திடீர் இதயத்துடிப்பு முடக்கம்,

(Sudden cardiac arrest)
முதலுதவிகள்


மாரடைப்புக்கும் ‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
இதயத்துடிப்பு திடீரென முடங்குவதற்கு ‘சீரற்ற இதயத்துடிப்பு’ எனப்படும் அரித்மியா உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம்தான் மாரடைப்பு.
மாரடைப்பு வரும்போது அறிகுறிகள் தெரியும்; இதயத்துடிப்பு இருக்கும்.
மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினைவோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக அவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம்.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம், மாரடைப்பை விடவும் தீவிரமான சிக்கல். இது, ஏற்பட்டால் உடனடியாக சுயநினைவை இழந்து, மரணம் நேரிடலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
திடீரென ஒருவர் நம் கண் முன் நிலைகுலைந்து விழுகிறார் எனில், உடனடியாகச் சில விநாடிகளுக்குள் அவரின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்.
எந்த உணர்ச்சியும் இன்றிக் காணப்பட்டால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம்.
அவரது கையில் நாடி பார்ப்பதோ, இதயத்துக்கு அருகில் காதைவைத்துச் சத்தம் கேட்கிறதா எனச் சோதனை செய்வதோ வேண்டாம். அவை எல்லாம் நேரத்தை வீணாக்கும் செயல்கள்.
ஒருவருக்குத் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஒவ்வொரு நிமிடமும் 10 சதவிகிதம் குறைகிறது. அதாவது, 10-வது நிமிடம் அவர் நிரந்தரமாக உயிர் இழக்கக்கூடும்.
எனவே, உணர்ச்சியே இல்லை எனில், தாமதிக்காமல் உடனடியாக சி.பி.ஆர் எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும்.
சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation)
சி.பி.ஆர் என்பது இதயத்துக்குச் செயற்கையாக உயிரூட்டல். பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்க வேண்டும்.
அவரைச் சுற்றிக் கூட்டம்போட வேண்டாம். காற்றோட்டம் இருக்கட்டும். முதலில் அவரது சட்டை பட்டன்களை அவிழ்க்கவும்.
நெஞ்சின் மையப்பகுதியின் மீது, வலது அல்லது இடது உள்ளங்கையின் தடிமனான அடிப்பகுதியை வைக்க வேண்டும். இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து, இருகை விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சுமார் ஐந்து செ.மீ ஆழத்துக்கு வேகமாக அழுத்தம் கொடுத்து, எடுக்க வேண்டும்.
ஒரு நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை இப்படி அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும் வரையிலோ அல்லது அவசரஉதவிப் பிரிவில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர் வரும் வரையிலோ உங்களுக்குக் கடும் சோர்வு ஏற்படும் வரையிலோ, இந்த முதலுதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்குச் பக்கவாட்டில் அமர்ந்துதான் இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும்.
========================================================================================
இன்று,
டிசம்பர்-14.

  • இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
  • ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவானது(1946)
  • நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது(1939)
  • ரைட் சகோதரர்கள், தமது வான்வெளிப் பயணத்தை முதல் முறையாக சோதித்தனர்(1903)
==========================================================================================
மழைக் காலத்தில் உடலில், அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு என, பல இடங்களில் அரிக்கும். 
வியர்வை அல்லது உடலில் இருக்கும் ஈரப்பதத்தில், ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே இதற்கு காரணம். 
பூஞ்சைக் கிருமிகள் தோலைப் பற்றிக் கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி, வளர துவங்கி விடும். 
பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த, நாம் சொறிவதால் தோலில் ரத்தக் காயங்கள் உண்டாகி, கிருமிகள் இன்னும் செழிப்பாக வளரும். 

கிருமிகளை அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் மிகவும் சிரமம். 

ஏனெனில், ஒருவரிடமிருந்து அந்த கிருமிகள் அழியும் முன், குறைந்தது, ௧௦ பேருக்காவது, பரவி விடும். 

ஆகவேதான் பூஞ்சையால் தோன்றும் கிருமித் தொற்று, வீட்டில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவுகிறது. 

விடுதியில் படிப்போர், பழைய சுத்தமில்லாத ஈரத்துணியை அணிவோர், நீண்ட நேரம் உள்ளாடைகளை மாற்றாமல் அணிவோர், ஒரே உடையை மாற்றி அணிவோர், பிறரின் அழுக்குத் துணிகளையும் சேர்த்து, ஒன்றாகத் துவைத்து பயன்படுத்துவோர் ஆகியோருக்கு, பூஞ்சைகளின் தொற்று உண்டாகிறது. 

இதை தவிர்க்க விரும்புவோர், உடம்பை நன்கு சுத்தமாக தேய்த்துக் குளிக்க வேண்டும். 
சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி உட்பட 16 மாவட்டங்களில்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
வட கிழக்கு பருவமழை கடந்த  அக்டோபர் மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது இதனால், தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்களின் நீர்  மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. 
குறிப்பாக, தமிழகத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நீர்வளத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள 15 முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்தாண்டு தமிழகத்தில் கூடுதலாக 700 மி.மீ வரை மழை பெய்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. 
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து,  மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் மூலம் 3,280 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,559  ஆழ்துளை  கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. 
அந்த ஆய்வின் முடிவில் கடந்த 2014 நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில்  தர்மபுரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கோவை, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நெல்லை,  விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 
ஆனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு,  நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் குறைந்து  இருப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி  கூறும் போது, 
 வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்தும் அவற்றை சேகரிக்க முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. 
குறிப்பாக, தமிழகத்தில் 39 ஆயிரம் குளங்கள் உள்ள நிலையில், அவற்றில் 4 ஆயிரம் குளங்கள் மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளன. 
மற்றவைகள்  தூர்வாரப்படவில்லை. 

நீர் மேலாண்மையில் அரசு போதிய அக்கறை காட்டாததன் விளைவாக ஆங்காங்கோ கடலில் கலக்கும் மழை நீரை கூட நம்மால் சேமித்து வைக்க  முடியவில்லை. 
குறிப்பாக, தற்போது பெய்த பருவமழை மட்டும் சராசரியாக 100 டிஎம்சி நீர் வரை கடலில் கலந்துள்ளது. இந்த நீரை சேமித்து  வைத்திருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருக்கும். 
தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதல  பாதாளத்திற்கு சென்று விடும்’ .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஐ .பி.எஸ், கழட்டி விடப்பட்ட கதை.
ஆர்.நடராஜ் IPS பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் அதிமுக,கட்சியில் இணைந்து கொண்டார் .ஆனால் தற்பொது தந்தி தொலைக்காட்சியில் சில கருத்துகளை அல்லது உண்மைகளை கூறியதற்காக கட்சியில் இருந்து ஜெயலலிதா அவரை நீக்கியுள்ளார்.
 தந்தி தொலைக்காட்சியில்  அ(ல)சல் நிகழ்ச்சியில் அவர் சொன்னதில் சில முக்கிய செய்திகள் .
[?]இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது. 

[?]கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிடத்தான் தலைமை செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்தது இந்த பெரும் சேதத்துக்கு காரணம். 

[?]முன்பெல்லாம் அணையை பொதுப் பணிதுறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள். இப்பொழுது ”மான்புமிகு தமிழகமுதல்வர் புரட்சிதலைவி அம்மாவின் ஆணைகினங்க”ன்னு யார் யாரோ திறங்குறாங்க. அவர்களுக்காக காத்திருந்ததும் இந்த பெரும் சேதத்துக்கு காரணம். 

[?]மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே இந்த பெரும் சேதத்துக்கு காரணம் 

இவைதான் அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகள். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் தந்தி க்காரன் அவர் அதிமுக உறுப்பினர் போல் பேசுவார் என்று நம்பி பேட்டி எடுத்திருக்கின்றனர்..
ஆனால் அவரோ மக்கள் மனநிலையை பகுத்தறிவுடன் பேசிவிட்டார் .
ஆனால் தந்தி தொலைக்கட்சிக்காரர்களோ அப்படி பேசியது வேறொரு நடராஜ் என்பவர்.அவர் பத்திரிகையாளர்.என்கிறார்கள்.காவல் துறை நடராஜ் இதுவரை வாய் திறக்கவில்லை.அவர் திறந்தால்தான் அவர்தான் இவரா.அல்லது இவர்தான் அவரா.அல்லது அவரும் இவரும் இவர்தானா/அல்லது இவரும் அவரும் அவர்தானா என்ற வினாவுக்கு விடை கிடைக்கும்.
ஆனால் இங்கு ஒரு நிகழ்வு ,கேள்வி மட்டும் நெஞ்சை ரணமாக்குகிறது.
பேசினாரோ,பேசலையோ நடராஜ் மீது இவ்வாளவு விரைவாக நடவடிக்கை எடுக்கும் ,கமல்ஹாசன் அறிக்கைக்கு முன்னாள் முதலவர் பன்னீர் செல்வம் மூலம் பக்கம்,பக்கமாக கண்டன அறிக்கை விட்டு கமல்ஹாசன் வீட்டு குடிநீரையும்,மின்சாரத்தையு ம் உடனே துண்டிக்கும் ,பிரவீன் குமார் உதவிய 144 தடை சட்டம் உதவியுடன் இரவோடிரவாக  கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு மக்களவை தேர்தலில் பணம் கொடுத்த ஒருவருக்கு செம்பரபாக்கம் தண்ணீரை திறந்து விடவும்,அதானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே உதவவும் முடியாமல் போனது ஏன் கேள்விதான்?அது.
                                                   மேகம் வரைந்த ஓவியம்.
முகனூல்.










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?