இதயமே...இதயமே....,

நம் உடல் உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமானது. 
 இதயத்தின் வலது புறத்தில் 2, இடதுபுறத்தில் 2 என நான்கு அறைகள் உள்ளன. 
இடது பக்க அறைகளில் சுத்த இரத்தமும் வலதுபுற அறைகளில் அசுத்த இரத்தமும் உள்ளன. 
அசுத்த இரத்தம் வலது புற அறைகளில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்தமாக்கப்பட்டு இதயத்தின் இடதுபுற அறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. 
இங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு இரத்தக்குழாய்கள் மூலம் இரத்தம் சென்றடைகிறது. 
இதயம் சுருங்கி விரிவதால் இந்நிகழ்ச்சி நடைக்கிறது. சுத்த இரத்தமும் அசுத்த இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் அது ஆபத்தானது. மரணத்திற்கே காரணமாகிவிடும். 

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது நுரையீரல் வேலை செய்யாதிருப்பதால் இரத்தத்தை சுத்தமாக்கும் பணி குழந்தையின் இதயத்தில் நடைபெறுவதில்லை.

 எனவே இதயத்தின் இடப்பக்க, வலப்பக்க அறைகளுக்கிடையில் ஒரு இணைப்பு காணப்படும். 
இந்த இணைப்பு இருப்பதால் தாயின் உடலில் இருந்து சுத்த இரத்தம் குழந்தையின் இதயத்தை அடைந்து அங்கிருந்து குழந்தையின் உடலுக்கு சென்று அசுத்தமடைந்து மீண்டும் தாயின் உடலுக்குள் சென்றடையும். எனவே குழந்தையின் இதயத்தில் அசுத்த இரத்தம் இருப்பதில்லை. குழந்தையின் இதயம் இரத்தத்தை கடத்திவிடும் குழாயாகவே செயல்படுகிறது. 
குழந்தை பிறந்தவுடனேயே முதல் மூச்சு விடும்போது நுரையீரல் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இப்போது பிறந்த குழந்தையின் இதயத்தின் இடது அறைகளில் சுத்த இரத்தமும் வலது அறைகளில் அசுத்த இரத்தமும் வந்துவிடும். 
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது இருந்த வலது, அடது அறைகளை இணைக்கும் இணைப்பில் அசுத்த இரத்தமும், சுத்த இரத்தமும் கலந்துவிடும் அபாயம் குழந்தையின் இதயத்தில் உண்டு. 
ஆனால் அந்த  இணைப்பு துவாரத்தை ஒரு சவ்வு மூட ஆரம்பித்து விடுவதால் இந்த அபாயம் நிகழ்வதில்லை. 
இந்த சவ்வு எப்படி உடனே வளர ஆரம்பித்து சுத்த இரத்தமும், அசுத்த இரத்தமும் கலக்காமல் தடுக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புதிராவே உள்ளது. 
குழந்தை பிறந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 முறை இதயம் துடிக்கிறது. 
======================================================================

ஆண்களின் ஆயுட்காலம், பெண்களை விட 7 வருடங்கள் குறைவு.
ஆண்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் பெண்களை விட 4 மடங்கு அதிகம்.
உடல்நலக் கோளாறுகளுக்காக மருத்துவரை நாடும் ஆண்களின் எண்ணிக்கை, பெண்களைவிட 3 மடங்கு குறைவு.
புற்றுநோய்க்குப் பலியாவதில் ஆண்களின் பங்கு 2 மடங்கு அதிகம்.
விபத்துகளில் உயிரிழப்பதிலும் ஆண்களுக்கே முதலிடம்.

 ஆண்கள் அவசியம் ஏற்பட்டால் கூட, நேரமும் பணமும் வேஸ்ட்டுங்கிற மனப்பான்மையில, தங்களோட ஆரோக்கியத்தை அலட்சியம் பண்றாங்க. இந்த அலட்சியம் தொடர்கிற போதுதான், திடீர்னு ஒருநாள் யாருமே எதிர்பார்க்காத நேரத்துல அவங்க இறந்து போறாங்க.
 பொருளாதாரம் உள்பட, பல விஷயங்களுக்கும் ஆண்களை நம்பியிருக்கிற இந்தியச் சமூகத்துல, ஒரு ஆணோட இறப்புங்கிறது அவனைச் சார்ந்திருக்கிற பெண்களுக்கும் குடும்பத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

ஆண்கள் தங்களோட ஆரோக்கியத்துல அக்கறை காட்டினா, அவங்களோட இறப்பு விகிதத்தை 80 சதவிகிதம் குறைக்கலாம்.

மார்பகப் புற்றுநோய் இருக்கானு சோதிக்கிற மார்பக சுய பரிசோதனையை பெண்களுக்கு வலியுறுத்தறோம். 
ஆண்களுக்கு ஏற்படற விதைப்பை புற்றுநோய்க்கும் அப்படியொரு சுய பரிசோதனை அவசியம். 15 வயசுலேருந்தே இதை ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரலாம். 
20 - 30 வயசுல விதைப்பை புற்றுநோய் தாக்கிற அபாயம் அதிகம். 30 பிளஸ்லயே ஆண்களுக்கு இன்னிக்கு நீரிழிவு வருது. 
பெற்றோருக்கு நீரிழிவு இருந்தா, பிள்ளைகள், இளவயசுலேருந்தே வாழ்க்கை முறையை மாத்திக்கப் பழகணும். முறையான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மூலமா நீரிழிவை 10 வருஷங்களுக்குத் தள்ளிப் போடலாம். சிறுநீரகங்கள் செயலிழந்து போறதைத் தவிர்க்கலாம்.

40-50 வயசுல பிராஸ்டேட் சுரப்பியில உண்டாகிற புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகம்.
 கண்களோட வெளித்திரை சுருங்கி விரிவதில் பிரச்னை, கேட்டராக்ட்னு பலதும் 45 வயசுக்குப் பிறகுதான் தொடங்கும். 
40 வயசுக்குப் பிறகு ஒவ்வொரு ஆணும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து ரத்தக்குழாய்கள்ல கொழுப்பு படிஞ்சிருக்கானு பார்க்கணும். 
இந்த வயசுல பலருக்கு ஆண்மைக்குறைவு வரும். 
அதை வயசானதோட அறிகுறியா அலட்சியப்படுத்தக் கூடாது. ஆண்மைக்குறைவால பாதிக்கப்படறவங்களுக்கு, அடுத்த ஒன்றரை வருஷத்துல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். 
60 வயசுல ரத்த அழுத்தம், தைராய்டு, புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளணும். 
70 பிளஸ்ல உள்ள ஆண்களுக்கு எலும்புகள் பலவீனமாகி, ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கலாம். சுலபமா கீழே விழுந்து, அடிபட்டு, எலும்புகள் முறிஞ்சு போய், படுத்த படுக்கையாகலாம். 
இதைத் தவிர்க்க அவங்க தங்களை எப்போதும் சுறுசுறுப்பா வச்சுக்கணும். உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. 
பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை ஈரமில்லாம, வழுக்காத தரையுடன் கூடியதா மாத்தணும். அந்த வயசுல துணையை இழக்கறது, பிள்ளைகளோட உதாசீனம், பொருளாதார நலிவுனு பல காரணங்களால மனரீதியா ரொம்பவே உடைஞ்சு போயிடுவாங்க. 
அதுலேருந்து அவங்களை மீட்டெடுக்க, கவுன்சலிங்கும், ஆதரவு சிகிச்சையும் அவசியம்.

நம்மளோட மரபணுவுல உள்ள டெலோமேர் (telomere) கொஞ்சம் கொஞ்சமா குறையற போதுதான் வயோதிகம் தாக்குது. நோய்கள் வந்து, இறப்பு நெருங்குது. சிகரெட், குடி மாதிரியான பழக்க
ங்களைத் தவிர்த்து, சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, கூடவே இந்த டெலோமேரை அதிகப்படுத்தற ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கிட்டா, ஒவ்வொருத்தரும் 100 வயசு வரை வாழலாம். 
அதுவும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வாழ முடியும்

ஒரு நாளைக்கு 1,440 நிமிடங்கள் உள்ளன.
 அதில் வெறும் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதால் உண்டாகும் பலன்கள் தெரியுமா?

மாரடைப்பு அபாயம் குறையும். மூளையில் ஏற்படுகிற பக்கவாதம் தவிர்க்கப்படும்.
 கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்.
 ரத்த அழுத்தம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் வெகுவாகக் குறையும். 
எலும்புகள் உறுதியாகும். 
இல்லற வாழ்வில் ஆரோக்கியம் நீடிக்கும். 
மன அழுத்தம் குறையும்.
                                                                                                 -மருத்துவர் காமராஜ்.
===========================================================================================
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.