புதன், 4 ஜூலை, 2018

ஆளுநரின் அனுமதி தேவையில்லை

தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யூனியன் பிரதேசமான தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருகிறது. 
இந்நிலையில் டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது? என விளக்கக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி சந்திரசுட் அவருடைய தீர்ப்பில் “ மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்திற்கும் ஆளுநரின் அனுமதி தேவையில்லை என்பதை ஆளுநர் பைஜால் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாநில அரசே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், தில்லியில் துணைநிலை ஆளுநருக்குத் தான் அதிக அதிகாரம் என தீர்ப்பளித்தது. 
அப்போது மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரம் வேறு, துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் வேறு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஐ.சந்திரசூட் மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு  தீர்ப்பளித்தனர். 
அவர்கள் வழங்க இருக்கும் தீர்ப்பு தில்லிக்கு மட்டுமல்லாது யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் பொருந்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்லையில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில் ‘‘அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும். 
மத்திய – மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

காவல்துறை, நிலம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தவிர மற்ற துறைகளில் முழுமையாக முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் பொறுப்பு உண்டு.

நீதிமன்ற முந்தைய தீர்ப்புகளின்படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது. எனினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். 
துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையுடன் தான் செயல்பட முடியும்’’ என நீதிபதிகள் கூறினார்.

இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனநாயகத்திற்கும் தில்லி மக்களுக்கும்  கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மருதோன்றி

மருதோன்றி இலையில்  வியக்கத்தக்க மருத்துவ நன்மைகள்.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின.
நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.

நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.


நீங்க பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.

மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.

மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு.
===================================================================================
ன்று,
ஜூலை-04.
 • பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
 • நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)
 • அமெரிக்க விடுதலை தினம்(1776)
 •  விவேகானந்தர் இறந்த தினம்(1902)
====================================================================================

6 ஆண்டுகளுப்பின்ன்னர் சென்னையில் என்கவுண்டர்,

சென்னை ராயப் பேட்டையில் குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருந்தவர்களை தட்டிக் கேட்ட போலீஸ்காரர் ராஜவேலுவை 16 இடங்களில் கத்திய்ல் குத்திவிட்டு தப்பிய ஓடிய ரௌடி ஆனந்தன் என்பவரை 24 மணி நேரத்தில் தேடிப்பிடித்து சிட்டி போலீஸ் போட்டுத் தள்ளியது.

இந்த என்கவுண்ட்டர் எப்படி நடந்தது என்பது குறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராஜவேலு நேற்று முன்தினம் நள்ளிரவில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் கட்டுப் பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் அனுப்பப்பட்டது.அதில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப்பகுதியில் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கலாட்டா செய்வதாகவும், அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜவேலு தனியாக மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.
அங்கு மது அருந்தி ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தார்.

தனியாக வந்த அவரை ரகளையில் ஈடுபட்டவர்கள் திடீரென்று தாக்கினார்கள்.

அவர்கள் கத்தியால் ராஜவேலுவின் தலையில் சரமாரியாக குத்தினார்கள். கற்களாலும் தாக்கினார்கள். ராஜவேலு உயிர்பிழைக்க அங்கிருந்து ரத்தம் சொட்ட தப்பி ஓடினார்.

அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி ராஜவேலு தப்பிச்சென்றார்.


பின்னர் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அவருக்கு 16 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்தது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

போலீசார் விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தி போலீஸ்காரர் ராஜவேலுவை கத்தியால் குத்திய 6 பேரை கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் பி.எம். தர்கா பகுதியை சேர்ந்த சிறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் அரவிந்தன், ஜிந்தா என்கிற உதயநிதி, அஜித்குமார், வேல்முருகன், சீனு, மகேஷ் என தெரிந்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். இவர்கனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவர்களை போலீசார் அழைத்து வரும்போது, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரவுடி ஆனந்தன் அவருடன் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்தார்.

அப்போது ரவுடி ஆனந்தனை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆனந்தன் மார்பில் ஒரு குண்டு பாய்ந்து பலியானார். இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் செய்தியாள்களிடம் பேசினார்.

போலீஸ்காரர் ராஜவேலு மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் அவர் வைத்திருந்த வாக்கிடாக்கி கருவியை பறித்துச் சென்றுவிட்டனர். அவர்களில் 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

தப்ப் ஓடிய ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை தேடிவந்தோம். அவர்கள் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இரவு 8 மணியளவில் ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரும் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.ரவுடி ஆனந்தனிடம், ‘ராஜவேலுவிடம் பறித்த வாக்கிடாக்கியை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?’, என்று விசாரணை நடத்தப்பட்டது. தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே புதர் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக ஆனந்தன் கூறினார்.

இதனால் ஆனந்தனை மட்டும் ஜீப்பில் ஏற்றி தரமணி பகுதிக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

தரமணி பகுதியில் வாக்கிடாக்கியை தேடி கண்டெடுத்தனர். வாக்கிடாக்கியோடு அரிவாள் ஒன்றும் இருந்தது. வாக்கிடாக்கியை ரவுடி ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் எடுத்து கொடுத்துள்ளார்.

அப்போது அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது உதவி கமிஷனர் ரவுடி ஆனந்தனை எச்சரித்தார். உதவி கமிஷனரையும் ரவுடி ஆனந்தன் தாக்க முற்பட்டு உள்ளார்.

இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆனந்தன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் குண்டு பாய்ந்து ஆனந்தன் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

 இந்த ரவுடி ஆனந்தன் மீது 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆனந்தனுக்கு ரஷீதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு,
சென்னை பெருங்குடியில் 2012-ஆம்  ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி, பாங்க் ஆப் பரோடா கிளையில் பட்டப் பகலில் 19 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. 
அதையடுத்து பிப்ரவரி 20-ஆம் தேதி கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் 14 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த இரண்டு வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்தவர்கள் என்பதும் அவர்கள், வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலணியில் குடியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 
ஓரு வீட்டில் இருந்த அவர்களை போலீஸார், பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு சுற்றி வளைத்தனர். போலீஸாரை அந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு போலீஸார் அவர்களை நோக்கி சுட்டனர். இந்த என்கவுண்டரில் 5 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 
அவர்கள், பீகாரைச் சேர்ந்த சந்திரிகா ராய், ஹரிஷ் குமார், வினய் பிரசாத், வினோத் குமார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த அபய் குமார். இந்த என்கவுன்டர்  அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 
தற்போது  6 ஆண்டுகள் கழித்து சென்னையில் நேற்று இரவு நடந்த என்கவுன்டரில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
======================================================================================

செவ்வாய், 3 ஜூலை, 2018

கடவுளைக் காண வழி?

வெறும் 35 லட்சத்தில் ஒரு காணொளி.
சமீபத்தில் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்தது ஃபிட்னஸ் சேலஞ்ச். 
சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைத்துப் பிரபலங்களும் உடற்பயிற்சி வீடியோ மூலம் ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச் செய்து வந்தனர். 

தொடர்ச்சியாக இந்தச் சவால்கள் பிரபலமடைந்து வந்த நேரத்தில் இந்தியன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வீடியோ மூலம் பிரதமர் மோடிக்குச் சவால் விடுத்தார்.

விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி, சிறிது காலம் தாமதம் ஆனாலும் ஃபுல் குவாலிட்டியுடன் ஆன ஒரு வீடியோவை வெளியிட்டார். 
இந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் இதற்குப் பின்னால் மறைந்திருக்கும் பணச் செலவின் ரகசியம் என்ன என்று தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ஒரு நிமிட ஃபிட்னஸ் வீடியோவிற்காக சுமார் 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது. இதற்காக மூன்று நாள் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு நாட்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக பாலிவுட்டில் புகைப்பட கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார். 
எனவே ஒரு நாள் மட்டுமே 12 லட்சம் செலவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே ஒரு வீடியோ அதுவும் பொழுதுபோக்கு வீடியோவிற்காக 35 லட்சம் செலவு செய்த மோடி முன்பு ஒரு சட்டைக்கு 10 லட்சம் செலவிட்டவர்தான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுளைக் காண வழி?
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1ம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும் ஒரே ஒரு முதிய பெண் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.
 

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தற்கொலை செய்து கொண்ட அனைவரும் ஒரே விதமான ஆடையை அணிந்து கொண்டது மட்டுமின்றி அவர்கள் அனைவரின் கை, கண், வாய் ஆகியவை கட்டப்பட்டும் இருந்தது.

இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. 

ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழைகள் அல்ல இதற்கு பின்னால் யாரேனும் இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசாரிடம் அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
விசாரணையில், அந்த குடும்பத்திற்கும், காடா பாபா என்கிற மந்திரவாதிக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அந்த குடும்பத்தை அடிக்கடி ஆலமரத்தின் அருகில் அழைத்து சென்று அவர் பூஜை செய்துள்ளார். 
கடவுள் என்பவர் ஆலமரம் போல் நாம் விழுதுகள் போல் இருக்க வேண்டும் எனவும் கூறிவந்துள்ளார்.

 
எனவே, அவர்களை மூளைச்சலைவை செய்து அந்த சாமியார்தான் தற்கொலைக்கு தூண்டியிருப்பார் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியிலும், ஆலமரத்தை வழிபடுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, விழுதுகள் போல வீட்டில் அனைவரின் உடலும் தொங்கி கொண்டிருந்ததையும் ஒப்பிட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக  கருதப்படும் மந்திரவாதி காடா பாபா தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர்.
=======================================================================================
ன்று,
ஜூலை -03.
 • க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
 • அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)
 • பெலரஸ் விடுதலை தினம்(1944)
=======================================================================================

வாய் சொல் வீரர்கள்.
கருப்பு பணத்தை மீட்பேன் என்பது 2014 ல் மோடியின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக பார்க்கப்பட்டது, அதற்காக சில கண்துடைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதை போல நாடகத்தை அரங்கேற்றிய வேளையில், 2017 ன் இந்த புள்ளி விவரம் சந்தி சிரிக்கிறது.

இதற்கு முன் 2004 ல் 56 % அதிகமானது, அதற்கு பின் தற்போது 50 %.
2004 மற்றும்  2017 என இரண்டுமே பாரதிய ஜனதா  ஆட்சிக் காலம்  என்பது குறிப்பிடத்தக்கது .
அதைவிடக் கேவலம் காங்கிரஸ் ஆடசியின் முடிவில் சுவிஸ் கருப்புப்பணத்தை எடுத்து ஆளுக்கு 15 லட்சம் தருவதாக சொன்ன மோடி கும்பலின் நிதி அமைச்சர் அருணஜெட்லீ இன்று "சுவிஸ் வங்கிகளில் இருப்பவை எல்லாம் கறுப்புப்பணம் இல்லை.
இந்திய தொழில் முனைவோரின் முதலீட்டுப்பணம்" என பொருளாதாரத் தத்துவத்தை,கண்டுபிடிப்பை கூறியுள்ளார்.
வாய்தா வக்கீலை நிதியமைச்சராக்கினால் நாடு விளங்கிடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் போராடினால் ஆட்சியாளர்களை விட இந்த ஏவல் படைக்குத்தான் கோபம் அதிகம் வருகிறது.
இவர்கள்,இவர்கள் குடும்ப  நலனுக்கும் சேர்த்துதானே போராடுகிறார்கள் என்ற உணர்வு ஏன் இல்லை.

திங்கள், 2 ஜூலை, 2018

உடல் நலம்.

வெளி உணவுகளால் ஏற்படும்,'புட் பாய்சன்' மற்றும் வயிற்று பிரச்னைகளில் இருந்து, சீரகம் விடுவிக்கும். அதிலும், உடனடி நிவாரணம் கிடைக்க, ஒரு டம்ளர் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும், இரு வேளை குடிக்க வேண்டும்.
தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. 


இது, அஜீரண பிரச்னைக்கு தீர்வளிக்கும். அதற்கு, தினமும் பலமுறை, ஒரு டீஸ்பூன் தேனை உட்கொண்டு வாருங்கள்; பிரச்னையை தவிருங்கள்.

 பெரும்பாலும் அரிசியும், கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. வெளியிடங்களில் அரிசி உணவு சாப்பிடுகிறீர் எனில், அத்துடன் கீரை, காய்கறிகளை நன்கு பிசைந்துமென்று சாப்பிட வேண்டும். 

சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை, கீரையின் நார்கள் மெதுவாக்கிவிடுகிறது. சர்க்கரை நோயாளிகள், சாப்பிட வேண்டிய மற்றும் வேண்டாத உணவுகள் எவை?
தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். 

குறிப்பாக, உருளையும், பீட்ரூட்டும் அறவே தவிர்க்க வேண்டும். இனிப்பு குறைவாகவும், துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிடுவது அவசியம். மாம்பழம், சப்போட்டா, வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரையின்படி உண்பது நல்லது.

தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்பு சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது. காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்ந்த குடிநீரை குடிக்கலாம். 

வெட்டி வேர் போட்ட பானை நீர், சீரகத்தண்ணீர் தினசரி பயன்பாட்டுக்கு நல்லது.

இரவு தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப்பயறு கூட்டுடன் பயன்படுத்தலாம். காலை, பஜ்ரா ரொட்டி எனப்படும் கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என, அளவாக சாப்பிடலாம். 

மேலும், நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறு தானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை.


நம் உணவு பலகாரங்களில் உளுத்தம்பருப்பு முக்கிய பயன் உள்ள தானியமாக பயன்படுகிறது. குறிப்பாக, இட்லி, வடை, இன்னும் பல பல பதார்த்தங்களுக்கு கலவையாக பயன்படுகிறது. 

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கருப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. 

ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம்.

உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.
கருப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. 


வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு. அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும். 
இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனல் காலத்தில் அதிகமாக பயன்படுத்தலாம்.

 பித்தத்தைத் தணிக்க உதவும். முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது. நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

உடலை தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.

 செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்; கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்து வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                     ஐ.ஜி.பொன்மணிக்கவேல் எதற்காக ஒதுக்கப்படுகிறார் என்பதற்கு காரணம்.
               இது போன்று எச்ச.ராஜா வகையறாக்களை கையும் களவுமாக காட்டியதற்காகத்தான்.
===================================================================================
ன்று,
ஜூலை-02.

 • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
 • முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)
 • பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)
 • ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)
====================================================================================

"கடவுளே, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்த கொடுக்குற... 
உனக்கு கண் இல்லையா...?"
"மூதேவி, அது டூப்ளிகேட் சிலை ...
ஒரிஜினல் செலை பாரின்ல இருக்கு...
அங்க போய் அழுவு..போ..!"


ஞாயிறு, 1 ஜூலை, 2018

தமிழ் மொழி..தமிழர்கள்.
தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான மொழி மட்டுமில்லை தமிழ் வரலாற்றை படித்த ஒவ்வொருவரையும் அதிகம் பிடிக்க வைக்கும் மொழியும் கூட. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி எதுவென்றால் அது தமிழ்நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 
ஆனால் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகம் எங்கு வாழ்கின்றனர்? 
 உங்களுக்கு சரியான விடை தெரியுமா?
நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்னு பறந்துகிட்டு இருக்காங்க.. படிப்பாகவும், வேலைக்காவும் , குடும்ப சூழ்நிலை காரணமாக எவ்வளவோ தமிழர்கள் சொந்த ஊரைவிட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பொழப்பு நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற மாநிலம் குறித்து புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. 
கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த புள்ளி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
புள்ளி பட்டியல்  பலரை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . 
ஆம் முதல் இடத்தில் இருப்பது கர்நாடகா மாநிலம் தான்.நாம் தண்ணீருக்காக யாருடன் போராடிக்கொண்டிருக்கிறோமோ அதே கர்நாடக மாநிலம்தான்.அங்கும் பெரும்பாலோர் பெங்களூரு பகுதியிலேயே உள்ளனர்.
புள்ளி கணக்கிடுப்படி கர்நாடகாவில் அதிகபட்சமாக 21,10,128 தமிழர்கள் வசிக்கின்றனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் நடந்து வரும் காவிரி பிரச்சனை நாடு அறிந்த ஒன்று. 

ஆனால் அதே கர்நாடகாவில் தான் அதிகமான தமிழர்களும் வாழ்ந்து வருவது தான் பலரையும் வியக்க வைத்துள்ள செய்தி. 

இந்த புள்ளி பட்டியலில் தமிழ்நாட்டை தாண்டி வேறு எந்த மாநிலங்களில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று கணக்கீடும் வெளியாகியுள்ளது. 
அதன் விபரம்.
1. கேரளா – 5,02,516
2. மகாராஷ்டிரா -5,09,887
3. ஆந்திரா – 7,13,848
4. புதுச்சேரி- 11,00,976
5. டெல்லி – 82,719.
இந்த புள்ளிவிபரத்தை வைத்துக்கொண்டு வாட்டாள் நாகராஜ் புதிய போராட்டம் துவக்கிவிடக்கூடாது.
===================================================================================
ன்று,
ஜூன்-30.
 • இந்திய மருத்துவர்கள் தினம்
 • இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவு (1947)
 • சோமாலியா விடுதலை தினம்(1960)
 • ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)
 • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)
=====================================================================================
 வைட்டமின், 'டி'  குறைபாடாக என்ன காரணம்?

நீரிழிவு, உடல் பருமனை தொடர்ந்து, வைட்டமின், 'டி' குறைபாடு, இன்று பொதுவான பிரச்னையாகி விட்டது; 10ல் ஐந்து பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

சூரிய ஒளியிலிருந்து, நம் தோல் தன்னிச்சையாக உற்பத்தி செய்து கொள்ளும், மிக அவசியமான நுண்ணுாட்டச் சத்து. உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துக்கள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், வைட்டமின், 'டி' அவசியம்.

வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் நம்மை போன்றவர்களுக்கு, இக்குறைபாடு வரவே கூடாது; ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால், இது பொதுவாகி விட்டது. வெயில் மேலே படுவதே இல்லை. அலுவலகம், பள்ளி செல்பவர்கள் கை, கால், முகம் என்று சூரிய ஒளி படும் பகுதிகளை, துணியால் மறைத்து விடுகின்றனர்.

தோலில் உள்ள வியர்வை துவாரங்கள் மூடாமல் இருந்தால், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் உதவியுடன், மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, தேவையான எதிர்ப்பு சக்தியை, உடம்பு தானே உருவாக்கிக் கொள்ளும். பாதுகாப்புக் கவசம் என்ற பெயரில், சன் ஸ்கிரீன் லோஷன் உட்பட, நாம் பின்பற்றும் வழிகள் அனைத்தும், இதை தடுத்து விடுகிறது.

வைட்டமின், 'டி' ஏன் அவசியம்?

கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை, தேவையான அளவு, நம் உடம்பு கிரகித்துக் கொள்ள, வைட்டமின், 'டி' போதுமான அளவு இருக்க வேண்டும். 

1900களில், ரிக்கெட்ஸ் நோய் பெருமளவு பாதித்தது.
இந்த நோய் பாதிப்பில், எலும்புகள் வலுவிழந்து, மெலிந்து, அடர்த்தி குறைந்து, எளிதில் உடைந்து விடும் அபாயமும், முட்டிகள் இரண்டும் வெளிப்பக்கம் வளைந்து, 'டைமண்ட்' வடிவிலும் காணப்படும். 
குழந்தைகளை பெருமளவு பாதித்த இந்த நோய்க்கு காரணம், கால்ஷியம் பற்றாக்குறை எனக் கண்டறிந்து, கால்ஷியம் மாத்திரைகள் உட்பட, சில சிகிச்சை முறைகளை அப்போது கொடுத்தனர். ஆனால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து, போதுமான அளவு, கால்ஷியம் எலும்புகளில் சேர்ந்து, எலும்புகள், பற்கள் வலிமையாக இருக்க, இது மிகவும் அவசியம். ஆனால், வைட்டமின், 'டி' குறைபாடு இருந்ததால் தான், ரிக்கெட்ஸ் பிரச்னை என்பது அப்போது தெரியவில்லை.

குழந்தைகளுக்கு, 8 வயதில் பால் பற்கள் விழுந்து, அடுத்த, 10 நாட்களுக்குள் வளர ஆரம்பித்து விடும். தற்போது, 6 வயதிலேயே பற்கள் விழுந்து விடுகின்றன; புதிய பற்கள் முளைப்பதற்கு பல மாதங்கள் ஆகிறது. இதற்கும் காரணம் வைட்டமின், 'டி' குறைபாடே!

'மெலனின்' என்ற நிறமி அதிகம் இருந்தால், தோலின் நிறம், அடர்த்தியாக (கறுப்பு, பிரவுன் போன்ற) இருக்கும். மெலனின் குறைவாக இருப்பவர்களுக்கு (மஞ்சள், பிங்க்) தோலின் நிறம் வெளிறி இருக்கும். மெலனின் அதிகம் இருந்தால், வைட்டமின், 'டி' உற்பத்தி மெதுவாக நடக்கும். 

நீரிழிவு, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பவர்களில், 10ல், ஐந்து பேருக்கு இக்குறைபாடு உள்ளது. 
இதனால், 30 வயதிலேயே எலும்புகள் பலவீனமடைவது அதிகரித்து வருகிறது. குடல், மார்பக, பிராஸ்டேட் கேன்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இந்த குறைபாடு இருந்தால், 'டைப் 1, 2' நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். சூரிய ஒளியில் இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் உள்ளது; ஆனால், கட்டுக்குள் இருக்கும் என்பது தான் உண்மை. தோலின் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்யும்.


மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், வைட்டமின், 'டி' மிகவும் அவசியம்; முக்கியம். இக்குறைபாட்டால், பார்கின்சன்ஸ், அல்சைமர், மன அழுத்தம், மனப் பதற்றம் உட்பட, பல பிரச்னைகள் வரும்.
வைட்டமின், 'டி' இருந்தால், செரடோனின் ஹார்மோன் நன்றாக சுரக்கும்; நேர்மறையான எண்ணங்கள் வரும்; இரவில் ஆழ்ந்த துாக்கம் இருக்கும்; துாக்கத்தில் மட்டுமே சுரக்கும், மெலடோனின் ஹார்மோன், உடலின் உள் செயல்பாடுகளின் புதுப்பித்தலுக்கு அவசியம்.
அடிக்கடி சளி, இருமல் போன்ற மேல் சுவாச பாதையில் ஏற்படும் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்கள், கண்டிப்பாக, வைட்டமின், 'டி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
காசநோய், ருமடாய்டு ஆர்த்தரட்டீஸ் இருப்பவர்களுக்கு இக்குறைபாடு இருந்தால், ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரியம், முழுமையாக உடம்பிற்குள் செல்லாது. இக்குறைபாட்டை சரி செய்யும் போது, விரைவாக குணம் பெறுவதைப் பார்க்கிறோம்.

இக்குறைபாட்டால் அறிகுறிகள் 
அலுப்பு, உடல், தலைவலி, வறட்சி, எலும்பு, மூட்டுகளில் வலி, படிக்கட்டு ஏறும் போது, உட்கார்ந்து எழும் போது, நீண்ட துாரம் நடந்தால் அலுப்பு.

இந்த சத்து அதிகம் உள்ள உணவுகள் 
மீன் வகைகள், மீன் எண்ணெய், பசும் பால், முட்டை, காளான், ஆரஞ்சு பழம், பூசணி விதை, ஆளி விதை, சிறு தானியங்கள், சூரிய காந்தி விதை போன்றவற்றில், வைட்டமின், 'டி' உள்ளது. 

காலையில், 10:00 மணி வரை அல்லது மாலையில், 3:00 மணிக்கு மேல் சூரிய ஒளியில் இருப்பது அவசியம். கறுப்பு, பிரவுன் போன்ற அடர் நிற தோல் உடையவர்கள், குறைந்தது, 30 நிமிடங்களும், வெளிர் நிற தோல் இருப்பவர்கள், 15 நிமிடங்களும் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி உடலில் போதுமான அளவு படுவது ஒன்று தான், பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்.
'குறிப்பிட்ட நேரம் தினமும் வெயிலில் இருக்கிறேன்; ஆனாலும், இந்தக் குறைபாடு உள்ளது' என்று சொல்பவர்களுக்கு துாக்கமின்மை, மன அழுத்தம் இருக்கும். இதனால், வைட்டமின், 'டி' போதுமான உற்பத்தி இல்லாமல் போகலாம்.

                                                                                                                                                                          
டாக்டர் ஒய்.தீபா(தினமலரில்)

                BJP னா சும்மாவா...?
                   எங்க கட்சி மீட்டிங் க்கு ஒரு நாயும் வரலேன்னு எவனும் சொல்ல முடியாது.