செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

லெனின்

சோசலிசத்தின் தன்னிகரில்லா சிற்பி

                                                                                                                                                                                 - அ.அன்வர் உசேன்
சோசலிச சோவியத் யூனியனின் மாபெரும் சிற்பி தோழர் லெனின் நினைவு நாள் ஜனவரி 21. சோவியத் புரட்சியின் நூற்றாண்டில் அதனை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பங்கினை வகித்த லெனின் அவர்களின் வாழ்வும் பணியும் ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் உத்வேகத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சோவியத் புரட்சி 1917ம் ஆண்டு வென்றது. தோழர் லெனின் 1924ம் ஆண்டு மறைந்தார். ரஷ்யாவில் சோசலிசத்தைக் கட்டமைத்திட லெனினுக்கு கிடைத்த அவகாசம் வெறும் 7 ஆண்டுகள் மட்டுமே! 
இந்த குறுகிய காலத்தில் தனது அபரிமிதமான உழைப்பையும் ஆற்றலையும் படைப்பாக்கத்திறனையும் லெனின் பயன்படுத்தினார் எனில் மிகை அல்ல! 

சுரண்டல் ஒழிப்பு; இரண்டாம் உலகப்போர் வெற்றி; வல்லரசாக சோவியத் யூனியனின் பரிணமிப்பு; இவை அனைத்துக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது 1917 முதல் 1924 வரை. இதற்கு காரணம் தோழர் லெனினின் அசாத்திய தொலைநோக்கும் அயராத இமாலய உழைப்பும்தான்!
கருத்துப் போராட்டம்
சோவியத் புரட்சி அறிவிக்கப்பட்டவுடன் சோசலிச அரசு சார்பாக இரண்டு ஆணைகளை லெனின் வெளியிட்டார். ஒன்று சமாதானம் பற்றியது. 
இன்னொன்று நிலச்சீர்திருத்தம் குறித்து.முதல் உலகப்போரில் சிக்கியிருந்த ரஷ்யாவை அப்போரிலிருந்து விலகிட ‘சமாதானம்’ பற்றிய ஆணை வழிவகுத்தது. நிலம் பற்றிய ஆணையின் மூலம், நிலப்பிரபுக்கள் மற்றும் சர்ச்சுகள் வசம் இருந்த நிலக்குவியல்கள் உடனடியாக பறிக்கப்பட்டு அரசின் கீழ் கொண்டுவரப்பட்டன. 
சில மாதங்களுக்குப் பிறகு பெரிய தொழில்களும் அரசின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இப்படி உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் அரசின் கீழ், அதாவது உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
எனினும் புரட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. டிராட்ஸ்கி போன்றவர்கள் ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெறாது என வாதிட்டனர். போல்ஷ்விக் கட்சிக்குள்ளே குழப்பங்களை உருவாக்கினர். மற்றொரு புறத்தில் மென்ஷ்விக்குகளும் இடது சீர்குலைவுவாதிகளான சமூக- புரட்சியாளர்களும் எதிர் பிரச்சாரம் செய்தனர். 
புரட்சியின் ஆரம்பகட்ட பணிகளை அமல்படுத்தும் மிகமுக்கியமான பணிகளுக்கு இடையே டிராட்ஸ்கி போன்றவர்களுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தையும் லெனின் வலுவாக நடத்தினார்.

உள்நாட்டு யுத்தம் திணிப்பு
ரஷ்யப் புரட்சி சில நாட்களுக்குக் கூட நிலைக்காது என முதலாளித்துவ நாடுகள் கணக்குப் போட்டன. ரஷ்யாவை ஜெர்மனியின் இராணுவம் தகர்த்துவிடும் என எண்ணினர். 
ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே 1918ம் ஆண்டு பல முதலாளித்துவ நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யா மீது உள்நாட்டுப் போரைத் திணித்தன. உள்நாட்டில் தமது சொத்துக்களை இழந்த முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அவர்களுடன் கூட்டு சேர்ந்தனர்.
சுமார் 3 ஆண்டுகள் புதிய சோசலிச அரசை இடைவிடாமல் சீர்குலைக்க முயன்றனர்.‘‘ரஷ்யாவில் சோசலிசத்தை ஒழித்துக் கட்ட 14 நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளோம்’’ என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். 
‘‘போல்ஷ்விக் எனும் கைக்குழந்தையை அதன் பிறப்பிலேயே குரல்வளையை நெரிப்பதுதான் எங்கள் இலக்கு’’ என ஆணவத்துடன் கொக்கரித்தார் சர்ச்சில். 
பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் முதலிய நாடுகள் அடங்கிய இந்த நீசக் கூட்டணியின் தலைவன் அமெரிக்கா என்பதைச் சொல்லத்தேவை இல்லை.
இந்த உள்நாட்டுப் போரை வெல்லாமல் சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்தார் லெனின். ‘‘அனைத்தும் போர் முனைகளுக்கு! 
அனைத்தும் வெற்றிக்கு’’ எனும் முழக்கத்தை லெனின் முன்வைத்தார். 
லெனின் பெரிய போர் வல்லுநர் அல்ல!
 ஆனால் சோவியத் செஞ்சேனைக்கு அபாரமான போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். செஞ்சேனை அமைப்புகளுக்கு நேரடியாக சென்றார். அங்கு வீரர்களுடன் விவாதித்தார். அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்தார். செஞ்சேனையின் வலிமையை வெளிக்கொணர்ந்தார். நம்பிக்கை ஊட்டினார்.லெனின், உலக தொழிலாளர்களிடம் உதவி கேட்டார்.
தம் நாடுகளின் அரசாங்கங்களை போரிலிருந்து விலகிட நிர்ப்பந்தம் தருமாறு வேண்டினார். ரஷ்யாவில் சோசலிசம் என்பது அனைத்து உழைக்கும் மக்களின் சோசலிசத்திற்கு முன்னோடி என்பதைச் சுட்டிக்காட்டினார். இது மிகப்பெரிய பிரதிபலிப்பை உருவாக்கியது. 
பல முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது. ‘‘ரஷ்யா மீது கை வைக்காதே’’ எனும் முழக்கம் முன்னுக்கு வந்தது.பிரான்சின் ஒரு மகத்தான பெண் கம்யூனிஸ்ட் போராளி குறித்து இங்கு குறிப்பிடுவது அவசியம்.
 ஜென்னி லெபார்போ எனும் இவர் ரஷ்யா வந்து பிரான்ஸ் வீரர்களிடம் ‘‘ரஷ்யாவுடன் போரிடக் கூடாது’’ என பிரச்சாரம் செய்தார்.
இதன் காரணமாக பல பிரான்ஸ் வீரர்கள் தமது நாட்டுக்கு திரும்பும் நோக்கத்துடன் கலகம் செய்தனர். இதனால் கோபமுற்ற பிரான்ஸ் இராணுவ அதிகாரிகள் ஜென்னி லெபார்போவை சுட்டுக்கொன்றனர். இதைப்போல ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஜெர்மனி, பல்கேரியா, சீனா போன்ற பல நாடுகளிலிருந்து கம்யூனிஸ்டுகள் ரஷ்யா வந்து சோசலிசத்தைப் பாதுகாக்க தம்மை செஞ்சேனையுடன் இணைத்து கொண்டனர். 
இந்த மகத்தான சர்வதேச உணர்வு, உள்நாட்டுப் போரில் ரஷ்யாவின் வெற்றிக்கு ஒரு முக்கியமானக் காரணம் என்பதை லெனின் ஆழமாகப் பதிவு செய்தார்.


புதிய பொருளாதாரக் கொள்கை

லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் வழிகாட்டுதலில் சோவியத் செஞ்சேனை, எதிரிப்படைகளை தோற்கடித்தது. 

எனினும் இந்த மூன்று ஆண்டு உள்நாட்டு யுத்தம் கடுமையான விளைவுகளைத் தோற்றுவித்தது. 1920ம் ஆண்டில் ரஷ்யாவின் தொழில் உற்பத்தி 80ரூ வீழ்ச்சி அடைந்தது; 
எஃகு உற்பத்தி 95ரூ சரிந்தது; விவசாய உற்பத்தி 50ரூ குறைந்தது. 

இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதித்தது. 
இந்த சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவரவில்லையெனில் சோசலிசம் ஆபத்திற்குஉள்ளாகும் என்பதை லெனின் உணர்ந்தார்.இந்த நிலையை மாற்றிட என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் ஆழமாகச் சிந்தித்தார்.
போல்ஷ்விக் கட்சியின் ஊழியர்கள் மட்டுமல்லாது உழைக்கும் மக்களிடமும் கலந்து பேசினார். முக்கியமாக விவசாயிகளிடம் கருத்துப் பரிமாற்றம் நடத்தினார். பல கிராமங்களுக்கு நேரில் சென்றார். கிராமப்புற வாழ்வு நிலை குறித்து நேரில் விவரங்கள் சேகரித்தார். 
பல சாதாரண விவசாயிகளை தனது அலுவலகத்திற்கு வரவழைத்துப் பேசினார். இந்த விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த லெனின் ‘‘புதிய பொருளாதாரக் கொள்கை’’ என்பதை உருவாக்கினார். இதனை கட்சி மற்றும் அரசாங்க அமைப்புகளில் விவாதத்திற்கு முன்வைத்தார். பின்னர் இது அமல்படுத்தப்பட்டது.விவசாயிகளிடமிருந்து உபரி உற்பத்தி பெறுவது நிறுத்தப்பட்டது. 
குறைந்த பட்ச வரி செலுத்திவிட்டு தமது உற்பத்தியை வெளிச்சந்தையில் விற்கும் உரிமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இது விவசாய உற்பத்தி பலமடங்கு உயர வழிவகை செய்தது. தொழில்துறையில் சிறு தொழில்கள் தனியார் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது. அதன் மூலம் தொழில் உற்பத்தியும் பெருகியது. ‘அனைத்தும் அரசுமயம்’ என்பதிலிருந்து இது சிறு பின்வாங்கல்தான்! 
ஆனால், இந்த பின்வாங்கல் இல்லாமல் ரஷ்யாவின் உற்பத்தி சக்திகள் வளர்வது சாத்தியமல்ல என்பதை தோழர் லெனின் தமது ஆய்வுகள் மூலம் உணர்ந்திருந்தார். இதனை சோவியத் மக்கள் ஏற்றுக் கொண்டனர். சோசலிசம் முன்னேற இது தீர்மானகரமான பங்கினை வகித்தது எனில் மிகைஅல்ல!
மூன்றாம் அகிலம்
ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. 
பல தேசங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் இயக்கங்களும் வீறு கொண்டு எழுந்தன.
 இந்த இயக்கங்களை ஒருங்கிணைக்கவும் சரியான கோட்பாட்டு அடிப்படைகளை உருவாக்கிடவும் உலக கம்யூனிஸ்ட் அமைப்பு தேவை என லெனின் கருதினார். இதற்காக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கூட்டம் 1919ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. (முதல் அகிலம் காரல் மார்க்ஸ் காலத்தில் செயல் பட்டது. இரண்டாவது அகிலம் கம்யூனிஸ்ட் கருத்துகளை நீர்த்து போகச் செய்யும் விதத்தில் செயல்பட்டதால் மூன்றாவது அகிலம் உருவாக்க லெனின் முடிவு செய்தார்.)

உலகம் முழுவதும் புரட்சி இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல மூன்றாவது அகிலம் பயன்பட்டது.
குறிப்பாக காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா உட்பட பல நாடுகளில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அகிலத்தின் வழிகாட்டுதல்கள் பயன்பட்டன. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு சோவியத் ரஷ்யா உதவியது. அதே நேரத்தில் சோவியத் புரட்சிக்கு உறுதுணையாக உலக கம்யூனிஸ்ட் இயக்கம் நின்றது. இந்த இரண்டு பணிகளையும் அகிலம் செய்தது எனில் மிகை அல்ல. இந்த அகிலத்தின் உயிர்நாடியாக லெனின் செயல்பட்டார். 
உள்நாட்டில் நிலவிய கடுமையான சுமைகளுக்கு இடையேயும் லெனின் இந்த அமைப்பை உருவாக்கியது அசாதாரண பணியாகும்.
சோசலிச சோவியத் ஒன்றியம் உருவாக்கம்
ரஷ்ய தேசிய இனம் பல நூற்றாண்டுகளாக இதர தேசிய இனங்களை அடக்கி வந்தது. ஆனால், லெனின் தலைமையிலான போல்ஷ்விக் இயக்கம் ரஷ்ய தேசிய இனத்தின் அடக்குமுறையை கடுமையாக எதிர்த்தது. 
அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என வலுவாக குரல் கொடுத்தது போல்ஷ்விக் கட்சி. தேசிய இனக் கொள்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் லெனின். ‘நமது தேசிய இனக்கொள்கைகள் இந்தியா மற்றும் கிழக்கு நாடுகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று கணித்தார் லெனின்.
ரஷ்யா மற்றும் பல தேசிய இனங்களின் இடையே ‘சம உரிமை’ அடிப்படையில் ஒத்துழைப்பும் பொருளாதார இணக்கமும் உருவாக்கிட லெனின் உழைத்தார். 
லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் சரியான அணுகுமுறை காரணமாக 1922ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘சோசலிச சோவியத் குடியரசுகளின் ஒன்றியம்’ உருவானது. 
இதில் ரஷ்யா, உக்ரைன், பைலோரஷ்யா, அர்மீனியா, அஜெர்பைஜான் போன்ற குடியரசுகள் இணைந்தன. பின்னர் ஏனைய குடியரசுகள் சேர்ந்தன.
உடல் நிலை காரணமாக லெனின் இக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. எனினும் இந்த மகத்தான நிகழ்வின் சிற்பி லெனின்தான். கடும் பணிச்சுமை காரணமாக 1922ம் ஆண்டு லெனின் நோய்வாய்ப்பட்டார். எனினும் அவரது கடுமையான பணி நிற்கவே இல்லை. 
1923ம் ஆண்டு இறுதியில் அவருக்கு பாரிச வாயு நோய் திரும்பத்திரும்பத் தாக்கியது. வலது கையும் காலும் செயல் இழந்தன. 
ஆனால் சில நாட்களிலேயே இடதுகையில் எழுத கற்றுக்கொண்டார். 
எழுத்துப் பணியை தொடர்ந்தார். 

மருத்துவர்களின் எந்தக் கட்டுப்பாடும் அவரைத் தடுக்க முடியவில்லை. மரணம் தன்னை வேகமாக நெருங்குவதை உணர்ந்தார் லெனின். போல்ஷ்விக் கட்சியின் 13வது மாநாடு 1924ம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18ம் தேதிவரை நடந்தது. 
அந்த மாநாட்டுக்கு தனது குறிப்புகளை அனுப்பிவைத்தார்.
19ம் தேதி மாநாடு குறித்து பிராவ்தா இதழில் வந்த செய்திகளை லெனினுக்கு அவரது மனைவி குரூப்ஸ்காயா படித்துக் காட்டினார். 
ஜனவரி 21ம் தேதி மாலை 6.50 மணிக்கு, இந்த மனிதகுலத்தின் மகத்தான புரட்சித் தலைவர் மாமேதை லெனின் அவர்களின் உயிர் பிரிந்தது..
லெனின் உருவாக்கிய சோசலிச சோவியத் யூனியன் உலகில் மகத்தான மாற்றங்களை விளைவித்தது. சோசலிசத்தின் தேவை இன்றளவும் குறையாமல் உள்ளது என்பதை உலக நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. 
அந்த இலக்கை அடைய தோழர் லெனின் பணி நமக்கு விடிவெள்ளியாய் வழிகாட்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.


“ஹைட்ரோ கார்பன் "

 பல்லாயிரம் கார்ப்பரேட்டுகள் வந்தாலும் நெற்பயிரும் வயல்வெளியும்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்தவரா நீங்கள்? 
அப்படியென்றால் நீங்கள் நெடுவாசல் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பல வருடகாலமாக தண்ணீரில்லாமல் பொய்த்துக் கிடக்கும் வறண்ட டெல்டா விவசாய மாவட்டங்களான தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே இருக்கிறது இந்த கிராமம். 
வறட்சிகளில் தப்பிப் பிழைத்து இதன் பசுமை மட்டும் அப்படியே எஞ்சி இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் பல ஏக்கர் பரப்பிலான தென்னந்தோப்புகளில் இருந்துதான் சென்னைக்கு பல மூட்டைத் தேங்காய்கள் தினமும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சகமனிதர்களைக் காப்பாற்றவே நேரமில்லாத நமக்கு நெடுவாசலின் பசுமையும் அது ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தேவையற்றதாக இருக்கலாம். 
ஆன்லைனில் காலம் தள்ளும் கார்ப்பரேட் குடிமகன்களுக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுமார் 6000 பேர் வசிக்கும் அந்த நெடுவாசல் நிலங்களில் ஒவ்வொரு ஏக்கரும் தற்போது குறைந்தபட்சம் நான்கு மூட்டை விகிதம் நெல் தருகின்றன. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருடாந்திர ஜீவனாம்சத்திற்கு போதுமானது அது. ஏற்கெனவே மக்களுக்கு நல்ல முறையில் பயன்பட்டு வரும் வேளாண் நிலத்தில்தான் தற்போது இயற்கை எரிவாயுக்களை நிலத்தின் ஆழத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய அரசு தற்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. திட்டத்தின் பெயர் “ஹைட்ரோ கார்பன் திட்டம்”.
நிலத்தின் ஆழங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை ஏன் எடுக்க வேண்டும். இயற்கை நமக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கும் வளங்களை நல்ல முறையில் மக்களுக்கான பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதற்கு என்கிறது மத்திய அரசு. மக்களுக்கு ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் விவசாய மற்றும் வேளாண் நிலங்களை தொழில்துறைகளுக்காக சிதைப்பதுதான் வளங்களைப் பயன்படுத்துவதா?
தனியார் நிறுவனங்கள் போட்டிருக்கும் ஆழ்துளாய் குழாய்கள்
மீத்தேன் திட்டத்துக்கு முன்பே துவக்கப்பட்டதா ஹைட்ரோகார்பன் திட்டம்?
நெடுவாசல், முடப்புலிக்காடு, குருவக்கரம்பை, ஆலங்குடி என புதுக்கோட்டை மாவட்டத்தின் கீழ் மட்டும் ஐம்பது கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் ஒவ்வொன்றிலும் மக்களுக்குப் போதிய விவரங்கள் எதுவுமே தெரிவிக்கப்படாமல் பல வருடங்களுக்கு முன்பே சிறு வயல்களைக் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பத்திரத்தில் கைநாட்டு பெற்றுக் கொண்டு தனதாக்கிக் கொண்டுள்ளது அரசு. கைநாட்டு பெறப்பட்ட பத்திரங்களின் நகல் கூட இன்னும் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் பெறப்பட்ட நிலத்தில் 2009-ல் மண்ணில் எண்ணெய் அல்லது எரிவாயு இருக்கிறதா என்று ஆழ்துளாய் பம்புகளை ஆங்காங்கே பொருத்திப் பரிசோதனை செய்துள்ளது. இதற்கிடையேதான் மீத்தேன் திட்டம் கையெழுத்தானதும். அதனால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது அரசு. மீத்தேன் திட்டம் திரும்பப்பெறப்பட்ட சூழலில் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டம் மீண்டும் செயலாக்கத்துக்கு வந்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டம் 
நிலத்தின் கீழ் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருள். இது ஆக்ஸிஜனுடன் சேரும்போது பெரும் இயந்திரங்களை இயக்குவதற்கான ஆற்றலைப் பெறுகிறது. பெட்ரோல், டீசல், நாப்தா, நிலக்கரி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வகைகளும் இந்த ஹைட்ரோகார்பனில் அடக்கம்.

நெடுவாசல் பகுதியில் தற்போது அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு ஏக்கர் நிலத்தில் இந்த ஹைட்ரோகார்பன்களை எடுப்பதற்குதான் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
நெடுவாசல் தவிர இந்தியாவில் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 குறிப்பாக அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன், ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நெடுவாசலில் தனது ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ள ஜெம் லெபாரட்டரீஸ் கர்நாடகாவைச் சேர்ந்த கோடீஸ்வர பாரதிய ஜனதா எம்.பி சித்தேஸ்வராவிற்கு சொந்தமானது என்பது கூடுதல் தகவல். அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அ
தாவது பசுமையின் கடைசி மிச்சம் வரை உறிஞ்சி எடுத்துச் செல்ல இவர்களுக்கு பதினைந்து வருடகாலம் தேவைப்படுகிறது. இப்படி எண்ணைய், எரிவாயுவை பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்க தனியார் நிறுவனங்கள் அரசுக்கு ரூ.9,600 கோடி தருவார்கள்.
ஹைட்ரோகார்பன் திட்டம் பாதுகாப்பற்றது?
நெடுவாசல் பகுதி மக்களில் சுமார் 1000 பேர் வரை எண்ணெய் தொழிற்சாலைகள் மற்றும் கிணறுகள் அதிகம் இருக்கும் அரேபிய நாடுகளில்தான் பணியாற்றி வருகின்றனர். 
தொடர்ந்து 45 நாட்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் வேலை செய்துவிட்டு அடுத்த 45 நாட்கள் அவர்களுக்கான ஓய்வு தரப்படுகிறது. அந்த நாட்களில் கிணறுகளும் இயங்காது. 
அதாவது தொடர்ந்து அதுபோன்ற கிணறுகளின் பக்கம் வேலை செய்வது மனித உயிருக்கே ஆபத்தானது என்பதால் இந்த ஓய்வு தரப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கே ஆபத்தினை காரணம் காட்டி ஓய்வு தரப்படும் நிலையில் தற்போது நெடுவாசல் பகுதியில் குடியிருப்புகள் அருகே தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எரிவாயுக்களை உறிஞ்சி எடுப்பது எவ்வளவு ஆபத்தினை விளைவிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்பி மற்றும் மிஸ்ஸோரி நீர்படுகைகளின் கரையோரம் வசிக்கும் அமெரிக்க வாழ் பழங்குடியின மக்கள் கடந்த வருடத் தொடக்கத்தில் போராட்டத்தில் களமிறங்கினர். 
அந்த பகுதிகளில், டகோடா பைப்லைன் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டம். அந்தத் திட்டம் மிஸ்ஸோரி மற்றும் மிஸ்ஸிஸ்பியின் மொத்த நீரையும் வீணாக்கிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்த இரு ஆறுகளும் அமெரிக்காவின் 41 மாகாணங்களின் குடிநீர் வாழ்வாதாரத்திற்கானது. கனடாவின் இரு மாகாணங்களும் இதனால் பயனடைகின்றன. 
எரிவாயு எடுப்பதால் நீர் மாசுபடுவதுடன், தாங்கள் பாதிப்படுவோம் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்கள் அந்த பழங்குடிகள். அமெரிக்கா கண்ட நீண்டகாலப் போராட்டங்களில் இதுவும் ஒன்று. போராட்டம் இன்றும் தொடர்ந்தபடி இருக்கிறது.
தொழில்துறையில் பலவகையில் முன்னேற்றம் அடைந்துள்ள அமெரிக்க மக்களே, நிலத்தில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். கடலில் சிந்திய எண்ணெயை வாளி வைத்து அள்ளிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் உடைய நாம் எப்படி நெடுவாசல் பகுதி மக்கள் மற்றும் அவர்களது நிலங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்று அரசு சிந்தித்தா?
காவிரி டெல்ட்டாவிலே வர காத்திருக்கும் பேரழிவு திட்டமான மீத்தேன் ஆகட்டும் , சிறிது காலங்களுக்கு முன்பு நமக்கு பரிச்சியமான ஷேல் காஸ் எனப்படும் இயற்கை எரிவாயு ஆகட்டும், இப்பொழுது புதிதாக வரும் "ஹைட்ரோ கார்பன்" திட்டமும் எல்லாமே ஒரே பொருளை உணர்த்தும் வேறு வேறு பெயர்கள். உதாரணமாக இன்று உணவிற்கு பயனாகும் அரிசி வகைகள் நிறைய இருந்தாலும் அவை அனைத்துமே நெல் பயிரில் இருந்துதான் உருவாகிறது. 

பொது சொல் "அரிசி" அதில் பல்வேறு வகைகள். 
அதே போல பொது சொல் "ஹைட்ரோ கார்பன்" எனும் "நீர்கரிம வாயுக்கள்" அதன் வகைகள் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன். எடுக்கும் இடம் மற்றும் பிரித்தெடுக்கும் முறையில் ஷேல் காஸ் , டைட் காஸ் , என்றும் பிரித்தறியலாம். பொருள் மிக எளிமையானது அனைத்தும் "நீர்கரிம வாயுக்கள்" என்பதை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள்.
முதலில் இயற்கை எரிவாயு என்று நரிமணத்தில் வந்தார்கள். 

பின்பு நிலக்கரி என்று சொல்லி நெய்வேலி , ஜெயம்கொண்டத்தில் நிலத்தை பறித்தார்கள்.பின்பு வந்தவர்கள் மீத்தேன், ஷேல் காஸ் என்று வேறு வேறு பெயர்களில் முகமூடி அணிந்து வந்தார்கள். இப்பொழுது ஹைட்ரோ கார்பன் என்று சொல்லி வருகிறார்கள். இவை எல்லாமே ஒரே பெயரை மாற்றி மாற்றி சொல்லி நம்மை ஏமாற்றும் தந்திரம்.
பொதுவாகவே இயற்கை எரிவாயு என்பது நீர்கரிம வாயுக்கள் (Hydrocarbon gases) அனைத்தும் அடங்கியுள்ள ஒரு வாயுக்கலவை . 

இதில் பல்வேறு வகைகள் அவற்றின் இயல்பை பொறுத்து வேறுபடுத்தப்படுகின்றன. பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுவில் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் அரிதாக கிடைக்கும் வாயுக்களும் கலந்திருக்கும் . இவற்றை பின்னர் தேவைகேற்ப்ப பிரித்தெடுக்க முடியும் நீர்கரிம வாயுகள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ள வாயுக்களின் தொகுதி.இவற்றில் முதலில் இருப்பது மீத்தேன் (CH4) ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டது .கார்பன், ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்த எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அவற்றின் இயல்பும் மாறுகிறது .
 இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இது மட்டும் அல்லாமால் , இயற்கை எரிவாயு கிணறுகள் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கலாம். இவை எடுக்கும் எரிபொருளின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுபவை. முதலாவதாக கச்சா எண்ணெய் மட்டுமே எடுக்கக் கூடிய கிணறுகள் (Crude oil wells) . 
இவற்றில் முதன்மை எரிபொருள் கச்சா எண்ணெய் மட்டுமே ஆனாலும் இவற்றில் இயற்கை எரிவாயுவும் கிடைக்கும் இவை கச்சா எண்ணையில் கலந்து அல்லது தனியாகவே வெளியேறும் .இந்த வகை எரிவாயுகளை கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் நிலைக்கு முன்பேப் பிரித்தெடுப்பது அவசியம். இரண்டாவதாக இயற்கை எரிவாயு மட்டுமே எடுப்பதற்காக தோண்டப்படும் எரிவாயு கிணறுகள் (Dry gas wells) . 
இந்த வகை கிணறுகளில் எரிவாயு மட்டுமே கிடைக்கும் இதனுடன் சில வாயுக்கள் வெளியேறினாலும் அவை சுத்திகரிப்பு நிலையங்களில் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்படும் .மூன்றாவதாக திரவநிலையில் மாற்றமடைந்து வெளிப்படும் எரிவாயுவை சேகரிக்கும் கிணறுகள் (Condensate wells/). இந்த வகை கிணறுகளில் இயற்கை எரிவாயு மட்டுமல்லாமல் திரவதுளிகள் போன்றும் எரிவாயு வெளிப்படும் இந்தவகை எரிவாயுவும் தனியாக சேகரிக்கப்படும் . 
இவை வாயு நிலையில் இருந்து திரவநிலைக்கு இயல்பிலேயே மாறி இயற்கையில் கிடைக்கும் எரிவாயுக்கள் .
இன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் "ஹைட்ரோ கார்பன்" எனும் "நீர்கரிம வாயுக்கள்" எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே ,மத்தியில் நடக்கும் கொடுங்கோலாட்சி மூலம் அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் Gem Laboratory Pvt.Ltd. 

இது மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவரின் நிறுவனம். அவர் 2004 & 2009 ல் MP யாக தேர்ந்தெடுக்க பட்டவர்.
நமக்கு தண்ணீர் கொடுக்காத ஓர் மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத இந்திய அரசு நம்மில் யாரை கேட்டு நம் விவசாய நிலத்தில் துளை போட அனுமதி கொடுத்தது?. 

ஒரு நாட்டுக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்யலாம் என்று பாஜக தலைவர் இலை.கணேசன் திருவாய் மலர்ந்துள்ளார்.
இந்தியா நலனுக்காக தமிழ் நாடும்,தமிழர்களும்தான் தியாகம் செய்யவேண்டுமா.அப்படி தியாகம் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்.?
தமிழர்கள் இதுவரை செய்த காவிரி  நீர்,மேகதாது ,முல்லைப்பெரியாறு,,சிறுவாணி தியாகம் போதாதா?
இப்படி ஒரு மாநிலம் முழுக்க தியாகம் செய்துதான் இந்தியா வாழ வேண்டும் என்றால் மோடி எதற்காக இந்தியாவின் பிரதமராக ஆடசி செய்கிறார்?
பாஜகவுக்கு வாக்களிக்காததற்காகத்தான் இந்த பலி வாங்கும் திட்டங்களோ?
அப்படி தியாகம் செய்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் இந்தியாவில் என்ன ரோமத்துக்கு வாழவேண்டும்?
இந்தியர்கள் என்று சொல்லி வாழ்வதில் என்ன கிடைக்கிறது.?
தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? 
மொத்தத்தில் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மனிதர்களே இல்லையா?
தமிழனல்லாத இந்த இல.கணேசனை இனி ...?
======================================================================================
ன்று,
பிப்ரவரி-28.


 • இந்திய தேசிய அறிவியல் தினம்
 • எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)
 • வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
 • இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
 • முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)

டாக்டர் ராஜேந்திர பிரசாத், பீஹார் மாநிலம், சிவான் எனும் இடத்தில், மகாவீர சாகி - கமலேசுவரி தேவி தம்பதிக்கு மகனாக, 1884 டிச., 3ல் பிறந்தார். 
பொருளியலில் முதுகலை பட்டமும், சட்டத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதால், 1942ல் கைது செய்யப்பட்டார். 
மூன்றாண்டு சிறைவாசத்திற்கு பின், 1945 ஜூன், 15ல் விடுதலையானார். 
1946ல் இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ல் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார்.
விடுதலைப்பெற்ற  இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக  1950ல் பதவியேற்றார். 
1952, 1957 ஆகிய ஆண்டுகளில், இருமுறை குடியரசுத்தலைவராக பதவியேற்ற, ஒருவர்  ராஜேந்திர பிரசாத். 
அவருக்கு, நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவர், 1963 பிப்., 28ல் காலமானார். 
 • ======================================================================================


திங்கள், 27 பிப்ரவரி, 2017

ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா!

சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... 

---  -- ஆனந்த விகடன் இதழில் ப.திருமாவேலன் கட்டுரை.. 
(ஜெயா அப்பாவி, சசிகலாதான் குற்றவாளி என தவறாக நினைக்கும் எல்லோரும் கண்டிப்பாக முழுதும் படிக்கவும்)
வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள்.
‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற்களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு, நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் (2001, 2011, 2016) மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார் ஜெயலலிதா. இன்னோர் இரண்டு வாரங்கள் ஆகியிருந்தால் சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கக்கூடும். எட்டரைக் கோடித் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு பேருமே, பக்கா ஊழல் பேர்வழிகள் என்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் உறுதிப்படுத்தியிருக்கிறது.
`எந்தவிதமான குற்றஉணர்ச்சியும் இல்லாமல், மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துகளை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மறைக்க முயற்சித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இப்படிச் செயல்பட்டுள்ளார்கள். எவ்வளவு பெரிய தந்திரத்துடன் இவற்றையெல்லாம் மூடி மறைத்துள்ளார்கள் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் எந்த வார்த்தையையும் பயன்படுத்தத் தெரியவில்லை.
பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன், அச்சம் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்துள்ளார்கள். பேராசை மட்டுமே இவர்களிடம் இருந்துள்ளது. ஆக்டோபஸ் மாதிரி அனைத்து மட்டங்களிலும் இவர்களது ஊழல் கரம் பரவியிருக்கிறது’ என்பது தீர்ப்பில் உள்ள வரிகள்.
இரண்டு கோடி ரூபாயாக இருந்த சொத்து ஐந்தே ஆண்டுகளில் (1991-96) 66 கோடி ரூபாயாக எப்படி மாறியது என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதியதை, வரிக்கு வரி உச்ச நீதிமன்றம் வழிமொழிந்துள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சரின் அதிகாரபூர்வ வீட்டிலேயே சசிகலா இருக்கிறார்; இளவரசி இருக்கிறார்; சுதாகரன் இருக்கிறார்; பட்டவர்த்தனமாகப் பணம் வாங்குகிறார்கள். சென்னையில் சாந்தோம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அண்ணாசாலை, கிண்டி, கிழக்குக் கடற்கரை சாலை, நீலாங்கரை, முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, அபிராமபுரம் என எல்லா பகுதிகளிலும் வீடுகள், மனைகள் வாங்குகிறார்கள். சென்னைக்கு வெளியே பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர், செய்யூர் என வளைக்கிறார்கள். தலைநகர் தாண்டி தஞ்சாவூர், திருச்சி, ஊட்டி, திருநெல்வேலி, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் ஏக்கர் ஏக்கராக வாங்கிப் போடுகிறார்கள்.
30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். இவை அனைத்துமே போயஸ் கார்டன் வீட்டு முகவரியில். இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் தினம் தினம் லட்சம் லட்சமாகப் பணம் போடப்படுகிறது. இந்த நிறுவனத்தில் வெளியாட்கள் எவருமே முதலீடு செய்யவில்லை. இந்த நிறுவனங்கள் எந்தப் பொருளையும் உற்பத்திசெய்யவில்லை. எந்தப் பொருளையும் வாங்கவும் இல்லை... விற்கவும் இல்லை. பணம் மட்டும் போடப்படும்... எடுக்கப்படும். இந்த நிறுவனத்தின் பேரில் கடன் வாங்கப்படும்... வாங்கிய கடன் சில மாதங்களில் அடைக்கப்படும்.
இதன் உச்சம், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனின் திருமணம். எடுக்கப்பட்ட ரசீதுகளின் அடிப்படையில் சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் (22 ஆண்டுகளுக்கு முன்னர்) நடத்தப்பட்ட திருமணம் அது. ஆண்டு வருமானம் 44,000 ரூபாய் என்று சொல்லி வீட்டுக்கடன் வாங்கிய சுதாகரன், பல கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்தார். ‘என் திருமணத்துக்கு யார் செலவு செய்தார்கள் என்று எனக்கே தெரியாது’ என்றார். மயிலாப்பூர் கனரா வங்கியில் 105 ரூபாய் கொடுத்து கணக்கு தொடங்கியவரிடம் அடுத்தடுத்து ‘யார் யாரோ’ லட்சக்கணக்கில் பணம் போட்டார்கள். இளவரசியும் தனது ஆண்டு வருமானம் 40,000 ரூபாய் என்றார். அவர் வங்கிக் கணக்கிலும் ‘யார் யாரோ’ பணம் போட்டார்கள்.
1991-ம் ஆண்டுக்கு முன்னர் ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் 12 வங்கிக் கணக்குகள் இருந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவை 52 வங்கிக் கணக்குகளாக விஸ்வரூபம் எடுத்தன. சசிகலாவுக்கு இருந்த வருமானம், கணவர் நடராசனின் ஊதியம். ஸ்கூட்டர் வாங்க 3,000 ரூபாய் கடன் வாங்கும் நிலைமை. அரசுக் கடன் மூலமாக வீடு வாங்கும் நிலைமை. அவர்தான் `திருத்துறைப்பூண்டியில் 250 ஏக்கர் இருந்தது’ என்று நீதிமன்றத்தில் சொன்னார்.
ஜெயலலிதா சொன்ன பொய்கள் பலவிதம். டான்சி நிலத்துக்குக் கையெழுத்து போட்டுவிட்டு எனது கையெழுத்தே இல்லை என்றவர் அவர். ‘மைசூர் மகாராஜா குடும்பம்' என்று சொல்லிக்கொண்ட இவர், ‘நான் அரசியலுக்கு வந்து புதிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. சுதாகரன் திருமணத்துக்கு நான் எதுவுமே செலவு செய்யவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு எங்கேயோ இருந்து கொண்டுவந்த நகைகளை, போயஸ் கார்டனில் வைத்து படம் பிடித்துக்கொண்டார்’ என்று நீதிமன்றத்தில் நீட்டி முழக்கினார். 23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளி வாங்கும் அளவுக்கு நல்லம நாயுடு என்ன விஜய் மல்லையாவா?
2,000 ஏக்கர் நிலம், 30 பங்களாக்கள், 33 நிறுவனங்கள், தங்கம் - வைரம் எனக் கூட்டிக் கழித்து 66 கோடி ரூபாய்க்குக் கணக்கு கேட்டபோது இவர்கள் நான்கு பேருமே சொன்ன பதில், ‘கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என்றது மட்டும்தான். ‘தங்கள் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அதன் அடிப்படையைத் தகர்க்கும் ஒரே ஓர் ஆதாரத்தைக்கூட ஜெயலலிதா தரப்பு சொல்லாமல், மேம்போக்கான அரசியல் விளக்கங்களையே நீதிமன்றத்தில் சொன்னது’ என்றார்கள் நீதிபதிகள். `தாங்கள் வைத்திருந்த பணத்துக்கு, சொத்துக்கு நியாயமான கணக்கைக் கடைசி வரை இவர்களால் காட்ட முடியவில்லை, ஓர் ஆதாரத்தைக்கூட தரவில்லை' என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றி என்பது, தமிழக வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சியான தி.மு.க இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வென்ற தேர்தல் அது. ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியைக் கொடுத்த தேர்தல். சசிகலா குடும்பத்தின் முதல் அறுவடைக் காலமும் அதுதான். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசாங்க கஜானாவே போயஸ் கார்டனுக்குப் பாத்தியதைப்பட்டது என்று நினைத்தார். முந்தைய 15 ஆண்டுகள் நிரந்தர வருமானம் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கும், ராமச்சந்திர உடையாருக்கும், இன்னும் சிலருக்கும் கடிதம் எழுதி பணம் கேட்கும் நிலைமையிலிருந்த ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் பதவி, பணப் பாதையாகத் தெரிந்தது. சசிகலா குடும்பம் வறண்ட நிலம். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் இழுத்துக்கொள்ளும். அதனால்தான் ஊழலையும் முறைகேட்டையும் துணிச்சலாக, பட்டவர்த்தனமாக, கூச்சமே இல்லாமல் இன்னும் சொன்னால் பெருமையாகவே செய்தார்கள். வளர்ப்பு மகன் திருமணம் என்பது, திருட்டை, திருவிழா ஆக்கிய நிகழ்வு. உலக வழக்குகளை எல்லாம் கரைத்துக்குடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும் அமிதவ ராயும், ‘எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு இது பேரழிவு. நான்கு பேர் சேர்ந்து நாட்டை நாசமாக்கிச் சூறையாடியிருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பில் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடையவேண்டிய ஒரு தகவல் இருக்கிறது. ‘போயஸ் கார்டன் வீட்டில் வாழ்வதற்காக இவர்கள் ஒன்று சேரவில்லை. பணம் சம்பாதிக்கவே ஒரே வீட்டில் கூடினார்கள்’ என்பதுதான் அது. `சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேரும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது' என்றோ, `அவர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றோ, ஜெயலலிதா சொன்னதை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ‘இவர்கள் கிரிமினல் சதிசெய்து சம்பாதிக்கவே கூடினார்கள்; நிறுவனங்கள் தொடங்கினார்கள். எனவே, குற்றச் சதியில் நான்கு பேருக்கும் சம பங்கு உண்டு’ என்றது நீதிமன்றம்.
‘மனிதர்களை நேசிக்கும் கொடைப் பண்பு காரணமாக சசிகலாவுக்கு போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. குற்ற நடவடிக்கையில் இருந்து, தான் தப்பித்துக்கொள்ளவே சசிகலாவைத் தனது வீட்டில் ஜெயலலிதா வைத்துக்கொண்டார். இவர்கள் கூட்டுச் சதியால்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. இவர்கள் செய்த ஒரே ஒரு வேலை, சொத்துகளை வாங்கிக் குவிப்பதே’ என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினார்கள். அதாவது, ஜெயலலிதாவை வைத்துச் சம்பாதிக்க சசிகலா அவரோடு சேர்ந்தார், தான் சம்பாதிப்பதற்கு பினாமியாக சசிகலாவை ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார் - இதுதான் நீதிபதிகள் சொல்லவருவது. சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா; ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா. ஒருவர் கல்லறைக்குள் போய்விட்டார். இன்னொருவர் சிறையறைக்குள் போய்விட்டார். சசிகலா குடும்பம் அடுத்த பாதாள அறையை உருவாக்கிவிட்டது. எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டு, இரட்டை இலையைப் பச்சைக்குத்தி வாழும் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் தனியறையில் ரகசியமாக அழுகிறார்கள். இந்தப் புதைகுழியில் இருந்து அ.தி.மு.க யானையை மீட்டெடுப்பது சிரமம். அதுவும் எடப்பாடி போன்றவர்களால் சாத்தியமில்லை. அவ்வளவு கனமானது இந்தத் தீர்ப்பு.
டெல்லி உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது அறை எண்ணில் உட்கார்ந்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் இருவரும் எட்டே நிமிடத்தில் இறுதித் தீர்ப்பை வாசித்து முடித்தார்கள். 27 ஆண்டுகால அநியாயத்தைச் சொல்ல 27 நிமிடங்கள்கூட தேவைப்படவில்லை. ‘இதுபோன்ற சதிகாரர்களைத் தண்டிக்காவிட்டால் நீதி, நேர்மைக்கு அஞ்சி வாழ்பவர்கள் இந்தியாவில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்’ என்ற ஒற்றை வரியிலேயே அவர்களது தீர்ப்பின் 570 பக்கங்களும் அடங்கியிருக்கின்றன. ‘இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம்’ என்று நீதிபதிகள் சொன்னார்கள். அரசியலைத் தூய்மைப்படுத்தும் பாரம், அந்த நீதிபதிகள் கரங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதை அவர்கள் கம்பீரமாகச் செய்தார்கள்.
‘திரையரங்கில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தவர் அமிதவ ராய். நீதியரசர்களே... உங்களது தீர்ப்புக்காக தேசம் எப்போதும் எழுந்து நிற்கும்!
=======================================================================================
ன்று,
பிப்ரவரி-27.

 • டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்
 • நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)
 • பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)
 • ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)
 • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)
========================================================================================


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

போதை அது அழிவு பாதை .


நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக ஆண்களின் ஆயுட்காலம் 67 வயதாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தகாத பழக்கங்களால் 50 வயதுக்குள்ளேயே தங்களை அழித்துக் கொள்கிற ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனையானது. 
போதை பொருட்கள் பயன்படுத்தாத ஆண்களே இல்லை என்கிற அளவுக்கு இன்று பலரும் ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 
தவறான நண்பர்கள், பார்ட்டி கலாசாரம், திடீரென ஏற்படும் வேலை இழப்பு, காதல் தோல்வி, விவாகரத்து, பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் தகாத பழக்கங்களுக்கு ஆளாகி, அதற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். 
அவர்களே வெளியேற வேண்டும் என்று ஒரு கட்டத்தில் நினைத்தாலும் முடிவதில்லை.

கொலைகள், தற்கொலைகள், விபத்துகள் என்று பெரும்பாலான ஆண்கள் இளவயதிலேயே உயிரிழப்பதன் பின்னாலும் இந்த போதை வஸ்துக்களே இருக்கின்றன. 

உடல்ரீதியான, மனரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஆண்கள் இதனால் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 
சமூகத்தில் நன்மதிப்பும் கெட்டுப்போவதுடன், அவருடைய குடும்பத்தார் சந்திக்கும் துயரங்களும் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதல்ல. 
போதைப் பொருட்கள் மீது இருக்கும் அடிமைத்தனத்தை உடைக்க, முதலில் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். 

மனநல மருத்துவரின் ஆலோசனை மூலமாகவும், மருந்துகள் மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம். தேவைப்படும் பட்சத்தில் போதை மறுவாழ்வு மையத்திலும் சேர்த்து சிகிச்சைகள் எடுக்க வைக்கலாம்.

பிரச்னை வந்த பிறகு அதிலிருந்து நிவாரணம் தேடுவது என்பதைவிட வரும்முன் காப்பதே எப்போதும் சிறந்தது.  
போதைப்பொருள் பயன்படுத்தும் நபரின் வாரிசுகளுக்கும் மரபணு காரணமாக அந்த அடிமைத்தனம் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். 
அதனால், போதையின் பாதை பரம்பரை பரம்பரையாக அழிவைத் தரும் பாதை என்பதை மறக்கக் கூடாது.
                                                                                                                                                                            

மதுவென மெல்லக் கொல்லும் விஷம்.

         
                                                                                                                             -  டாக்டர்  கு.கணேசன் 
இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். அதில் தமிழகத்தில் நிலை மிக மிக மோசம். 
சுமார் ஒரு கோடிப் பேர் ‘ஆல்கஹால் அடிமைகள்’. 
இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம். மதுவால் நோய் வந்து நேரடியாகவும், போதையில் ஏற்படும் விபத்து போன்றவற்றால் மறைமுகமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்து லட்சத்தைத் தாண்டுகிறது. 
அணு ஆபத்து மனிதர்களை மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக!

ஆம், ‘மது... மயக்கம்... மரணம்...’ இது அன்றாடம் நிகழும் நிஜம். இந்த ஆபத்து எப்படி நேர்கிறது? மதுவில் இருக்கும் ‘ஆனந்தப் பொருளு’க்குப் பெயர் ஆல்கஹால். ஆக்ஸிஜனைப் போல் ஆல்கஹாலும் குடிநோயாளிகளுக்கு அனுதினமும் அவசியம். என்ன காரணம்? 

போதை! 
இது எப்படி ஏற்படுகிறது? 
‘எண்டார்பின்’ (Endorphin) என்ற சந்தோஷ சமாசாரம் செய்யும் சதி. 
அது என்ன எண்டார்பின்?

சுருக்கமாகச் சொன்னால், பெருமகிழ்ச்சியில் திளைக்கும்போது உங்கள் மூளையில் உருவாகும் ஒரு ரசாயனம்தான் ‘எண்டார்பின்’. 

விளக்கம் தேவை என்றால், நீங்கள் நன்றிப் பெருக்கில் நண்பரைக் கட்டி அணைக்கும்போது... உங்கள் காதலை காதலி ஏற்றுக்கொள்ளும்போது... பிடித்த இணையுடன் உறவில் உச்சத்தை எட்டும்போது... இப்படி நீங்கள் பரவசப்படும்போதெல்லாம் உடலில் அமுதசுரபியாகச் சுரப்பது எண்டார்பின்.

மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், மூளையில் எண்டார்பின் சுரப்பதைத் தூண்ட, காற்றில் உடல் பறப்பது போல் ஒரு போதை தலைக்குள் ஏறுகிறது. 

எண்டார்பின் கொடுக்கும் இந்த  ஏக சுகத்தை, மூளை தனது அழிக்க முடியாத ஹார்டு டிஸ்க்கில் நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்கிறது. 
நாளடைவில் உடலும் மூளையும் அந்த சுகபோக அனுபவத்துக்குப் பழகிவிட, குறிப்பிட்ட நேரத்தில் அந்த சுகத்தைத் தேடி அலைகிறது. 
‘மணி ஆறாச்சு... சரக்கு எங்கே?’ என்று மூளை கேட்கிறது. இப்படித்தான் பலரும் குடி போதைக்கு அடிமையாகின்றனர்.

மது குடித்ததும், ஆல்கஹால் நேராக சிறுமூளைக்குச் (Cerebellum) சென்று “ஹலோ!” சொல்கிறது. வீட்டுக்கு விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்ச நேரம் அம்மாவை மறந்துவிடும் குழந்தை மாதிரி, இந்தப் புதிய நட்பில் மூளை எனும் எஜமானரின் கட்டுப்பாட்டிலிருந்து சிறுமூளை விலகிவிடுகிறது. 

மது குடிப்பவர்களின் கண்களில் போதை தெரிவதும், கால்கள் பின்னுவதும், வாய் குழறுவதும், லேசான மயக்கத்தில் திளைப்பதும் இதனால்தான்!

ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் தினமும் 3 பெக் மது அருந்தினால், அவரது கல்லீரல் பாதிக்கப்படுவது உறுதி. ஆல்கஹால் என்பது முழுக்க முழுக்க மாவுச்சத்து நிரம்பிய அமிலம். 

அது உடலுக்குள் அதிகமாகப் போனால், கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தன்னிடம் சேமித்துக் கொள்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் அவர் தொடர்ச்சியாக மது அருந்துகிறார் என்றால், கல்லீரல் செல்கள் பாதிக்கப்படும். 
ஈரம் மிகுந்த மரங்களில் கறையான்கள் யோசிக்காமல் கூடு கட்டுவதைப் போல், கெட்டுப் போன கல்லீரல் செல்களில் கொழுப்பு செல்கள் சுலபமாகக் குடியேறிவிடும். 

இதனால் கல்லீரல் லேசாக வீங்கத் தொடங்கும். இதன் பெயர் ‘ஃபேட்டி லிவர்’ (Fatty liver). கல்லீரல் பாதிப்பின் முதற்கட்டம் இது; அறிகுறி எதுவும் வெளியில் தெரியாது. இதை நினைத்து ‘வயிறுதான் சமத்தாக இருக்கிறதே’ என்று குடிநோயாளிகள் சந்தோஷப்பட முடியாது. 

இந்தக் கட்டத்தில் அவர்கள் சுதாரித்தால் ஆச்சு! இல்லாவிட்டால் அவர்களின் மொத்த ஆரோக்கியமும் போச்சு! வருஷத்துக்கு ஒருமுறை வயிற்றை ஸ்கேன் செய்து, கல்லீரல் பரிசோதனை (LFT) செய்து, அதன் நிலைமையைப் புரிந்து, மதுவை மறந்து, தகுந்த மாத்திரை, மருந்துகள் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும்.

இல்லையென்றால், ஆறுமுகத்துக்கு ஆன கதிதான் உங்களுக்கும் ஆகும். ஆறுமுகத்துக்குக் கொத்தனார் வேலை. மனைவி கீரை விற்பவர். 

விபத்தில் கணவனை இழந்த மகள் உடனிருப்பது வீட்டுக்குக் கூடுதல் சுமை. அந்த சோகத்தில் குடிக்க ஆரம்பித்தார். காலையில் ஒரு குவார்ட்டர் குடித்தால்தான் கட்டுமானக் கரண்டியைக் கையில் எடுக்கமுடியும். அப்படி ஒரு மெகா குடி!

ஆறுமுகம் ஆரம்பத்தில், “பசி இல்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை, வாந்தி வருகிறது, வயிறு வலிக்கிறது” என்றுதான் என்னிடம் வந்தார். அப்போதே “மதுவைத் தொடாதே!” என்று எச்சரித்தேன். “என்னால குடிக்காம இருக்க முடியல, டாக்டர்” என்றார். 

அவருக்கு மஞ்சள் காமாலை வந்தது. 
பாபநாசம் போய் பச்சிலை மருந்து சாப்பிட்டார். “இது குடியால் வந்த காமாலை. 
பச்சிலைச் சாற்றுக்குக் கட்டுப்படாது. குடிப்பதை நிறுத்தினால்தான் காமாலை அடங்கும்” என்றேன். அவர் புரிந்துகொள்ளவில்லை. 
குடிப்பதையும் விடவில்லை.

ஆறு மாதத்துக்குள் ஆறு கிலோ எடை குறைந்தது. 

நெஞ்சு எலும்பெல்லாம் வெளியில் தெரிந்தது. 
“எங்கிருந்துதான் வந்து சேர்ந்ததோ” என அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு வயிற்றில் நீர் கோர்த்து, பானை மாதிரி வீங்கிவிட்டது.
 அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. பணக்கஷ்டம். அரசு மருத்துவமனைக்குப் போனார். ஸ்கேன் ரிப்போர்ட் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) என்றது.
 மாதாமாதம் அங்கே அட்மிட் ஆகி வயிற்றுக்குள்ளிருந்து சுமார் மூன்று லிட்டர் வீச்சம் எடுத்த திரவத்தை ஊசி மூலம் வெளியில் எடுத்துக் கொண்டு வந்தார். 
அதிக பலனில்லை.

பாதை தெரியாதவருக்குப் பார்வையும் தெரியாமல் போனால் எப்படி இருக்கும்? 

ஆறுமுகத்துக்கு வயிற்றில் நீர் சேர்ந்தது போதாமல், கால்களிலும் நீர் சேர்ந்து யானைக்கால் போன்று வீங்கி விட்டது. நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் விண்விண்ணென்று வலி உயிர் போனது. அவர் படும் அவஸ்தைகளைப் பார்த்து மகளும், மனைவியும் அழாத நாள் இல்லை. 

“எப்போதுதான் விடியும்?” என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு மரணம்தான் முடிவு சொன்னது. ஆம், ஓர் அந்திப்பொழுதில் ஆறுமுகம் குடம் குடமாக ரத்த வாந்தி எடுத்துச் செத்துப்போனார்.

மதுவென்பது ரசித்துப் புசிக்கும் பழச்சாறு அல்ல. மெல்லக் கொல்லும் விஷம்! எப்படி? இதை ‘லிவர் சிரோசிஸ்’ கட்டத்திலிருந்து தொடர்வோம். 

கல்லீரல் பாதிப்பின் இரண்டாவது கட்டம் இது. 60 மி.லி. மதுவைச் செரித்து முடிக்க இயல்பான கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். லேசாக வீங்கிய கல்லீரலுக்கு இரண்டு மணி நேரம் ஆகும். ‘ஃபேட்டி லிவர்’ கொண்ட ஒருவர், ஒரு நாளில் எட்டு ‘லார்ஜ்’ மது குடிக்கிறார் என்றால், என்ன ஆகும்? கணக்குப் போட்டுப் பாருங்கள்.

16 மணி நேரம் ஆகும். இதற்கிடையில் பித்தநீர் சுரப்பது, என்சைம்கள் உற்பத்தி என ஏகப்பட்ட வேலைகளையும் அது பார்க்க வேண்டும்.

 பாவம் கல்லீரல்! 
அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? 
அந்த 16 மணி நேரத்துக்குள் குடிநோயாளி அடுத்த ஆறு லார்ஜ்களை உள்ளே இறக்கிவிடுகிறாரே! இப்படி அடுத்தடுத்து கல்லீரல் தாக்கப்படுவதால், முதலில் தர்பூசணி போல் காணப்பட்ட கல்லீரல், இப்போது முள் முள்ளாக இருக்கும் அன்னாசி போல் மாறிவிடுகிறது. 
இதனால், கை இழந்தவர் கார் ஓட்டமுடியாத மாதிரி கல்லீரல் செயல் இழக்கிறது. இதைத்தான் ‘லிவர் சிரோசிஸ்’ (கல்லீரல் சுருக்கம்) என்கிறோம்.

இதன் கொடுமைதான் காமாலை, வயிறு வீக்கம், வீச்சம் எடுக்கும் நீர் கோத்தல், கால்வீக்கம் எல்லாமே! சிலருக்கு இது புற்றுநோயாகவும் மாறக்கூடும். இன்றைய நவீன மருத்துவத்தில் கல்லீரல் சுருக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கல்லீரலைக் காக்கும் வசதி வந்துவிட்டது என்றாலும், மதுவை மறந்தால் மட்டுமே பல ஆண்டுகள் நிம்மதியாக வாழ முடியும். 

இல்லையென்றால் எந்த நிமிடமும் கல்லீரல் செயல் இழந்துவிடலாம். அப்போது ‘கல்லீரல் மாற்று’ (Liver Transplantation) ஒன்றுதான் தீர்வு.

இது லேசுப்பட்ட சிகிச்சை அல்ல; சவால் மிகுந்தது. 

நினைத்த நேரத்தில் கல்லீரல் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் எல்லோருக்கும் இது பலன் கொடுக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. கல்லீரல் பாதிப்பின் மூன்றாவது கட்டம் ‘ஈசோபேஜியல் வேரிசஸ்’ (Esophageal varices). சிலரின் கால்களைப் பார்த்திருப்பீர்கள். 
குட்டிப் பாம்பு படுத்திருப்பது போல் ரத்தக்குழாய்கள் நெளிநெளியாய் புடைத்துக்கொண்டிருக்கும்.

இதுமாதிரிதான் குடிநோயாளியின் உணவுக்குழாயில் ரத்தக் குழாய்கள் வீங்கி வெடிக்கக் காத்திருக்கும். இந்த ‘எரிமலைகள்’ எப்போதெல்லாம் வெடிக்கிறதோ, அப்போதெல்லாம் லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி எடுப்பார்கள். அந்த அதிர்ச்சியில் மரணம் அடைபவர்கள் அதிகம். 

இதைக் குணப்படுத்துவது ரொம்பவே கடினம். கிளைமாக்ஸாக இன்னொரு கட்டம் இருக்கிறது. அதற்கு ‘ஹெப்பாடிக் என்செபலோபதி’ (Hepatic encephalopathy) என்று பெயர். புத்தி பேதலித்து, பித்துப் பிடித்த மாதிரி அலைய வைக்கும் நோய் இது.

மது குடிப்பவர்களை மரணப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் மிகவும் உறுதியாக இருப்பது இதுதான். மதுவின் பாதிப்பால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை மூளைக்குப் பரவுவதால் இந்தக் கொடுமை ஏற்படுகிறது; குடிநோயாளியை ‘கோமா’வுக்குக் கொண்டு சென்று மரணக்குழியில் தள்ளிவிடுகிறது. 

இதைத்தான் கிராமப்புறங்களில் ‘பித்தம் தலைக்கு ஏறி செத்துப்போனான்’ எனும் சொலவடையில் சொல்கிறார்கள்!
                                                                                                                                நன்றி: குங்குமம் டாக்டர் 
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-26.


 • 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)
 • பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)
 • குவைத் விடுதலை தினம்(1991)
 • டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் என்ற உலகின் முதல் இணை உலாவியை அறிமுகப்படுத்தினார்(1991)
 • =====================================================================================
வைகோவின் அந்தர்பல்டிகள்...

🔉"தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுகிறேன்" என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் வைகோ ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றிப் பேசி அரசியல் களத்தில் அடித்த அந்தர் பல்டிகள் கொஞ்சநஞ்சமல்ல... சாம்பிளுக்குக் கொஞ்சம் இங்கே...
🔉 எந்த ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து நடைபயணம் போனாரோ, அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது ஆரம்பித்ததுதான் வைகோவின் இந்த 'டமால் டுமீல்' அரசியல் விளையாட்டு.
*🔉பா.ஜ.க ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோவுக்கே 'பொடா' சட்டம் பூமராங்காகப் பாய்ந்தது.
🔉 "காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம், எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க 'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது" எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்த வைகோ அடுத்த சில வருடங்களில் தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பினார்.
🔉 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு பிரிப்பதில் தி.மு.க உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, 'பொடா' சட்டத்தில் உள்ளேதள்ளிய, ஒருகாலத்தில் "Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் ம.தி.மு.க விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லையென்பதால் அந்தக் கட்சியைத் தடை செய்யவேண்டும்" எனக்கூறிய 'அன்புச்சகோதரி' ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
🔉 2011 தேர்தலின்போது அதே 'அன்புச் சகோதரி' ஜெ. தான் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க, தன்மானம் தலை தூக்க, "கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் ம.தி.மு.க வுக்கு இல்லை" என துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.
🔉 தி.மு.க ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டை எப்போதும் வாபஸ் பெறமாட்டேன் என வாக்குமாறாமைக்கு வாய்ச்சொல்லால் முட்டுக்கொடுத்த வைகோ, கருணாநிதியின் சாதியைப் பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு சுதாரித்து, "தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்" என அறிக்கை விட்டார்.
🔉 "இது மாற்றத்திற்கான கூட்டணி; தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் கூட்டணி" என அதார் உதார் ரவுசு விட்டு, கோவில்பட்டி தொகுதியில் மனுத்தாக்கல் செய்வது திடீரென அதையும் வாபஸ் வாங்குவது என மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடி, கூட்டணிக் கட்சிகளுக்கே கிலி கொடுத்தார். கூடச் சேர்ந்த பாவத்துக்குக் கூட்டணி சகாக்களுக்கும் வாக்கிங் போவதும், வாலிபால் விளையாடுவதுமாக விளையாட்டுக் காட்டி முட்டுச் சந்தில் போய் மடாரென மோதவிட்டார்.
🔉 "தேர்தலில் தி.மு.க வீழ்ந்ததே எனது ராஜதந்திரத்தால்தான்" என சொன்னதும் நண்டு சிண்டெல்லாம் கமுக்கமாகச் சிரித்தபடி கலாய்க்க, 'அண்ணனுக்கு என்ன ஆச்சு..?' எனச் சொந்தக் கட்சிக்காரர்களே கேட்கப் போய் கொஞ்சம் அரண்டுதான் போனார்
🔉விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்வரை பச்சைத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டேன் என உருக்கமாகச் சத்தியம் செய்த இவர் அப்படியே அப்பீட்டாகி கொஞ்சநாளில் தலைப்பாகை இல்லாமல் திரும்பி வந்தார். தலைப்பாகையைக் காணோம்!
🔉 ‘கேப்டன்தான் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றவர், ‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னது தப்புதான்’ என்று தாறுமாறாய்த் தண்டால் எடுத்தார்.
🔉 அதுவும் போதாதென்று, அப்போலோவில் அம்மாவைப் பாரக்கப் போன கேப்பில் 'லண்டன் டாக்டர் எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தார்..' எனச் சின்னப்புள்ளைத்தனமாக பெருமைபேசியும், காவிரி மருத்துவமனையில் ரவுண்டு கட்டப்பட்டும் சென்றவருடக் கடைசியில் ரொம்பவே கலங்கிப் போனார். 'எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே..'ன்னு மக்கள் பரிதாபமாகப் பார்க்க, 'என்னம்மா அங்க சத்தம்..?' எனக் கேட்டபடி நைஸாக எஸ்ஸாக ம.ந.கூ. இப்போது மல்லாக்கக் கிடக்கிறது.
🔉அப்புறம் அய்யனார் போல அரிவாளைத் தூக்கிக்கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்கக் கிளம்பியவரை 'கொஞ்சநாளாவது பஞ்சாயத்து நிம்மதியா இருக்கலாம்...' என மொத்தத் தமிழக மக்களும் சேர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
🔉 'எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியில் போடவில்லை என்றால் அண்ணா படமே உலகிற்குத் தெரிந்திருக்காது' என இப்போது எடக்குமடக்காகப் பேசி எத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். 'அ.தி.மு.க வை யாரும் அழிக்க விடமாட்டேன்..!' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..?' என மக்களே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்கள்.
🔉 மைக்கைக் கிட்டே கொண்டுபோனாலே எக்குத்தப்பா எதையாவது பேசி, கடைசியில் கட்சியையே நட்டாற்றில் இறக்கிவிட்டு அப்போவும் 'எல்லாம் என் ராசதந்திரம்லே..!'ன்னு சொல்லுவாரோ என்னவோ..?

நன்றி :விகடன்