வரலாறு முக்கியம்!..

 வரலாறு முக்கியம் மக்களே..

1966-இல் 'பசு பாதுகாப்பு' சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனசங்க உறுப்பினர் ஒருவர், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைப் பார்த்து 'இதுபற்றி ஆளும் கட்சியின் கருத்து என்ன?' எனக் கேட்டார். 

அதற்கு சாஸ்திரி 'இதுபற்றி எம் கட்சியின் தலைவர் காமராஜர் பதிலளிப்பார்' என்று சொன்னார்.

காமராஜர் அளித்த பதில் :-

'என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..! மனுசனுக்குக் குந்த குடிசையில்ல.. 

கட்ட துணியில்ல.. அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..! அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! 

இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! 

இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! 

இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..! 

எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!''

- இவ்வாறு பேசிய காமராஜர் உண்மையை ஆணித்தரமாகப் பேசியதால் அவர் மமீது கடும் ஆத்திரம் கொண்ட ஜனசங்க(தற்போதைய பாரதீய ஜனதா)ஆர்.எஸ்.எஸ் கும்பல் டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு அவரை உயிரோடு கொளுத்த முயன்றனர்.வீட்டுக்கு தீயும் வைத்து விட்டனர்.

காவல் துறை சரியான நேரத்தில் தலையிட்டு இந்துத்தவா வெறியன்களை அடித்து விரட்டி தீயை அணைத்தனர்.

---------------------------------



முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த சில நாள்கள் முன்னதாக எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்திருந்தது என்ற செய்தியை மகிழ்வுடன் கூறினார்.

தற்போது ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில்' தமிழ்நாடு இப்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்ற மகிழ்வானத் தகவலையும் கூறியுள்ளார். 

எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு கர்நாடகாவை பின்னுக்குத் தள்ளியது. '
ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில்' தமிழ்நாடு இப்போது குஜராத்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.

இந்தப் பட்டியல்கள் எல்லாம் ஒன்றிய அரசு வெளியிடுபவை. அதிகாரப்பூர்வமான ஆவணங்கள். இந்தத் தரவரிசைகளைப் பார்த்துத்தான் ஒரு வெளிநாட்டு நிறுவனம் எந்த மாநிலத்தில் தொழில் தொடங்க நல்ல சூழ்நிலை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்.

ஏனென்றால், ஒரு வெளிநாட்டு நிறுவனம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கள ஆய்வு செய்து, அதன் பின்னால் தொழிலைத் தொடங்க முடியாது. ஆகவே, அந்தவிதத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த 'ஏற்றுமதி தயார்நிலை குறியீடு பட்டியல்' மிகமிக முக்கியமானது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?