இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரலாறு முக்கியம்!..

படம்
  வரலாறு முக்கியம் மக்களே.. 1966-இல் 'பசு பாதுகாப்பு' சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனசங்க உறுப்பினர் ஒருவர், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைப் பார்த்து 'இதுபற்றி ஆளும் கட்சியின் கருத்து என்ன?' எனக் கேட்டார்.  அதற்கு சாஸ்திரி 'இதுபற்றி எம் கட்சியின் தலைவர் காமராஜர் பதிலளிப்பார்' என்று சொன்னார். காமராஜர் அளித்த பதில் :- 'என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..! மனுசனுக்குக் குந்த குடிசையில்ல..  கட்ட துணியில்ல.. அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..! அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..!  இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..!  இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..!  இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..!  எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்து

நில அதிர்வு

படம்
இன்றைய இந்தியா ஒரு *குரங்கு* கையில் கிடைத்த பூமாலை என்று!  நான் என் நாட்டை நேசிக்கும் ஒரு சாதாரண  குடிமகன் மட்டுமே! நான் காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ அல்லது மோடியின் பக்தனோ இல்லை.  கடந்த 70 ஆண்டுகளில் ஜாதி மத பேதமற்ற இந்தியாவாக மிகவும் முன்னேறியுள்ளது.   இவருக்கு முன்னாள் இந்தியாவை ஆண்டு வந்த அனைத்து பிரதமர்களும் மோடிஜியை விடவும் கல்வியாளர்களே! மேலும் தேசபக்தியாளர்களே!  அவர்கள் இரவு பகலாக உழைத்துள்ளனர். அதன் விளைவுதான் இன்று இந்தியா உலகில் வல்லரசு.  *மோடிஜி* பிறப்பதற்கு முன்பே, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. *மோடிஜி* பேசத் தொடங்கும் முன்பே, உலகிலேயே சிறந்த அரசியல் சாசனம் இந்தியாவிடம் இருந்தது. *மோடிஜி* தவழ்ந்து விளையாடும் போதே, இந்தியா பக்ராநங்கல் கால்வாயைக் கட்டியிருந்தது. பள்ளிக்கூடத்தில் *மோடிஜி* புத்தகத்தைப் புரட்டி விளையாடும் போதே இந்தியா அணு ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்துவிட்டது. *மோடிஜி* விளக்கு ஏற்றுவது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்த போதே தாராபூர் அணுமின் நிலையத்தை இந்தியா ஆரம்பித்திருந்தது.  *மோடிஜி* ஆடை உடுக்கும் முன்பே. இந்தியாவில்  துணி நெசவு ச

நாட்டைப் பிரிப்பதே வேலை.

படம்
  ஒரு சாமானியன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை கூட எதிர்த்து கேள்வி கேட்க முடியாது! தற்போது  மணிப்பூர் முதல்வரை விமர்சித்த இளைஞர் காவல்துறை முன்னிலையில் உயிரோடு கொளுத்தப் பட்டிருக்கிறார்! ஆனால் பத்ரி, குருமூர்த்தி, எச்.ராஜா, எஸ்வி சேகர் வகையறாக்கள் எல்லாம் ஹைகோர்ட்டா? ****** என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி என்ன பெரிய ***** என்றும் வெளிப்படையாக பேச முடியும்! இது தான் தற்போதைய பா.ஜ.க வின்  பாசிச அரசியலின் அடிப்படை.நடைமுறை . முதல்வர் பிரேன் சிங் குறித்த இடுகையைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட குக்கி-ஸோ இளைஞரை, கைது செய்தது மணிப்பூர் காவல்துறை. அவரை நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, ​​சுமார் 800 ஆண்களும் பெண்களும் அடங்கிய கும்பல் போலீஸ் வாகனத்தை மறித்து, அவரை வெளியே இழுத்துச் சென்று தாக்கியது. தீ வைத்து எரித்து கொலையும் செய்தனர். இதை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல்.சிறையில் இருக்கையில் தீக்குளித்து தற்கொலை என வழக்கை முடித்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரத்தில் 25 க்கும் அதிகமான வீடுகளுக்கு தீவைப்பு-  களநிலவரத்தை ஆய்வு செய்ய மணிப்பூர் செல்கிறது எதிர்க்கட்சிகள் கூட்டம்- 

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு.

படம்
  என்எல்சி விவகாரத்தில் கடலூரில் பதற்றம் நிலவுகிறது. நேற்று கடலூர் மாவட்டத்தில் மட்டும் 16 பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. கடலூர் நகர் பகுதியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழிலே கையொப்பமிட வேண்டும். ஆவணங்கள், வருகைப்பதிவு மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும். டி.பி.ஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயரையும், கையொப்பத்தையும் தமிழிலேயே இட வேண்டும் என 2021 அரசாணையைக் குறிப்பிட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கன்னியாகுமரி: வில்லுக்குறியிலிருந்து தோட்டியோடு வரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல், குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் முருகனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அவசர வாகனங்களுக்கு வழிவிட மறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு; லாரியை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மோடி மீது நம்பிக்கை இல்லை.

படம்
  • மத்திய பாஜக அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவரப்படுகிறது.இதில் கண்டிப்பாக மோடி மக்களவையில் விக்கம் தந்தே ஆக வேண்டும் மணிப்பூர் கொடூரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி கொள்முதலில் 908 கோடி ரூபாய் ஊழல் புகார். லஞ்ச ஒழிப்பு துறை பதிவுசெய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. • நடப்பு கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. • ஒன்றிய அரசின் திடீர் ஏற்றுமதி தடையால் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் அரிசி தேக்கமடைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விலக்கு, அளித்தால் விலை குறையும் என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். • தென்காசி, ஆலங்குளம் பகுதிகளில் பாதியாக குறைந்தது பச்சைமிளகாய், சின்னவெங்காயம் விலை வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.100க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. • ஓசூரில் சொந்த தேவைக்காக 50க்கும் மேற்ப

ஆட்சி கலைப்பு.?

படம்
  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  2 படகுகளை பறிமுதல் செய்துள்ளது.  நெடுந்தீவு அருகே மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நேற்று முதல் நாளில் மட்டும் 56,542 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மத்திய மேற்கு வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா நோக்கி நகரும். மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து ஜூலை 26ம் தேதி வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகைக்கு கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவசியம் என்று பரவிய வதந்தியால், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள வங்கியில் பெண்களின் கூட்டம் அலைமோதியது . நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் நீக்கப்படாது: தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு தலைமை நீதிபதி பதில். ----------------------------------------- அரசரருக்கெல

லாட்டரி (கொள்ளை)அடிக்குது

படம்
 2  நாள் முடக்கத்திற்கு பின் இன்று கூடுகிறது நாடாளுமன்றம். மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம். தர்மபுரி மாவட்டம் தொக்கூரில் சிறப்பு முகாமமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பு ஏற்று மணிப்பூர் பாஜ அரசு பதவி விலக கூறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. • வெளி மாநிலங்களில் இருந்து வரத்த குறைந்ததால் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள் விலையை தொடர்ந்து அரிசி விலையும் உயர்ந்ததால், ஏழை, எளிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர். • தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்றது. சிறுபான்மையின விரோத நடவடிக்கை எனக்கூறி பல்வேறு ஊர்களில் எஸ்.டி.பி.ஐ கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. • மணிப்பூரில் பெண்கள் பலர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்