வெள்ளி, 17 டிசம்பர், 2021

சிரிச்சா போச்சு........

 வடகொரியாவில் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் உயிரிழந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இந்த 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மது அருந்துவதற்கும், சிரிப்பதற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவை கடந்த 1948-ஆம் ஆண்டு உருவாக்கியவர் தான் கிம் இல் சங்.

 இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார்.

 1994-ஆம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் Kim Jong Il அதிபரானார்.

இவர் 2011-ஆம் ஆண்டு(டிசம்பர் 17-ஆம் திகதி) உயிரிழந்ததால், தற்போது வடகொரியாவை Kim Jong Il-ன் மூன்றாவது மகன் ஆன, கிம் ஜாங் உன் மூன்றாவது தலைமுறையாக ஆண்டு வருகிறார்.


இந்நிலையில், இந்த ஆண்டு 10-வது ஆண்டு அவரின் நினைவு தினம் என்பதால், அதை முன்னிட்டு மதுபானம் அருந்துவதற்கும், சிரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இவருடைய நினைவு தினத்தில் 10 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.


இந்த துக்க காலத்தில் மது குடிக்கக்கூடாது, அப்படி மது குடித்து கடந்த காலங்களில் பிடிபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். 

அவர்கள்  போனது,போனதுதான் அவர்கள்எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை.

இன்று வரை அவர்களை மீண்டும் பார்க்கவில்லை.

 இந்த துக்க காலத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர் யார் இறந்தாலும், நீங்கள் சத்தமாக அழுக கூடாது, அதே போன்று பிறந்த நாள்களை கொண்டாட முடியாது என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும், இந்த துக்க நாட்கள் 10 நாட்களாக மட்டுமே இருந்தது, ஆனால் இந்த ஆண்டு Kim Jong Il-ன் 10-வது ஆண்டு நினைவு தினம் என்பதால் ஒருநாள் அதிகரிக்கப்பட்டு, 11 நாட்கள் துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிரிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.


https://youtube.com/shorts/Id-a8AgphVM?feature=share

----------------------------------------------------------------------------

வந்த வரத்தென்ன?

இப்போ

வாயடைச்சுப் போனதென்ன??


ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது , ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி என்றும் ,அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும், தனக்கு எந்த தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் அரசு வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது . மேலும் விஜய்நல்லதம்பியையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார். இதேபோல புகார்தாரர்கள் தரப்பிலும் ராஜேந்திரபாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளித்தார் அதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்


https://youtu.be/WNGKIV3_LWg