சிக்கன் சாப்பிடுவதால்
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்?
சாதாரணமாக இயற்கையான முறையில் வளரும் நாட்டுக் கோழிகளை சாப்பிட்டால் இப்படி ஏற்படாது. ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகளைச் சாப்பிட்டால் அது நமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கிறதாகம்.
அதாவது அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கோழிகளுக்கு நோய் தடுப்பிற்காக கொடுக்கப்படுவதால், அதைச் சாப்பிடுபவர்களுக்கும் அந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் உள்ளே சேருவதால், அவர்களது இயலான நோய் எதிர்ப்புச் சக்தி குறைய சாத்தியமிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
“விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அறிவுக்கு விரோதமான முறைகளில், அளவுகளில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் அளிக்கப்படுவது நம்மை பெரிய பிரச்சினையில் தள்ளிவிடும்.
குறிப்பாக மனித ஆரோக்கியம் பெரிய இடர்பாடுகளை இதனால் சந்தித்து வருகிறது.
மேலும், நாம் ஏற்கெனவே கிடைத்து வரும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள், மாத்திரைகள் விலை அதிகமாக இருக்கும்.
எனவே முறையற்ற விதங்களில், தேவையற்ற, அறிவுக்கு புறம்பான விதங்களில் அதனை கோழிகளுக்கும், மனிதர்களுக்கும் பயன்படுத்துவது கூடாது.
அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுவதன் விளைவு, உணவுச்சங்கிலியை பாதித்து, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த வித ஆன்ட்டி பயாடிக் மருந்தும் வேலை செய்யாது போய்விடும் அபாயம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது.
காரணம், பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை எளிதில் தடுத்தாட்கொள்ளத் தொடங்கி விட்டன.
இதனால் பிற்பாடு எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்துவது கடினமாாகிவிடும் என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.
பேசாம நாட்டுக் கோழியை பிடிச்சு சாப்பிடுங்க. பிரச்சனையே இல்லை.
========================================================================================
இஸ்ரோ
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்புவதில், இஸ்ரோ கைத்தேர்ந்த நிறுவனமாக மாறி வருகிறது.
இஸ்ரோ மூலம் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதில் வெளிநாடுகள் அதிகளவில் ஆர்வம் கொண்டிருப்பதன் மூலம், வணிக ரீதியாக இஸ்ரோ வளம் பெற்று வருவது தெரிய வருகிறது. இதுபற்றிய சிறப்புச் செய்தியைப் பார்க்கலாம்.
TOP: வெற்றிப் பாதையில் 'இஸ்ரோ' இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம், 1999-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
முதன்முதலாக, ஜெர்மனி மற்றும் கொரியாவைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்களை 1999-ம் ஆண்டு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம் வர்த்தக ரீதியிலான பயணத்தை இஸ்ரோ தொடங்கியது.
2001-ம் ஆண்டு ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த 2 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய பிறகு, 6 ஆண்டுகள் இஸ்ரோவுக்கு நீண்ட இடைவெளியாக அமைந்தது.
அதன் பின்னர் இந்தோனேசியா, அர்ஜென்டினா, இத்தாலி நாடுகளைச் சேர்ந்த 3 செயற்கைக்கோள்களை 2007-ம் ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
2008-ல் கனடா, ஜப்பான், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒன்பது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய இஸ்ரோ, படிப்படியாக முன்னேறி இந்த ஆண்டு சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் உள்பட மொத்தம் 17 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவியிருக்கிறது.
1999 முதல் தற்போது வரை 20 நாடுகளைச் சேர்ந்த 57 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி இஸ்ரோ சாதனை படைத்திருக்கிறது.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு செலுத்துவதில் கடந்த நிதியாண்டில் சுமார் ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாயும், நடப்பாண்டில் இதுவரை சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாயும் இஸ்ரோவுக்கு கிடைத்திருக்கிறது.
இது இந்திய விண்வெளித் துறை வணிகரீதியாக வளம்பெற்று வருவதை காட்டுவதாக விஞ்ஞானிகளும், அறிவியலாளர்களும் தெரிவிக்கின்றனர்.
57 செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமே இஸ்ரோ ஏவியிருக்கிறது என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
இஸ்ரோவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதற்கான தூரம் குறைவாக இருப்பதே, வெளிநாடுகள் இஸ்ரோவை நாடுவதற்கு முக்கிய காரணமாகும்.
=========================================================================================
இன்று,
டிசம்பர்-21.
- உலகின் முதல் குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிக்கையில் வெளியானது(1913)
- சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது(1968)
- பெத்லகேம் நகரம், இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது(1995)
- நார்வேயின் முதல் தேசிய பூங்காவாக ராண்டன் பூங்கா அறிவிக்கப்பட்டது(1962)
=========================================================================================
தமிழ்ப் படைப்பாளிகளுக்கான 2015ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2013ல் வெளியான இவரது 'இலக்கியச் சுவடுகள்' நூலுக்காக தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்த ஆ. மாதவன், பள்ளிக்கூடத்தில் தமிழிலும் மலையாளமும் பயின்றார். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்.
ஆ. மாதவனின் ஆரம்ப கால எழுத்துகளில் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்தது.
லா.ச. ராமாமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் ஆகியோரது எழுத்துக்களில் மாதவன் ஈர்க்கப்பட்டார்.
மொழிபெயர்க்கப்பட்டிருந்த விக்டர் ஹ்யூகோவின் கதை ஒன்றை தமிழில் மொழிபெயர்த்ததே மாதவனின் முதல் இலக்கிய முயற்சி.
இவரது முதல் தொகுதியான 'மோகபல்லவி' 1974ல் வெளிவந்தது.
இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆ. மாதவன் எழுதியிருக்கிறார்.
'புனலும் மணலும்', 'தூவனம்', 'கிருஷ்ணப் பருந்து' ஆகியவை இவரது நாவல்கள்.
'இனி நான் உறங்கட்டும்', 'யக்ஷி', 'கமலா தாஸின் கதைகள்' உள்ளிட்ட படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆ. மாதவன்.
தினமணிக் கதிர், தீபம் பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கும் ஆ. மாதவன், 'கேரளா தமிழ்' இதழின் ஆசிரியராகவும் விளங்கினார்.
===========================================================================================
முகநூல்
இதுவரை இந்தக் குறளை எழுதியவர் திருவள்ளுவர் என்றே எண்ணியிருந்தேன்.பயபுள்ள எப்படி அண்டு பிடிச்சான் ?