மக்களை விட சனாதனமே முக்கியம்
ஆகமம் மற்றும் பூஜை முறைகளிலும் தேர்ச்சி பெற்ற எந்தவொரு சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
10, 11ம் வகுப்பு சிறப்பு உடனடி துணைத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன. முன்னதாக அந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது 100 கோடி ரூபாய் பத்திர பதிவு மோசடி புகார் எழுந்துள்ளது. 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கு பின் சீனாவில் மீண்டும் பெரிய அளவில் மக்கள் கூடும் அளவில் சுற்றுலா துறை மூலம்டிராகன் படகுத் திருவிழாவையொட்டி, 3 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும், தனிச்சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்ஷிதர்கள் 11 மீது 5 பிரிவுகளின் கோயில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியிலில் கல்வித்துறையில் தமிழக அரசு மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் பேசினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக்கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
---------------------------------------
மசோதாக்களை கிடப்பில் போடு!
சனாதனத்தைப் பேசு!!
முன்னாள் இ.கா.பணி அதிகாரியான ஆர்.என். ரவி தமிழ்நாட்டுக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துவருகிறார்.
வழக்கமாக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையைத்தான் சட்டப்பேரவையில் ஆளுநர்கள் படிப்பார்கள்.
ஆனால் இம்முறை அரசு தயாரித்த அறிக்கையை சட்டப்பேரவையில் முழுமையாக ரவி வாசிக்கவில்லை.
கலைஞர், அம்பேத்கர், பெரியார் ,அண்ணா போன்ற பெயர்களை தவிர்த்துவிட்டார்.
மேலும் அவராகவே சிலவற்றை சேர்த்து வாசித்தார்.
இதனை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் ரவி அவராக பேசியவை சபைக்குறிப்மில் இருந்து நீக்கப்படும் என கூறியதால் ரஙி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இப்படி ஆளுநரே வெளியேறியது
சட்டசபை வரலாறில் முதல் முறை.
இந்த நிலையில் ஆளுரைக் கண்டித்து ரவிக்கு எதிராக சென்னை முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுனருக்கு சவால் விடுக்கும் வகையில் இந்துத்வா,பா.ஜ.க, ஆதரவாகப் மொது நிகழ்வுகளில் பேசினார்.
தற்போதுவரை திமுகவினர் ஆளுனர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டில் அதிருப்தியாகவே உள்ளனர்.
தற்போது திமுக கூட்டணிக் கட்சிகள் அர்.யன்.ரவிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் ஆளுனர் ஆர்.என். ரவியிடம் 13 மசோதாக்கள் நிலுவையில் இருப்பது ஆர்டிஐ மூலமாக தெரியவந்துள்ளது.
இந்த மனுவை தி இந்து தாக்கல் செய்துள்ளது.
இந்த 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் மட்டும் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டதுஆகும்.
இதற்கிடையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை எதிர்த்தும் ரவி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன்,பேட்டரி வாகனங்களின் ஆற்றல் மூலமாக இருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை உருவாக்கிய ஜான் குட்னப் காலமானார்.
அவர் வயது தற்போது100.
தனது கல்லூரி படிப்புக்கு பிறகு இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தில் வானிலை நிபுணராக பணியாற்றினர்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியல் பட்டம் பெற்ற அவர் மாசசூட்செட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தனது பணி வாழ்க்கையை தொடங்கினார்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கனிம வேதியல் பிரிவின் தலைவராக இருந்த போது அவரது லித்தியம் - அயன் கண்டுபிடிப்பிற்கான ஆய்வை அவர் மேற்கொண்டார்.
1980களில் விரிவான ஆய்வுகளுக்கு பிறகு லித்தியம் அயான் பேட்டரி பொது வணிக பயன்பாட்டுக்கு வந்த போது வெடிக்கும் அபாயம் இருந்தது. பேட்டரியில் இருந்து ஆவியாகும் தூய லித்தியத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பாதுகாப்பான லித்தியம் அயனிகளைத் தேர்ந்தெடுத்தது.
முதல் இலகுரக, பாதுகாப்பான, நீடித்த மற்றும் ரிச்சார்ஜபிள் பேட்டரிகள் உருவாக்கம் மூலம் வணிகரீதியிலான பேட்டரிகள் 1991ஆம் ஆண்டு முதல் சந்தையில் நுழைந்தன.
இந்த பணிக்காக 2019ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை ஜான் குட்னஃப் பகிர்ந்து கொண்டார்.
அவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் 40 ஆண்டுகளாக பணியாற்றிய டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
’தான் செய்த பணி உலகில் இவ்வுளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியாது’
என்ற அவர், ’சில விஷயங்களுக்கு மட்டுமே இந்த கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும் என்று எண்ணியதாகவும்,ஆனால் இது மின்னனுவியலில் புரட்சியை செய்யும் என்பதை கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை’ என்று கடந்த 2019ஆம் ஆண்டு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------
பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் சில அறைகளை பூட்டு போட்டு பூட்டி சென்றனர்.
எனவே அந்த அறைகளை திறக்க வேண்டும் அலுவலக பணிகளை முடக்க கூடாது என்று பேராயர் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இட்டேரி பகுதியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபில் என்பவர் நேற்று காலை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்திற்கு சென்றார்.
அவர், திருமண்டல அலுவலகம் பூட்டி வைப்பதால் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறியும் எனவே உடனடியாக திருமண்டல அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
அப்போது சுமார் 200க்கும் மேற்பட்டோர் குவிந்த திமுக எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்களில் திடீரென சிலர் காட்பிரே நோபிளை சரமாரியாக அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை ஓட ஓட துரத்தி அங்கிருந்தவர்கள் ஆபாச வார்த்தையால் திட்டிக்கொண்டே தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. அங்கிருந்து தப்பித்த காட்பிரே நோபில் தனது ஆதரவாளர்கள் உடன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.
மதபோதகர் தாக்கப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனதால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி ஞானதிரவியத்திற்கு திமுக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக ஞானதிரவியத்திற்கு கட்சித் தலைமை அனுப்பி உள்ள நோட்டீஸில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் - கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் புகார்.
ஞானதிரவியத்தின் இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும் - செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.
அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------