"மோடி தாசன் '


suran


தமிழருவி மணியன் 
--------------------------------------






காந்திய மக்கள் இ யக்கத்தின்ஒரேதலைவரும்,தொண்டருமான  தமிழருவி மணியன்,இப்போது காவிக் கொள்கையில் கரைந்து விட்டார் போல் தெரிகிறது.
பாஜகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக மோடிக்கு வாக்காலத்து வாங்கி மேடைகளில் மட்டுமின்றி எழுத்துக்களிலும் மோடியாயணம் பாடி வருகிறார்.
கடந்த 2 ம் தேதி மதுரையில் நடைபெற்ற காந்திய மக்கள் இயக்க 4 - ஆம் ஆண்டு துவக்க விழாவில் தமிழருவி மணியன் பேசிய பேச்சுகளுக்கு கிடைத்த எதிர்வினையைத் தொடர்ந்து தற்போது தனது எழுத்தை வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று இதழ் ஒன்றில் பில்டப் செய்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றதற்குத் துணைபோன காங்கிரஸ் அரசு கருவறுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் மாற்று அரசியல் வேண்டும் என்கிறேன்.
 இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகியவற்றுடன் ஒரு வருடமாகப் பேசி வந்தேன்.
திருப்பூரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளையும், வைகோவையும் இணைத்து மாற்று அணியாக அறிவிக்க எவ்வளவோ பாடுபட்டேன். 
சிபிஎம் கட்சியினர் எப்போதுமே வித்தியாசமானவர்கள். மண்ணில் நடக்காமல், விண்ணில் நடக்கக் கனவு காண்பவர்கள். தனி ஈழத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை; அதனால் வைகோவுடன் இணைய முடியாது என்றார்கள்.
இந்த நிலையில் மாற்று அரசியல் அணியை, நான் எப்படி முடிவு செய்வது? அந்த சிந்தனை முற்றுப் பெற்றது. மாற்று யோசனை செய்தேன். 
பாஜக இன்று பத்து சதவிகித வாக்கு வங்கியுடன் வளர்ந்துள்ளது. 
அதேபோல வாக்கு வங்கியுள்ள தேமுதிக, மதிமுக ஆகியவை சேர்ந்தால் தமிழகத்தில் சுலபமாக வெற்றி பெறலாம். காங்கிரஸை இவர்களால்தான் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்."
- என்று தமிழருவி கூறியுள்ளார்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. காந்திய மக்கள் இயக்கத்திற்கு கூட கொள்கை என்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் நிலைப்பாட்டில் தமிழருவிக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.
அது அவர் விருப்பம். பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதைப்போன்ற கனவுடன் மண்ணில் கால் பாவாமல், விண்ணில் மிதந்து வரும் தமிழருவி மணியன், இலங்கைத்தமிழர்களுக்காக பிறப்பெடுத்தவர் போல பேசுகிறார். 
ஈழம் பற்றி யும் அதற்காகவே கருணாநிதியை துரோகி என்றும் மேடை  தொறும் திட்டி வரும் தமிழருவி மணியன் தற்பொது அடியாள் சேவகம் செய்யும் பாஜக, ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்ததை  மறந்து விட்டுப் பேசிக்கொண்டே போகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடந்த புத்தர் விழாவிற்கு வந்த இலங்கை ஜனாதிபதி இராஜபக்சேவை வரவேற்று ராஜஉபச்சாரம் செய்த சிவராஜ் சிங் சௌகான் எந்த கட்சியின் முதல்வர்? 
suran
ராஜபக்சேயை வரவேற்று அடிக்கல் நாட்டச்செய்த  ம.பி. பாஜக முதல்வர் சவுகான். 
அவர் கட்சி பாஜக தான் என்பதை மணியன் மறந்து விட்டாரா?அல்லது மறதி வியாதியா?
தமிழ் நாட்டில் அணைவரும்[தமிழருவி உட்பட ] ராஜ பக்சே இந்தியா வரக்கூடாது என்று போராடிய பொது அனைத்தையும் புறந்தள்ளி அப்போதுதான் தமிழர்கள் ரத்தத்தால் கறை பட்ட கரங்களை கொண்டு அடிக்கல் நாட்டினார் பா ஜ க முதல்வர் சிவராஜ் சௌ கான் .
தமிழருவி, இராஜபக்சேவிற்கு கறிவிருந்து வைத்த சிவராஜ் சிங் சௌகானுக்கு கறுப்புக்கொடி, வேண்டாம் கண்டனக்கொடியாவது எழுத்தில் ஏற்றினாரா? அப்படிப்பட்ட பாஜகவிற்குத் தான் தமிழருவி பல்லக்கு தூக்குகிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், சாஞ்சிக்கு இராஜபக்சே வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தமிழக வீதிகளில் வலம் வருவதற்கு தமிழருவி மணியனுக்கு தைரியம் வருகிறது என்றால் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் என்ற நினைப்புத்தான் காரணம்.
தமிழருவி மணியன் பேச்சாளர் மட்டுமல்ல: நல்ல படிப்பாளி.
எப் போதும் உலக நாடுகளின் தலைவர்களைப் பற்றி பேசிவிட்டுத்தான் உள்ளூருக்குள் போவார். 
அப்படிப்பட்டவர் என்ன சொல்லியுள்ளார்? 
suran
“இந்தப் பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்ய மாட்டேன் என்று முஸ்லிம் சமுதாயத்திடம் மோடி மன்னிப்பை வேண்டுவது தான் நியாயம். பல்வேறுபட்ட சமயங்களைக் கொண்ட இந்தி யாவின் பிரதமர் நாற்காலியில் அமர அப்போதுதான் மோடிக்கு முழுத்தகுதி வாய்க்கும்” என்று மோடிக்கு யோசனைகளை அள்ளி வீசி யுள்ளார்.
உச்சநீதிமன்றம் சொன்னதையே கேட்காத மோடி, தமிழருவி சொன்னவுடன், தாவிக்குதித்து வந்து மன்னிப்பு கேட்டிடுவாரா?
நரேந்திர மோடி ஆட்சி நடைபெறும் குஜராத்தில், நடைபெற்ற கல வரத்தில் 1044 அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 2548 பேர் காயமடைந்தனர். 223 பேர் காணாமல் போனார்கள். 919 பெண்கள் கணவர்களை இழந்து விதவையானார்கள். 606 குழந்தைகள் தாய், தந்தையற்ற அனாதைகளாக்கப்பட்டனர். இது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தான். ஆனால், உண்மையான இழப்புகள் ஏராளம் என்பதே முஸ்லிம் மக்களின் கருத்தாக உள்ளது.
இத்தனை கொடுமைக்கும் காரணமான மோடி மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? 
அப்படி என்றால் இலங்கைப்படுகொலைகளுக்காக இராஜபக்சே மன்னிப்பு கேட்டால் போதுமா ?
“குஜராத்தில், கடந்த 2002- ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம், சரியானது தான். என்று கூறிய மோடி, “நாம் காரின், பின் சீட்டில் பயணிக்கும்போது, ஒரு நாய்க்குட்டி, காரில்விழுந்து அடிபட்டால், நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத் தானே செய்யும்! அதேபோன்ற வருத்தம் எனக் கும் இருந்தது” என்று குஜராத் படுகொலையின் போது தனது மனநிலையை தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
suran
இந்த செய்தியை அனைத்து பத்திரிகைகளும் கொட்டை எழுத்தில் பிரசுரித்ததை தேர்ந்த படிப்பாளியான தமிழருவி மணியன் படிக்கவில்லையா? இரத்தம் குடிக்கும் பூனைகள், ருத்ராட்சம் அணிந்து வந்தாலும் அதன் இதழோரத்தில் வழிந்தோடும் குருதியின் வாசனை தேசமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். தேர்தலில் ஒரு  வாக்கு கூட இல்லாத இயக்கத் தலைவர் தனது அரசியல் தரகு வேலை மூலம் தனது சுய உருவத்தை வெளிக்காட்டியுள்ளார்.
ஈழப் பிரச்னையில் கருணாநிதியை குறை கூற இவருக்கு என்னதகுதி உள்ளது.சிபிஎம் கட்சியை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது.இவரின் தரகு வேலைக்கு இன்னொரு ஈழ ஆதரவாளர் -தியாகி வைகோதான் சரியாகி உள்ளார் என்பது இன்னொரு கொடுமை.
வாக்குமூலம் அளிப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு இறுதி அத்தியாயத்தை தமிழருவி எழுதி வருகிறார்.
suran
நீலப்படம் புகழ் "நித்தி"யுடன் மோ டி 

- ப.கவிதா குமார்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொருவரும் அவரவர் உயரத்துக்கு எற்றபடி எடை இந்த அ ளவு இருக்க வேண்டும் என ஒரு கணக்கீடு உண்டு.
அதை சுரு க்கமாக.பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்) என்று சொல்லுவார்கள் .அந்தக் கணக்கீட்டை வைத்து தான்  ஒருவர் சரியான எடையுடன் உள்ளாரா, கூடுதல் எடையுடன் உள்ளாரா, சராசரியைவிட குறைவான எடை கொண்டவரா அல்லது உடல் பருமன்  உள்ளவரா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். 
* 18.5 க்கும் கீழ் என்றால் சராசரியை விட குறைவான எடை கொண்டவர்கள்.
* 18.6 முதல் 24.9 வரை என்றால் நார்மல் எடை கொண்டவர்கள்.
* 25 முதல் 29.9 வரை என்றால் அதிக எடை கொண்டவர்கள்.
* 30 மற்றும் அதற்கு மேல் என்றால் உடல்
பருமன் கொண்டவர்கள். 


------------------------------------------------------------------------------------------------------------
கேழ்வரகு... ரொம்ப நல்லது.!
-------------------------------------------------------------
கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. 
பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.
 கேழ்வரகை  கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். 
suran
குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம்.
 இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. 

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய்  பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். 
 கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.
 நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் .
 கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாது. 
இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும். 

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.  கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். 
உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.  தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்   இருக்கின்றன.
 கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். 
------------------------------------------------------------------------------------------------------------
இத்தாலி கடன் நெருக்கடி -
--------------------------------------------50 வரலாற்று சிறப்பிடங்களை விற்க முடிவு
-------------------------------------------------------------------------


-இத்தாலியில்கடன் நெருக்கடி மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனை சமாளித்திட அந்நாட்டில் அரசு வசம்முள்ள 50 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை விற்க முடிவு செய்துள்ளது.
 ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் பட்ஜெட் பற்றாக்குறை என்பது அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இத்தாலியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடுமையான நெருக்கடியின் விளைவாக பொது பட்ஜெட் பற்றாக்குறை 3 சதவிகிதத்தை விட அதிகமாக அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே அந்நாட்டில் நிலவி வந்த பொருளாதாரநெருக்கடியை சரி செய்திடபல்வேறு சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
suran
குறிப்பாக பொதுச்செலவினங்களுக்கான நிதியை வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவான அளவிலேயே இருந்து வருகிறது. 
இதன் விளைவாக அந்நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
இதற்கு அந்நாட்டின் பிரதமர் என்ரிகோ லீட்டா இளைஞர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார். மேலும் நாட்டின் கடனை அடைத்தவுடன், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உன உறுதிமொழி கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது இத்தாலி அரசின் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அந்நாட்டின் பொதுப்பட்ஜெட்டில் பற்றாக்குறை 3 சதவிகிதத்தை விட அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை சமாளித்திட அந்நாட்டில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை, விற்று அரசின் கடனை அடைப்பது எனஅந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான முயற்சியில் அந்நாட்டின் கருவூலத்துறை இறங்கியிருக்கிறது. இதன் மூலம் இத்தாலி அரசிற்கு இருக்கும் கடன் அளவில் 42 கோடியே 50 லட்சம் யூரோக்களை அடைக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி இத்தாலியில் உள்ள 18ம் நூற்றாண்டு அரண்மனை, மிலன் நகரில் உள்ள வில்லா மிரபிலோ, பிராக்சியானோ நகரில் உள்ள ஓர்சினி ஓடிஸ்கல்சி கோட்டை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் விற்பதற்கான முயற்சியில் இத்தாலி அரசுஇறங்கயிருக்கிறது.
 அரசின் இந்த நடவடிக்கை குறித்து அந்நாட்டின் சொத்து விற்பனைதுறையின் நிபுணரான, ரூபர்ட் ஃபவ்செட் கூறியதாவது,
இது போன்ற நெருக்கடியான நிலையில் எந்த ஒரு அரசாக இருந்தாலும் கடன் நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கான வழியைத்தான் தேடும் அதுதான் ஏதார்த்தம். ஆனால் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க சொத்துக்களை பாதுகாக்க அதிக அளவில் செலவுகள் ஆகும்.
 இதனை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் அதனை தொடர்ந்து நிர்வாகிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். நாம் முன்னோர்கள் சேர்த்து வைத்த மிகப்பெரிய சொத்து, புகழ் எல்லாம் இணைந்ததுதான் இந்த வரலாற்றுச் சிறப்பிடங்கள். இதனை தனியார் நிறுவனங்கள் வாங்கலாம். 
அதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கும். 
அதே நேரத்தில் அதனால் வரும்பணம் அந்த பகுதியில் உள்ளுர் மக்கள் பயன்பெறும் வகையில் அந்த மாநிலத்தின் அரசு கருவூலத்தில் போட வேண்டும் என்று கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அல்லா என்று சொல்லாதே !
--------------------------------------------
மலேசியாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர், இறைவன் என்பதை குறிக்க  ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில், தி ஹெரால்டு செய்தித்தாள் அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், அல்லா என்ற சொல் கிறிஸ்துவ பயன்பாட்டில் இல்லை என்றும், ஒரு சமூகத்தில் இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.
இந்தச் சொல் முஸ்லிம்களுக்கு மட்டும் பிரத்யேகமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------யாசர் அராபத்
--------------------------------------
கொலை செய்யப்பட்டார்?
----------------------------------------------
பாலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர்அராபத்   இறக்கும் போது அணிந்திருந்த உடையில் பொலோனியம் -210 என்ற கொடிய கதிரியக்க படிமங்கள் இருப்பதைசுவிஸ்நாட்டு விஞ்ஞானிகள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
பாலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கத் தின் தலைவராக இருந்த யாசர் அராபத் 2004ல் பிரான்ஸ் சென்றிருந்தார்.
suran
 அப்போது அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போதே அராபத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது உடலை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அப்போது இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பின்னர் அல் ஜஜீரா தொலைக்காட்சி நிறுவனம் அராபத் இறுதி நாட்களில் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பி அதனை உயிரியல் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் 9 மாத கால ஆய் வுக்குபின்னர் பொலோனியம் -210 என்ற அணுஉலைக்கு பயன்படும் கொடிய விஷத்தை பயன்படுத்தி அவர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவரது மனைவி சுஹா உள்ளிட்டோர் அராபத்தின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண் டும் என பாலஸ்தீன ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அவரது ஆதரவாளர்களும் அராபத்தின் உடலை ஆய்வுக்கு உட்படுத்தி உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து யாசர் அரபாத்தின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனை செய்ய பாலஸ்தீன நிர்வாகமும், அரபாத்தின் மனைவிசுகாவும் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீன் விசாரணைக்குழு தலைவர் தவ்பிக்திரவி மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்தை சேர்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர், அராபத்தின் கல்லறையில் இருந்து உடலை தோண்டி எடுத்து மாதிரிகளை சேகரித்தனர். இதில், அரபாத் கடைசி நேரத்தில் அணிந்திருந்த உடைகளை அவரது மனைவிசுகா ஆய்வுக்காக அளித்திருந்தார். உடை மற் றும் அவரது உடல் ஆகியவற்றி லிருந்து 38 மாதிரிகள் சேக ரிக்கப்பட்டன. ஆனால்இந்த ஆய்வு முடிவு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளி யிடப்படவில்லை.இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் லேன்சிட் என்ற மருத்துவ வாரஇதழ் யாசர்அரபாத் மாதிரிகளை பரிசோதித்த நிபுணர்களை சந்தித்து பேட்டி கண்டுள்ளது.
அதில் கதிரியக்க விஞ்ஞானிகள் யாசர் அரபாத் உடையில் பொலோனியம்210 என்ற கதிரியக்க படிமம் இருப்பதை உறுதி செய்துள்ளனர் எனதெரிவித்துள்ளனர் இந்தகொடிய விஷத்தன்மையுள்ள கதிரியக்கம் உடலில் சென்றுகுமட்டல், வாந்தி, சோர்வு,வயிற்றுபோக்கு, கல்லீரல்செயலிழப்பு, சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புக் களை உடனடியாக உருவாக் கும் என தெரிவித்துள்ளனர். 
இதன் மூலம் யாசர் அராபத் பிரான்சிஸில் இருந்த போது பொலோனியம் 210 என்ற கதிரியக்க விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்க லாம்எ ன்று  தெரியவருகிறது. 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?