நடவடிக்கைத் தேவை!
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பயணம் மேற்கொள்கிறார்.கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர் சந்திக்கிறார். இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சமூக அமைப்புகளையும் ராகுல் சந்தித்து பேசுகிறார்.
சென்னை, கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை (மொத்த விலை) ரூ. 50-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு கிலோ ரூ.80-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 8 மாதங்களில் காவல் நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை, பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடக்க 2,300 காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்வி மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் 1,77,924 பணியிடங்கள் பாதுகாப்புப் பிரிவில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தினசரி நடக்கும் ரெயில் விபத்துக்களுக்கு இதுவே காரணம் என சமூகார்வலர்கள் குற்றச்சாட்டு.
உதயநிதி ஸ்டாலின், வடிவேல் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் இன்று ரிலீஸாகிறது. பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால் தியேட்டரில் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி வெற்றி திரையரங்கில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் திரையரங்கு மேலாளரை மிரட்டியுள்ளனர்.
மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் நீடிக்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குடியிருப்புகள், சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
-------------------------------------
நடவடிக்கைத் தேவை!
ஸ்ரீரங்கத்தில நடந்ததாகக் கூறப்படும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக, சித்ரா மற்றும் மீனா ஆகிய இரு தமிழக சமூக நல அதிகாரிகளின் புகார்களின் அடிப்படையில், அக்டோபர் 2022-ல் 4 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கடந்த ஆண்டுஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் குழந்தை திருமணங்களை நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பூசாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் ரவி ஸ்ரீரங்கத்தில் அப்படி குழந்தை திருமணம் ஏதும் நடக்கவில்லை.தீட்சிதர்கள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள்.
தீட்சிதர் வீட்டு சிறுமிகளுக்கு அரசு கன்னித்தன்மை சோதனை எனக் கூறி தடை செய்யப்பட்ட இருவிரல் சோதனை நடத்தியது என தீட்சிதர்களுக்கு வக்காலத்து வாங்கி அரசுக்கு எதிராக அறிக்கை விட்டார்.
அதிகாரம் உள்ள ஆளுநர் ஒருவரே பா.ஜ.க.தலைவர்போல் பேசியது தமிழ்நாட்டில் பரபரப்பை உருவாக்கியது.
கோவிலில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதைக் காட்டும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது.இருவிரல் சோதனை நடக்கவில்லை எனவும் தெரியவந்த்தால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.பொய்த் தகவல்களைக் கூறிய ஆர்.என்.ரவியை பலரும் கண்டித்தனர்.ஆளுநர் பதவிக்கு பொருத்தமற்றவர் ,சடாதனம்,பார்ப்பணிய வெறியர் பதவி விலக வேண்டும் எனவும் கூறப்பட்டது.
ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தி கூறியதாவது: “சட்டவிரோத நிகழ்வின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை ஆளுநர் ஆதரிக்கிறார், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கத்தை தாக்குகிறார்.” என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம், குழந்தை திருமண நடந்ததாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கூறி, வழக்கை கையாண்டதற்காக அரசாங்கத்தை ரவி விமர்சித்தார்.
மேலும், அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக, சித்ரா மற்றும் மீனா ஆகிய இரு தமிழக சமூக நல அதிகாரிகளின் புகார்களின் அடிப்படையில், அக்டோபர் 2022-ல் நான்கு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் ஆவணங்களின்படி, 2021-ல் மூன்று திருமணங்களும் ஜூன் 2022-ல் ஒரு திருமணமும் நடந்தன. கோவிலில் இருந்து இரண்டு தீட்சிதர்கள் அக்டோபர் 2022-ல் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
மொத்தம் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை பதிவுகள் காட்டுகின்றன.உண்மை நிலை இவ்வாறிருக்க அரசை நடத்தும் அதிகாரமிக்க முக்கியமான ஆளுநர் பதவி வகிகும் ஆர்.என்.ரவி ஒரு இந்துத்வா தீவிரவாதத்தலைவர்போல்
குழந்தைத் திருமணம் தவறில்லை என வக்காலத்து வாங்கும் முகமாக தனக்கும் அவ்வாறுதான் நடந்தது எனக்கூறுவதும்,நடந்த குழந்தை மணங்களை நடக்கவில்லை எனவும்,நடக்காத இரு விரல் கன்னித்தன்மை சோதனையை நடந்தது எனவும் சனாதனப் பாதுகாவலராக பொய்களைக் கூறியதும்.
அதில் உண்மை வெளியாகி அவமானப்பட்டும் அசிங்கத்தைத் துடைத்தெறிந்து விட்டு அமைதியாக அடுத்த சர்ச்சையைக கிளப்பி வருவதும் நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம் தான்.
சட்டம் அனைவருக்கும் ஒன்றுதானே?