இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதன் பங்குகளை விற்கப்போவதாக பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. எந்த விவசாயியும் ஒருபோதும் விதை நெல்லை விற்க மாட்டார். மத்திய அரசு அதைத்தான் செய்யப்போகிறது.
எல்ஐசி ஒரு அற்புதமான நிறுவனம். அதைப் பற்றிய சில தகவல்களைப் பாருங்கள். இனிமேல் ஒருபோதும் இப்படி ஒரு அரசு நிறுவனத்தை உருவாக்க முடியாது.
1. இந்தியாவின் காப்பீடு சந்தையில் 70 சதவீதம் எல்.ஐ.சி.யின் பிடியில் உள்ளது. எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனை போல வந்து எல்.ஐ.சி. காப்பாற்றும்.
2. நேரு பிரதமராக இருக்கும்போது அவரது மருமகனான ஃபெரோஸ் காந்தி காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்ப, 1956-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. எல்.ஐ.சி. உருவானது.
3. 2015-ல் ஓஎன்ஜிசியின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்றபோது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடிபிஐ வங்கி வாராக் கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சி. மீண்டும் வந்து காப்பாற்றியது.
4. 2019, நவம்பர் 30 வரையில் எல்.ஐ.சியின் பங்கு காப்பீட்டு சந்தையில் 76.28 சதவீதம் இருந்தது. 2019 நிதியாண்டில் எல்.ஐ.சி 3.37 லட்சம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் பீரிமியத்திலிருந்தும் 2.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலும் வருமானம் ஈட்டியுள்ளது.
5. 2019-ம் ஆண்டின் நிதியாண்டில் எல்.ஐ.சி பங்கு சந்தையில் 28.32 லட்சம் கோடி ரூபாயும், கடனாக 1.17 லட்சம் கோடி ரூபாயும் மற்றும் 34,849 கோடி ரூபாயை பண சந்தையிலும் முதலீடு செய்துள்ளது.
6. எல்.ஐ.சியின் மொத்த சொத்து 36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதன் கடன் வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.
7. ஒவ்வொரு வருடமும் அரசு பத்திரங்களிலும் பங்கு சந்தைகளிலும் எல்.ஐ.சி 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்கிறது.
8. 2009-லிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009லிருந்து 2012 வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு ஆகும். ஓஎன்ஜிசியின் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, அதனை வாங்க யாரும் வராத நிலையில், எல்ஐசி முன்வந்து வாங்கியது.
9. எல்ஐசியில் காப்பீட்டு தொகை மற்றும் போனஸுக்கு மத்திய அரசே பொறுப்பு என எல்.ஐ.சி சட்டத்தின் 37-வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இது கிடையாது.
10. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் எல்.ஐ.சி.யின் செயல்பாடுகள் சுணக்கமடைய செய்யப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாத ஆண்டு அறிக்கையின் படி முதலீட்டு விகிதத்தில் வருவாய் ஈட்டாத சொத்துகளில் மதிப்பு 6.15 சதவீதமாக மாறியுள்ளது. 2014-15ல் இது 3.30 சதவீதமாக இருந்தது. அதாவது கடைசி ஐந்து நிதியாண்டில் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.
11. எல்.ஐ.சியின் இந்த நிலைக்கு காரணம் எல்.ஐ.சி முதலீடுசெய்ய வைக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் நிலை மோசமாகியிருப்பதுதான். இதில் திவான் ஹவுசிங் ரிலையன்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பிராமல் கேபிடல் ஆகியவையும் அடக்கம்.
12. பல அரசு நிறுவனங்களை விற்று அரசின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முயல்கிறது மத்திய அரசு. ஆனால், வருடாவருடம் அதனால் இலக்குகளை எட்ட முடியாத நிலையில், எல்ஐசியை குறிவைத்திருக்கிறது மத்திய மோடி அரசு.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (LIC) வயது 66. இந்நிறுவனத்தின் பிறப்புக்கு காரணம், 1956-க்கு முன்னால் உள்நாட்டு – வெளிநாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்த மோசடிகளும் ஊழல்களுமே ஆகும். மோசடி, ஊழல்கள் மூலம் மக்களின் சேமிப்பைச் சூறையாடிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவைகளை தேசியமயமாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவே எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிறப்பு.
மோசடி தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து அரசுடைமையாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் எல்.ஐ.சி
அன்றைய நேரு தலைமையிலான அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.38,04,640 கோடி. இதன் வளர்ச்சி சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட நிறுவன ஊழியர்களின் உழைப்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள் மற்றும் சாதாரண அடித்தட்டு மக்கள் வரை ரத்த நாளங்களாக செயல்பட்டதன் விளைவாக LIC நிறுவனமானது இன்று அசுர வேகத்தை எட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.
தேசியமயமாக்கத்திற்கு முன்பு காப்பீட்டுத் துறையிலிருந்த 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சாதிக்காத சாதனையை ஒரு அரசு நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. குறைவான முதலீட்டில் இந்த அளவு அபரிமிதமான வருவாயை ஈட்டியதற்கு, பாலிசிதாரர்களுக்கு உரிய முறையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வகையில் கடமை தவறாமல் மோசடி செய்யாமல் ஊழல் இல்லாமல் நேர்மையுடன் இறப்பு உரிமங்களை முதிர்ச்சி தொகைகளைக் கொண்டுபோய் சேர்த்தன் மூலம் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது LIC நிறுவனம். இதுவே, பாலிசிதாரர்களை LIC-யுடன் தொடர்ந்தும் இடைவிடாமலும் பயணிக்க வைக்கிறது.
மேலும் இதன் வருவாய் மற்றும் உபரி, அதன் சொந்த வளர்ச்சிக்கும் அரசு நிறுவனங்களில் முதலீட்டிற்கும், அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் அரசுடமையாக்கப்படாமல் இருந்திருந்தால், இதன் வருவாயும் உபரியும் தனியாரின் பணப்பெட்டியை நிரப்பும். மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படாமல் போகும்.
கொரோனா மரணங்கள் நிறைந்த 2020-21-ம் ஆண்டு காலத்தில் கூட இறப்பு உரிமம் 98.62% முதிர்வுத் தொகையில் 89.78% கொண்டு போய் சேர்த்துள்ளது, LIC நிறுவனம். இந்த நேர்மையை, ஏமாற்று பேர்வழிகளான தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
முடியாது என்பதைத் தெரிந்தேதான் பாசிசக் கும்பல், LIC காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை நிதி தேவைக்காக விற்கப்போவதாக கூவுகிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்? மேலும், வாக்களித்த மக்களின் [பாலிசிதாரர்களின்] சேமிப்பை சூறையாடி தனியாருக்கு தாரை வார்ப்பது எவ்வளவு பெரிய துரோகம் ?
இவர்களின் நோக்கம் அரசின் நிதி தேவையை நிறைவு செய்வது அல்ல. கார்ப்பரேட்களின் நிதித் தேவையை நிறைவு செய்வதே. ஒன்றிய மாநில அரசுகளின் நிதி தேவையை பூர்த்தி செய்து, பல்வேறு மக்கள் திட்டங்களில் முதலீடுகள் செய்து, பங்கு சந்தை சரியும் போதெல்லாம் அதில் முதலீடு செய்து, நட்டமில்லாமல் இயங்கிவரும் LIC-யின் வருவாய் மற்றும் உபரி அதன் சந்தாதாரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் செல்வதிலிருந்து மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுப்பதே, எல்.ஐ.சி தனியார்மயத்தின் நோக்கம்.
LIC நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தத்தவறினால், அதன் வருவாயும், உபரியும், சொத்தும் தனியாருக்கு போய் சேரும். இதனால், மக்களின் நலத் திட்டங்களோ, நாட்டின் பொருளாதார தேவைகளோ நிறைவேறாது. மேலும் அதில் போடப்பட்ட மூலதனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
மேலும், பாலிசிதாரர்களின் இறப்பு உரிமத் தொகை, முதிர்ச்சித் தொகை உரிய முறையில் உரிய நேரத்தில் போய் சேராது அல்லது முற்றிலும் சேராமலும் போகலாம். இதற்கு தனியார் நிறுவனங்களின் கடந்த கால ஊழல் மிக்க, மோசடி மிக்க செயல்பாடுகளே சிறந்த உதாரணம்.எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதே இந்த மோசடிகளுக்கு முடிவு கட்டத்தானே !
LIC நிறுவனம் என்பது தேசத்தின் சுயப் பொருளாதாரத்தையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றும் அட்சயப்பாத்திரம். இதை காவிக் கும்பல் களவாடி கார்ப்பரேட்களின் கஜானாவில் சேர்ப்பதை ஒரு போதும் அனுமதிக்கலாகாது.
ஏனெனில், ஒவ்வொரு வருடமும் LIC-க்கு வரும் உபரித் தொகையிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரும் 5% ஈவுத் தொகையும் மீதமுள்ள 95% பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் போனசும் இனி கிடைக்காது.
மேலும், பொதுத்துறை – அரசுத்துறை நிறுவனங்கள் வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அவைகளை ஓடிப்போய் தாங்கிப் பிடிக்கும் ஆபத்பாண்டவனாக LIC இருக்கிறது. இனி அப்படி ஒரு பொருளாதார பெரும் சக்தி அரசின் கைகளில் இருக்காது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் ஈடுசெய்யும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் உற்பத்தி சரிவு பொது முடக்கம் வேலையிழப்பு, வேலையின்மை போன்ற சூழலிலும் LIC பாதிப்பு இல்லாமல் இயங்குகிறது என்றால் பாலிசிதாரர்களின் தொடர்ச்சியான இடைவிடாத பங்களிப்பும் ஊழியர்களின் அயராத உழைப்புமே ஆகும். மேலும், இதுவரை அரசுக்கு கடனாக, முதலீடாக ரூ.26,86,527 கோடியை வழங்கியிருக்கிறது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வரை முதலீடு செய்திருக்கிறது எல்.ஐ.சி நிறுவனம். இவை அனைத்தையும் மக்களிடம் இருந்து மறைந்து விட்டது பாசிச மோடி அரசு.
LIC போன்ற நிறுவனங்களுக்கு மூலதனத் திரட்டல் தேவை இல்லை என்பதையும் இது ஒரு தொழில் நிறுவனம் இல்லை என்பதையும், இந்நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது என்பதையும், ஒன்றிய அரசு மூடி மறைத்து வரும் பித்தலாட்டத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து போராட தவறினால் மக்களின் வரிப்பணத்தில் உருவான ஜீவ ஊற்றான LIC-யை தங்கள் அப்பன் வீட்டு சொத்துக்களைப்போல விற்பதைத் தடுக்க முடியாது.
எனவே, இந்த கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலுக்கு குலைநடுக்கம் ஏற்படும் வகையில் மக்களின் தீவிர போராட்டங்களை வீதிக்கு வீதி கட்டியமைப்பது மூலமே மக்களின் நிறுவனங்களின் பறி போகாமல் பாதுகாக்கவும் தொடர்ந்து மக்கள் நிறுவனமாக நீடிக்கவும் முடியும் !!
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர் இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின்...