புதியவர்கள்

 தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு,டிஜிபி சைலேந்திர பாபு ஆகிய இருவரும் 30 ம் தேதி ஜூன்(இம்மாத்த்)துடன் ஓய்வு பெறுகிறார்கள்.

எனவே புதிதாக இப்பதவிகளில் சிவ்தாஸ் மீனா,சங்கர் ஜிலால் ஆகிய இருவர் நியமிக்கப் படலாம் என தலைமைச் செயலக வளாகத்தில்  பேச்சு உலா வருகிறது.

இந்த இருமுக்கியப் பதவிகளில் தமிழர்கள் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிதாக பதவி வகிக்க இருப்பவர்கள் இருவருமே மற்ற மாநிலங்களைச்சேர்ந்தவர்களாவே உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். 

அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் இந்த மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து புதிய தலைமைச் செயலர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்துஒன்றிய அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா இருப்பார். 

சிவ்தாஸ் மீனா

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 5.10.1964 அன்று பிறந்தார். என்ஜினியரிங் பட்டம் பெற்றவரான சிவ்தாஸ் மீனாவிற்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். ஜப்பான் மொழியையும் அவர் கற்றுள்ளார்.

1989ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார்.

 காஞ்சிபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார்.

தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக அரசு நியமித்துள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அரசு உத்தரவு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

------------------------------------------------------

புதிய டிஜிபி

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இந்த மாதம் 28ம் தேதியோடு முடிகிறது. 

இதையடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், பி.கே.ரவி, ஏ.கே.விஸ்வநாதன், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர் . இவர்களின் லிஸ்டை மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது.

அங்கே நடத்தப்பட்ட ஆலோசனையில் 3 பேரின் பெயர்கள் தேர்வாகி மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவாலை டிஜிபியாக நியமனம் செய்யும் என்று கூறப்படுகிறது. 

சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சங்கர் ஜிவால்.

1990 பேட்ச் அதிகாரியான ஜிவால், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்தவர். அவர் சேலம் மற்றும் மதுரையில் காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி காவல் ஆணையராகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநராகவும் இதற்கு முன் இருந்துள்ளார். 

தற்போது சென்னை மாநகர கமிஷனராக இருக்கிறார்.

2008ல் ஐ.ஜி., உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி., ஆக உயர்த்தப்பட்டார். 2011ல், ஆறு ஆண்டுகள் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை தாங்கினார்.

 ஜிவாலுக்கு 2007ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கமும், 2019ல் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கமும் வழங்கப்பட்டது.

உளவுத்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட இவர் இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் , இந்தியில் நல்ல புலமை கொண்டவர். அதேபோல் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியும் தெரிந்தவர். 

கடந்த அதிமுக ஆட்சியில் வேண்டுமென்றே அதிகமாக ஓரம்கட்டப்ப சங்கர் ஜிவால் திமுக ஆட்சியில் மீண்டும் முன்னணி காட்சிக்கு  வந்தார். அதன்பின்தான் இவர் சென்னை மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

 தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக பணிகளில் பல ஆர்எஸ்எஸ் ஆட்கள், பாஜக ஆட்களை பாஜக ஒன்றிய அரசு தனது உள்துறை மூலம் உள்ளே நுழைந்துவிட்டனர். 

இவர்கள்தான் தற்போது இருக்கும் ஆட்சியை பற்றிய நிர்வாகத் திட்டமிடல் ரகசியங்களை பா.ஜ.க.,விற்கு ,வெளியே சொல்லி வருகிறார்கள். 

பல முக்கியமான விபரங்கள் வெளியே கசிவது இவர்கள் மூலம்தான் என்று கூறப்படுகிறது.இதனால் நிர்வாக்க் குளறுபடிகள் உண்டாகுகிறது.

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் சித்தராமையா இது போன்ற நிர்வாகிகளை அடையாளம் கண்டு தூக்கும் பணியில் இறங்கி உள்ளார். 

ஆனால் ஆட்சிக்கு வந்தது இரண்டு வருடம் ஆகியும்  நாகரீக அரசியல் என்க் கூறிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இது நடவடிக்கைகளை எடுக்காத நிலையில்.. புதிய டிஜிபி மூலம் போலீஸ் துறையில் , உள்துறையில் இருக்கும் இது போன்ற வலதுசாரி,இந்துத்வா சார்பு அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?