ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

தமிழின வியாபாரம்சீமான் ஈழ வியாபாரம் பல்லை இளித்து விட்டதே.
வேந்தர் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் பச்சை முத்து தனது SRMகல்வி வியாபரத்தை இலங்கையிலும் தொடங்கியுள்ளார்.அதற்கு ராஜபக்ஷேவை குளிர்விக்க தனது வேந்தர் திரைப்பட நிறுவனம் சார்பில் புலிப்பார்வை என்று படத்தை தயாரித்துள்ளார்.
அதில் ஏதும் அறியா பாலகன் பாலச்சந்திரனை [மாவீரன் பிரபாகரன் மகன் என்பதற்காகவே ]சுட்டுக்கொன்ற காட்சிகள் வருகிறது .
ஆனால் பாலச்சந்திரன் இதில் ஒன்றுமறியா சிறுவனல்ல.விடுதலைப்புலிகளின் ராணுவப் பயிற்சி பெற்ற AK47ஏந்திய போராளி.

அதுமட்டுமல்ல விடுதலிப்புலிகள் தங்கள் காமப்பசியை துப்பாக்கியால் மிரட்டி சிங்களப்பெண்கள் மூலம் தீர்த்துக்கொள்வதையும் சொல்லுகிறார்களாம்.
இப்படிப்பட்ட படத்தின் பாடலை வெளியிட்டு தனது வீர உரையை சீமான் என்ற ஈழ வியாபாரி பேசியுள்ளார்.
பச்சை முத்துக்குத்தான் தனது கல்வி வியாபார நோக்கம் மூலாமாக இந்த தமிழினத்துரோகம் செய்ய முடிகிறது.இந்த சீமான் அதை ஆதரித்து பாடலை வெளியிடும் நோக்கம் என்ன.அதுதான் அவரின் தமிழின பாசமா?
அதைவிடக்கேவலம் இந்த புலிப்பார்வை படத்தினை பற்றிய மேற்கண்ட விபரங்களை உண்மையா என்று கேட்கவும்,கண்டிக்கவும் வந்த தமிழின மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களை சீமானின் நம் தம்ளர் கட்சியினர் அடித்து மண்டபத்தை விட்டு விரட்டியுள்ளனர்.
சாலையிலும் பின்தொடர்ந்து வந்து தாக்கியுள்ளனர்.நமது காவல்துறையோ அடிப்பட்ட மாணவர்களையே கைது செய்து தனது கடமையை செய்துள்ளது.
புதிய தலைமுறை மாலன் ஈழப்பிரச்னை பற்றி பெசிவருபவர் இப்போது வாயில் லப்பத்தை அடைத்துக்கொண்டுள்ளார்.அதுமட்டுமல்ல ஜெயா தொலைக்காட்சியில் பன்னீர் செல்வம் உட்பட அதிமுக மைச்சர்களை உட்கார வைத்து அம்மா ஆட்சியின் மாண்புகளை பற்றி வழக்காட வைத்து தீர்ப்புகளை சொல்லி தனது சமூகக் கடமைகளை ஆற்றிவருகிறார்.
பழைய ஈழ வியாபாரிகள் தாமரை,சீமான்,நெடுமாறன் போன்றோர் முந்தைய கருணாநிதி ஆட்சியில் அவரை அசிங்கமாகத்தாக்கி பேசிய பேச்சுக்களும் இன்று அதே நாக்குகள் ஜெயலலிதா ஆட்சியில் அதே நிலைமைகளில் ஜெய்யலளிதாவுக்கு எந்த அளவுக்கு பக்கபலமாக துதி பாடி நிற்கின்றன என்பதையும் தமிழக மக்கள் உணர வேண்டும் .
அதை இங்குள்ள ஊடகங்கள் வெளியிடுவதில்லை.அவர்களின் நோக்கங்களே கன்மூடித்தனமான கருணாநிதி,திமுக எதிர்ப்புத்தான்.
அதற்கு ஜெயலலிதா மீதான பயம்,அவர் தரும் விளம்பரப் பணம் இவைகளையும் தாண்டி வர்க்கப்பாசமும் உள்ளது.
அந்த ஊடகங்களின் மூலம்தான் ஒரு திராவிட இயக்கத்திற்கு ஆரிய வாரிசு தலைமை தாங்கி அந்த இயக்கத்தின் நோக்கங்களையே சிதைக்க முடிந்தது.
இன்று கருணாநிதியை தாக்கிவருபவர்கள் மனதில் அவர் கெட்டவர் என்ற விதையை ஆழமாக இந்த ஊடகங்கள் விதைத்து விட்டன.
 அவர் ஊழல் செய்து விட்டார் ,அவர் மக்கள் விரோதி என்று பலாமாக நம்ப வைக்கப்பட்டுள்ளார்.ஆனால் ஜெயலலிதா மீதுதான் 18 ஆண்டுகளுக்கு மேலாக சொத்துக்குவிப்பு,ஊழல் வழக்கு,வருமானவரி வழக்கு என்று பல வழக்குகள் உள்ளது.
அவர் அந்த வழக்குகளை சந்திக்க பயந்து வாய்தாக்களை வாங்கி வருவதால் ஜெயலலிதாவின் ஊழல் உண்மை என்பதே வெட்ட வெளிச்சமாகி விட்டது.
பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றங்களை அரசு வழக்குரைஞர் எடுத்து வாதிடும் போது அதை தமிழக செய்தி தாட்கள் ஒன்றுமே பிரசுரிக்கவில்லை.ஆனால் இன்று அதை மறுத்து ஜெயா தரப்பில் வாதிடும் போது அதை இந்து நாளிதழ் வரை வெளி யிடுகிறது.
ஆக ஈழ வியாபாரிகளில் இருந்து ஊடக வியாபாரிகள் வரை இன்றைய ஒரே நோக்கம் கருணாநிதி-திமுக ஒழிப்புதான்.அதை அவர்கள் தங்கள் சாணக்கிய வம்ச தனத்துடன் செய்து வருகிறார்கள்.
ஆனால் அதில் நம் தமிழர்களும் விலையாகி விட்டதுதான் அசிங்கம்.மற்றும் கவலையானது.
suran
இயக்குனர் ஆர்.சி.சக்தி பிறந்தநாள் .

ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தை இணைந்து வழங்குவோர்…. அந்நிய முதலீடுகள்…!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே… மாணவர்களே…
 • நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு!
  போலி சுதந்திரம்
  காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி!
 • காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி! ஆனால் கம்பத்தில் பறக்க விடுவதற்கு மட்டும் தேசியகொடி! அது மட்டும் எதற்கு? பேசாமல் அமெரிக்க கொடியை ஏற்றி விடலாமே!
 • பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர், மின்சாரம்… ஆனால் நமக்கில்லை!
 • காசில்லாதவனுக்கு கல்வியில்லை! படித்தவனுக்கு வேலையில்லை! இருப்பவனுக்கோ அது உத்திரவாதமில்லை! ஆக மொத்தம் வாழ்வதற்கே வழியில்லை! இதற்கு பெயர் சுதந்திரமா?
 •  
 • மோடி, லேடி முதல் அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சி கேடிகளும் செய்வதெல்லாம் ஃபிராடுதனம், பித்தலாட்டத்தனம்… ஆனால் பேசுவது மட்டும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!
 • நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறுபோட்டு விற்பதற்கு பெயர் சுதந்திரமாம்!
 • பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு… மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை – பன்னாட்டு கம்பெனிகளுக்கு! – இதற்குப் பெயர் சமத்துவமாம்!
suran
 • மதக்கலவரங்களையும, சாதிக்கலவரங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பெயர் சகோதரத்துவமாம்! போங்கடா… நீங்களும் உங்க சுதந்திரமும்…
 • மிகப்பெரிய அரசுத்துறை ரெயில்வே முற்றிலும் அந்நிய மாயம்....
 • மிகப்பெரிய காப்பீட்டுத்துறையிலும் அந்நிய மூலதனம் உயர்வு ....
 • நம் நாட்டின் பாதுகாப்பையே கேவலமாக்கும் அளவு ராணுவத்திலும் அந்நிய மூலதனம்....
 • ஆக பிரதமர் பதவியை தவிர அனைத்தும் அந்நிய-தனியார் மூலதனம்.
 • நாம் கொண்டாடும் விடுதலையே அன்னியர் வியாபாரம் செய்ய வந்து நம்நாட்டையே அடிமையாக்கிக்கொண்டதை எதிர்த்து இந்திய மக்கள் உயிரை கொடுத்து பெற்ற விடுதலையைத்தான்.
 • ஆனால் இன்று மீண்டும் அடிமை தனத்தை நாமே உருவாக்கிக்கொள்வதில் என்ன பெருமை? விடுதலை  நாளை கொண்டாடுவதில் என்ன மகிழ்ச்சி??

 •  

suran