பழைய மனை புகு விழா,...?
மார்ச் 28ம் தேதி சசிகலா அனுப்பிய விளக்க அறிக்கையில், எப்போதுமே போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடனேயே இருந்துவிட்டதால், அதிமுகவிற்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எதிராக தனது உறவினர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் குற்றமற்றவர் என்றும் சசிகலா கூறியிருந்தார். சசிகலா அனுப்பிய விளக்க அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் ஜெயலலிதா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடகம் கிட்டதட்ட கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.அடுத்து போயஸ் தோட்டத்தில் சின்னம்மா நுழைந்து விட்டால் திரையை கீழிறக்கி 'சுபம்"அல்லது வணக்கம் போட்டு விடலாம்.அதுவும் விரைவில் ' போயஸ் தோட்டத்தில் அக்காவுடனேயே தங்கிவிட்டதால் சின்னம்மாவுக்கு வெளி உலகில் நடப்பது எதுவுமே தெரியாமல் போய் விட்டது.அதையும் அம்மா புரச்சி தலைவி ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளை[?]திரும்ப பெற்று விட்டார். அக்காவுடனே யே இருந்ததால் கணவர் நடராஜன் கட்சியினரிடமும்,அதிகாரிகளிடமும்,மக்களிடமும் பதவி-வேலைக்கு பணத்தை வாங்கிக்கொண்டு முதல்வரிடம் காரியம் சாதித்தது எதுவுமே சசிக்கு தெரியாது .பாவம். தினகரன்,சு...