நாட்டைப் பிரிப்பதே வேலை.

 ஒரு சாமானியன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை கூட எதிர்த்து கேள்வி கேட்க முடியாது!

தற்போது  மணிப்பூர் முதல்வரை விமர்சித்த இளைஞர் காவல்துறை முன்னிலையில் உயிரோடு கொளுத்தப் பட்டிருக்கிறார்!

ஆனால் பத்ரி, குருமூர்த்தி, எச்.ராஜா, எஸ்வி சேகர் வகையறாக்கள் எல்லாம் ஹைகோர்ட்டா? ****** என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி என்ன பெரிய ***** என்றும் வெளிப்படையாக பேச முடியும்!

இது தான் தற்போதைய பா.ஜ.க வின்  பாசிச அரசியலின் அடிப்படை.நடைமுறை.

முதல்வர் பிரேன் சிங் குறித்த இடுகையைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட குக்கி-ஸோ இளைஞரை, கைது செய்தது மணிப்பூர் காவல்துறை.

அவரை நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, ​​சுமார் 800 ஆண்களும் பெண்களும் அடங்கிய கும்பல் போலீஸ் வாகனத்தை மறித்து, அவரை வெளியே இழுத்துச் சென்று தாக்கியது. தீ வைத்து எரித்து கொலையும் செய்தனர்.

இதை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல்.சிறையில் இருக்கையில் தீக்குளித்து தற்கொலை என வழக்கை முடித்தது.

  • தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரத்தில் 25 க்கும் அதிகமான வீடுகளுக்கு தீவைப்பு- 
  • களநிலவரத்தை ஆய்வு செய்ய மணிப்பூர் செல்கிறது எதிர்க்கட்சிகள் கூட்டம்-  29, 30 தேதிகளில் நேரில் ஆய்வு
  • மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் முழக்கம்- அமளிக்கு இடையே பா.ஜ.க. மசோதாக்கள் நிறைவேற்றியது.
  • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் விளக்கமளிக்காததை கண்டித்து கருப்புடை அணிந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - ராஜஸ்தான் செல்ல முடிந்த மோடியால் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை என மல்லிகார்ஜுன் கார்கே .
  • தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் பணிகளை கடந்த 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதில் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கும் பணி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மீண்டும் விசாரணைக்கு வரும்கோடநாடு வழக்கு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
  • ------------------------------------

  • நாட்டைப் பிரிப்பதே வேலை.

இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் காணொலி காட்சி "வாயிலாக பேசிய  ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக சாடினார். 
நிகழ்ச்சியில் பேசிய அவர் “ஒரு பக்கம் நீங்கள் நாட்டின் மீது அன்பு கொண்டு இருக்கிறீர்கள்.

நாடு புண்படும்போதோ, குடிமக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம், நீங்களும் பாதிக்கப்படுவீர்கள், வருத்தப்படுவீர்கள். ஆனால், அவர்கள் மனதில் அப்படியொரு உணர்வு இல்லை. 

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வினருக்கு எந்த வலியும் இல்லை. ஏனென்றால், அவர்கள் நாட்டைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

பாஜக- ஆர்எஸ்எஸ்க்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அதிகாரத்தைப் பெற எதையும் செய்வார்கள். அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள். 
முழு நாட்டையும் எரிப்பார்கள்.

 நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
 அது ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்தரபிரதேசமாக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் விற்றுவிடுவார்கள். 

 தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்தியல் போர் நடைபெற்று வருகிறது. 
காங்கிரஸ் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது, நாட்டை ஒன்றிணைத்து, இந்தியாவின் சமத்துவமற்ற சமூக அமைப்புக்கு எதிராகப் போராடுகிறது. 

அதேசமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரே இந்த நாட்டை இயக்கி அனைத்து செல்வங்களையும் சொந்தமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக விரும்புகிறது.

 அவர்களுக்கு நீதித்துறை, ராணுவம், தேர்தல் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் வேண்டும். விசாரணை அமைப்புகள் மற்றும் பள்ளிகள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

பிரதமர் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சேவை செய்கிறார், மணிப்பூருடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை..

 மணிப்பூரில் நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள். 
மணிப்பூரைப் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாததை கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 

இந்தியாவில் ஒரு மாநிலம் எரிகிறது என்றால், இந்தியப் பிரதமர் குறைந்தபட்சம் எதிர்வினையாற்றியிருப்பார் என்று நீங்கள் நினைத்திருக்க வேண்டும். 

இந்தியப் பிரதமர் இம்பாலுக்கு மக்களுடன் பேசச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள், 
ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.  

மணிப்பூரைப் பற்றி மோடி மௌனமாக இருப்பதற்குக் காரணம், அவர் "தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக" இருப்பது தான்.
மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் பிரதமர். மணிப்பூருடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை.

 மணிப்பூரில் அவரது சித்தாந்தம் வன்முறைக்கு வழிவகுத்தது என்பது அவருக்குத் தெரியும்.

 ஆனால், களத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வலியால் அவர் பாதிக்கப்படவில்லை" எனவும் ராகுல் காந்தி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

-------------------------------------------------
முயற்சி திருவினையாக்கும்

2023 - 2024 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 25 ஆம் தேதி தொடங்கி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இதில், சிறப்புப் பிரிவில் அரசுப் பள்ளிக்கான 7.5% ஒதுக்கீட்டில் மாணவர்கள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் இராணுவப் படை வீரர்களின் பிள்ளைகள் உள்ளிட்டோர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

இந்நிலையில், 2016ல் 12 ஆம் வகுப்பு முடித்து, பின் சிறப்புக் காவல்படையில் பணியாற்றி வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு, பி.எஸ்.சி. வேதியியல் இளநிலையை முடித்தார். 
இவரது கனவான மருத்துவப் படிப்பில் சேர்வதற்குள் தமிழ்நாட்டில் நீட் வந்ததால் அவரால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் போனது. 

பிறகு 2020ல் காவல்துறையில் இணைந்து, ஆவடி சிறப்புக் காவல் படையில் பணியாற்றிவந்தார்.

இருந்தபோதும், தனது மருத்துவக் கனவிற்காகத் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவந்த சிவராஜ், கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார். 

ஆனால், அதில் போதிய மதிப்பெண் கிடைக்காததால், மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார். 
அதில் அவர் 400 மதிப்பெண் பெற்றார். 

பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த சிவராஜ்க்கு தற்போது மருத்துவப் படிப்பிற்கான சீட் கிடைத்துள்ளது


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?