நில அதிர்வு
இன்றைய இந்தியா ஒரு *குரங்கு* கையில் கிடைத்த பூமாலை என்று!
நான் என் நாட்டை நேசிக்கும் ஒரு சாதாரண குடிமகன் மட்டுமே!
நான் காங்கிரஸ்காரனோ, கம்யூனிஸ்டோ அல்லது மோடியின் பக்தனோ இல்லை.
கடந்த 70 ஆண்டுகளில் ஜாதி மத பேதமற்ற இந்தியாவாக மிகவும் முன்னேறியுள்ளது.
இவருக்கு முன்னாள் இந்தியாவை ஆண்டு வந்த அனைத்து பிரதமர்களும் மோடிஜியை விடவும் கல்வியாளர்களே! மேலும் தேசபக்தியாளர்களே!
அவர்கள் இரவு பகலாக உழைத்துள்ளனர். அதன் விளைவுதான் இன்று இந்தியா உலகில் வல்லரசு.
*மோடிஜி* பிறப்பதற்கு முன்பே, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
*மோடிஜி* பேசத் தொடங்கும் முன்பே, உலகிலேயே சிறந்த அரசியல் சாசனம் இந்தியாவிடம் இருந்தது.
*மோடிஜி* தவழ்ந்து விளையாடும் போதே, இந்தியா பக்ராநங்கல் கால்வாயைக் கட்டியிருந்தது.
பள்ளிக்கூடத்தில் *மோடிஜி* புத்தகத்தைப் புரட்டி விளையாடும் போதே இந்தியா அணு ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்துவிட்டது.
*மோடிஜி* விளக்கு ஏற்றுவது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்த போதே தாராபூர் அணுமின் நிலையத்தை இந்தியா ஆரம்பித்திருந்தது.
*மோடிஜி* ஆடை உடுக்கும் முன்பே. இந்தியாவில் துணி நெசவு செய்யத் தொடங்கி விட்டனர்.
AIIMS, IIT & IIM மற்றும் பல பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டிருந்தன.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் வேகமாக ஓடும் போது *மோடிஜி* டீ விற்றுக் கொண்டிருந்தார்.
இத்தனை நன்மைகளும் முன்பே நிகழ்ந்திருந்தது!
நம்முள் இன்னும் சிலர் நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப் படுகிறார்கள் - எல்லாம் மோடிஜியின் ஆளுமையால் நடந்தேரியது போல!
உண்மையில் *மோடிஜி* இந்தியாவை எட்டு ஆண்டுகளில்; நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டார்.
ஜாதியற்ற, மதநல்லிணக்க இந்தியாவை உருவாக்க கைகோர்த்து நின்றவர்களின் வரிசையில், அதற்கு எதிரான சித்தாந்தத்தை கொண்டராகவே உள்ளார் மோடிஜி.
வரும்கால இந்தியாவின் நம் குழந்தைகள் ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் நல்லுறவோடு வாழ்ந்து வளமான பொருளாதார சமத்துவமிக்க நாடாகஅமையட்டும்.
-ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன்
சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வு பீதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் சாலையில் தஞ்சம்.
கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த A/C பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது; பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் உயிர் தப்பினர்.
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி சார்பில் இன்று கனிமொழி,திருமாவளவன் உட்பட 26 எம்பிக்கள் மணிப்பூர் பயணம் .
- தமிழ்நாடு அரசு கூடுதலாக கடன் வாங்கவில்லை; 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ. 100 லட்சம் கோடி கடன் - சபாநாயகர் அப்பாவு பேட்டி
- என்.எல்.சி விவகாரத்தில் பாமக வினர் போராடுவதாகக் கூறி வன்முறையில் ஈடுபட்டால், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை.தொடர்புடைய நிலம் போதுமான பணம் வாங்கிக் கொண்டு என்எல்.சி க்கு 8ஆண்டுகளுக்கு முன்னரே அதிகாரப் பூர்வமாக விற்று விட்டனர். - அமைச்சர் தங்கம் தென்னரசு .
- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கி தூக்குத்தண்டனை நிறைவேற்றம்.
- முல்லைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் - இலங்கையில் தமிழர்கள் முழு அடைப்பு போராட்டம்.
- மகளிர் உரிமைத் தொகை; ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகம்.
- புலிகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ம் தேதி(இன்று) சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- பாகிஸ்தான் நாட்டிற்கு ரூ. 19,600 கோடி கடன் வழங்கியது சீனா.
- நைஜர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - ஐ.நா சபை கடும் கண்டனம்