிதாக ஒரு சொத்து அலுவலரையும் நியமித்தார்.
ஆனால், இதனால் திருமண்டலத்தின் அலுவல்கள் பாதிக்கப்படுவதாகவும் சொத்து அலுவல கதவைத் திறந்துவிடும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பர்னபாஸ். ஆனால், அதனை ஞானதிரவியம் தரப்பு ஏற்கவில்லை.
இந்த நிலையில்தான் ஜூன் 26ஆம் தேதி காட்ஃப்ரே என்பவர் சொத்து அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை சிலர் விரட்டி அடித்துள்ளனர்.
இது குறித்து காட்ஃப்ரே நோபிளிடம் கேட்டபோது, "இந்தத் திருமண்டலத்தை இயங்கவிடாமல் செய்கிறார் ஞானதிரவியம். கடந்த வெள்ளிக்கிழமை மொத்த திருமண்டல அலுவலத்தையும் பூட்டிவிட்டார்.
இதனால் திங்கட்கிழமையன்று இது குறித்துக் கேட்பதற்காகப் போனேன். சண்டை ஏதும் போடவில்லை. ஏன் இப்படிச் செய்கிறீர்கள், திறந்துவிடுங்கள் என்றுதான் கேட்டேன். இதற்கு எல்லோரும் சேர்ந்துகொண்டு, துரத்தித் துரத்தி அடித்தார்கள்" என்றார்.
காட்ஃப்ரே நோபிளுக்கும் பாளையங்கோட்டை திருமண்டலத்திற்கும் தொடர்பு இல்லை எனக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது தவறான தகவல். நான் 1978ல் பாளையங்கோட்டை தூயதிருத்தவப் பேராலயத்தில் உறுப்பினராக இருந்தேன். தனியாக ஊழியம் செய்கிறேன். ." என்றார் காட்ஃப்ரே.
இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் கேட்டபோது, "நேற்றைய சம்பவத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. காட்ஃப்ரே நோபிள் ஒரு போலிச் சாமியார்.
அவர் மீது எட்டு வழக்குகள் இருக்கின்றன. அந்தத் தகவல்களையெல்லாம் தேடி எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவரது வேலையே தேவாலய சொத்துக்களில் முறைகேடுகள் செய்வதுதான்.
பின்னணியில் வேறு சிலர் இருந்து தூண்டிவிடுகிறார்கள், அவ்வளவுதான்" என்று மட்டும் தெரிவித்தார்.
விவகாரம் அடிதடியில் முடிந்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தால், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை.திருச்சபை சொத்துக்கள் தொடர்பாக நடக்கும் செயல்கள்தான் பின்னணி
அதில்C.S.I. சபையில் இல்லாமல் தனியாகசபை நடத்தும் காட்ஃப்ரே தலையீடும் அவர் சொல்படி பர்னபாஸ் செயல்படுவதும்தான விவகாரத்தை கிளப்பியுள்ளது.
-------------------------------------