கூடங்குளம் :ஆரம்பம்,




கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட அறிக்கை:* கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது.
* அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும்.
* காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது.
* பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட்டவை, கடல்பகுதியில் உள்ளன. இந்த நிலையங்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
* இந்திய அணுமின் நிலையங்களை அமைக்கும் முன், அப்பகுதியிலிருந்து, 30 கி.மீ., சுற்றளவிற்கு, சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படும். அணுமின் நிலையம் இயக்கத்திற்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த, 40 ஆண்டுகளில், இந்தியாவில், எந்த அணு மின்நிலைய பகுதியிலும் கதிர்வீச்சு அபாயம் இல்லை.
* கூடங்குளம் அணு உலை கனநீரை பயன்படுத்தும், வி.வி.இ.ஆர்., ரக அணு உலை, கடந்த, 25 ஆண்டுகளில், இந்தியாவில், 15 உலைகள் இதே தொழில்நுட்பத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நளினிஷ் நகைக் தெரிவித்துள்ளார்.
* கூடங்குளம் நிலைய பகுதி, நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது.
* கூடங்குளத்திலிருந்து, 88 கி.மீ., தூரமுள்ள திருவனந்தபுரத்தில், 4.3 ரிக்டர் அளவுக்கு, இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடங்குளம் நிலைய கட்டடங்கள், 6 ரிக்டர் அளவை கூட தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
* சுனாமி ஏற்படும் பகுதியிலிருந்து, 1,500 கி.மீ., தூரத்தில் கூடங்குளம் அமைந்துள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா அணுஉலை, சுனாமி ஏற்படும் மையத்திலிருந்து, 130 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்ததால் தான், அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
* கடந்த, 2004, டிசம்பர் 26ல், 9.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், சுனாமி பேரலையும் ஏற்பட்ட போது, கூடங்குளம் அணு உலை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
* 2.2 மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. ஆனால், கூடங்குளம் நிலையம், இதையும் சமாளிக்கும் வகையில், கடல் மட்டத்திலிருந்து, 8.7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை
""சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்தசில தனிக் குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,'இவ்வளவு நாட்களாக இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?' என, இந்திய அணுமின் கழகம் கேட்டுள்ளது:கூடங்குளத்தில், அணுமின் உற்பத்தி, இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என, அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோர கிராமமான கூடங்குளத்தில், ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கும் பணி, 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்பத்தில் நடந்து வருகிறது.முதல் அணு உலையின் பணிகள் நிறைவடைந்து, உற்பத்தியின் முன்னோட்டமான வெப்ப நீர் சோதனை ஓட்டம், கடந்த ஜூலை 2ல் துவங்கியது. மின் உற்பத்தி துவங்குவதற்கு முன், பொதுமக்களுக்கு அவசர நிலை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள், தற்போது நடந்து வருகின்றன.வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:முதல் அணு உலையின் வெப்ப நீர் சோதனை ஓட்டம், மூன்று கட்டமாக, வெவ்வேறு அழுத்த நிலைகளில் மேற்கொள்ளப்படும். ஒன்றரை மாதத்தில், யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படும். அனைத்துப் பாதுகாப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின், மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளின் ஆய்வு மற்றும் அனுமதிக்கு பின், உற்பத்தி துவங்கும்.
இந்த ஆண்டு டிசம்பருக்குள், முதல் உலையில் மின் உற்பத்தி துவங்கும். 2012 மார்ச்சில் முழு அளவில், மின் உற்பத்தியை அடையும். அதிலிருந்து 7 மாதங்களில், இரண்டாவது அணு உலையின் மின் உற்பத்தி துவங்கும். இரண்டு அணு உலைகளில் இருந்தும், கிடைக்கும் மின்சாரத்தில், 925 மெகாவாட் மின்சாரம், தமிழகத்திற்கு வழங்கப்படும்.மீதமுள்ள மின்சாரம் கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, மத்திய தொகுப்பு மூலம் வழங்கப்படும். அண்மையில், ஊழியர் என்ற போர்வையில், உளவாளி சிக்கிய சம்பவத்தின் மூலம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று, காசிநாத் பாலாஜி கூறினார்..
எதுவானாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்பவர்கள் கோரிக்கை நிறைவேறாது.
தமிழக அரசும் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டுதான் உற்பத்தி செய்கிறார்கள் என கூறி கைகழுவிடப்போகிறது.
ஆகட்டும் பார்க்கலாம்தாங்க?
=========================================================
இது யாரின் குடிசை தெரியுமா?
இந்தியாவின் நட்சத்திரகிரிக்கெட்காரர் சச்சின்டெண்டுல்கர். இவரது கனவு இல்லமான இது ரூ.80 கோடி செலவில் மும்பையின் புறநகர் பகுதியான பெர்ரிகிராஸ் சாலையில் கட்டப்பட்டுல்ளது.  இவ்வீட்டிற்கு சச்சின் தற்போது குடி புகுந்துள்ளார். ஆடம்பரமான பங்காளவில் குடியேறிய சந்தோஷத்தில் சச்சின் இது ஒரு உணர்வுப்பூர்வமான தருணம். எனது கனவு இல்லத்தை கட்டி முடித்துள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
பின்னே?கோடிக்கணக்கானோர் பிளாட்பாரத்தில் வசிக்க அவர்களின் கிரிக்கெட் பைத்தியத்தை வைத்து குவித்த பணத்தில் கட்டப்பட்டதாயிற்றே.இதற்கு வரி விலக்கு கூடக் கொடுத்திருப்பார்களே?
___________________________________________________________________________________________________


ஆறு நிறைய நீரிருந்தாலும் 
                     

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?