உடல் நலம்.

வெளி உணவுகளால் ஏற்படும்,'புட் பாய்சன்' மற்றும் வயிற்று பிரச்னைகளில் இருந்து, சீரகம் விடுவிக்கும். அதிலும், உடனடி நிவாரணம் கிடைக்க, ஒரு டம்ளர் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும், இரு வேளை குடிக்க வேண்டும்.
தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. 


இது, அஜீரண பிரச்னைக்கு தீர்வளிக்கும். அதற்கு, தினமும் பலமுறை, ஒரு டீஸ்பூன் தேனை உட்கொண்டு வாருங்கள்; பிரச்னையை தவிருங்கள்.

 பெரும்பாலும் அரிசியும், கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. வெளியிடங்களில் அரிசி உணவு சாப்பிடுகிறீர் எனில், அத்துடன் கீரை, காய்கறிகளை நன்கு பிசைந்துமென்று சாப்பிட வேண்டும். 

சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை, கீரையின் நார்கள் மெதுவாக்கிவிடுகிறது. சர்க்கரை நோயாளிகள், சாப்பிட வேண்டிய மற்றும் வேண்டாத உணவுகள் எவை?
தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். 

குறிப்பாக, உருளையும், பீட்ரூட்டும் அறவே தவிர்க்க வேண்டும். இனிப்பு குறைவாகவும், துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிடுவது அவசியம். மாம்பழம், சப்போட்டா, வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரையின்படி உண்பது நல்லது.

தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்பு சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது. காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்ந்த குடிநீரை குடிக்கலாம். 

வெட்டி வேர் போட்ட பானை நீர், சீரகத்தண்ணீர் தினசரி பயன்பாட்டுக்கு நல்லது.

இரவு தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப்பயறு கூட்டுடன் பயன்படுத்தலாம். காலை, பஜ்ரா ரொட்டி எனப்படும் கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என, அளவாக சாப்பிடலாம். 

மேலும், நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறு தானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை.


நம் உணவு பலகாரங்களில் உளுத்தம்பருப்பு முக்கிய பயன் உள்ள தானியமாக பயன்படுகிறது. குறிப்பாக, இட்லி, வடை, இன்னும் பல பல பதார்த்தங்களுக்கு கலவையாக பயன்படுகிறது. 

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கருப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. 

ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம்.

உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.
கருப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. 


வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு. அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும். 
இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனல் காலத்தில் அதிகமாக பயன்படுத்தலாம்.

 பித்தத்தைத் தணிக்க உதவும். முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது. நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

உடலை தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.

 செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்; கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்து வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                     ஐ.ஜி.பொன்மணிக்கவேல் எதற்காக ஒதுக்கப்படுகிறார் என்பதற்கு காரணம்.
               இது போன்று எச்ச.ராஜா வகையறாக்களை கையும் களவுமாக காட்டியதற்காகத்தான்.
===================================================================================
ன்று,
ஜூலை-02.

  • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
  • முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)
  • பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)
  • ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)
====================================================================================

"கடவுளே, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்த கொடுக்குற... 
உனக்கு கண் இல்லையா...?"
"மூதேவி, அது டூப்ளிகேட் சிலை ...
ஒரிஜினல் செலை பாரின்ல இருக்கு...
அங்க போய் அழுவு..போ..!"


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?