புதன், 31 டிசம்பர், 2014

பத்மஸ்ரீ கமல் ஹாசன்

சில துளிகள்.

oசமீபத்தில் மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் நடந்த ஒரு மாநாட்டில், 'புகையில்லா புகையிலையும் பொது சுகாதாரமும்: ஒரு உலகளாவிய பார்வை' என்ற ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 
இதன்படி 70 நாடுகளில் 300 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பான் பீடா, குட்கா, கைனி என்று ஏதாவது ஒரு வடிவத்தில் வாயில் போட்டு அதக்கும் வழக்கமுடையவர்கள். 

oஇந்த புகையிலை அடிமைகளில் இந்தியர் மற்றும் வங்க தேசத்தினரின் பங்கு மட்டும் 80 சதவீதம். இதில் பெரும்பான்மையினர் 13 - 15 வயதினர். கிராமப்புற பெண்களின் பங்கு 1
8.4 சதவீதம் என்பது இன்னும் கொடுமை. பலவித புற்றுநோய்கள் முதல் இதய நோய்கள் வரை வரும் என்பதால் மத்திய அரசு புகையிலையிலிருந்து விடுதலை பெற விரும்புவோருக்கு உதவ, 'க்விட்லைன்' என்ற இலவச தொலைபேசி சேவையை துவங்கவுள்ளது. 
புகையிலைப் பழக்கத்தை நிறுத்த உதவும் தொலைபேசி சேவை, 
புகையிலை ஏக்கத்திலிருந்து விடுபட உளவியல் ஆதரவாக இருக்கும். 


oஉடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க மரபணுவில் 'பைபா' (பீட்டா அமினோஐசோப்யூடைரிக் ஆசிட்) என்ற“ஸ்விட்ச்” உள்ளது. இதை முடுக்கினால் கொழுப்பை உடல் தானாக கரைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 
இந்த 'ஸ்விட்ச்' நாம் உடற்பயிற்சி செய்யும்போது முடுக்கிவிடப்படுகிறது. இதை பருமனாக இருப்பவர்களின் உடலில் முடுக்கிவிட வழி கண்டு பிடிக்க இப்போது ஆய்வு நடக்கிறது. '
இந்த பைபாவை மாத்திரை அல்லது டானிக் வடிவில் கொண்டுவர முடியுமா என்று இப்போது ஆய்வுகள் நடக்கின்றன. 
பைபா வந்துவிட்டால் உடல் பருமனுக்கு பை பைப்பா! 


oநியூயார்க்கிலுள்ள உளவியல் வல்லுனர் ஜூலியா ஹோம்ஸ், 18 வயதுக்கும் மேற்பட்ட 292 கல்லூரி மாணவ, மாணவியரிடையே ஆய்வு செய்தார். இவர்களில் 90 சதவீதத்தினர் ஆன்லைனில் இருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை பேஸ்புக்கிலேயே செலவழிப்
பவர்கள். 'ஒரு மது அடிமை மது இல்லா விட்டால் எப்படி எரிச்சலடைவாரோ அதே போல இதில் 10 சதவீதத்தினரால் பேஸ்புக் இல்லாமல் இருக்க முடியாது' என்கிறார் ஜூலியா. 
சுயகட்டுப்பாடு இல்லாத இவர்கள் போதைக்கு அடிமையாகும் வாய்ப்பும் அதிகம். 


oகுட்டீஸ் கூட கண் கண்ணாடி அணிவது கண்டு அங்கலாய்க்கிறீர்களா? 'ஆப்டோமெட்ரி அண்ட் விஷன் சயின்ஸ்' இதழின் ஆய்வுக் கட்டுரை மேலும் திகைக்க வைக்கும். 
இனி பிறந்து 36-72 மாதங்கள் உள்ள குழந்தைகளைக்கூட பெற்றோர், கண் மருத்துவரிடம் காண்பித்து சோதிக்கவேண்டும். 
அப்போதுதான் மாறுகண், சோம்பல் கண், கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என்கிறது அந்த ஆய்வுக் கட்டுரை.
oஆக்ஸ்போர்ட் அகராதி தளத்தைக் கேட்டால் 2014ல் சூடுபிடித்த இ - சிகரெட் சந்தையில் புழங்கிய வேப் (Vape) என்ற சொல்தான் என்கிறது. ஆனால் டிக்சனரி.காம் தளமோ, எபோலா வைரஸ் பரவியதை ஒட்டி அதிகம் புழங்கிய எக்ஸ்போஷர் என்ற சொல்தான் என்கிறது. மெரியம்வெப்ஸ்டர் தளமோ, கல்ச்சர் என்ற சொல்தான் என்று புள்ளி விவரம் தருகிறது. 

 
oஇந்தியாவில் உள்ள ஆமை வேக இணையத்தை கருத்தில் வைத்து, 'ஆப்லைன்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது யூட்யூப். னால் ஒரு படம் அல்லது இசை வீடியோவை டவுண்லோடு செய்து, 48 மணிநேரத்திற்குள் பார்த்துவிடவேண்டும்.


oசோனி நிறுவனம் தயாரித்து டிசம்பர் 25ல் வெளிவரும், 'தி இன்டர்வியூ' படத்தில் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கொல்லப்படுவதுபோல காட்டப்படுகிறது.
'படத்தை நிறுத்து' என்று கார்டியன்ஸ் ஆப் பீஸ் என்ற வட கொரிய ஹேக்கர்கள் எச்சரித்துள்ளனர். 
விரும்பாத தியேட்டர்கள் படத்தை நிறுத்தலாம் என்கிறது சோனி.

oபேஸ்புக்கின் இந்திய பயனாளிகளின் எண்ணிக்கை 112 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. 
இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டின் பரவலே காரணம். 
                                                                                  டிம் பெர்னெர்ஸ் லீ 
                                      
       o 1999ல் இன்டர்நெட்டை உருவாக்கிய கணிப்பொறி விஞ்ஞானி.
============================================================

செவ்வாய், 30 டிசம்பர், 2014

<> நிலவேம்பு மகத்துவம்<>

நிலவேம்பு என்பது 2 அடி வரை வளரும் ஒரு செடி வகை. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரும். 
தாவரவியலில் Andrographis  Paniculata  என்று இந்தச் செடியை அழைக்கிறார்கள். 
நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிலவேம்பு கஷாயம் இந்த செடியிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.  இந்தக் கஷாயத்தை 9 கூட்டுமருந்துகள் கலந்து சித்த மருத்துவர்கள் கொடுப்பார்கள். 
இந்த கஷாயத்தைதான் நிலவேம்பு குடிநீர் என்று சொல்கிறோம். 
 கடந்த சில வருடங்களாக விதவிதமான காய்ச்சல்கள் நம் ஊரில் வந்துகொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். 
டெங்கு காய்ச்சல், பறவைக்  காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று புதிய புதிய காய்ச்சல்கள் வரும்போது வழக்கமான மருத்துவ முறைகளால் சமாளிக்க முடியாத சூழ்நிலையை  நிலவேம்பு சாதித்திருக்கிறது.

‘‘திடீரென பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்த போது நவீன மருத்துவம் இருந்தும் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கமே ஸ்தம்பித்துப்  போனது. 

ஒரு பக்கம் அதை பற்றிய பயம், மறுபக்கம் அது என்ன காய்ச்சல் என்று தெரியாத நிலை, போதுமான பரிசோதனை நிலையங்கள் இல்லாமல்  மாதிரிகளை எடுத்துக் கொண்டு அலைக்கழிந்த இக்கட்டான நேரத்தில் நிலவேம்பு பெரிய உதவி செய்தது. 
மற்ற மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு  அதிகமாக இருந்தபோதும், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் நிலவேம்பு குடிநீர் கொடுத்த பாதுகாப்புதான் என்று  உறுதியாக சொல்லலாம். 
டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதித்த இக்கட்டான சூழல்களில் நிலவேம்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் அரசாங்கமே அதை விளம்பரப்படுத்தி, மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீருக்காக தனிப்பிரிவே தொடங்கியது.

எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் 9 கூட்டு மருந்துகளுடன் கலக்கப்பட்ட நிலவேம்பு கலவை கிடைக்கும். 

அரசு மருத்துவமனைகளில் சித்த  மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் டாம்ப்கால், சென்னை அடையாறு பகுதியில் செயல்படும் சித்த மருத்துவர்களின் கூட்டுறவு சங்கம் ஆகிய  இடங்களில் கிடைக்கும். காதிபவன், சித்த மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் போன்றவற்றிலும் நிலவேம்பு கிடைக்கிறது. 

நிலவேம்பு குடிநீர்  ?

கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 

ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு  போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். இந்த தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிய பிறகு, வடிகட்டி  சாப்பிடலாம். காய்ச்சல் இருப்பவர்கள் காலை, இரவு என இரண்டு வேளை தலா 60 மி.லி. சாப்பிட்டால் போதும். 
நிலவேம்பு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதால், காய்ச்சல் இல்லாதவர்களும் தடுப்பு மருந்தாக இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். 
நிலவேம்பின்  கசப்பைப் போக்க கொஞ்சம் சர்க்கரை, வெல்லம், தேன் என ஏதாவது ஒன்றை கலந்து காய்ச்சி தேநீர் போலவும் பயன்படுத்தலாம். தேன் ஒரு சிறந்த  மருந்து என்பதால் தேனுக்கு முன்னுரிமை கொடுப்பது இன்னும் நல்லது. நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காமல் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

 மருத்துவ பயன்கள்? 


எந்த விஷக்காய்ச்சலாக (Viral Fever) இருந்தாலும் நிலவேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும்.


 காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரஸையும்  முழுமையாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டுவலியும் காணாமல் போய் விடும். காய்ச்சல் வந்தவுடன் பலரும் ஆங்கில மருத்துவத்தையே  தேடுவார்கள். உங்கள் திருப்திக்காக ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது நிலவேம்பு குடி நீரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
  நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. அதனால், 5 நாட்களில் ஆங்கில மருத்துவம் குணப்படுத்துகிறது என்றால், நிலவேம்பு  குடிநீர் சில நாட்களில் குணப்படுத்த உங்களுக்கு உதவி செய்யும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும். 

நம் வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவச் செலவுக்கே சரியாகிவிடுகிற இன்றைய சூழலில், மிகக்குறைந்த செலவில் குணப்படுத்தும் சித்த  மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலவேம்பு நமக்கு உணர்த்தியிருக்கிறது. இது சித்த மருத்துவம் என்கிற கடலில் ஒரு துளிதான்.

 இன்னும்  எத்தனையோ விஷயங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கின்றன.
 மக்களிடம் இப்போது இயற்கை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நெல்லிக்காய் கலந்த தைலம், மருதாணி கலந்த எண்ணெய், பழங்கள் கலந்த ஃபேஷியல் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். 

நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு எபோலா வருவதில்லை . 

பனி,  மழைக்கு பயந்து வீட்டிலேயே நம்மால் உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால், இந்த பருவத்திலும் எங்கள் வீட்டில் யாருக்கும் உடல்நலக் குறைவு  இல்லை என்று சொல்லும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க நிலவேம்பு நமக்கு உதவி செய்யும்!

===============================================
கடலை மாவு அல்லது பயத்தம்மாவு இதில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சிறிது பால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து சிறிது நீர் விட்டு குழைத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து கழுவிவிடுங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.
==============================================================

திங்கள், 29 டிசம்பர், 2014

இதயமே...இதயமே....,

நம் உடல் உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமானது. 
 இதயத்தின் வலது புறத்தில் 2, இடதுபுறத்தில் 2 என நான்கு அறைகள் உள்ளன. 
இடது பக்க அறைகளில் சுத்த இரத்தமும் வலதுபுற அறைகளில் அசுத்த இரத்தமும் உள்ளன. 
அசுத்த இரத்தம் வலது புற அறைகளில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்தமாக்கப்பட்டு இதயத்தின் இடதுபுற அறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. 
இங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு இரத்தக்குழாய்கள் மூலம் இரத்தம் சென்றடைகிறது. 
இதயம் சுருங்கி விரிவதால் இந்நிகழ்ச்சி நடைக்கிறது. சுத்த இரத்தமும் அசுத்த இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் அது ஆபத்தானது. மரணத்திற்கே காரணமாகிவிடும். 

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது நுரையீரல் வேலை செய்யாதிருப்பதால் இரத்தத்தை சுத்தமாக்கும் பணி குழந்தையின் இதயத்தில் நடைபெறுவதில்லை.

 எனவே இதயத்தின் இடப்பக்க, வலப்பக்க அறைகளுக்கிடையில் ஒரு இணைப்பு காணப்படும். 
இந்த இணைப்பு இருப்பதால் தாயின் உடலில் இருந்து சுத்த இரத்தம் குழந்தையின் இதயத்தை அடைந்து அங்கிருந்து குழந்தையின் உடலுக்கு சென்று அசுத்தமடைந்து மீண்டும் தாயின் உடலுக்குள் சென்றடையும். எனவே குழந்தையின் இதயத்தில் அசுத்த இரத்தம் இருப்பதில்லை. குழந்தையின் இதயம் இரத்தத்தை கடத்திவிடும் குழாயாகவே செயல்படுகிறது. 
குழந்தை பிறந்தவுடனேயே முதல் மூச்சு விடும்போது நுரையீரல் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இப்போது பிறந்த குழந்தையின் இதயத்தின் இடது அறைகளில் சுத்த இரத்தமும் வலது அறைகளில் அசுத்த இரத்தமும் வந்துவிடும். 
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது இருந்த வலது, அடது அறைகளை இணைக்கும் இணைப்பில் அசுத்த இரத்தமும், சுத்த இரத்தமும் கலந்துவிடும் அபாயம் குழந்தையின் இதயத்தில் உண்டு. 
ஆனால் அந்த  இணைப்பு துவாரத்தை ஒரு சவ்வு மூட ஆரம்பித்து விடுவதால் இந்த அபாயம் நிகழ்வதில்லை. 
இந்த சவ்வு எப்படி உடனே வளர ஆரம்பித்து சுத்த இரத்தமும், அசுத்த இரத்தமும் கலக்காமல் தடுக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புதிராவே உள்ளது. 
குழந்தை பிறந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 முறை இதயம் துடிக்கிறது. 
======================================================================

ஆண்களின் ஆயுட்காலம், பெண்களை விட 7 வருடங்கள் குறைவு.
ஆண்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் பெண்களை விட 4 மடங்கு அதிகம்.
உடல்நலக் கோளாறுகளுக்காக மருத்துவரை நாடும் ஆண்களின் எண்ணிக்கை, பெண்களைவிட 3 மடங்கு குறைவு.
புற்றுநோய்க்குப் பலியாவதில் ஆண்களின் பங்கு 2 மடங்கு அதிகம்.
விபத்துகளில் உயிரிழப்பதிலும் ஆண்களுக்கே முதலிடம்.

 ஆண்கள் அவசியம் ஏற்பட்டால் கூட, நேரமும் பணமும் வேஸ்ட்டுங்கிற மனப்பான்மையில, தங்களோட ஆரோக்கியத்தை அலட்சியம் பண்றாங்க. இந்த அலட்சியம் தொடர்கிற போதுதான், திடீர்னு ஒருநாள் யாருமே எதிர்பார்க்காத நேரத்துல அவங்க இறந்து போறாங்க.
 பொருளாதாரம் உள்பட, பல விஷயங்களுக்கும் ஆண்களை நம்பியிருக்கிற இந்தியச் சமூகத்துல, ஒரு ஆணோட இறப்புங்கிறது அவனைச் சார்ந்திருக்கிற பெண்களுக்கும் குடும்பத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

ஆண்கள் தங்களோட ஆரோக்கியத்துல அக்கறை காட்டினா, அவங்களோட இறப்பு விகிதத்தை 80 சதவிகிதம் குறைக்கலாம்.

மார்பகப் புற்றுநோய் இருக்கானு சோதிக்கிற மார்பக சுய பரிசோதனையை பெண்களுக்கு வலியுறுத்தறோம். 
ஆண்களுக்கு ஏற்படற விதைப்பை புற்றுநோய்க்கும் அப்படியொரு சுய பரிசோதனை அவசியம். 15 வயசுலேருந்தே இதை ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரலாம். 
20 - 30 வயசுல விதைப்பை புற்றுநோய் தாக்கிற அபாயம் அதிகம். 30 பிளஸ்லயே ஆண்களுக்கு இன்னிக்கு நீரிழிவு வருது. 
பெற்றோருக்கு நீரிழிவு இருந்தா, பிள்ளைகள், இளவயசுலேருந்தே வாழ்க்கை முறையை மாத்திக்கப் பழகணும். முறையான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மூலமா நீரிழிவை 10 வருஷங்களுக்குத் தள்ளிப் போடலாம். சிறுநீரகங்கள் செயலிழந்து போறதைத் தவிர்க்கலாம்.

40-50 வயசுல பிராஸ்டேட் சுரப்பியில உண்டாகிற புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகம்.
 கண்களோட வெளித்திரை சுருங்கி விரிவதில் பிரச்னை, கேட்டராக்ட்னு பலதும் 45 வயசுக்குப் பிறகுதான் தொடங்கும். 
40 வயசுக்குப் பிறகு ஒவ்வொரு ஆணும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து ரத்தக்குழாய்கள்ல கொழுப்பு படிஞ்சிருக்கானு பார்க்கணும். 
இந்த வயசுல பலருக்கு ஆண்மைக்குறைவு வரும். 
அதை வயசானதோட அறிகுறியா அலட்சியப்படுத்தக் கூடாது. ஆண்மைக்குறைவால பாதிக்கப்படறவங்களுக்கு, அடுத்த ஒன்றரை வருஷத்துல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். 
60 வயசுல ரத்த அழுத்தம், தைராய்டு, புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளணும். 
70 பிளஸ்ல உள்ள ஆண்களுக்கு எலும்புகள் பலவீனமாகி, ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கலாம். சுலபமா கீழே விழுந்து, அடிபட்டு, எலும்புகள் முறிஞ்சு போய், படுத்த படுக்கையாகலாம். 
இதைத் தவிர்க்க அவங்க தங்களை எப்போதும் சுறுசுறுப்பா வச்சுக்கணும். உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. 
பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை ஈரமில்லாம, வழுக்காத தரையுடன் கூடியதா மாத்தணும். அந்த வயசுல துணையை இழக்கறது, பிள்ளைகளோட உதாசீனம், பொருளாதார நலிவுனு பல காரணங்களால மனரீதியா ரொம்பவே உடைஞ்சு போயிடுவாங்க. 
அதுலேருந்து அவங்களை மீட்டெடுக்க, கவுன்சலிங்கும், ஆதரவு சிகிச்சையும் அவசியம்.

நம்மளோட மரபணுவுல உள்ள டெலோமேர் (telomere) கொஞ்சம் கொஞ்சமா குறையற போதுதான் வயோதிகம் தாக்குது. நோய்கள் வந்து, இறப்பு நெருங்குது. சிகரெட், குடி மாதிரியான பழக்க
ங்களைத் தவிர்த்து, சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, கூடவே இந்த டெலோமேரை அதிகப்படுத்தற ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கிட்டா, ஒவ்வொருத்தரும் 100 வயசு வரை வாழலாம். 
அதுவும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வாழ முடியும்

ஒரு நாளைக்கு 1,440 நிமிடங்கள் உள்ளன.
 அதில் வெறும் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதால் உண்டாகும் பலன்கள் தெரியுமா?

மாரடைப்பு அபாயம் குறையும். மூளையில் ஏற்படுகிற பக்கவாதம் தவிர்க்கப்படும்.
 கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்.
 ரத்த அழுத்தம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் வெகுவாகக் குறையும். 
எலும்புகள் உறுதியாகும். 
இல்லற வாழ்வில் ஆரோக்கியம் நீடிக்கும். 
மன அழுத்தம் குறையும்.
                                                                                                 -மருத்துவர் காமராஜ்.
===========================================================================================
உள்ளடி சித்துகள்


========================================================================
அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம்
இவர் மீது இவரது முன்னாள் சீடர் சவுகான், பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்ததாகவும், சவுகான் கூறியுள்ளார்.
கடவுளை சந்திக்க எவ்வளவு எளிதான வழி.
கடைசியில் அவர்கள் கடவுளை சந்தித்தார்களா -இல்லையா?என்று சவுகான் சொல்லவில்லையே?
அவர்களின் கடவுள் பின் எதற்கு ஆண்மை என்ற சமாச்சாரத்தை உண்டாக்கினாராம்.?
ஒருவேளை தனக்கில்லாதது .தன் சீடர்களுக்கு எதற்கு என்ற  குருமேத்
சாமியாரின் பெருந்தன்மையாகக் கூட இருக்கலாம்.

=================================================================================
0மற்றொரு கடவுள் அவதாரங்களின் 
0உள்ளடி சித்துகள்:


ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கண்ணான கண்ணா?
உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். 

சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. 

ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.


க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. 

கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.
சூரியவணக்கம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். 

அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியவணக்கம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பொதுவாக சூரியவணக்கத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். 

சூரிய வணக்கத்தை சூரியன் உதிக்கும் வேளையில்தான் செய்ய வேண்டும்.
சூரியன் உதித்து சூடாக கொடிக்கும் வேளையில் செய்தால் கண்கள் பார்வையை இழக்கும் அபாயம் வரலாம்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். 

பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். 

அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். 

புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. 
ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். 

அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. 
சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.
அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. 

ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. 
அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.


 கண் புரை
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான பார்வையிழப்புக்குக் காரணம் கண் புரை.
கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதேயாகும். 
கண்புரை விபத்துகளினாலும், நீரிழிவு காரணமாகவும் மேலும் சில காரணங்களாலும் வரலாம். கண் புரை என்பது முற்றிலும் குணப்படுத்தகூடிய குறைபாடே.

மேலும் கண்புரையை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்.

கண்புரை ஆபரேஷன்  செய்வதற்க்கு மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை.

  கண்நீர் அழுத்த நோய்[க்ளகோமா]

'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது. 
 "ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். 
அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம்.
தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

 விழித்திரை [ நீரிழிவு]நோய்:

பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். 
மேலும் பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு  இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 
மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.


* ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும் மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான். 

வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் சி - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் அவசியம்.வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவறில் தேவையான அளவு இருக்கிறது.

 கண்கள்  முதல் உதவி கள் :

0 கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்க்காக கண்களைக்  கசக்காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணீர் பெருக்கெடுத்து அவற்றை தானே  வெளியேற்றிவிடும். உறுத்தல் அதிகமாக இருக்குமேயானால் சுத்தமான தண்ணீரினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம் தூசுகளை அகற்றிவிடலாம்.

0 கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஆசிட் தெறித்துவிட்டால், கண்ணில் சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற்க்கும் வரை அலம்ப வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

0 வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. 
சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்பபடும்.

கணினி பார்வை:

கணினி யில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுபவர்கள் 20 - 20 - 20 ஃபார்முலா வினை  பயன்படுத்தினால் சில பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். 
அதாவது கணினி யில் தொடர்ந்து
பணியாற்றும்போது 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 நொடிகள் பார்ப்பதும், அல்லது 20 நொடிகள் கண்களை மூடி ஒய்வு  செய்வதும், 20 நொடிகளுக்கு ஒருமுறை  கண்களை இமைப்பதும் மிக உதவியாக இருக்கும். 
ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி தலைவலி, வாந்தி, குமட்டல் இருக்குமேயானல் உடனடியாக கண் மருத்துவரிடம் முழுமையான கண் பரிசோதனை செய்வதன்மூலம் பர்வையிழப்பைத் தடுத்துக் கொள்ளலாம்.

0 நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் குறிப்பாக பகல் நேரங்களில் வாகனம் ஓட்டுபவராகவும் இருந்தால் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய குளிர் கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது. 
முக்கியமான விஷயம், ஒரு கண் மருத்துவரிடம் அல்லது கண்ணியலாளரிடம் கண் பரிசோதனை செய்து கொண்டபின் அவர் பரிந்துரைக்கும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது.

கண்தானம் செய்வீர்:

தா ன த்தில் சிறந்தது கண் தானம். 
கார்னியல் பார்வைக்கோளாரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் தானமாகக் கிடைத்தால் மட்டுமே செய்யக்கூடிய கார்னியா மாற்று ஆபரேஷன் மூலமே மீண்டும் பார்வை கிடைக்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்க்காக கண்கள் தானமாக தேவைப்படுகிறது.

நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மரணமடைந்துவிட்டால், மரணமடைந்தவரின் உறவினரைச் சந்தித்து,  மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்குமாறு ஊக்குவித்து ஆறு மணி நேரத்துக்குள் அவர்களது கண்களை தானமாக வழங்கினால் அது உங்கள் வாழ்வில் ஒருவருக்கு ஒளியேற்றிய காரியமாகும்.


சனி, 27 டிசம்பர், 2014

இளைமைக்கு இனியவை நான்கு, ,


1. மனதை அமைதி படுத்துங்கள்.
மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.

புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.


2. தியானம் . 


பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.

3. உணவு ருசியுங்கள். 
உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.

தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.
உண்ணும் போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.
காலை உணவை தவிர்த்தல், ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு, சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள் ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.

பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. 


4.  உங்களை காதலியுங்கள்.
 
நம்மை நாமே விரும்புவதும், அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.

காலை,அல்லது மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்தேசென்றுவருவது, மாடிப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் போன்றவை உங்களை சுறு சுறுப்பாக வைத்திருக்கும்.
மற்றவர்களுக்கும் உங்கள் இளமையை காண்பிக்கும் வழி.லூயி பாஸ்டர் 

வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலை அக்காலத்தில் உண்டு செய்திருந்தது. வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு, நீருக்கு பயந்து ஒடுங்கி இருந்து பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். 
'நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையைக் கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன. 
ஒன்றும் நடக்கவில்லை. 
பாஸ்டர் பல நாய்களின் பின்னர் உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். 
அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்தார். 
நாயின் உமிழ் நீரை தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டுப் பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயது சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனைக் குணப்படுத்தினார். 
ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. 

மருத்துவர்கள் கையுறை அணிவது, அறுவை சிகிச்சை கத்திகளை ஸ்டெரிலைஸ் செய்வது ஆகியவற்றையும் இவர் வலியுறுத்தினார். உயிர் இழப்பை இதனால் அதிக அளவில் தடுக்க முடிந்தது . 

ஆந்த்ராக்ஸ் நோயும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கால்நடைகள் மொத்தமாகச் செத்து விழுந்தன. 
அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கொன்று, மீண்டும் அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் பாஸ்டர். 
ஐரோப்பா முழுக்கப் பட்டுபுழுக்கள் செத்துக்கொண்டு இருந்தன. நோய் வாய்ப்பட்ட பட்டுப் புழுக்களைப் பிரித்து வையுங்கள் என்று அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட பட்டு உற்பத்தி மையங்கள் தப்பித்தன. 
இத்தாலி தேசத்து பட்டு உற்பத்தி நிறுவனத்துக்கு இவரின் பெயரையே சூட்டினார்கள். 

இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்குப் போனது என்றால் இவரைத் திருமண நாளன்று இவரைக் காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். 
பாஸ்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கி போனார்கள். 
அங்கே அவர் தன்னை மறந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். 
“உனக்கு இன்னைக்கு கல்யாணம்!” என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். 
தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக உழைத்தவர் அவர்.
நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். நோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து நுண்ணுயிரி கோட்பாட்டை வெளியிட்டார். 
நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும் அவற்றைக் கண்ணால் காண முடியாது, மைக்ராஸ்கோப் கொண்டே அவற்றைக் காண முடியும் என்றும் சொன்னார். 

குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றைக் கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் என்றும் சொன்னார். 
பாலை கெடாமல் காக்க நன்றாகச் சூடாக்கி உடனடியாகக் குளிர வைக்கும் முறையை இவர்தான் உருவாக்கினார் . 
வெறிநாய் கடிக்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் பிறந்த தினம்.
=============================================================================================அன்றும் 26 டிசம்பர்தான்

 , அதிகாலை நேரம் , 
இத்தனை உயிர்கள் ஒரே நேரத்தில் இயற்கை காவு வாங்கியது கொடூர சுனாமி. 
விடிகாலை சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கையில் 
"இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்"
செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர் திடீரென  'என்னப்பா இப்படி தரை அதிர்கிறது "என   அதிர்ந்து எழும் காட்சியும் ஒளிபரப்பாகியது.
அதன் பின்னர்தான் இந்தோனேசிய நிலா நடுக்கம் தமிழகத்தையும் புரட்டி போடுகிறது என்ற உண்மை உறைத்தது .
மெரினாவில் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் ,கடல் பசிக்கு உணவானது தெரிந்தது.
கடலோர தமிழகம் முழுக்க ஆழிப்பேரலை தாண்டவம்.
தென் மதுரை ,பூம்புகார் ,கொற்கை முதலிட்ட தமிழரின் லெமுரியா கண்டம் கடற்கோளில் காணாமல்  போனது எப்படி என்று கண்ணெதிரே  காணமுடிந்தது.

இப்படியெல்லாம் நடக்குமா என்று சிந்திக்க கூட முடியாத ஒரு பெரும் துயரத்தை பல நாடுகள் சந்தித்தன.
 சொந்த, பந்தங்கள், உறவுகளை மொத்தமாக இழந்த, ஆதரவற்று நிர்கதியானவர்களும் இன்றும் ஆதரவற்ற முகாம்களில் தங்களின் வாழ்வை கழித்து வரும் வேதனைக்கு வழி வகுத்தது . 
2004 டிச., 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் இந்திய கடல் மற்றும் அதனை யொட்டிய குட்டி தீவுகளை ஒரு பதம் பார்த்தது.
 இந்தியா, தாய்லாந்து , இலங்கை, இந்தோனேஷியா ஆகியவை சுனாமியால் கடும் பாதிப்பை சந்தித்தன. 
ராட்சத அலைகள் 20 முதல் 30 மீட்டர் உயரம் வரை எழும்பி அனைவரையும் மிரட்டி , சுருட்டிக் கொண்டது. 

 2 லட்சத்து 28 , 000 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் கடலூர், நாகை கன்னியாகுமரி, குளச்சல் , சென்னை மெரீனா, புதுச்சேரி, என கடலோர பகுதி முழுவதும் காது பொறுக்க முடியாத ஓலம் எழும்பியது. 

இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
 தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். 
தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சுனாமி என்பது ஜப்பானிய சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. 
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. 
இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. 
இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.
சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு.
 சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். 
சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும்.
 கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். 
சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.
பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப்பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன.
 மலைப்பகுதியில் ஏற்படும்போது, எரிமலை உருவாகிறது. 
கடலில் பூகம்பம் ஏற்படும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலை உருவாகின்றன. ஆழிப்பேரலையின் வேகம், ஆரம்பித்த இடத்திலிருந்து கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். 
சாதாரணமாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் சுனாமி அன்று அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளும் சக்தி படைத்தது. 

=====================================================================================================

வியாழன், 25 டிசம்பர், 2014

2ஜி ஊழல்

பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு.

                                                                                                                                 -- வினவு கட்டுரை
முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்! இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது.
ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்..
கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.
காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.
மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார். ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.
பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.
எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது. நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.
அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. 
ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:
“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)
ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது. ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம். சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.
இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? 
தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)
இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”
(துக்ளக், 12.11.2014)
“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.
முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார். இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)
நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார். (துக்ளக், 19.11.2014)
இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது. இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)
“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)

                                                                                           நன்றி:
 -- வினவு
============================================================================================================================