ஆப்கி டிரம்ப் சர்க்கார்
வாஷிங்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பல பேருந்துகளில் வந்து வெள்ளை மாளிகைக்கு வெளியே மோதியை வரவேற்கக் கூடினர், , மோதியின் படம் மற்றும் ஆதரவில் எழுதப்பட்ட பெரிய பேனர்களைத் தாங்கி அவருக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பினர்.
மோதிக்கு எதிராகவும் ஒரு குழு அங்கு கூடி இருந்தது. அவர்கள் மோதி எதிர்ப்பு முழக்கமிட்டனர். சிலர் மோதியே திரும்பிச்செல் என எழுதப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியபடி குரல் எழுப்பினர்.
ஒரு சந்தர்ப்பத்தில், இந்த இருவேறு குழுக்களும் நேருக்கு நேர் வந்து ஒரு மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அங்கு சரியான நேரத்தில் காவல் துறை வந்து பாதுகாப்புக்கு நின்றது.
டிரம்ப் ஆட்சியில் இருந்த அளவுக்கான வரவேற்பு இனி சாத்தியமில்லை என்பதைப் பல தெளிவான குறியீடுகளால் பைடன் அரசு தெரிவிக்கத் தவறவில்லை.
மோதி இருதரப்பு சந்திப்புக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அதிபர் பைடன் வெளியே வந்து அவரை வரவேற்கவில்லை. மாறாக, மோடி ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பைடன் அவரைச் சந்தித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தி சார்ந்த நலன்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் அளவுக்கு, இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் தேவைப்படும் அளவுக்கும் இன்று புவி சார் அரசியல் நிலை மாறிவிட்டது.
மோதி-பைடன் இரு தரப்பு சந்திப்பில், எல்லாமே மிகவும் அளவிடப்பட்ட முறையில் நடந்தன. ஒவ்வொரு சொல்லும் அளந்து அளந்தே பேசப்பட்டது.
பெருந்தொற்று காரணமாகவும் கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தன. மோதியின் உற்சாகமும் குறைந்தே காணப்பட்டது. பைடனும் மோதிக்கு 'சிறந்த தலைவர்' போன்ற பட்டங்கள் எதுவும் வழங்கவில்லை.
அதே நேரத்தில், பைடனுக்கு 'சிறந்த தலைவர்' என்ற பட்டம் வழங்க மோடி முயற்சி செய்ததும் தெரிந்தது.
ஜனநாயக மாண்புகளை வலியுறுத்திய பைடன், கமலா
மாறாக, துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மோதியுடனான சந்திப்பின் போது ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
பைடன், மோதியுடனான சந்திப்பில், "மகாத்மா காந்தியின் அகிம்சை, மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற இலட்சியங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவை" என்று கூறினார்.
காந்தியடிகளின் கொள்கைகளை மேற்கோள் காட்டிய மோதி, உலகிற்கு அவர் செய்த நன்மைகளையும் பட்டியலிட்டார்.
ஆனால், அமெரிக்கச் செய்தித்தாள்களில் மோதியின் அமெரிக்க வருகை பற்றி எந்தச் சிறப்புக் குறிப்பும் இல்லை. சில செய்தித்தாள்களில், ஜனநாயக மதிப்புகள் குறித்து மோதிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்று தலைப்பிடப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.
லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸில் வெளியான செய்தியின் தலைப்பு 'கமலா ஹாரிஸ் இந்த வரலாற்றுபூர்வ சந்திப்பில் இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பான அழுத்தத்தை மோதிக்கு உணர வைத்தார்" என்பதாக இருந்தது.
அதே சமயம், அமெரிக்க இதழான பொலிடிகோவில் வெளியான ஒரு கட்டுரை, இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து, பைடன் நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது பற்றி விவாதிக்கிறது.
இந்தக் கட்டுரையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வழக்கறிஞர் ஜான் சிஃப்டனின் அறிக்கையும் அடங்கும், அதில் அவர், "இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து பைடன் நிர்வாகம் ஏன் அமைதி காக்கிறது" அமெரிக்க அதிகாரிகள் ஏன் கைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர்? இது என்ன உத்தி? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அமெரிக்கா ஒப்படைத்துள்ள 157 தொல்பொருட்களின் படங்கள் இடம்பெற்ற குறிப்பேட்டை பார்வையிடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
இதற்கிடையே, மோதியின் அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாகவும் தனித்துவமாகவும் இருந்தது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா தன் வசம் உள்ள 157 இந்திய தொல் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த பொருட்களுடன் பிரதமர் நரேந்திர மோதி தாயகம் திரும்புவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இந்த பொருட்கள் பெரும்பாலும் 11ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை சேர்ந்தவை.
கலைப்பொருட்களில் பாதி (71) கலாசாரம் சார்ந்தவையாக இருந்தாலும், மற்ற பாதி இந்து மதம் (60), பெளத்த மதம் (16) மற்றும் சமணம் (9) ஆகியவற்றுடன் தொடர்புடைய சிலைகளையும் கொண்டுள்ளன.
அவை உலோகம், கல் மற்றும் சுடுமண்ணால் தயாரிக்கப்பட்டவை.
வெண்கல சேகரிப்பில் முதன்மையாக லட்சுமி நாராயணன், புத்தர், விஷ்ணு, சிவன் பார்வதி மற்றும் 24 சமண தீர்த்தங்கரர்கள், கண்கலமூர்த்தி, பிராமி மற்றும் நந்திகேசன் ஆகியோரின் புகழ்பெற்ற தோரணைகளின் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் உள்ளன.