மோடி மீது நம்பிக்கை இல்லை.

 மத்திய பாஜக அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவரப்படுகிறது.இதில் கண்டிப்பாக மோடி மக்களவையில் விக்கம் தந்தே ஆக வேண்டும் மணிப்பூர் கொடூரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.


அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி கொள்முதலில் 908 கோடி ரூபாய் ஊழல் புகார். லஞ்ச ஒழிப்பு துறை பதிவுசெய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

• நடப்பு கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் திடீர் ஏற்றுமதி தடையால் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் அரிசி தேக்கமடைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விலக்கு, அளித்தால் விலை குறையும் என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

• தென்காசி, ஆலங்குளம் பகுதிகளில் பாதியாக குறைந்தது பச்சைமிளகாய், சின்னவெங்காயம் விலை வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.100க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

ஓசூரில் சொந்த தேவைக்காக 50க்கும் மேற்பட்ட சாலையோர மரங்களை அதிமுக கவுன்சிலர் வெட்டியதாக புகார் எழுந்துள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மேயரிடம் பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடி புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா. கொடி பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற வளாகத்த இரண்டாவது நாளாக எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

• சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடு 5,000 ரூபாய் கோடியில் இருந்து ரூ.3,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் ரூ.2,000 கோடி பா.ஜ.க ஒன்றுய அரசு நிதுயை குறைத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

• கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 22,688 கனஅடி திறக்கப்படுகிறது. கனமழை தொடர்வதால் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தெலுங்கானாவின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

----------------------------------

சந்திரபாபு

 வாழ்க்கைப் பாடம்.

எம்.ஜி.ஆர்.காலத்திலேயே கதாநாயகர்களுக்கு இணையான ஊதியம் வாங்கிய காமெடி நடிகர் சந்திரபாபு. 

ஒரே ஒரு திருமணம், அவர் வாழ்க்கையே அப்படியே புரட்டிப் போட்டது.

சினிமாக்காரர்களை பாராட்டுவார்கள், ஆனால் அவர்களுக்கு பெண் தரமாட்டார்கள் என்பார்கள். அந்த சிரமத்தை சந்திரபாபுவும் சந்திக்க நேர்ந்தது. 

தமிழ்நாட்டிற்கு புரொஜக்டரை கொண்டு வந்த வின்சென்ட் சாமிக்கண்ணு என்பவரின் மகள் ஷீலாவை தான் சந்திரபாபு திருமணம் செய்தார். 

காமராஜர், எம்.ஜி.ஆர்,சிவாஜி உட்பட அனைத்து பிரபலங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். பெங்களூரு ஹனிமூன் போனார். சந்திரபாபுக்கு மதுபழக்கம் இருந்தது.

அங்கு மது அருந்திவிட்டு, தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் தான்  பெண்களுடன் இருந்த தொடர்புகளை கூறிய அவர், தன் மனைவி ஷீலாவிடமும், ‘உன் வாழ்க்கையில் நடந்ததை கூறு’ என்று கேட்டுள்ளார். 

அவர் பெருந்தன்மையாக மனம் திறந்து பேசியதால், தன் வாழ்க்கையில் நடந்த காதல் அனுபவத்தை ஷீலா அவரிடம் கூறினார்.

அதை சந்திரபாபுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

உடனே ஷீலாவை அறையை விட்டு வெளியேற்றி, கதவை அடைத்துள்ளார். அதன் பின் ஷீலாவுடன் வாழ முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் சந்திரபாபு. 

அத்துடன் ஷீலா விரும்பியபடி அவரை லண்டன் அனுப்ப திட்டமிட்டார்.

அதன் பின் சந்திரபாபுவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது. 

மாடி வீட்டு அழகி என்கிற படம் தான் பொருளாதார ரீதியாக சந்திரபாபுவை பாதித்தது. 

எம்.ஜி.ஆர்., உடன் ஏற்றப்பட்ட கனக்கசப்பு அவர் பொருளாதாரத்தையே சிதைத்தது.

கூடவே மதுப்பழக்கம், கால்ஷூட் களுக்கு நடிக்கவசெல்லாமல் எந்தேரமும் போதை மயக்கம் என பல காரணங்கள் சந்திரபாபுவின் சரிவிக்கு காரணமானது. 

இளம் வயதில் ஏழ்மையால் உடல் சீர்கேட்டால் மரணத்தைச் சந்தித்த சந்திரபாபு வாழ்க்கை மதுவிரும்பிகள்,போதைக்கடிமைகளுக்பு ஒரு நல்ல பாடம்.

-------------------------------------

மோடி மீது

 நம்பிக்கை இல்லை.

மணிப்பூர் வன்முறை பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வர 26 எதிர்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எவ்வளவே நேரமானாலும் விவாதத்துக்கு தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக பிரதமர் மோடி மட்டும்தான் பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தங்களது நிலைப்பாடில் உறுதியாக உள்ளன.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் கடந்த நான்கு நாள்கள் இரு அவைகளும் முடங்கின. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில், மணிப்பூர் விவகாரத்தில் பிரமரை பதில் அளிக்க வைக்க மத்திய அரசுக்கு எந்த வகையில் நெருக்கடி அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான தீர்மானத்தில் 50 எம்பிக்களின் ஆதரவு கையெப்பம் பெறும் பணிகள் தொடங்கிய நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி கட்டாயம் பேசியாக வேண்டும். அவர் அப்போதும் வாய் திறக்கவில்லை என்றால் மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்குகிறார் என தெரிந்துவிடும் என எதிர்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்ற செயலகத்தில் இன்று காலை 10 மணிக்குள் அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருதற்கான ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினரும் 198வது பிரிவின் கீழ் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். இதற்கான எழுத்துபூர்வ நோட்டீஸ் அவை தொடங்குவதற்கு முன் கொடுக்க வேண்வேண்டும்.

அந்த தீர்மானத்தில் குறைந்தது 50 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்திருந்தால், நோட்டீஸ் அளித்த 10 நாள்களுக்குள் விவாதத்துக்கான தேதியை மக்களவை தலைவர் அறிவப்பார்.

இந்த தீர்மானத்தின் மீதான் விவாதத்தில் பெரும்பான்மையை நிருபிக்க தவறினால் ஆளும் பாஜக அரசு பதவி விலக வேண்டும்.

-------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?