ஏகாதிபத்தியமும் அதன் முட்டாள்தனங்களும்,

பேராசிரியர்:பிரபாத் பட்நாயக்,

சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க் கப்பட்ட உடனே நடைபெற்ற அமெரிக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கண்டோலிசா ரைஸ் அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பி னார்: “இந்த பயங்கரமான துயரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகி றோம்?” அவருடைய கவலை என்பது இந்த பயங்கர தாக்குதலைப் பற்றியதாக வோ அல்லது குற்றம் செய்தவர்களை நீதிக் குட்படுத்துவது தொடர்பாகவோ இல்லை. மேலும் அந்தக்கூட்டத்திலேயே, இந்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராக் மீது ஒரு போரினைத் தொடுத்து அதன் மூலம் நல்ல பலனை அடையலாம் என்ற விவாத மும் எழுப்பப்பட்டது. அல்கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு உள்ள பகைமை குறித்து நன்றாக அறிந்திருந்த போதும் இந்தப்போருக் கான விவாதம் எழுப்பப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
                                            

பளிச்செனத் தெரிந்த உள்நோக்கம்இராக் “பேரழிவு ஆயுதங்களை” தயாரித்து வைத்துள்ளது என்பது போன்ற பொய்களை அதிவேகமாகப் பரப்பியதே, இராக் மீதான படையெடுப்பிற்கான காரணத்தை உருவாக் கத்தான் என்று நாம் அறிய முடியும். ஐக்கிய நாடுகள் சபை இதற்கான எந்தவொரு ஆணையும் வழங்கியிராத சூழலில், அமெரிக் காவின் நட்பு நாடுகளான பிரான்ஸ் போன்ற நாடுகள் இப்படி ஆணை எதுவும் இல்லையே என்பதை வலியுறுத்திய பிறகும்கூட, இராக் மீது ஆக்கிரமிப்புப்போர் நடத்தப்பட்டது.

இராக்கின் எண்ணெய் வளத்தைக் கைய கப்படுத்துவது ஒன்றுதான் இந்த படையெடுப் பின் பிரதான நோக்கம். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன், தனது சுயசரிதையில் இதை மிகத்தெளிவாகவும், வெளிப்படையாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் வள நாடு இராக். கிட்டத் தட்ட 143 பில்லியன் பேரல்கள் எண்ணெய் இருப்பதாகக் கூறப்படுகிறது. புவியியல் அமைப்பு மற்றும் பூகம்பவியல் ஆய்வுகளின் படி, 350 பில்லியன் பேரல்கள் எண்ணெய் வளம் இராக்கில் உள்ளது என்று கூறப்படு கிறது. இதனடிப்படையில் பார்த்தோமானால், உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு இராக். அமெரிக்கா, இந்த மிகப் பெரும் எண்ணெய் வளத்தைத்தான் கைப் பற்றத் துடிக்கிறது. இதன்மூலம் அமெரிக் காவின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் நாணயமான டாலரை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மிக நுட்பமான தந்திரமும் அடங்கியுள்ளது.

டாலரும் பெட்ரோலும்

அமெரிக்காவின் டாலர் உலகச் செல்வ வளங்களை சேமிப்பதற்கான ஒரு நிலையான சாதனமாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமென் றால், எண்ணெயினுடைய டாலர் மதிப்பு (சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும்) அதிவேக மாக உயரக்கூடாது. டாலர் என்பதுதான் கை யிருப்பு நாணயமாக இருக்க வேண்டும் என் பது அமெரிக்காவிற்கும் சரி, உலகின் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் சரி மிக முக்கியமானது. ஏனெனில், உலக நாடு களுடன் அமெரிக்கா வைத்துள்ள ஒட்டு மொத்த பொருளாதார பரிவர்த்தனைகளும் டாலர் மதிப்பிலேயே அமைந்துள்ளது. உலக முதலாளித்துவ அமைப்பைப் பொறுத்தவரை யில், உலகெங்கிலும் உள்ள செல்வ வளங்க ளின் சொந்தக்காரர்களுக்கு, அவர்களுடைய செல்வங்களை சேமித்து வைக்க ஒரு நம்பக மான சாதனமாக அமெரிக்க டாலர் உள்ளது. எனவே எண்ணெய்யின் டாலர் மதிப்பு அதி வேகமாக உயரக்கூடாது என்பதே இதற்கு ஆதாரமாக அமைய முடியும்.

உலகின் எண்ணெய் வளத்தின் மீது அமெ ரிக்கா வைத்துள்ள கட்டுப்பாடுதான் உலக செல்வ வளங்களின் சொந்தக்காரர்களது மன தில் டாலர் என்பது சேமிப்பிற்கான ஒரு நிலையான சாதனமாக தொடரும் என்ற எண் ணத்தினை, நம்பிக்கையினை மிக ஆழமாக பதியச் செய்துள்ளது. அதன் காரணமாக டாலர் என்பது “தங்கம் போன்று நல்லது” என்று நம்பு கின்றனர். அந்த நம்பிக்கையுடன் தங்கள் சேமிப்பினை டாலரில் தொடர்வதையே விரும்புகின்றனர். எனவே, உலகின் எண் ணெய் வளத்தின் மீது அமெரிக்கா தனது கட் டுப்பாட்டினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இரண்டு காரணங்களில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய அளவிலான உள்நாட்டு நுகர்வுக்கு என்று மட்டுமல்லாது, டாலரை, அதாவது டாலரின் மதிப்பினை தாங்கி தூக்கி நிறுத்த வேண்டிய அவசியத்தில் இருந்தும் எழுகிறது.

அடுக்கடுக்கான அறிவீனங்கள்

ஆனால், இந்த எண்ணத்தோடு நடத்தப் பட்ட இராக்கின் மீதான அமெரிக்கப் படை யெடுப்பு என்பது, அமெ ரிக்கா எதிர்பார்த்ததில் இருந்து முற்றிலும் வேறானதாக மாறிவிட்டது. சதாமின் ஆட்சி மிக எளிதாக வீழ்த்தப்பட்டு விட்ட போதிலும், இந்தப்போரானது உள்நாட் டின் எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிரானதாக இழுத்துச்செல்லப்பட்டுவிட்டது. தற்போது நாடே துண்டாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெ ரிக்கா தனது கைப்பாவையாக நிர்மாணித்த அரசாங்கமே கூட மக்களின் நம்பகத்தன்மை யை சிறிதளவாவது பெற வேண்டும் என்ப தற்காக, படையெடுப்பின் போது போடப்பட்ட திட்டத்திலிருந்து சிறிது மாறி செயல்பட வேண்டியதாகிவிட்டது. இதன் விளைவாக இராக்கின் எண்ணெய் வளங்களை அந்நியக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதற்கான சட் டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டது. எண்ணெய் வளம் என்பது அரசின் சொத்தாகவே தொடரும் என்று அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நிய எண்ணெய் கம்பெனிகள், அரசாங்கம் ஒரு பேரலுக்கு எவ்வளவு என்று நிர்ணயித்த தொகையை கொடுத்துவிட்டு எண்ணெய்யை இறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள் ளன. அந்தக் கம்பெனிகள் கூட ஏல முறை யின் அடிப்படையில் போட்டிக்கு விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன. மேலும் குர்து இன மக்களுக்கும், பாக்தாத் அரசிற்கும் இடையி லான கடுமையான முரண்பாடுகளின் கார ணமாக எழுந்த நிச்சயமின்மை காரணமாக வும், சீன மற்றும் ரஷ்ய கம்பெனிகள் மிகக் குறைந்த விலையில் ஏலத் தொகையை கேட்டிருந்ததன் காரணமாகவும், இராக்கின் எண்ணெய் வளத்தினைப் பெறுவதில் அதிக அளவில் லாபம் பெறும் அறிகுறிகள் இல் லாத காரணத்தால் அமெரிக்கக் கம்பெனிகள் இந்த ஏல முறையில் பங்கெடுக்காமல் தள்ளியே நின்றன.

அமெரிக்க அரசாங்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த போர் மிகப்பெரிய லாபத்தினை கொணர்ந்துள்ளது என்பது உண்மையே. அதேநேரத்தில், இந்த காலகட் டத்தில் ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய திட்டம் கிட்டத்தட்ட ஒரு கடுமையான அடியைச் சந்தித்துள்ளது என்றே கூறலாம். தனது சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், லத்தீன் அமெரிக்க நாடு களில் தலையீடு செய்யும் சக்தியை இழந்த தன் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது எனலாம்.

லிபியா

இருந்தபோதும், ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செய்கைகளில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், இத்தனை பாதிப் பிற்குப் பிறகும் திரும்ப திரும்ப அதையே செய் வது என்பதுதான். இராக்கில் செய்த அதே முட்டாள்தனத்தை தற்போது லிபியாவிலும் அரங்கேற்றுகிறது. இங்கேயும் கூட ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையான தீர்மானம் எதற்காக என்றால், கடாபியின் படைகளால் கலகக்காரர்களின் இடங்கள் அடித்து நொறுக் கப்பட்டதன் காரணமாக நிகழும் படுகொலை கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய வற்றைத் தடுப்பது என்பதுதான். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் இதனை லிபியாவின் எண்ணெய் வளத்தினை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்த்தன. 
லிபியா, எண்ணெய் வளத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்காவி லேயே மிகப்பெரிய நாடு. உலகளவில் ஒன் பதாவது இடம் வகிக்கும் நாடு. சுத்திகரிப்பு செலவு மிகக்குறைவு (ஒரு பேரலுக்கு ஒரு டாலர் தான் ஆகும் என்ற அளவிற்குக் குறைவு) என்பதும் ஏகாதிபத்தியத்தைக் கவர்ந்திழுக் கும் அம்சமாக அமைந்தது. எனவே, அமெரிக் காவும் அதன் கூட்டாளிகளும் ஐ.நாவின் தீர் மானத்தை மீறி, அதன் எல்லையைத் தாண்டி, சர்வதேச சட்ட விதிகளையும் மீறி, ‘ஜனநாய கத்திற்குக்’ கட்டியங்கூறுகிறோம் என்ற பெயரில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொணர்ந்து, அதனை நாம் எதிர்பார்த்த மாதிரியே நியாயப் படுத்துகின்றன.
                                                     

லிபியாவில் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு ஆட்சியை நிறுவி, அதன்மூலம் தம் முடைய திருப்திக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் வரும் ஆண்டுகளில் ‘அமைதி யாக’ ஒரு ஆட்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற கனவும், அந்த ஆட்சியின் மூலம் லிபி யாவின் அபரிமிதமான எண்ணெய் வளத் தைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற கன வும் இராக்கைப் போன்றே இங்கும் சுக்கு நூறாகப்போகிறது.

ஒசாமா பின்லேடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியது என்னவெனில், “அமெரிக்காவினை இஸ்லாமிய உலகில் இருந்து விரட்டியடிக்க ஒரே வழி, அமெரிக்கா வின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களைத் தோற்கடிக்க ஒரே வழி, அமெரிக்கர்களை அதிக செலவிழுத்துவிடும் வகையில் சிறு சிறு போர்களுக்கு வரிசையாக இழுத்துவிடு வதன் மூலம் அவர்களை திவாலாகச் செய் வதுதான்” என்பதே. இந்த நோக்கத்தை நிறை வேற்ற ஒசாமாவின் எந்த ஒரு அமைப்பும் தேவையில்லை. எண்ணெய் வளங்களின் மீதான அமெரிக்காவின் தீராத வேட்கையே போதுமானது. ஆப்கானிஸ்தான், இராக், தற் போது லிபியா- என எவற்றிலிருந்தும் அமெ ரிக்கா தன்னை விடுவித்துக் கொள்ள முடிய வில்லை. இன்னும் ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செயல்கள் அடுக்கடுக்காகத் தொடர்கின்றன.

பீப்பிள் டெமாக்ரசியில் இருந்துதமிழில்: ஆர்.எஸ்.செண்பகம், திருநெல்வேலி


[நன்றி தீக்கதிர்]




==========================================================================================

ஆளுங்கட்சி தில்லு-முல்லு.
                  
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற் பட்டவராக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்கிறது என்று மக்கள் நம்ப வேண்டும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் அப்படியில்லை என்றே முதல் கட்டத் தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறி விக்கும் வரை, ஆளுங்கட்சியைத் தவிர மற்ற கட் சிகளால் எந்தெந்தத் தொகுதி இடஒதுக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்கிற விவரத்தை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையர் கவலைப்படவில்லை. இது முதல் கரும்புள்ளியாகிவிட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முதலமைச் சர் சில நகராட்சிகளுக்கு அதிக தண்ணீர் வழங்க உத்தரவிட்டதும், பல அதிகாரிகளை இடமாற்றம் செய்ததும் விதி மீறலாகும். ஆயி னும், ஆரம்பத்தில் தேர்தல் ஆணையம் ஏனோ மவுனவிரதம் அனுஷ்டித்தது. அதேசமயம் ரயில்வே துறையில் சில அறிவிப்புகள் வெளி யிடப்பட்டபோது, தேர்தல் ஆணையம் உடனே விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. எதிர்க்கட் சிகள் பல இதனை சுட்டிக்காட்டிய பிறகு, மிகத் தாமதமாக இப்போது தமிழக அரசிடமும் விளக் கம் கேட்டுள்ளது. இது இரண்டாவது கரும்புள்ளி.

தேர்தல் விதிமுறைகளை ஒரே மாதிரியாக பின்பற்றுவது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? அறிவுறுத்தப்பட்டுள் ளதா? வழிகாட்டப்பட்டுள்ளதா? இது போல் பல ஐயங்கள் எழுகின்றன. ஏனெனில், பல ஊர் களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வருகிற முரண்பட்ட தகவல்கள் தேர்தல் ஆணையத் தின் வழிகாட்டுதலில் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது. அதேசமயம் ஆளுங்கட்சியின்பால் ஒரு சார்பு அணுகுமுறை பளிச்செனப் புலப்படு கிறது. எனவே, தனது நேர்மையை, நடுநிலையை, கண்ணியத்தை நிரூபித்துக்காட்ட வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது.

வேட்பு மனு பரிசீலனையின்போது ஆளுங் கட்சிக்கு எதிரானவர்களின் வேட்பு மனுக் களை முடிந்த அளவிற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகளை வெறும் வதந்தி என்று தள்ளிவிட முடியவில்லை. ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரவர்க் கம் எப்படியெல்லாம் ஆளுங்கட்சியின் கைப்பா வையாக செயல் படும் என்பதை கடந்தகால தேர்தல் அனுபவங்கள் நமக்கு அறிவுறுத்துகின் றன. குறிப்பாக கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் நடந்த ஜனநாயகப் படுகொலை கள் இன்றும் அந்த ரத்த வாடையோடு நம் நெஞ் சில் பதிந்திருக்கிறது. மீண்டும் அதுபோல் ஒரு ஜனநாயகப் படு கொலை எந்த மட்டத்திலும் எந்த வடிவத்திலும் எந்தச் சூழலிலும் ஏற்படா மல் தடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது. விழிப்போடு இருந்து ஜனநாயகத்தை காக்க வேண்டியது மக்கள் தொண்டர்களின் கடமை.

காவல்துறையை ஏவி, எதிர்க்கட்சிகளின் பணிகளை முடக்கவும் முன்னணி ஊழியர் களை சிறையில் அடைக்கவும் ஆட்சியாளர் கள் முயலக்கூடும் என்கிற அச்சம் உள்ளது. அதுவும் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு ஜனநாயக சக்திகள் கவலை கொள்ளா மல் இருக்க முடியாது. இப்படி பல்வேறு சந்தே கங்கள் இறக்கைக் கட்டிப் பறக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் தன் செயல்பாட்டின் மூலமே அவநம்பிக்கைகளைப் போக்க முடி யும். இப்போதும் அதற்கான கால அவகாசம் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டுகிறோம்.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?