அம்பானிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு

2ஜி அலைக்கற்றை வழக்கு. அனில் அம்பானியையும் சேர்க்கபொது நல மனு
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியைச் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற அமைப்பு  தாக்கல் செய்த
 மனுவில்”: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனில் அம்பானியின் ஒப்புதலின்றி தங்கள் நிறுவனம் சார்பாக அவரது ஊழியர்கள் இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட வாய்ப்பில்லை. எனவே அவரையும் இவ்வழக்கில் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.
அனில் அம்பானிக்குக் தெரியாமல் அவரது ஊழியர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டிருந்தால் அவர்களை அம்பானி பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் திகார் சிறையில் சந்தித்து இவ்வழக்கை சந்திக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அம்பானி உறுதியளித்துள்ளார்’எனத் தெரிகிறது.
இதன் மூலம் அலைக்கற்றை ஊழலில் தனக்குள்ள பங்குதனது ஊழியர்கள் மூலம் வெளிகிவிடக்கூடாது என்பதை அவர் முயற்சிசெய்கிறார்”
கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்ததற்கு அதன் மேலாளர் சரத்குமார் மட்டுமின்றி பங்கு வைத்திருந்த உரிமையாளர் போன்ற கனிமொழியும் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால் ரிலையன்ஸ் உரிமையாளர் அம்பானிக்கு மட்டும் இந்த விதிவிலக்கு ஏன்?

2-ஜி அலைவரிசைனாலே தலைய சுத்துது’பா...

=========================================================================

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?