ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பிரதமர்+தயாநிதி=2ஜி

தொலை தொடர்பு துறையில் ( 2004 முதல் 2007 வரை ) மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி, ஸ்பெக்ட்ரம் விதி நிர்ணயம் மற்றும் எந்த அளவுக்கு விற்கலாம் என்ற விஷயத்தில் அமைச்சரவை குழு எடுத்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியிருக்கிறது.
இந்த கடிதம் மூலம் தானே விலை நிர்ணயத்தில் ராஜாங்கம் நடத்தி ஆதாயம் தேட தயாநிதி முயற்சித்துள்ளார்,அதற்கு மன்மோகன் சிங்கும் அனுமதித்துள்ளார் என்று தெரிய வருகிறது.
தகவல் அறியும் சட்டம் மூலம் விவேக்கார்க் என்பவர் இந்த கடித நகலை பெற்றுள்ளார்.
2006 ஜனவரி மாதம் பாதுகாப்பு துறை பரிந்துரையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பது மற்றும் விலை நிர்ணயத்திற்கு அமைச்சரவை குழு பரிந்துரைக்க ஒப்புதல் வழங்கினார் பிரதமர். இதன்படி அமைச்சரவை குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால் பிரதமரும், தயாநிதியும் சந்தித்து ( பிப். 1ல் ) பேசிய பின்னர் தலைகீழாக மாறியது.
“சீக்ரெட்” லெட்டர் ஊருக்கு தெரிந்தது: பரிந்துரைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சரவை குழுவிற்கு பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து தயாநிதி பொறுமினார். இதனையடுத்து அவர் பிரதமருக்கு 2006 பிப்., 28 ம் தேதி கடிதம் ஒன்று எழுதி அனுப்புகிறார். இந்த கடிதம் சீக்ரெட் என்று மேலிடத்தில் குறியிடப்பட்டுள்ளது.
இதில், அமைச்சரவை குழுவின் பரிந்துரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அந்தக் குழுவிற்கு தாங்கள் அளித்துள்ள அறிவுரைகள் நாம்பேசிக்கொண்டதற்கு மாறாக உள்ளது. இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைதொடர்பு துறையே சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு பிரதமர் பிரதமர் மவுனம் காத்தார். இவரது அலுவலகம் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை .
இதனையடுத்து தயாநிதி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்க துவங்கினார். இதே வழியில் 2008 ல் பதவிக்கு வந்த ராஜாவும் பின்பற்றியிருக்கிறார். இதனால் ஸ்பெக்ட்ரம் பெரும் ஊழலில் சிக்கியது. இதன் மூலம் இந்த ஊழலுக்கு வித்திட்டவர் தயாநிதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. இதன் காரணமாக பிரதமரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் வலுப்படுகிறது.
இந்நிலையில், தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனால் அரசியல் மேலும் சூடு பிடிக்கும் என தில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
2 ஜி ஸ்பெகட்ரம் முறைகேடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விழுங்கி நிற்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து மத்திய அமைச்சர் ராஜா முதல் கனிமொழி மற்றும் மெகா கம்பெனிகளின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊழலுக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் சிதம்பரம் பதவி விலக வேண்டும்; இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன.
             .
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்,’ இந்த அரசாங்கம் பல்வேறு முடிவுகளை எடுக்கும் போது கூட்டணி தர்மத்தையும் காக்க வேண்டியுள்ளது’ என்று கூறியிருந்தார்.
   ஆனால் இந்த 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் முதலில் தனக்கு ஒன்றுமே தெரியாது என பிரதமர் கூறிவந்துள்ளார்.
இப்போது வெளியாகும் கடிதங்கள் அனைத்தும் அவருக்கும்,சிதம்பரத்திற்கும் ஏன் காங்கிரசில் உள்ள பெருந்தலைகள் அனைவருக்கும் தெரிந்தே நடந்துள்ளது.அவர்களுக்கும் 2ஜி விற்பனையில் பங்கு இருக்கிறது.ஊழல் ந்டந்திருந்தால் அதில் கையை நனைத்தவர்கள்-கறை படிந்தவர்கள்தான் அனைவரும் என நாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
ஆனால் இதில் ஆ.ராசாவும்,கனிமொழியும் மற்றும் அலுவலர்கள் சிலரும் மட்டும் சி.பி.ஐ.ஆல் மாட்டி பிணை கூட இல்லாமல் திகாரில் வைக்கப்பட்டிருப்பதும்,அதில் பங்குள்ள சிதம்பரம் ,மன்மோகன்,அம்பானி,ரத்டன் டாடா போன்றோரை விசாரிக்க கூட முடியாது என சி.பி.ஐ.கூறுவதும் இந்த வழ்க்கின் போக்கு நியாயமாக இல்லை.உண்மைக்குற்றவாள்கள் தப்ப விடப்படுகிறார்கள்.இவை உள்நோக்குடந்தான் நடக்கிறது என்ற உண்மையான சந்தேகத்தை எழுப்புகிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அணு உலைகள் ஆரம்பம்,

                      
சீனாவில் தற்போது 14 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும் தனது மின் தேவைக்கு சீனா, அனல்மின் நிலையங்களை நம்பித்தான் உள்ளது. இதனால். சீனா வெளியிடும் கார்பனின் அளவு அதிகளவில் இருப்பதாகவும், சுற்றுச் சூழலுக்கு அது பெரும் கேடு விளைவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

27 அணுமின் நிலையங்கள்: அதனால், 2020க்குள், 80 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உற்பத்தி மூலம் தயாரிக்க சீனா முடிவு செய்தது. இதையடுத்து, 27 அணுமின் நிலையங்களை அமைப்பதில் சீன அரசு தீவிரம் கொண்டது. இவற்றில் பெரும்பாலானவை நாட்டின் கடற்கரையோரம் அமைந்தவை. ஒவ்வொரு நிலையமும், ஆயிரம் மெகாவாட் திறனை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டவை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்படுபவை.

அமெரிக்காவை விஞ்சும் தொழில்நுட்பம்: அதேநேரம், தனது சொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தாண்டின் இறுதிக்குள் ஒரு அணுமின் நிலையத்தை செயல்படுத்துவதிலும் சீனா முனைப்பு காட்டி வருகிறது. சீனாவின் உள்நாட்டுத் தயாரிப்பான சி.ஏ.பி.,1400 அணு உலை, அமெரிக்காவின் ஏ.பி., 1000 அணு உலையை விட அதிகளவில் மின் உற்பத்தியில் ஈடுபடும் திறன் கொண்டது. சி.ஏ.பி.,யை வடிவமைக்கும் பணியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். தனது உள்நாட்டு அணுமின் நிலையங்களை அமைக்கும் கையோடு, பாகிஸ்தானுக்கும் ஒரு கிகாவாட் அணுமின் நிலையத்தை அமைத்துத் தருவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

பீதியூட்டிய புக்குஷிமா: இந்நிலையில் கடந்த மார்ச்சில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து புக்குஷிமா அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டதும், அதன் நீண்ட கால விளைவுகள் பற்றிய ஆய்வுகளும் உலகளவில், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கின. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், தங்களின் அணுமின் நிலையங்களில் துவக்க காலகட்டத்தைச் சேர்ந்தவற்றை இழுத்து மூடின. சீனா, 27 நிலையங்களின் கட்டுமானத்தையும் நிறுத்தி விட்டதாக அறிவித்தது.

மீண்டும் துவக்கம்: ஆனால், நாட்டின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அவற்றை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளது. இது சமீபத்தில், சீனாவின் சுற்றுச் சூழல் துறையின் உயர் அதிகாரி அளித்த பேட்டி மூலம் உறுதியாகியுள்ளது. தேசிய மேம்பாடு மற்றம் சீர்திருத்த கமிஷனின் துணைத் தலைவர் ஷீ ஷென்ஹூவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,"மின் சேமிப்பில் குறைந்த செலவு, மின் திறன் அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை மேம்படுத்தல், பசுமை வாயுக்களை வெளியிடுவதில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புடன் கூடிய அணுமின் சக்தியை மேம்படுத்தல் ஆகியவற்றில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.

கார்பன் குறைப்பில் ஈடுபாடு: கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் தொழில்நுட்பமான, கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பு (சி.சி.யு.எஸ்.,) குறித்த ஆய்விலும் சீனா தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது. இந்தாண்டில் மட்டும் சி.சி.யு.எஸ்., ஆய்வுக்காக சீனா, 62.7 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. அதேநேரம், தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் கட்டுமானத்தில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும், சீனா, பாதுகாப்பு மற்றும் பேரிடர் தாங்கும் வலிமை குறித்த பரிசோதனைகளை இந்தாண்டின் இறுதிக்குள் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது. அதனால், இந்தியாவில் அணுமின் நிலையங்களுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களைப் போல சீனாவிலும் நடந்து விடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசு தெளிவாகவே உள்ளது.

                                       
வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களைக் கண்காணிப்பதற்காக, ஜப்பான், உளவு செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது.வடகொரியா மீதான தென்கொரியா மற்றும் ஜப்பானின் சந்தேகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடோ பதவியேற்றவுடன், இருதரப்பு உறவுகளைச் சீர்படுத்த முயலும்படி வடகொரியா கோரிக்கை விடுத்தது. அதை ஜப்பான் கண்டுகொள்ளவில்லை. வடகொரியாவின் அணுஆயுத உற்பத்தி மீது அமெரிக்கா, ஜப்பானின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. கடந்த 22ம்தேதி, ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, எச் - 2ஏ என்ற உளவு செயற்கைக் கோள் ஏவப்பட்டது. மொத்தம், 470 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆக., 28ம் தேதியே விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. சூறாவளி தாக்குதல் இருந்ததால், மூன்று முறை ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் கடந்த வாரம் ஏவப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இருக்கும் இடங்களை இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும்.