மருதோன்றி
மருதோன்றி இலையில் வியக்கத்தக்க மருத்துவ நன்மைகள்.
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.
கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின.
நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
நீங்க பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.
மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.
மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு.
இன்று,
ஜூலை-04.
- பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
- நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)
- அமெரிக்க விடுதலை தினம்(1776)
- விவேகானந்தர் இறந்த தினம்(1902)
====================================================================================
6 ஆண்டுகளுப்பின்ன்னர் சென்னையில் என்கவுண்டர்,இந்த என்கவுண்ட்டர் எப்படி நடந்தது என்பது குறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராஜவேலு நேற்று முன்தினம் நள்ளிரவில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் கட்டுப் பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் அனுப்பப்பட்டது.
அதில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப்பகுதியில் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கலாட்டா செய்வதாகவும், அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜவேலு தனியாக மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.
அங்கு மது அருந்தி ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தார்.
தனியாக வந்த அவரை ரகளையில் ஈடுபட்டவர்கள் திடீரென்று தாக்கினார்கள்.
அவர்கள் கத்தியால் ராஜவேலுவின் தலையில் சரமாரியாக குத்தினார்கள். கற்களாலும் தாக்கினார்கள். ராஜவேலு உயிர்பிழைக்க அங்கிருந்து ரத்தம் சொட்ட தப்பி ஓடினார்.
அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி ராஜவேலு தப்பிச்சென்றார்.
பின்னர் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவருக்கு 16 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்தது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
போலீசார் விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தி போலீஸ்காரர் ராஜவேலுவை கத்தியால் குத்திய 6 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் பி.எம். தர்கா பகுதியை சேர்ந்த சிறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் அரவிந்தன், ஜிந்தா என்கிற உதயநிதி, அஜித்குமார், வேல்முருகன், சீனு, மகேஷ் என தெரிந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். இவர்கனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்களை போலீசார் அழைத்து வரும்போது, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரவுடி ஆனந்தன் அவருடன் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்தார்.
அப்போது ரவுடி ஆனந்தனை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆனந்தன் மார்பில் ஒரு குண்டு பாய்ந்து பலியானார். இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் செய்தியாள்களிடம் பேசினார்.
போலீஸ்காரர் ராஜவேலு மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் அவர் வைத்திருந்த வாக்கிடாக்கி கருவியை பறித்துச் சென்றுவிட்டனர். அவர்களில் 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
தப்ப் ஓடிய ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை தேடிவந்தோம். அவர்கள் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இரவு 8 மணியளவில் ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரும் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ரவுடி ஆனந்தனிடம், ‘ராஜவேலுவிடம் பறித்த வாக்கிடாக்கியை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?’, என்று விசாரணை நடத்தப்பட்டது. தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே புதர் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக ஆனந்தன் கூறினார்.
இதனால் ஆனந்தனை மட்டும் ஜீப்பில் ஏற்றி தரமணி பகுதிக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
தரமணி பகுதியில் வாக்கிடாக்கியை தேடி கண்டெடுத்தனர். வாக்கிடாக்கியோடு அரிவாள் ஒன்றும் இருந்தது. வாக்கிடாக்கியை ரவுடி ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் எடுத்து கொடுத்துள்ளார்.
அப்போது அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது உதவி கமிஷனர் ரவுடி ஆனந்தனை எச்சரித்தார். உதவி கமிஷனரையும் ரவுடி ஆனந்தன் தாக்க முற்பட்டு உள்ளார்.
இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆனந்தன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் குண்டு பாய்ந்து ஆனந்தன் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இந்த ரவுடி ஆனந்தன் மீது 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆனந்தனுக்கு ரஷீதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு,
சென்னை பெருங்குடியில் 2012-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி, பாங்க் ஆப் பரோடா கிளையில் பட்டப் பகலில் 19 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.
அதையடுத்து பிப்ரவரி 20-ஆம் தேதி கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் 14 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த இரண்டு வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்தவர்கள் என்பதும் அவர்கள், வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலணியில் குடியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
ஓரு வீட்டில் இருந்த அவர்களை போலீஸார், பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு சுற்றி வளைத்தனர். போலீஸாரை அந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு போலீஸார் அவர்களை நோக்கி சுட்டனர். இந்த என்கவுண்டரில் 5 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்கள், பீகாரைச் சேர்ந்த சந்திரிகா ராய், ஹரிஷ் குமார், வினய் பிரசாத், வினோத் குமார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த அபய் குமார். இந்த என்கவுன்டர் அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது 6 ஆண்டுகள் கழித்து சென்னையில் நேற்று இரவு நடந்த என்கவுன்டரில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
======================================================================================