மோடியின் "மூடி" சரியா?


பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியின் மோசமான அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நியாயப்படுத்தவே முடியாத நிலைமையில் இருந்த மோடி அரசை  ஐ.நா   வளர்முக நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்றி விட்டது.

 ஆசிய பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இடம் கிடைத்தது போன்றவை பாஜக மோடி தலைமையிலான ஆட்சியை உலக அளவில் மோசமான இடத்தில் வைத்தது.

பொருளாதாரத்தில் இந்தியாவை பின்னோக்கி தள்ளிய அவப்பெயரை தாங்கிய மோடி(-ஜெட்லீ குழுவிற்)கு மூடி கொடுத்த தர உயர்வு காட்டாற்றில் சிக்கியவனுக்கு சிறு கொடி கிடைத்துள்ளது.


 இந்த செடியால் மோடிக்கோ , அரசுக்கோ  ஏதும் பயனில்லை.
ஆனால் மோடியும்,ஜெட்லீயும்  சின்ன செடியை கிடைக்காமல் கிடைத்த கற்பக விருட்சம் போல் மக்களிடம் காட்டி வியக்க சொல்லுகிறார்கள்.

அவரின் வார்த்தைகளைப் பாருங்கள். “இந்த தர உயர்வை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இது கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான தாமதமான அங்கீகாரம்” ஒரு பக்கம் பெருமூச்சு. 
இன்னொரு புறம் வீராப்பு. 

“செபி” சேர்மனில் துவங்கி “நிதி ஆயோக்” தலைவர் வரை எல்லோரும் குதூகலிக்கிறார்கள். 
கடந்த ஆண்டு “மூடியின்” தர அளவுகோல்கள் பற்றிக் கடுமையாகப் பேசிய முன்னாள் பொருளாதார விவகாரச் செயலாளர் சக்தி பாத தாஸ் கூட இப்போது “மூடியின்” முடிவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இதுபோன்ற மதிப்பீட்டு நிறுவனங்களே கிடையாது. அப்போதெல்லாம் புதியதாய் வெளியிடப்பட்டும் பத்திரங்களில் முதலீடு செய்வது உகந்ததா? என்று சொல்வதற்கு கூட ஏற்பாடு கிடையாது. 

1900ஆம் ஆண்டில் “வால்ஸ்ட்ரீட்”டைச் சேர்ந்த 32 வயதான “மூடி” என்பவர் தொழில் மற்றும் இதர வகையிலான பத்திரங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்கள் குறித்த தகவல்களை புத்தகமாக வெளியிட்டார். சில மாதங்களில் புத்தகம் விற்று தீர்த்துவிட்டது. 
இதுவே மதிப்பீட்டு தொழிலகங்கள் கருக்கொண்ட கதை. “மூடி” பிறந்தது. 

1916ல் ஸ்டாண்டர்டு & பூவர் (எஸ்&பி) உருவானது. 1924ல் “பிட்ச்” தோன்றியது. 
இம்மூன்று நிறுவனங்களே 100 ஆண்டுகளுக்கு பிறகு “பிக் த்ரீ” ஆக உள்ளன. 
இம்மூன்று நிறுவனங்கள் சந்தைப் பங்கில் 95 சதவீதத்தைக் கையில் வைத்துள்ளன.

 “மூடி” மற்றும் “எஸ்&பி” தலா 40 சதவீதம், “பிட்ச்’’ 15 சதவீதம் என்ற அளவில் உள்ளன. எனினும் 150 தர மதிப்பீட்டு நிறுவனங்கள் உலக அளவில் உள்ளன.

 மேற்கூறிய மூன்று பெரிய நிறுவனங்களின் தலைமையகங்களும் அமெரிக்காவிலேயே உள்ளன. 1980 வரை இவற்றின் செல்வாக்கு உலகளாவியதாக இல்லை. காரணம் அப்போதெல்லாம் கடன் சந்தை தேசங்களுக்குள்ளும், பகுதிகள் சார்ந்தும் சுருங்கியிருந்தன. 
கடன், முதலீடுகளுக்காக நிறுவனங்களைத் தெரிவு செய்யும்போது அவை பற்றிய அறிமுகமும், தொடர்பும் இருந்தன. 
ஆனால் 1980களுக்குப் பின்னர் நிதித்துறை திறந்துவிடப்பட்டதும், சர்வதேச நிதி மூலதனத்தின் தங்குதடையற்ற பரவல் நிகழத் துவங்கியதுமே இத்தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான தேவையை அதிகரித்த காரணங்களாகும்.

ஆனால் இத்தர மதிப்பீடு நிறுவனங்கள் யார் பிடியில் உள்ளன என்பதுதான் பிரச்சனை. 
இந்நிறுவனங்கள் செயல்படுவதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான். 
எந்த கார்ப்பரேட் அல்லது தேசிய நிறுவனங்களின் தர மதிப்பீடுகளை இவை செய்யப்போகின்றனவோ அவர்களிடமிருந்துதான் நிதியும் கிடைக்கிறது. 

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கிற கடப்பாடு தொழிலின் நேர்மைக்கு முரண்பாட்டை உருவாக்காதா?

ஒரு நிறுவனத்தின் தரம் மதிப்பிடப்படுவதற்கு ரூ.1,00,000 இருந்து 16 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை தர வேண்டியுள்ளது. 
திருவிளையாடல் தருமி சொல்வது போல எவ்வளவு ரேட்டோ அதற்கேற்றாற்போல ரேட்டிங்கும் இருக்கும். இதுவே பல வங்கிகள் உலகம் முழுவதும் எடுத்த அதிக “ரிஸ்க்”கை “ரஸ்க்” போல கேள்வி கேட்காமல்இந்த ரேட்டிங் நிறுவனங்கள் இருந்துவிட்டதற்கு காரணம்.

அமெரிக்காவில் “சப் ப்ரைம்” நெருக்கடி ஏற்பட்டபோது “தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மிக மிக தாராளமாக இருந்தன” என்று கார்டியன் இதழ் பொருளாதார ஆசிரியர் வாரி எலியட் விமர்சித்தார். 
சீட்டுக்கட்டு சரிந்தது போல பல பெரிய நிறுவனங்கள் வீழ்ந்தன.


சரி செய்வதற்குப் பயன்படுவதை விட தவறு செய்வதற்குப் பயன்படுகின்றன என்பதே உண்மை. 
ஒரு நிறுவனத்தை மூடியும், எஸ் & பியும் குறைவாக மதிப்பிட்டால் அந்நிறுவனம் “பிட்ச்’ நிறுவனத்திடம் போய் சரிக்கட்டி சான்றிதழ் வாங்கிவிடும். தர மதிப்பீட்டு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடுவது போலத் தோன்றினாலும் அவற்றுக்கிடையே “திரை மறைவு கைகோர்ப்பும்” (CARTEL) உள்ளன. 
150 நிறுவனங்களில் மூன்று மட்டுமே 95 சதவீதத்தைக் கையில் வைத்திருப்பதால் இச்சித்து விளையாட்டுகள் எளிதாக உள்ளன.

உலக நிதி நெருக்கடியின் போதுதான் இந்நிறுவனங்களின் போதாமை, செயலின்மை, வேலையின்மை எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தன.
தான் நிர்ணயித்த தர அளவு கோல்களைத் தானே கடைப்பிடிக்காமல் மூடி நிறுவனம் மீறியதால், பெருமந்தத்திற்கு இட்டுச் சென்ற திரைமறைவு செயல்பாடுகளை மேற்கொண்ட தவறைச் செய்திருந்தது” என அமெரிக்க தலைமைத் துணை அட்டர்னி ஜெனரல் பில் பியர் கூறினார். 

ஐரோப்பிய இணையத்தில் ஜூன் 2011க்கும் டிசம்பர் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் “மூடி” செய்த 19 தர மதிப்பீடுகளுக்காக ரூ.9,10,00,000 தண்டத் தொகைக்கு அந்நிறுவனம் ஆளானது.

நன்றாகத் தெரியும். மக்கள் தமது சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து மத்திய அரசின் பொருளாதாரப் பாதை குறித்த கவலைகள், குறைகள், கோபங்களை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளார்கள். 

இத்தகைய தர மதிப்பீடுகள் முதலீடுகளை ஈர்த்து விடாது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு, சந்தை விரிவாக்கம் வாயிலாகவே முதலீடுகளை ஈர்க்கவும், பயன்படுத்தவும் முடியும். 

ஆனால் அத்தகைய உண்மையான மாற்றுக்கு மத்திய ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. எனவே மக்களின் கவனத்தை திசை திருப்ப பலகோடி விளம்பரங்கள், பொது நீரோட்ட ஊடகங்களைக் கைக்குள் வைத்திருத்தல், கூலிக்கு மாரடிக்கும் சமூக வலைத்தள சைபர் படைகள் போன்ற ஆயுதங்களில் இன்னொன்றாக “மூடி” பயன்படுத்தப்படுகிறது. 

மோடிக்கு ஏற்ற மூடி, ஆனால் மூடியையும் மீறி உண்மை வெடித்து வெளியே வரும்.
மூடி போன்றவர்கள் பொருளாதார பிரம்மாக்கள் இல்லை.நிதியுலக தேவதையும் அல்ல.
அவர்கள் கணிப்பு வானிலை நிலைய கணிப்பைப் போல் சூழலுக்கேற்ப  மாறும் தன்மையுடைய உடையது.

இயறக்கை ,போர்,உள்நாட்டு கலவரங்கள்,மோடி போன்ற பொருளாதார வல்லுனர்களின் முடிவுகளால் , இன்னும் பிற காரணங்களால் மாறும் தன்மையுடையது.இவர்களின் தரவரிசை இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதிப்பில்லை.

அமெரிக்காவின் கருத்துக்களைத்தான், அமெரிக்க சார்பான மதிப்பீடுகளைத்தான் மூடி போன்ற நிறுவனங்கள் வாந்தி எடுக்கின்றன.

அதை எடுத்துக்கொண்டு மோடியும் ,ஜெட்லீயும் கொண்டாடுகின்றனர்.
=========================================================================================

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"




நம் உடை நழுவுகையில் நம் கைதன்னிச்சையாக சென்று நம்உடையை கைப்பற்றி மானம் காப்பது போல் நண்பனுக்கு இடர் வருகையில் தன்னிச்சையாக நாம் உதவுவதே உண்மையான நட்பாகும்.



ன்று,
டிசம்பர்-02.


  • லாவோஸ் தேசிய தினம்

  • ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்
  • (அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது)((1971)

==========================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?