அரசியல் அவலம் :

 அண்ணாமலை .

தமிழ்நாட்டில் அரசியல் பேசுவோர் இனி எதிர்கட்சித் தலைவர்களின் மனைவி பெயர்களை அறிந்து கொள்ள வேண்டும் எனும் கீழினும் கீழான அளவுகோலை அண்ணாமலை உருவாக்கி உள்ளார். 

நமது முதலமைச்சரின் மனைவி பெயரை மீண்டும் மீண்டும் விவாதத்துக்குத் தொடர்பே இல்லாத இடத்தில் பேச அந்த வாய் கூசி இருக்க வேண்டும். மானமுள்ள மனிதன் எனில் சொன்ன பிறகாவது வருத்தம் தெரிவித்து இருப்பார். 

அண்மையில் மேடையில் ஆபாசமாக பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியாவது தான் பிழைப்புக்காகதான் அப்படிப் பேசியதாக ஒரு காரணத்தை சொல்ல முடியும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தனது ஆழ்மனது வக்கிரத்தைத் தவிர வேறென்ன காரணத்தை சொல்ல முடியும்? 

இத்தனைக்கும் இவர் அப்படிக் கோபப்படும் அளவுக்கு அது எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு கூட அல்ல! ஒரு நிருபர் கேட்ட அபத்தமான கான்ஸ்பிரசி தியரி கேள்வி. எந்த ஆதாரமும் இன்றி அடித்து விடும் வழக்கமான ஒன்றுதான். அதைக் கடந்து போயிருக்கலாம்!  அந்த நிருபரை ஒரு விரோதி போல மடக்கி மடக்கி ஆதாரம் கேட்டபோது ஏன் அவ்வளவு பதட்டம் வெளிப்பட்டது?

ஆதாரமில்லாமல் ஒரு நிருபர் கேள்வி கேட்டதற்கே இத்தனைக் கோபம் வருகிறதே! 

முதலமைச்சர் துபாய் சென்றபோது விமானத்தில் தன்னுடன் 5000 கோடியை எடுத்துச் சென்றதாக அறிக்கை விட்டபோது அண்ணாமலை ஆதாரம் தந்தாரா? 

நிருபர் கேள்வி கேட்டால் அந்த சோர்ஸை சொல்லித்தான் ஆக வேண்டும் எனில், ஒரு அமைச்சரின் போலி ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை தனது சோர்ஸை சொல்லியிருக்க வேண்டாமா? 

அண்ணாமலை அரசியல் செய்யும் விதம் மீது வெளிவரும் குற்றச்சாட்டுகள் கடுமையானவை! தனது சொந்தக் கட்சித் தலைவர்கள் மீதே ஹனி டிராப், ஆடியோ, வீடியோ பதிவுகள், ப்ளாக்மெயில் என கேட்கவே பதைபதைக்க வைப்பவைகள். அவைகளை பகிரங்கமாக வெளியே சொன்னவர்கள் மீது இதுவரை ஒரு புகார் கூட அவர் தந்ததில்லை. அவைகளுக்கு மறுப்பும் சொன்னதில்லை. அவர்கள் மீது கோபப்பட்டதுமில்லை. 

ஆனால், சாதாரணமான நிருபர் கேள்வி கேட்டதற்கு மட்டும் அத்தனை இளக்காரமான எதிர்வினைகள். 

தனக்கு மட்டும் அத்தனை இழிசெயல்களில் இருந்தும், அவலமான அரசியல் பேச்சுகளில் இருந்தும் பாதுகாப்புக் கவசம் உள்ளது என அண்ணாமலை நம்பிக் கொண்டிருக்கிறார். 

முதலமைச்சரின் பெருந்தன்மையின் அளவு வரையில்தான் திமுகவினரின் பொறுமையின் எல்லை என்பதை அவரைச் சார்ந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தனைக் கேவலமான பேச்சுகளையும் பேசிவிட்டு, அதை அறச்சீற்றம் எனும் போது, அறம் எனும் அந்த அற்புதமானச் சொல்லும் கேவலப்பட்டுப் போகிறது.

சமூகவலைதளங்களில் கீழ்த்தரமாகப் பேசும் மிகச் சாதாரணமான மனிதர்களை விட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கீழ்த்தரமாக பேசிக் கொண்டு திரிகிறார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியமாக கூட்டணியில் இருக்கும் அதிமுக தலைவர்கள் அண்ணாமலையின் இந்தப் போக்கை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். 

தவறினால், அவர்களையும் ஒருநாள் இந்த நச்சுப் பாம்பு கொத்தும்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?