ஆட்சி கலைப்பு.?
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2 படகுகளை பறிமுதல் செய்துள்ளது.
சென்னையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நேற்று முதல் நாளில் மட்டும் 56,542 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மத்திய மேற்கு வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா நோக்கி நகரும். மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து ஜூலை 26ம் தேதி வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகைக்கு கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவசியம் என்று பரவிய வதந்தியால், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள வங்கியில் பெண்களின் கூட்டம் அலைமோதியது.
நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் நீக்கப்படாது: தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு தலைமை நீதிபதி பதில்.
-----------------------------------------
அரசரருக்கெல்லாம் அரசர்
பணக்காரர்களில் பணக்காரர்.
தற்போதைய நிலையில் உலகின் முதல் பணக்காரராக கருதப்படுகிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்.
அவருடைய இன்றைய சொத்து மதிப்பு 234 பில்லியன் அமெரிக்கா டாலர்கள்.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாஃப்ட் முன்னாள் சி.ஓ பில்கேட்ஸ், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி,அதானி ஐதராபாத்தை சேர்ந்த நிஜாம் இப்படி சிலரின் பெயர்களும் இந்தப் பணபட்டியலில் இடம்பெற்றுள்ளன.
14 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டை ஆண்ட பேரரசர் மான்சா மூசா தான் இன்றுவரை யாரும் எட்டிவிடாத பணக்காரர்.
அப்போதே சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 32 லட்சம் கோடி ரூபாய். அவர் தான் இன்றுவரை வெல்லப்படாத உலகின் பெரும் பணக்காரர்.
மான்சா மூசா 1280 ஆம் ஆண்டு பிறந்தார். 1312 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பரிக்காவில் இருக்கும் வாஸ்ட் மாலி என்ற நாட்டின் அரசாராக முடி சூட்டிக் கொண்டார்.
அவரின் ஆட்சிக்குட்பட்ட நாட்டின் எல்லை தற்போதைய ஐவரி கோஸ்ட், செனகல், மாலி மற்றும் புர்கினோ பாசோ வரை நீண்டிருந்தது.
திம்புக்டு வாசா என்ற நகரை தலைநகராக கொண்டு மான்சா ஆட்சி நடத்தினார். அவரின் முக்கிய வருமானம் தங்கம் மற்றும் உப்பு ஏற்றுமதி தான்.
தங்கத்தையும் உப்பையும் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார் மான்சா மூசா.
1324 ஆம் ஆண்டு மான்சா இப்போதைய சவுதி அரேபியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
அவருடைய இந்தப் பயணம் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவர் சென்ற வாகனம் தான் இதுவரை சகாரா பாலைவனத்திற்குள் சென்ற மிகப்பெரிய வாகனமாகவும் கருதப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது மூசா தன்னுடன் 100க்கும் மேற்பட்ட ஒட்டகங்களையும், ஏராளமான தங்கத்தையும் கொண்டு சென்றிருக்கிறார்.
அதோடு இவருக்கு பணிவிடை செய்ய 12 ஆயிரம் வேலைக்காரர்கள் உடன் சென்றிருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இந்தப் பயணத்தின் போது மூசா தன்னுடன் 8 ஆயிரம் பேரை அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஆனால் இவ்வளவு சொத்துகளும் இவருக்கு பெருமையை தேடித்தரவில்லை.
அவருடைய தாராள குணம் தான் அவருக்கும் பெரும் புகழையும் பெயரையும் தேடித்தந்திருக்கிறது.
வாரி வழங்கும் வள்ளலான மூசாவை அவரின் குடிமக்கள் அரசருக்கு எல்லாம் அரசர் என்று தான் அழைப்பார்களாம்.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் தகவல் படி மூசாவினுடைய ஆட்சிக் காலத்தில் உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் மூசா தான்.
தன்னைத் தேடி வருபவர்களுக்கு எல்லாம் தங்க கட்டிகளைத்தான் தானமாக கொடுப்பாராம்.
இவருடைய சொத்து மதிப்பை தாண்டி சொத்து சேர்த்தவர்கள் இன்று வரை உலகில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
---------------------------------------------
மணிப்பூர்: ஆட்சி கலைப்பு
மணிப்பூர் விவகாரம் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக உருவெடுத்திருக்கிறது.
மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் என கூறி இருக்கின்றனர்.ஆனால் அரசின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பிரதமர்தான் விளக்க வேண்டும் என போராடுகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று பாஜக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் நேற்று இரவு தீவிர ஆலோசனை நடத்தினர்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
இத்தகைய அடுத்தடுத்த சந்திப்புகள், இன்றைய பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம் ஆகியவை மணிப்பூர் விவகாரத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மணிப்பூரில் குக்கி - மைத்தேயி இனக்குழு இடையேதான் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதன்விளைவாக குக்கி இனமக்கள், தனி நிர்வாகக் குழுகோரி வருகின்றனர்.
இதனை மிசோரம் மாநில அரசும் ஆதரித்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் ஆளும் எம்.என்.எப்., பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. மிசோரம் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் உலக அளவில் கலவரத்திற்கு காரணம்,கலவரத்தை அடக்காமல் தூண்டிவிடுகிறார் மேய்தி இன மக்களுக்குஆதரவாகவும் காவல் துறை பாதுகாப்பும்,ஆயுதங்களை கொடுப்பவர் என மணிப்பூர் முதல்வர் எண்ணப்படுகிறார்.அவரின் நிர்வாகத்திறமக யின்மையும்,ஒருசார்பு நிலையும்தான் கலவரத்தீயை கொழுந்து விட்டு எரியச்செய்கிறது.
மேலும் கலவரம்,கற்பழிப்பு,நிர்வாண ஊர்வ்வலங்கள் தொடர்பாக அவர் பேசும் பொறுப்பற்ற மேய்தி இன ஆதரவு பேச்சுக்களும் பாஜகவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் எதிர்ப்பை உருவாக்கி விட்டது.
இதனால் மணிபூர் அரசை கலைந்தால்தான் பா.ஜ.கவிற்கு உள்ள கொஞ்சப் பெயரெயும் தக்கவைக்கலாம் என்ற முடிவுக்கு அக்கட்சித் தலைவர்கள் வந்து விட்டார்கள்.
இதனை அடிப்படையாகக் கொண்டு குக்கி தன்னாட்சிக் குழுத் தொடர்பாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-------------------------------------------------------