அதிகார அரிச்சுவடி.

செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளார்.செந்தில் பாலாஜி நீக்கத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி விக்கப்பட்டுள்ளது என முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அளித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 16 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது கங்போக்பி மாவட்டத்தில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். தலைநகர் இம்பாலில் பாஜக அலுவலகம் முன் கூடிய 100க்கும் மேற்பட்டோர் மீது கண்ணீர் புகை வீசப்பட்டது. இதுவரை 133 பேர் பலியாகி உள்ளனர்.

நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் வரும் ஜூலை 13ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் வரும் ஜூலை 13ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் இன்று ஓய்வு பெரும் நிலையில் புதிய தலைமைச் செயலாளர்க ஷிவ்தாஸ் மீனா பதவி ஏற்கிறார்.

சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு இன்று ஓய்வு பெரும் நிலையில் தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் இன்று பிற்பகல் பதவி ஏற்கிறார்.

ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

----------------------------------------

ஆர்.யன்.ரவி அறிந்து கொள்ள

அதிகார அரிச்சுவடி.

மாநிலத்தில் நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். 

ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார்.

ஆளுநர் பதவி ஒரு நியமன பதவி.மக்களால் தேர்ந்தெடுக்கம்படுவதில்லை.ஒன்றிய அரசு சார்பில் நியமிக்கப் படுபவர்.

 எனவே, ஆளுநர் பெயரளவிலான தலைவராக மட்டுமே செயல்படுவார். மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்திலும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.ஆனால் முதல்வர் பரிந்துரைபடியே செயல் படவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 'பிரிவு 164' மாநில அமைச்சர்களின் நியமனம் குறித்துக் குறிப்பிடுகிறது. 

அதன்படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிப்பார். 

மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் நியமிப்பார்.

அரசு அலுவல் விதியின் கீழ், முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களின் இலாகாக்களை முதலமைச்சரே மாற்ற முடியும். 

அதேபோல, குறிப்பிட்ட நபரை துறை இல்லாத அமைச்சராக தொடர வைக்கவும்,நீக்கவும் முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. 

இலாகா ஒதுக்குவதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கத் தான் முடியும், நிராகரிக்க முடியாது.

முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் 2-ஆவது முறையாக நிராகரித்தால் மாநில அரசே அரசாணை வெளியிட்டு இலாகாக்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

முதலமைச்சர் ஒரு அமைச்சரை விலகச் செய்ய சொல்லலாம்.

 சட்டப்பேரவையை கலைக்க முதலமைச்சர் எந்த நேரத்திலும் ஆளுநருக்கு பரிந்துரைக்க முடியும்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே சட்டமாகும். 

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். 

சட்டமன்ற இயங்காத நேரத்தில், முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் அவசர சட்டங்கள் இயற்ற மட்டும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

முதலமைச்சர் மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில ஆளுநரிடம் விசாரணை அமைப்புகள் அனுமதி பெறுவது அவசியம். 

ஆனால், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் எதையும் ஆளுநர் மீது அவர் பதவியில் இருக்கும் காலத்தில் யாரும் தொடர முடியாது.

-----------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?